Archive for the ‘பொதுவானவை’ Category

அன்பு அண்ணனின் பிரிவு

ஒருவரின் மரணத்தை பற்றி கையாலாகாத்தனம்,முட்டாள்தனம் என்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் பேசலாம் நாம் அந்த வலியை சந்திக்காதவரை ஏன் சாய் அண்ணாவும் மரணத்தை பற்றி எழுதியிருக்காங்க தானும் அந்த வலியை சந்திக்கபோவது தெரியாமல்.

நம்பிக்கை துரோகிகளை உடன் வைத்திருந்தால் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்க்கு உதாரணம் சாய் அண்ணாவின் வாழ்க்கை. அந்த மரணம் தானாக வந்ததா அல்லது   உறவுகள், நண்பர்கள் என்று கூடவே இருந்து குழிபரித்த சில நம்பிக்கை தூரோகிகளால் வரவைக்கப்பட்டதா என்பது சாய் அண்ணாவை முழுமையாக அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் அதில் கஷ்டங்களும் துன்பங்களும் தான் அதிகம் என்பது கூடவே இருந்து அவர் பட்டகஷ்டங்களை அனுபவித்தவள் என்ற முறையில் எனக்கும் இன்னும் சிலருக்கும் தான் தெரியும்.

தற்கொலை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருக்க வேண்டும் ஆனால் அனைத்து கஷ்டங்களை போராடி வெல்லப்போகிற நேரத்தில் காரணம் இல்லாமல் தற்கொலை செய்தார் என்று மற்றவர்கள் கூறும்போது வேதனையிலும் சிரிக்கத் தோன்றுகிறது.

அன்பு பாசம் மற்றவர்களுக்கு உதவுவது இரக்ககுணம் இப்படி அனைத்து நல்ல குணங்களையும் கொண்ட அவருக்கு அந்த குணம் தான் அவர் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை அடைய காரணமாக அமைந்தது. இரக்கப்பட்டு சில உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவர் உதவியது தான் இந்த முடிவுக்கு காரணம்.

பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்பது பணத்திற்க்கு மட்டும் அல்ல அன்பு பாசம் இரக்ககுணம் அனைத்திற்க்கும் பொருந்தும் அதை மறந்து பிச்சை இட்டால் நம்மை அனைத்திலும் பிச்சைகாரனாக்கிவிடும்.

சாய் அண்ணா நம்மை விட்டு பிரிந்து சென்றார் என்பதை இங்கு நான் அறிவிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை அண்ணா எப்போதும் என்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் சாய் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டி அவரின் ஆசை, கனவு, லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு தங்கை……………………………………………….

திக்குமுக்காடிய உடுமலை மாணவன்

kovai

நேற்றைய பதிவில் பத்திரிக்கை செய்தியில் படித்ததாக   நாம் குறிப்பிட்ட மாணவன் பிரபுவுக்கு கோவை டி.ஐ.ஜி திரு சிவனாண்டி உட்பட பலர் உதவியுள்ளனர்.  கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி நேரில் சென்று காசோலையை வழங்கியுள்ளனர்…. உதவி மழையில் திக்கு முக்காடும் மாணவனின் எதிர்காலம் இனி பிரகாசமாக அமையும்… வாழ்த்துவோம் நாமும்.   ஒருவரின்  செயல்கள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் பலருக்கு தெரிய வந்தால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்பதற்கு இது உதாராணம்.  ஆகையால் மனம் தளராமல் போரடினால் எதிலும் வெற்றி நிச்சயம். 

ஆனால் இது போன்று ஒவ்வொரு ஏழை மாணவனும் பத்திரிக்கை செய்தியானால் தான் கடன் கிடைக்கும் என்ற வங்கிகளின் மன நிலை மாறவேண்டும். நேற்று வரை கடன் வழங்க அவனிடம் என்ன தகுதியில்லையென்று அவர்கள் நிராகரித்தார்கள்.  இன்று எதன் அடிப்படையில் தேடிச்சென்று உதவினார்கள்?   இது போன்று எத்தனையோ மாணவர்கள் பல ஊர்களில் பல கிராமங்களில் வங்கிகளுக்கும் கல்லூரிக்கும் நடையா நடக்கிறார்களே அவர்களுக்கு என்ன பதில்.

நன்றாக படிக்கும்,  ஏழை அதுவும் முதல் தலைமுறையாக கல்லூரியில் கால் வைக்கும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். அதற்கு கல்வி கடனை வங்கியின் கிளை மேலாளரின் நேரடி பொறுப்பில் இல்லாமல் – கலெக்டர் அலுவலகம் மூலாமாக பரிந்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  சிறந்த உதாரணம் சென்ற ஆண்டு கல்வி கடன் முகாம் நடத்திய ஈரோடு மாவாட்ட கலெக்டர்.

நமது நண்பர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள்…  மிக்க நன்றி.   தக்க சமயத்தில் உங்களின் உதவிகளை உரியவர்களுக்கு முறையாக கொண்டு  சேர்க்கும் வகையில் பயன் படுத்திக்கொள்கிறேன்.

 “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்  – என்பார்கள் நாம் அந்த அளவுக்கு உயர வேண்டாம்.  இந்த சம்பவத்தை ஆரம்பமாக வைத்து நாம் தொடர்ந்து ஒரு சிலருக்கு சிறு சிறு  உதவிகளை செய்யலாம்.    நான் இதற்காக மாதம்தோறும் ஒரு சிறு தொகையை செலவிட தயார்…   நண்பர்கள் தக்க ஆலோசனை வழங்கவும்.  நன்றி. 

நன்றி – புகைப்படம்- தினமலர்.

பட்டாம் பூச்சி விருது

சின்ன வயசுல பாப்பாத்தி (பட்டாம் பூச்சி) பிடித்து விளையாடியது,   ம்ம்ம்ம் அது ஒரு கனாக்காலம். 

ஆனா இன்று திடீருன்னு எங்க டாக்டர் கிட்ட இருந்து போன் வந்தது..  சாய் உங்களுக்கு பட்டாம் பூச்சி பிடித்து வைத்திருக்கேன், வந்து  வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லி வைத்து விட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை… பிறகு அவர் பதிவு தமிழ்த்துளி – யை பார்த்த உடன் தான் புரிந்தது.  

இந்த பதிவு எழுதுவது எனது மனைவி மற்றும் சகோதரி க்கு தான் தெரியும்… அவர்களுக்கு அடுத்த படியாக   எனது பதிவையும் முகத்தையும் அறிந்த ஒரே  நண்பர் டாக்டர்  T.M. தேவகுமார் அவர்கள் தான். அவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர், அவரது மனைவியும் மருத்துவரே…  எளிமையான தம்பதியர் அவர்கள் இருவரும் எனக்கு ஒரு விருதினை வழங்கியது ஒரு மகிழ்ச்சியே….  நன்றி தேவா சார்…  

விதி வலியது நம்மகிட்ட அறிமுகம் ஆன பிறகு பங்கு சந்தைக்கு வரவில்லை என்றால் எப்படி டாக்டர் அடுத்த வாரத்தில் பங்கு சந்தையில் தனது முதல் ஆப்ரேஷனை துவங்க உள்ளார். வருக வருக என்று வரவேற்போம்.

சரி பட்டாம் பூச்சியை நம்மகிட்ட வைத்துகொள்ளகூடாது நாமும் அதை சிலருக்கு பறக்க விடுவோம் என்றால் யாருக்கு அனுப்புவது? 

நாம என்ன கலைமாமனி அவார்டா கொடுக்கிறேம் எல்லோருக்கும் கொடுக்க?   இது தேசிய விருது…

பட்டாம் பூச்சி விருதினை திரு பைசல் மற்றும் தம்பி சிம்பா ஆகியோருக்கு வழங்குகிறேன்..  நண்பர்களே இந்த பட்டாம் பூச்சியை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்.

butterfly_award2

 

 

1. திரு பைசல் –  படியுங்கள்! சுவையுங்கள்!!  என்ற பதிவை எழுதிவருகிறார்…   சிங்கப்பூர் வாழ் இந்தியர்/தமிழர்.  பல தகவல் தொழில் நுடபங்களை எளிய தமிழில் எழுதி வருகிறார்.  இந்த பதிவுலகம் எனக்கு தந்த அருமை நண்பர்களுள் ஒருவர்..  அவர் பங்கு வர்த்தகர் அல்ல ஆனாலும் நமது பதிவினை தொடர்ந்து படித்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர். வாரம் ஒரு முறையாவது தொலைப்பேசியில் பேசுபவர்.

2. பார்க்க இயக்குநர் மனோ பாலா (எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்)  மாதிரி இருந்தாலும்  மனதில் பட்டதை நெத்தியடியாக அடிக்கும் மாவீரன் தம்பி சிம்பா என்ற அருண் புழுதிக்காடு என்ற பதிவை எழுதிவருகிறார். 

============================================================================

சரி என்ன பதிவு எழுதுறவங்களுக்கு மட்டும் தான் விருது வழங்க வேண்டுமா..  ?  

சிறந்த தின வர்த்தகர் விருது  –   திருமதி ஜான்சி ராணி அவர்களுக்கும்

சிறந்த விமர்சகர் –   இந்த விருதினை ஒரே ஊரை சேர்ந்த இருவர் பங்கிட்டுக்கொள்கிறார்கள் அவர்கள் திரு மோகன் ராஜ்  –  எனது பதிவை மற்றவர்கள் எதிர் பார்க்கும் அளவிற்கு நான் எதிர் பார்ப்பது,  திரு மோகன் அவர்களின் பின்னூட்டங்களை..

திரு ஆர் கே –  மிக அருமையான நண்பர்…  பின்னூட்டம் அதிகம் எழுதவில்லை என்றாலும் ஈ.மெயில் வாயிலாகவும், தினசரி தொலைப்பேசி வாயிலாகவும் குறை நிறைகளையும் சுட்டி காட்டி ஊக்கப்படுத்தி வரும் நமது பதிவின் வாசகர்.

 

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்

இந்திய அரசியலின் அடுத்த அத்தியாயம்  

KASHMIR

இந்தியாவின் அடுத்த அத்தியாயம் சத்தமின்றி பல புதிய இளைஞர்களால் எழுதபட்டு வருகிறது. அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்,  நேற்றைய தினம்  காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ள 38 வயது இளைஞர்

திரு ஒமர் அப்துல்லா. 

 

எந்த ஒரு விசயத்திலும் தனக்கென்று ஒரு விசாலமான பார்வை, தெளிவான சிந்தனை உடையவர்.    வர்த்தக மேலாண்மை படித்தவர்… மற்றவர்களுடன் ஒத்துப்போகும் தன்மை உள்ளவர்.  NDTV தொலைக்காட்சியின் விவாதங்களில் இவர் எடுத்துவைக்கும் பல கருத்துகள் ஏற்புடையதே. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் பாராளு மன்றத்தில் அணு சக்தி ஒப்பந்த விவாதத்தில் / விவகாரத்தில் ஆற்றிய அனல் பறக்கும் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  

எனக்கு பிறகு தான் நீ என்று சொல்லாமல் தனது மகனுக்கு வழி விட்ட சீனியர் பாருக் அப்துல்லாவும் பாரட்டுக்குறியவரே.  

காஷ்மீருக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கும் சிறந்த சேவை ஆற்றுவார் என்ற நம்பிக்கையுடன்..  அவரை வரவேற்போம்… வாழ்த்துவோம்.