Archive for the ‘விவாத மேடை’ Category

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்  

KASHMIR

இந்தியாவின் அடுத்த அத்தியாயம் சத்தமின்றி பல புதிய இளைஞர்களால் எழுதபட்டு வருகிறது. அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்,  நேற்றைய தினம்  காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ள 38 வயது இளைஞர்

திரு ஒமர் அப்துல்லா. 

 

எந்த ஒரு விசயத்திலும் தனக்கென்று ஒரு விசாலமான பார்வை, தெளிவான சிந்தனை உடையவர்.    வர்த்தக மேலாண்மை படித்தவர்… மற்றவர்களுடன் ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்.  NDTV தொலைக்காட்சியின் விவாதங்களில் இவர் எடுத்துவைக்கும் பல கருத்துகள் ஏற்புடையதே. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் பாராளு மன்றத்தில் அணு சக்தி ஒப்பந்த விவாதத்தில் / விவகாரத்தில் ஆற்றிய அனல் பறக்கும் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  

எனக்கு பிறகு தான் நீ என்று சொல்லாமல் தனது மகனுக்கு வழி விட்ட சீனியர் பாருக் அப்துல்லாவும் பாரட்டுக்குறியவரே.  

காஷ்மீருக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கும் சிறந்த சேவை ஆற்றுவார் என்ற நம்பிக்கையுடன்..  அவரை வரவேற்போம்… வாழ்த்துவோம்.   

விவாத மேடை 20.10.2008

இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்.. 

அசோக் தங்களின் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை,  இந்த மாத இறுதி வரை காத்திருந்து பேப்பர் டிரேடு மூலமாக சோதித்து பார்ப்பது இல்லை அதில் இறங்கி ஆழம்(ரிஸ்க்) பார்ப்பது இந்த இரண்டு வழிகள் தான்.

திரு ரமேஷ் குமார்.  பங்கு வணிகத்தை சூதாட்டமாக என்னால் ஒப்பு கொள்ள இயலாது.. சூதாட்டம் என்பது மொத்தத்தையும் இழப்பது.  உதாரணத்திற்கு குதிரை பந்தயம்.

ஓடுகின்ற குதிரை அனைத்திலும் பணத்தை கட்டுகிறோம்….  ஒரு குதிரை தான் வெற்றியடையும் அதில் பணத்தை கட்டியவர் மட்டுமே வெற்றியாளர்.  மற்ற குதிரைகளில் கட்டிய பணம் அப்படியே போய் விடும், யாரும் உங்கள் குதிரை 2வது இடம் வந்தது அதனால் 75%,  மூன்றாவது வந்த குதிரைக்கு 50% என்று நமது பணத்தை திருப்பி தருவது இல்லை, இதே தான் அனைத்து சூதாட்டத்திற்கும் பொதுவான விதி அப்படி இருக்கையில் எந்த வகையில் பங்கு வணிகத்தை சூதாட்டமாக சொல்ல முடியும்.

இங்கு ஒரு நிறுவனத்தின் பங்கினை உதாரணத்திற்கு ரிலையன்ஸின் பங்கினை 2500/- க்கு வாங்குகிறோம்,   அது ஒரே நாளில் 25/- ஆக போவதில்லை,  100, 50 என்று தான் ஒவ்வொரு நாளும் குறைகிறது.  எந்த நிலையில் வேண்டுமானாலும் நாம் குறிப்பிட்ட நஷ்டத்தில் வெளியேறலாம்.  அது அவரவர் மன நிலையை பொறுத்தது.  இப்படி உங்களால் எந்த சூதாட்டத்தில் வெளியேற முடியும். 

நீங்கள் கூறியது போல் – அந்த நிறுவனத்தின் லாப நஸ்டத்தை பார்த்து முதலீடு செய்தவர்கள் யாரும் இன்றும் வெளியேற வில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் அசைக்க முடியாத நிலையில் உள்ளது ஆண்டு தோறும் டிவிடண்ட் வழங்கி வருகிறது, இன்னும் பெரிய வளர்ச்சியை நோக்கி அதன் பயணம் அமைந்துள்ளது.  அப்படி இருக்கையில் நமது முதலீடு அந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என்றால் 2500 போனால் என்ன 250 ஆனால் என்ன என்று அமைதியாக காத்திருக்க வேண்டும். அப்படி எத்தனையோ மக்கள் காத்திருக்கிறார்கள்.  ஆனால் பலர் நிறுவனத்தின் லாப நஷ்டத்தில் அக்கறை கொண்டு முதலீடு செய்வதில்லை,  பங்கு வணிகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் கிடைக்கும் அதிக லாபத்திற்கு ஆசை பட்டுதான் முதலீடு செய்கிறார்கள்.  அதில் லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு.   இன்னும் விரிவாக எழுதுகிறேன். இப்படி பங்கின் விலை உயரும் என்று எதிர் பார்த்து முதலீடு செய்து அதன் விலையேற்றத்தால் கிடைக்கும் லாபத்திற்கு ஆசைபாடுபவர்கள் அதை தவிர்த்து தின வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

 

விவாத மேடை. 15.10.2008

இன்றைய விவாதங்களை கருத்து பறிமாற்றங்களை இங்கு தொடருங்கள்..  அசோக் அவர்கள் கேட்ட ஆப்ஸனில் வாங்க ஆள் இல்லை என்றால்? என்ற கேள்வி எனக்கும் புதிய தகவல் அதற்கு நண்பர் மோகன் ராஜ் அளித்த பதிலும் எனக்கு தெரியாததே… அதே போல் பிரியாவின் Core Project பற்றிய கேள்வி, ஹரினியின் பெட்ரோல் விலை குறைவு பற்றிய கேள்வி ஆகியவை புதிய தகவல்களை தருகிறது. இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன்.

இன்னும் அதிகமான பங்கு வர்த்தகர்களுக்கு நமது வலை தளத்தை தெரிய வில்லை,  தினமும் புதியவர்கள் வருகிறார்கள்.  உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.  நன்றி.

 

விவாத மேடை 08.10.2008

விவாத மேடைக்கு கிடைத்த வரவேற்பில் சந்தோஷம்..    இன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம். இன்னும் அதிக மானவர்களிடம் இருந்து கருத்துகளை எதிர் பார்க்கிறேன்,  தோழி பிரியா, சிம்பா மற்றும் ஆர் கே ஆகியோருக்கும் நன்றி, சிம்பா கேள்வி மட்டும் கேட்காமல் பதிலும் சொல்லலாம்.

விவாத மேடை 07.10.2008

நண்பர்கேளே,

பின்னூட்ட பகுதியை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக மாற்ற முன் வாருங்கள். என்று சொன்னதற்கு ஒரு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது, கேள்வி பதில்களை அந்த அந்த பதிவின் கீழ் தொடர்ந்தால் சில சமயம் சில் விசயங்கள் விடு பட்டு விடலாம், அதற்காக தனி பக்கம் போடலாமா என்று யோசித்தேன், அப்படி செய்தால் அது அனைவரது  கவனத்திற்கும்  வருமா என்ற சந்தேகம்,  ஆகையால் விவாத மேடை என்ற ஒரு பதிவை எழுதி அது எப்பொழுதும் மேலே இருக்க செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளேன். 

எப்பொழுதும் போல் சந்தையை பற்றிய தினசரி கட்டுரைகள் இந்த பதிவின் கீழ்  பதிய படும்.  பதிவு சம்மந்தபட்ட கருத்துகளை அந்த அந்த பதிவுகளில் எழுதலாம்.

தங்களின் பொதுவான, சந்தேகங்களை, அனுபவங்களை, கேள்விகளை இங்கு எழுதுங்கள்.  ஆங்கிலத்திலும், தமிழிலும் அல்லது புதிய மொழியான தமிழாங்கிலத்தில் எதில் உங்கள் சவுகரியமோ அதில் எழுதலாம். இது உங்க ஏரியா – யாரும் குறை சொல்வார்கள் என்ற தயக்கம் வேண்டாம்.

ஒரு சர்வே சொல்லும் செய்தி

நண்பர்கள் சிலர் சேர்ந்து சிறிய அளவில் சர்வே ஒன்று செய்தோம் அதன் விவரத்தை தற்போது நண்பர் மும்பையில் இருந்து அனுப்பி உள்ளார். அதில் சில அதிர்ச்சி மற்றும் வருந்த தக்க உண்மைகள் தெரிய வருகிறது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சமயத்தில் எங்களிடம் ஆலோசனைகளுக்கு வந்தவர்கள்.

இதில் நாங்களும் கலந்து கொண்டு பதில் அளித்தோம், அதில் தெரியவரும் பலதவறுகள் நாங்களும் செய்து வந்தது தான்.

இந்த சர்வேயின் நோக்கம் – பங்கு வணிகத்திற்கு யார் யார் வருகிறார்கள்,  எதற்காக வருகிறார்கள்,  வெற்றி தோல்வி என்ன. அதற்கு காரணம் என்ன என்பது தான்.

யார் எல்லாம் வருகிறார்கள் – அதிகமாக  நடுத்தர  மக்கள்  குறிப்பாக மாதச்சம்பளகாரர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள். 

எதற்காக வருகிறார்கள்  –  மாதசம்பள காரர்கள் தங்களின்  வருமானம்  குறைவு,  மாதச்செலவில் பற்றாக்குறை இருக்கிறது சின்ன சின்ன  செலவுகளை  யோசித்து  செய்ய  வேண்டியுள்ளது  இன்னும்  கொஞ்சம் கூடுதல்  வருமானம்  கிடைத்தால் நல்லது என்ற நோக்கத்தில். (இதில் கவனிக்க வேன்டியது – பற்றாகுறையான 5000-10000 என்ற எதிர்பார்ப்பில்)

சிறு  தொழில் செய்பவர்கள் – தங்களின்  தொழிலில் ஏற்படும்  பிரச்சினைகளை  சமாளிக்க  அதில்  உள்ள பணத்தை இதில் போட்டு ஏதோ பண இரட்டிப்பு / டபுளிங் செய்து  விடலாம்  என்று எதிர்பார்த்து உள்ளே வருகிறார்கள்.

உண்மையில் – இங்கு 80-90% மக்கள் தோல்வியை தழுவுகிறார்கள்.  காரணம் என்ன என்றால் – எந்த நோக்கத்திற்காக இதில் ஈடுபட்டோம் என்பதை மறந்தது, பேராசை, பயிற்சியின்மை நல்ல வழிகாட்டி இல்லாதது மற்றும் பொறுமை இல்லாதது.

ஒரு மனிதர் உபரி வருமானத்திற்கு (Side income)  இந்த தொழிலில் கால் வைத்தவர் எதிர் பாராத வகையில் 2 அல்லது 3 முறை ஆரம்பத்தில் வெற்றி பெற்ற காரணத்தால் இதில இருந்தே அவருடைய மெயின் இன்கமே வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறார். இது எந்த வகையில் நியாயம்.  சின்ன சின்ன செலவுகளுக்கு பல தடவை யோசித்து செலவு செய்து வந்தவர் இங்கு ஆயிரம், ஐயாயிரம் என்று சர்வசாதரணமாக நஷ்டத்தை எதிர்கொள்கிறார். என்ன நோக்கத்திற்காக இதில் ஈடு பட்டோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இறுதியில் குருவி சேர்ப்பது போல் அவசரதேவைக்காக சேர்த்த பணத்தினை இதில் இழந்து தவிக்கிறார்கள். சிலருடை நிலை எஸ் ஜே சூர்யா ஒரு படத்தில் இருக்கு ஆனால் இல்லை என்று சொல்பது போல் நேற்று பேங்க் பேலன்ஸ் இருந்துச்சு ஆனால் இன்று இல்லை என்று உள்ளது.

இதற்கு காரணம் – பேராசைதான் 20 ஆயிரம் வருமானம் உள்ள ஒருவர் கூடுதலாக மாதம் ஒரு 10 ஆயிரம் இருந்தால் குழ்ந்தைகளின் படிப்பு மற்றும் சில ஆடம்பர செலவுகளுக்கு உதவும் என்று ஆசைபடுதில் தவறு இல்லை. அப்படி எதிர்பார்த்து இதில் சம்பாதிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை, மிக எளிதாக தினசரி 500-1000 லாபம் பார்க்க வழி உண்டு.  ஆனால் அதிகமானோர் அப்படி செய்வதில்லை.

நண்பர் தனது அனுபவத்தை எப்படி எழுதி உள்ளார் என்று பாருங்கள். இதில் ஈடுபட்டவுடன் நாம் செய்யும் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லை.   

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_17.html  – முதல் பகுதி

http://rktimes.blogspot.com/2007/10/blog-post_18.html  – தொடர்ச்சி

 அதே நண்பர் நல்ல அனுகு முறைக்கு பிறகு இன்று நல்ல முறையில் செய்து வருகிறார்.

பயிற்சி – ஒருவர் அதிகமான டிரேடிங் கேப்பிட்டல் கையில் இருக்கும் போது  பயிற்சி  மற்றும்  ஆலோசனை பற்றி யோசிப்பதில்லை.  அதே கேப்பிட்டல் 10-20 ஆயிரம்  ஆன உடன் தான்  டெக்னிகல்        வகுப்பு  ஆலோசனை என்று  அதிகம்  செலவு  செய்கிறார்கள்.

 மற்ற சிறு தொழில் செய்பவர்கள் அவர்  சொன்னார், இவர் சொன்னார் என்று தங்கள் தொழிலில் உள்ள பணத்தை ஓரிரு நாட்களில் இதில் பணம் பண்ணலாம் என்று போடுகிறார்கள் அது மிக மிக தவறு. அதே போல் இதை முழு நேரத் தொழிலாக செய்ய எல்லோராலும் முடியாது/ தினசரி பணம் சம்பாதிக்க முடியாது.

இந்த தொழில் மிகவும் அருமையானது, நல்ல முறையில் செய்தால் இதை விட  சிறந்தது  வேறு இல்லை. எப்படி என்று இரண்டு நாளில் எழுது கிறேன்.