இன்றைய சந்தையின் போக்கு -15.04.2010

கடந்த இரு வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக தினசரி பதிவினை எழுத இயலவில்லை. 

கடந்த 3  நாட்களாக சந்தையின் பார்வை செபி மற்று,ம் ஐஆர்டிஏ -விற்கு இடையில் நடந்துவரும் யூலிப் பிரச்சினையில் உள்ளது.  அரசு இதில் தலையிட விரும்பவில்லை வழக்காடுங்கள் என்று ஒதுங்கி விட்டது.  (பிரச்சினையின் வீரியத்தை குறைக்கவா ?)

சர்வதேச சந்தைகளில் ஏற்றம் தொடருகிறது.   அதன் தாக்கம் இன்றைய துவக்கத்தில் நமது சந்தையிலும் இருக்கும்.

தொடர்து 9 வாரங்களாக உயர்ந்துவந்தாலும் கடந்த இரு வாரத்தின் ஏற்றம் பெரிதாக இல்லை. 

செவ்வாய் அன்று வெளிவந்த இன்போஸிஸ் ரிசல்ட் மற்றும் ஐஐபி குறியீட்டு எண் ஆகியவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

தற்போதைய நிலையில் 5380 மற்றும் 5415  முக்கிய தடைநிலைகளாக இருக்கும். 

செவ்வாய் கிழமையின் கீழ்நிலையான 5310  சப்போர்ட் நிலையாக இருக்கும், இந்நிலை உடைபட்டால் 100 புள்ளிகள் வரை கீழிறங்கலாம். 

இன்றைய சந்தையின் போக்கு 1.4.2010

இன்று துவங்கும் புதிய நிதியாண்டு அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வகையில் சாதனை ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.

நேற்றைய சந்தையில் எதிர்பார்த்ததை போலவே – 5260 நிலையினை உடைக்க பெருமுயற்சி எடுத்தது. அதேபோல் மேல் நிலையில் 5300 கடுமையான தடை நிலையாக இருந்து வருகிறது.  

தற்போதைய நிலையில் 5350  அல்லது 5200  எந்த நிலை முதலில் உடைபட்டாலும் 100 புள்ளிகளுக்கு அதிகமாக அந்த திசையில் பயணிக்க வாய்ப்புள்ளது.  

தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் – இன்று பிற்பகலில் ஒரு செல்லிங் பிரசர் எதிர் பார்க்கிறேன்.   ஆனாலும் காளை சவ்வாரி செய்பவர்கள் கடந்த 7 வாரமாக தொடரும் ஏற்றத்தை தக்கவைக்க பெரும் முயற்சி எடுப்பார்கள்.   அட்லீஸ்ட் வாரந்திர பிவோட் நிலையான 5260 க்கு கீழ் செல்லாமல் தடுக்கும் வகையில்.  

நேற்றைய ஏற்ற இறக்கத்திற்கு காரணமானவர்கள்.

Sail  + 3.62%, Rcom+3.24%,  HDFC+2.91%,   Sunpharma+2.91%, Gail +2.19%,

TCS -2.56%, ITC-1.95%, Hindunilever -1.57% BHEL-1.23%, Reliance – 1.25%

இன்றைய முக்கிய நிலைகள்.

5280 – 5301 – 5319  – 5327

5260 – 5241 – 5225-5210 – 5190

The investor of today does not profit from yesterday’s growth…Warren Buffett

இன்றைய சந்தையின் போக்கு 31.03.2010

நேற்றைய தினம் எதிர்பார்த்ததை போலவே சிறிய அளவில் பின்வாங்கியது..  

முக்கியமான சப்போர்ட் நிலையை (5260)   உடைக்கவில்லை… இந்நிலை உடைபட்டால் 5200 / 5180 வரை கீழிறங்கும் வாய்ப்புள்ளது.  எனது எதிர்பார்ப்பு 5260 நிலையினை உடைக்கும் முன்பாக சிறிய அளவில் உயரலாம்.

அதேபோல் – 5350  வலுவான தடை நிலையாக இருக்கும்.

ஹெச் டி எப் சி(-3.06%) / ஆக்ஸிஸ்(-2.08%) போன்ற வங்கிகள் பெரிய அளவில் சரிவடைந்தும் பேங்க நிப்டி – பேங்க் இண்டியா (+5.3%) , ஓரியண்ட் பேங்க் (+2.48%), பேங்க் ஆப் பரோடா (+1.75%)   போன்ற சிறிய வங்கிகளின் உயர்வால் சரிவில் இருந்து  தப்பியது.   

இன்றைய நிப்டி நிலைகள்.

5280 – 5301 – 5319  – 5327

5260 – 5241 – 5225-5210 – 5190

இங்கு நான் குறிப்பிடும் நிப்டி நிலைகள – ப்யூச்சர் நிலைகளே. 

இன்றைய சந்தையின் போக்கு 30.03.2010

புதிய உயரத்தினை தனதாக்கி முன்னேறி செல்கிறது நிப்டி.   டெக்னிகல் பார்வையில் இந்த ஏற்றம் தொடருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருந்தாலும் இந்த இடத்தில் முதலீட்டாலர்கள்  திடிரென லாபத்தை உறுதி செய்ய முற்படலாம்  அதன் தாக்கம் சிறு பின்னடைவை ஏற்படுத்தலாம்.     FnO வணிகத்தில் அதிகம் வாங்கபட்ட நிலை காணப்படுகிறது.   புதிய நிலைகளை எடுக்க் நினைப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.   அதே போல் லாபத்தில் உள்ள நிலைகளை “டைட் ஸ்டாப் லாஸ்”  வாயிலாக பாதுகாப்பதும் நல்லது.

இன்றைய முக்கிய நிலைகள். 

5340 –  5362 –  5378

5307 – 5290 – 5277 – 5260

 

இன்றைய சந்தையின் போக்கு – 29.03.2010

தொடர்ந்து 7 வாரங்களாக  உயர்ந்து வருகிறது.    2007  ல் 8 வாரங்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தது தான் நிப்டியின் முந்தைய சாதனை..  அதனை முறியடிக்குமா?

  • சென்ற வாரம் நிப்டியின் உயர்வு  22 புள்ளிகளே, ஆனால் பேங்க்நிப்டியின் உயர்வு சுமார் 200 புள்ளிகள்.
  • அதற்கு நேர் எதிராக மிட்கேப்ஸ் பங்குகள் அதிக அளவில் பின்வாங்கியுள்ளன.
இந்த வாரம்   4 நாட்களே சந்தை இயங்கும், அதில் மூன்று நாட்கள் இந்த நிதியாண்டின் இறுதிநாட்கள். எனவே   மிதமான போக்கு நிலவ அதிகம் வாய்ப்புள்ளது.
இந்தவாரத்தின் பிவோட் நிலை – 5260  அதே முக்கியமான சப்போர்ட் நிலையாகும் இந்நிலை உடைபட்டால், சந்தை பின்வாங்குவதற்கான முதல் அறிகுறியாக அமையும்.  அதற்கு அடுத்த சப்போர்ட் நிலை 5190.
இன்றைய முக்கிய நிலைகள் –
5310  – 5329 –  5340
 
5290-5280
 
5275 – 5252 -5237 -5220

இன்றைய சந்தையின் போக்கு 26.03.2010

நாள் நெடுகில் பக்கவாட்டு நகர்வினை மேற்கொண்ட சந்தை மதியத்திற்கு பிறகு யாரும் எதிர் பாராத நேரத்தில் கட்டுடைத்து வலுவான உயர்நிலையில் முடிவடைந்துள்ளது.

தற்போதைய  நிலையில் 5300-325 நிலைகள்  தடை நிலையாகவும் 5220 ஆதரவு நிலையாகவும் இருக்கும். 

இன்றைய முக்கிய நிலைகள்

5275  –  5295 –  5310

5250 –  5235  – 5220 – 5210

இன்றைய சந்தையின் போக்கு 25.03.2010

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்களும் வாரந்திர பிவோட் நிலையான 5218 ஐ மையமாக கொண்டே சந்தையின் போக்கு அமைந்தது.   அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு துவங்கும் சந்தை.   

இன்றைய தினம் FnO Expiry  என்பதால் மதியம் வரை பக்கவாட்டு நகர்வுகளுக்கே அதிகம் வாய்ப்பு உள்ளது.  

5168  முக்கிய ஆதரவு நிலையாக இருக்கும் அது உடைபடும் பட்சத்தில்

மார்ச் மாத இறுதி நாட்களில் மேடு பள்ளங்கள் அதிகம் காணப்படலாம்.

இன்றைய முக்கிய நிலைகள். 

5240 – 5261  – 5275

5205  – 5190 – 5171

===============================================================================

நண்பர்கள் சிலர் எந்த டிரேடிங் செட்டப் எளிமை மற்றும் லாபகரமானது.   எந்த இண்டிகேட்டர் சிறந்தது என்று கேள்வி கேட்டு மெயில் அனுப்பியுள்ளனர்.

என்னை பொறுத்தளவில் அனைத்து டிரேடிங் செட்டப்களும் சிறந்ததே..   ஆனால் நாம் ஒன்றை பின்பற்றும் முன்பாக நன்கு பரிசோதித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.  தேர்ந்தெடுத்ததை பின்பற்ற வேண்டும். அதில் தான் சிக்கலே. 

இண்டிகேட்டர் / டிரேடிங் செட்டப் எல்லாம் ஒரு ஒரு பச்சோந்தியை போல சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு நிறம் / திசை மாறும்.   அதற்கு ஏற்றவாறு நாமும் வேகமாக செயல்படவேண்டும் அதற்கான மனதிடம் முடிவெடுக்கும் திறன் / ஆளுமையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் வெற்றி பெற மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய மனதைரியம் வேண்டும். 

சிலருக்கு கட்டுப்பாடு இல்லாத மனதரியம் இருக்கும்.   – இவர்கள் தான் அதிகம் நஸ்டத்தை சந்திக்கிறோம்.   நான் இந்த வகை.    தைரியமாக எல்லா ரிஸ்கும் எடுப்போம் ஆனால் தேவையான இடத்தில் வெளியேறமல் அதிகம் ரிஸ்க் எடுப்போம், 

சிலருக்கு தேவைக்கு அதிகமாக கட்டுப்பாடு இருக்கும்  ஆனால் வர்த்தகத்தில் இறங்கவே தைரியம் இருக்காது.    எல்லாம் முடிந்த உடன் இந்த இடத்தில் லாங் சென்றிருந்தால்  50 பாய்ண்ட் கிடைத்திருக்கும் இங்கே சார்ட் சென்றிருந்தால் 40 பாய்ண்ட் கிடைத்திருக்கும் என்று சொல்வார்கள்.  

முடிந்த ஒன்றை படம் போட்டு காட்டுவது எங்களுக்கு எளிதான வேலை ஆனால் அந்த இடத்தில் முடிவெடுப்பதில் தான் நமது வெற்றி தோல்வியே அடங்கியுள்ளது.

நண்பர் மோகன் மேலும் தாங்கள் கேட்ட மெட்டாஸ்டாக்  (MetaStock )  எக்ஸ்பர்ட் அட்வைசர் Codeஐ  தனி மெயிலில் அனுப்பாமல், அனைவருக்கும் பயன் படும் வகையில் இங்கே தனி பதிவாக மதியம் எழுதுகிறேன்.