Archive for the ‘பகுக்கப்படாதது’ Category

இன்றைய சந்தையின் போக்கு 23.12.2008

வணக்கம் நண்பர்களே,

நேற்றைய தினம் சரிவுகளுக்கான  வாய்ப்புகள் அதிகரித்தாலும் அதை 2 நாட்கள் தள்ளிபோடும் முயற்சி நடைபெற்றது, அம்முயற்சி இன்றும் தொடரும்…  எந்த அளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

இன்று நிக்கி / ஜப்பான் சந்தைக்கு விடுமுறை போல தெரிகிறது அதனால் தலை தப்பியது ஹாங்க் செங்க்  490 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது. மற்ற உலக சந்தைகளும்  ஓரளவு சரிவுடனே காணப்படுகிறது.

முக்கிய நிலைகள். 

3175, 3113, 3088,  3060, 3003,  2992,  2970, 2929

ப்யூச்சரில்  டாட்டா மோட்டார்ஸ் நிறுவன பாங்கினை சார்ட் போகலாம் லாபம் 10-15%  –  3 முதல் 5 நாட்களில். 

பின்னூட்டம் இல்லையே என்று கேட்ட பிறகு நிறைய பின்னூட்டங்கள் வந்துள்ளது..  நன்றி.   

அசோக் – கேப் அப் மற்றும் கேப் டவுன் பற்றிய கேள்விக்கு தாங்கள் கூறிய காரணங்கள் சரியே ஆனால் பிரதி மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வாறு கேப் அப் / கேப் டவுனாக துவங்குவதில்லை, முடிந்தால் அதை கண்டு பிடியுங்கள்.  

 கேப் அப் / கேப் டவுன் நிகழ்வுகளை முன்கூட்டிய சில டெக்னிகல் கூறுகள் தெரிவிக்கின்றன அதை பற்றிய ஆய்வினை மேற் கொள்ளும் போது தான் மேலே சொன்ன செய்தியும் கிடைத்தது.  அதனால் பெரிய பலன் இருக்கா இல்லையா என்பது தெரிய வில்லை ஆனால் ஆச்சரியம் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறுவது இல்லை என்பதே. அதற்கான காரணத்தை அறியவும் முயற்சிக்கிறேன்.    விரிவாக பிறகு எழுதுகிறேன்.

இன்றைய சந்தையின் போக்கு 19.12.2008

எழுதுவதற்கு ஒன்றும் இல்லை…

தற்போது அதிகமானவர்கள் என்னை கூர்ந்து கவனித்து வருவதால்… எனது பொறுப்பும் கூடுகிறது. எதோ எழுதுகிறேன் என்று கிறுக்க கூடாது. இங்கு எழுதுவது ஒரு சந்தையின் கண்ணோட்டம் தான் இதன் அடிப்படையில் பெரிய ஒரு லாபம் நஸ்டம் ஏற்பட்டுவிட போவதில்லை. ஆனால் இங்கு நான் தரும் முதலீட்டு மற்றும் வர்த்தக பரிந்துரைகளில் மிகுந்த எச்சரிக்கையாகவே தேர்ந்தெடுக்கிறேன். உதராணத்திற்கு தீபாவளி போர்ட் போலியோ, சன் உட்பட சில முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் திங்கள் அன்று வழங்கிய ப்யூச்சர் சார்ட் செல்லிங் பரிந்துரைகள்.

வரும் நாட்களில் மேலும் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தலாம், காரணம் இங்கு வருகை தரும் நண்பர்களில் அதிக மானவர்கள் வணிகர்கள் அல்ல… சிறு முதலீட்டாளர்கள் தான். அவர்களுக்கு இது போன்ற முதலீட்டு பரிந்துரைகள் பயன் தரும்.

கடந்த ஒரு வாரமாக ஒரோ கண்ணோட்டத்தில் எழுதி எனது எதிர் பார்ப்பை இங்கு தினிக்கின்றேனோ என்ற வருத்தம் ஏற்படுகிறது.. இங்கு அழுத்தமாக நான் எனது கருத்துகளை பதிவு செய்யும் சமயங்களில் அது எனது வர்த்தக ரீதியான ஆலோசனைகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதை உணர முடிகிறது… நிச்சயம் அது தவறு தான்..

அதீத நம்பிக்கையில் (Over Confident)  முன் கூட்டியே… சந்தையில் நிகழ போகும் ஒரு மாற்றத்தை சொல்லிவிட்டேன் என்று தான் தோன்றுகிறது.  3800, 4650, 3800,  3700 , 2200 ,3200 2510 ஆகிய நிலைகளில் எல்லாம் கணிப்பு சரியாக அமைந்தது காரணமாக இருக்கலாம். 

இல்லை அண்ணன் நிப்டியாருக்கு என் மிது என்ன கோபமோ… தெரியவில்லை.   இன்றும் எனது நிலைகளில் மாற்றம் இல்லை அண்ணன் நிச்சயம் கீழ் நிலைகளுக்கு வருவார்..   சென்ற வாரம் நான் எதிர் பார்த்தது ஒரு சிறிய அளவிலான சரிவுதான் (2900 to 2680)  ஆனால் கடந்த ஒரு வாரமாக முன்னால் போன கடிக்கிறது… பின்னால் சென்றால் உதைக்கிறது என்று 2900-3050 நிலைகொண்டு வருவதை பார்த்தால் மிகப் பெரிய அளவில் (சில வாரங்களில்)  கீழே வர வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.    ஆகையால் நான் இன்னும் சார்ட் நிலைகளில் இருந்து வெளியேற முடிவு செய்யவில்லை. 

ஆனால் சிறு வணிகர்கள்….   மேல் நிலைகளில் ஆவரேஜ் செய்து இன்று கிடைக்கும் கீழ் நிலைகளில் (சிறிய அளவு நஷ்டத்துடன்) வெளியேறி விட முயற்சிக்கலாம்.  அதன் பிறகு புதிய நிலைகளை எடுக்கலாம். 

எனது பார்வையில் இன்றைய முக்கியமான  நிலைகள்….   3040, 2990, 2960, 2929

இதில் கவனிக்க வேண்டிய விசயம் 2929 என்பது கடந்த இரு நாட்களாக மிகவலுவான சப்போர்ட்டாக இருந்து வருகிறது.  இரண்டு முறை (2936, 2931.20)  அதை உடைக்க முயற்சி செய்தும் அது இயலாமல் போனது.

இன்றைய சந்தையின் போக்கு 17.12.2008

பொறுமையின் எல்லைக்கே எடுத்து சென்று விட்டார்கள்.. சித்தர்கள்.    சில முன்னணி தொழில் நுட்ப ஆய்வாளர்கள் உட்பட, அதிகமானவர்கள் சந்தை இறங்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டு  தங்களது நிலைகளை மாற்றி வருகிறார்கள், இதைத்தான் போலியான காளையின் தோற்றத்தை உருவாக்கியவர்களும் விரும்பினார்கள். 

செய்திகளின் தாக்கம் சந்தையில் இருக்கும் என்பதை நானும் ஏற்கிறேன்.. ஆனால் அதனால் முழுமையாக டெக்னிகல் போக்கினை மாற்ற முடியாது.   பெடரல் வங்கியின் அறிவிப்பு அமெரிக்க சந்தையில் சின்ன உற்சாகத்தை ஏற்படுத்தலாம். ஆனால் 0%-0.25% என்பதும், pledged to use “all available tools” to turn back a deepening recession  என்று சொல்வதும் அமெரிக்கா பொருளாதாரத்தின் அவல நிலையைத்தான் வெளிச்சம் போடுகின்றன.

r

இன்று காலையில் Dow இன் உற்சாகத்தால் உந்தப்பட்டு 400 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய ஜப்பானின் நிக்கி அடுத்த 20 நிமிடத்தில் 300 புள்ளிகளை இழந்து விட்டது.

Dow Future – ம் 100 புள்ளிகள் சரிவடைந்து வர்த்தகமாகிறது.

எனது கணிப்புகள் 100% டெக்னிகல் அடிப்படையில் தான்..  அனைத்து தொழில் நுட்ப காரணிகளும்,  குறியீடுகளும் காளைக்கு எதிராகத்தான் உள்ளது,  இருந்தும் கரடி இன்னும் களத்தில் இறங்காமல் இருப்பது ஆச்சரியம்…    

எனது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது, வலுவடைகிறது…    என்ன முன் கூட்டியே எதிர் பார்ப்புகளை பதிவு செய்தேனோ என்று வருத்தப்படுகிறேன்.

Still I am Bearish…  atleast for this week…. i have revised my Stop Loss to 3175 from 3075 for my positional shorts, and my targets are 3030, 2929, 2828, 2727…   it may be delayed by a day or two but i am very much expecting these levels.  it’s my personal view.   i may be wrong this time… let us see.

அண்ணன் நிப்டியார் எதிர்பாராத அதிர்ச்சியை தரலாம்.

இன்றைய சந்தையின் போக்கு 16.12.2008

என்ன எழுதுவது  ஒரு மணி நேரமா யோசிக்கிறேன் ஒன்றும் புரியலை கரடி வேசம் போட்டாச்சு என்ன பண்ணலாம்… கரடியின் மந்திர தாயித்து விற்க வேண்டியது தான். (ஆமா இப்ப எல்லாம் கரடியை அழைத்து கொண்டு தாயித்து விற்கும் ஆட்களை காண முடியலை)

இன்றைக்கும் நேற்றைய பதிவே பொறுந்தும்…   மேலும் கரடியா கத்த விரும்பலை..

நிறைய பேர் –  எப்படி சரியும் என்று சொல்றிங்க என்று  கேட்கிறார்கள்…  ஓற்றை  கல்(செங்கல்) சுவர் என்ன உயரம் கட்டலாம் 5 அடி தடுப்பு சுவர் ஓகே, அதையே 25 அடி  உயரத்துக்கு கட்டினால் விழுமா?  விழாதா…?  அது போல் தான் Volume இல்லாமல் உயரும் சந்தைகளும் ஒரு அளவிற்கு மேல் நிற்காது.    

இன்றைய முக்கிய நிலைகள் –  Fancy No’s  2929,  3030 . 

நண்பர் –  மோகன் ராஜ் / தம்பி அருண் –   6 மாதங்களுக்கு முன்பு நான் கிறுக்க ஆரம்பித்ததில் இருந்து ஆதரித்து, என் எழுத்து மேம்பட ஊக்கப்படுத்தி வரும் தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இன்றைய சந்தையின் போக்கு 15.12.2008

கடந்த வெள்ளிகிழமை சந்தை மீண்டும் ஒரு பரம பதம் ஆட்டத்தை ஆடியது ஆனால் இம்முறை பாம்பின் கடியால் 100 புள்ளிகள் இறங்கியவருக்கு.  உடனே ஏணி கிட்டியது. 

கடந்த 3 தினங்களாக கரடியின் (Short Sell)  மீது சவ்வாரி செல்ல விரும்புவர்களின் / சவ்வாரி செய்பவர்களின் பொறுமையை ரெம்பவே சந்தை சோதிக்கிறது.  ஆனால் இன்னும் கரடிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.   இன்று அல்லது நாளை எந்த நேரத்திலும் கரடியின் கை ஓங்கும்

குறிப்பாக இன்று துவக்கத்தில் சித்தர்களின் கைவரிசையால் சந்தை மேலும் உயரும் என்று நம்பவைக்கும் முயற்சி நடைபெறும், அச்சமயம் அவர்கள் தங்களின் காளையின் நிலைகளை லாபத்தில் விற்று விட்டு வெளியேறி, குறைந்த விலையில் கரடியின் நிலைகளை எடுப்பார்கள். ( சிங்கப்பூர் நிப்டியில் அந்த வேலையை ஆரம்பித்து உள்ளார்கள் இன்று முதல் ஒரு லாட் 3058 க்கு (124 புள்ளிகள் கேப் ஆனது) அதற்கு அடுத்த லாட்டுகள் 3000 இல் வணிகம் ஆனது. )

சிறு வணிகர்கள் –  சார்ட் செல்லிங் நிலைகளை எடுக்கா விட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் லாங் நிலைகளை எடுக்காமல் இருப்பது நல்லது.  அதே போல் இந்த மாதத்தின் / இந்த வருடத்தின் எப் அண்ட் ஓ செட்டில்மெண்ட்க்கு இன்னும் 7 நாள்களே உள்ளதால் ஆப்ஸன் நிலைகளை அடுத்த நாட்களுக்கு எடுத்து செல்வதை தவிர்ப்பது நல்லது.   ப்யூச்சரில் இன்றைய துவக்கத்தில் சார்ட் செல்லிங் செய்பவர்கள் அடுத்து வரும் நாட்களில் லாபம் பார்க்கலாம்.

இன்றைய துவக்கத்தில் ப்யூச்சரில் சார்ட் செல்லிங் செய்ய ஏற்ற பங்குகள்..

ரிலையன்ஸ் கேப்பிட்டல்..

டாட்டா ஸ்டீல்

சாம்பல் பெர்ட்டிலைசர்.

நாகர்ஜுனா பெர்டிலைசர்.

லாபம் 7-10%, ஒரு வாரத்தில்.   

(தங்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் முடிவுகளை சுயமாக எடுக்கவும்,  இதனால் ஏற்படும் லாப நஸ்டத்திற்கு நான் பொறுப்பல்ல)

அதேபோல் கடந்த சில நாட்களில் முதலீடு செய்தவர்கள், (சன்/யுனிடெக்… etc ) தங்களின் லாபத்தை உறுதி செய்யுங்கள்.   

இன்றைய துவக்கம் 30-40 புள்ளிகள் மேலே துவங்கி, அல்லது அமைதியாக துவங்கி  காளையார் கரடியிடம் தற்காலிகமாக சந்தையை ஒப்படைப்பார். அங்கிருந்து நாள் நெடுகில் சரிவடையலாம்.

இன்றைய சந்தையின் போக்கு 12.12.2008

அனைவருக்கும் வணக்கம்,

நேற்று இரவு நண்பர்கள் இருவருடன் கதைத்து 🙂 கொண்டிருக்கையில், இருவரும் என்ன சாய் எல்லோரும் மேலே செல்லும் சென்று டார்கெட் சொல்லும் போது நீங்க மட்டும் இப்ப 2750/680 என்று சொல்றிங்க?  ஏன் இப்படி…  நாங்க வேற எல்லாம் சார்ட் செய்துள்ளோம் என்றார்கள் அந்த சமயம் நான் ஒரு பந்தயம் கட்டினேன்…  ..  அப்பொழுது  Dow Baba 8790-80 இல் இருந்தார்.   இப்ப பாருங்க இன்று இரவு (11/12)  8840 ஐ கடந்து செல்ல மாட்டார் என்று…   எழுதி தருகிறேன் என்றேன்.  நானும் 8823 நிலையில் ஒரு கோடும் 8550,  8400 மற்றும் 8380 என்று 3 டார்கெட் குறிப்பிட்டு வைத்து விட்டு ,  காலையில் 5.30 க்கு எழுந்து பார்த்தால்..  நமது எல்லை கோட்டில் நிற்கிறார்.

நீங்களும் பாருங்க…

dow

அதேபோல் நமது அண்ணன் 3050-60 ஐ கடந்து செல்ல மாட்டார்..  அதற்கு முன்பாக குறைந்த பட்சம்  7-10%  கீழ் சென்று தான் மேலே திரும்புவார்.. என்றும் அவர்களிடம் சொல்லியிருக்கிறேன், பார்ப்போம்..  

முதலீட்டாளர்கள் இதை பார்த்து பயம் கொள்ளவேண்டாம்..  சந்தை தன்னை நிலைப்படுத்தும் செயல் தான்…. அதாவது வெள்ளம் / புயல் போன்ற சீற்றங்களுக்கு பிறகு நடக்கும் ஒரு புனர் நிவாரனம் போன்றது…. மேலிருந்து கிழே குதிச்சாச்சு, ஏறனும் என்றால் அப்படி முடியாது… அதற்கு படிகள் அமைக்கும் வேலை தான்..

 கடந்த 10 நாட்களில் நாம் இங்கு பரிந்துரைத்த பங்குகளும், அதன்  விலை மாற்றமும்…

Unitech 29 – 36   –  24%   up

Sun Tv  – 133 – 175   31%  up

Unitech – 24 – 36  –  50%  up

United Sprits  – 810 –  980   –   20%

IFCI  17.00  – 19.55  –   15% 

Wipro  –  235  –    265  –  12.7%  

power grid  மட்டும் பரிந்துரைத்த விலையில் உள்ளது.

இப்ப சொல்லுங்க எந்த தொழில் ஒரு வாரம், 10 நாளில் 10% to 50% லாபத்தை தரும்.. டிரெடிங் செய்யமால் முதலீடாக இப்படி தேடி தேடி செய்தாலே நல்ல வருமானம் பார்க்கலாம்.  அதே நேரத்தில் 20% உயர்ந்த உடன் நமது கையிருப்பில் 80% ஐ விற்று வெளியேறிவிடவேண்டும்.  20% பங்குகள் நமக்கு இலவசமாக கிடைத்தது போல் ஆகிவிடும். அதனை Long Term முதலீடாக வைத்து கொள்ளவேண்டும். 

இன்றைய சந்தை கேப்டவுனாக துவங்க வாய்ப்புகள் அதிகம்…   நாள் நெடுகில் சரிவுகளில் இருந்து மீண்டுவர போராடும்…  போரட்டத்தில் கரடியின் கை ஓங்கும்.

============================================================================

எனது   அரசுக்கு பின்னூட்டத்தில் உள்ளிருந்தும் (மெம்பர்ஸ்)  வெளியில் இருந்தும் (மெம்பர்ஸ் அல்லாத) – திரு பைசல்,சக்தி, ராம்பிரசாத் ….. )   ஆதரவளிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி… உங்களின் ஆதரவுடன் என்றும் நமது ஆட்சி தொடரும்…

யாரும் குறை சொல்ல வில்லை…. சின்னதா நஸ்டம் வரும் போது… அதை கண்டு பதட்டம் அடைகிறார்கள்..   தின வர்த்தகர்கள் லாபமோ நஸ்டமோ அன்றே முடித்து கொள்ள வேண்டும்.  பொசிசன் டிரேடர்ஸ் 150-200 புள்ளிகள் வரை கூட காத்திருக்க பழக வேண்டும் (டிரெண்ட் நமக்கு சாதகமாக இருக்கும் போது.. )  

நேற்றைய தினம் அனைத்து பரிந்துரைகளும் அருமையாக செயல் பட்டு லாபத்தை வழங்கியது. .

இன்றைய சந்தையின் போக்கு 11.12.2008

யானைக்கும் அடி சறுக்கும்……  அப்ப பூனைக்கு???    சறுக்கியதே….  நேற்று..   எனது சந்தையின் கட்டுரையில் 2892 வரை வாய்ப்பு உள்ளதாக எழுதிய நான்.   சந்தை நேரத்தில் எடுத்த 3 முடிவுகள் எதிராக அமைந்தது.   எனது டெக்னிகல் மற்றும் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. 

டெக்னிகல் தோல்வி என்பதை விட இன்னும் சில நண்பர்கள் நஷ்டத்தை ஏற்று கொள்ள பக்குவபடவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.    சரி நேற்றைய தோல்வியை மறப்போம்…  இன்றைய நாளை புதிதாக துவங்குவோம்…

கார்த்திகை தீபத்தின் ஒளி அனைவரது வாழ்வையும் பிரகாசிக்க செய்யட்டும்.. ============================================================================

இன்றைய துவக்கம் அமைதியாக இருக்கும் ஆசிய சந்தைகள் மற்றும் மதியம் வெளிவரும் பணவீக்க விகிதம் ஆகியவற்றின் தாக்கம்  இருக்கும்.   

நாளை வெளிவர இருக்கும் IIP  Data அந்த அளவு திருப்தியாக இருக்காது என்று எதிர்பார்க்க படுகிறது சந்தை 150-200 புள்ளிகள் சரிவடைய சரியான காரணம் தேடுகிறது.   2700/2680 வரை நான் எதிர் பார்க்கிறேன்.   இரண்டு மூன்று நாட்களில் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறும்.

சந்தை Over Bought Zonil உள்ளது…  கூடவே வேறு சில டெக்னிகல் காரணிகளும் அதையே தெரிவிக்கின்றன. 

இன்றைய தினம் 2870 முக்கிய மான நிலையாக இருக்கும்…. 

இன்றைய பிவோட் நிலைகள்..

3097 – 3022 – 2977- 2902 – 2857 – 2782 – 2737

இன்றைய சந்தையின் போக்கு 10.12.2008

அனைவருக்கும் காலை வணக்கம்…

அண்ணன் பரம பதம் ஆட்டம் ஆடுகிறார்…. ஏணி கிடைத்து விட்டது என்று ஏறினால் அங்கு பாம்பின் தலை கிடைக்கிறது என்ன செய்ய..

கரடியின் ஆதிக்கத்தில் வணிகம் செய்வதும் அதிகம் லாபம் பார்ப்பதும் எளிது… ஆனால் காளையை  அடக்கி ஆளுவது எல்லோராலும் முடியாது.   கொஞ்சம் ஏமாந்தாலும் காளை முட்டி தள்ளி விட்டு போய் விடும்.

இந்த பரம பத  ஆட்டம் இனி தொடரும்… எனது பார்வையில் சந்தைகளில் சரிவுகள் ஏதும் மீதம் இல்லை.. 2490 நிலையில் பாட்டம் அரெஸ்ட்டாகி விட்டது.  முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நிலையில் சந்தை உள்ளது.  3150 நிலை வரை பெரிதாக Volume இருக்காது.  

ஆளும் கட்சிக்கு 3 மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி..  மத்திய அரசை மேலும் உற்சாகப்படுத்தும்,  தேர்தல் ஆணையம் லோக் சபா தேர்தல் ஏப்ரல் மே மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது, அது வரை அரசு சில நடவடிக்கைகள்… மற்றும் பல அறிவிப்புகள் என்று சந்தையை 3700-4000 என்ற நிலைக்கு எடுத்து செல்ல முயற்ச்சிக்கும்.    அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஜனவரியில் பங்காளி வீட்டில் ஒபாமா ஆட்சி பொறுப்பேற்று…  வாய் சொல் வீரர் மட்டும் இல்லை..  செயல் வீரர் என்றும் நிருபிக்க முயற்ச்சிப்பார்.

திங்கள் அன்று சந்தை 2850 க்கு மேல் தன்னை தக்க வைக்க இயலாததில் ஆச்சரியம் இல்லை…   இன்றைய சூழ்நிலையில் 4-5 % ஏற்றம் என்பது மிக மிக அதிகம்.  அதுவும் அடுத்த நாள் விடுமுறை…  எப்படி சந்தை மேலே நிலைப்படும்..   

சரி இன்றைய சந்தை எப்படி இருக்கும்….

2800 க்கு மேல் நிலைப்படுத்தத்தான் முயற்ச்சிப்பார்கள்..    2850, 2870, 2892.  கவனிக்க வேண்டிய மேல் நிலைகள்..

ஒரு 50 புள்ளிகள் இடைவெளி உள்ளதால் – 2710 வரை வரலாம் அவ்வாறு வாந்தால் 2600 /2580 வரை சென்று திரும்பலாம்.  அவ்வாறு நிகழ்ந்தால் அது Bottom Fishing செய்ய நினைப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக அமையும்.  

இன்றைய பிவோட் நிலைகள்..

2969 – 2923 – 2857 – 2811 – 2745 – 2699 – 2633

இன்றைய பரிந்துரை… 

Wipro ltd  –  235 என்ற விலையில் வாங்கலாம்.   டார்கெட் -320,380  

ஒரு சந்தோஷமான செய்தி திங்கள் அன்று எனது நிப்டி பரிந்துரை நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்டாப் லாஸை உடைத்தது..  🙂  அதன் பிறகு தான் டார்கெட் அடைந்தது.   ஒரு சிலர் Revised Stop Loss பின்பற்றி லாபம் அடைந்தனர்.  மற்ற அனைத்து கால்ஸ்ம் எப்பொழுதும் போல் வெற்றியை தேடித் தந்தது.

ஒரு சில நண்பர்கள் தொலைபேசியில் கேட்டார்கள்… எல்லா கால்ஸ்ம்/ எல்லா நாளும் Targets Achieved என்றே எழுதுறீங்க அது எப்படி சார்,  விளம்பரத்திற்காக எழுதுறிங்களா என்று. இங்கு எழுதுவது அனைத்தும் உண்மையான தகவல்கள் என்பது அதன் பயனாளிகளுக்கு தெரியும். 

மெம்பர்ஸ் உங்களுக்கு ஒரு வேண்டு கோள்… உங்கள் தின வர்த்தக விவரங்களை  Excel Sheet -ல் கீழ் வருமாறு எழுதி வாருங்கள்.. உங்களுக்கும் பயன் தரும்..  என்ன நாம் செய்கிறோம் என்பது தெரிய வரும்.  விரும்பினால் எனக்கு மெயிலில் மாதம் ஒரு முறை அனுப்பி வைக்கவும். 

Date  Stock /Future/ Entry  Exit  Price  Diff  Profit Loss
  Option Buy/ Sell Sell/Buy   (+/-)    
               
               
               

 

 

 

 

சிலர் பிவோட் கால்குலேட்டர் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள்..  அவர்கள் இங்கு இருந்து டவுன் லோட் செய்து கொள்ளலாம்.  PivotCalculator05-06-05.exe

இன்றைய சந்தையின் போக்கு 05.12.2008

நேற்றைய தினம் The Ultimate Winner is Mr.Bull அவருக்கும் அவர் பக்கம் இருந்து வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்,  அவரின் வெற்றி நடை தொடரட்டும்..

நேற்றைய சந்தையில் சில விசயங்களை கவனிக்க வேண்டும்… காலையில் இருந்து Big Boy’s எனப்படும் Bad Boy’s  சின்ன புள்ளைங்கள விளையாட விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.  அதவாது 2620 – 2690 இதன் இடையில் அவர்கள் வரவில்லை. இதில் எந்த பக்கம் போனாலும் Join பண்ணலாம் என்பது அவர்களின் நோக்கம்.   2690 /2728 இந்த நிலைகளை கடந்த உடன் வேகத்தை கவனித்திருக்கலாம். 

சரி இன்றைய சந்தையில் என்ன எதிர் பார்க்கலாம்…  

காலையில் சிறிய அளவில் கேப்டவுன் / சரிவு… எதிர் பார்க்கிறேன்,  நாள் நெடுகில் அதில் இருந்து மீண்டு மேல் நகரும் என்றும் எதிர் பார்க்கிறேன்.. மீண்டும் சந்தையை கரடியின் (போலியான) பிடியில் எடுத்து செல்ல முயற்ச்சிப்பார்கள். 

முக்கிய கீழ்நிலைகள் – 2755, 2735, 2710,2675 

முக்கிய மேல் நிலைகள் –  bull markets have no resistance 🙂

இன்றைய பரிந்துரை.

United Spirits   – அதன் தயாரிப்புகளை  போலவே குப்பென்று ஏறிடுச்சு… L 811 – H 930 C920

Unitech – 29 மற்றும் 24 நிலைகளில் பரிந்துதுரைத்த இப்பங்குகள் 30 என்ற விலையை கடந்து விட்டது. நமது இலக்கினையும் கடந்து செல்லும்.

IFCI Ltd – 17.00 என்ற தற்போதைய விலையில் வாங்கலாம்..  டார்கெட் 26, 31,37.

52 Week High – 116  52 Week Low – 15.35  🙂  🙂

Power Grid Corporation  – தற்போதைய விலையில் (74-76) வாங்கலாம் டார்கெட் 94/104.

(இந்த பரிந்துரைகளை உங்களுக்கு கிடைக்கும் தகவல்களுடன் சரிபார்த்து கொள்ளவும்)

எப்பொழுதும் போல நேற்றும் அனைத்து கால்ஸ்-ம் வெற்றியடைந்தது

===========================================================================

நேற்றைய தினம் பாரட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி…    உங்களுடைய வெற்றி எனது வெற்றி.. இந்த பெருமை அனைத்தும் இறைவனையே சாரும்.  எனது பரிந்துரைகளை பயன் படுத்தி கடந்த ஒரு வாரமாக வெற்றியடைந்தவர்கள், எச்சரிக்கையாக இருக்கவும்.  தொடர் வெற்றி சில நேரத்தில் நமது கவனத்தை திசை திருப்பும், அதீத எதிர்பார்ப்பும் ஆபத்தானது.   தொடர் பாரட்டு மழையில் நனையும் நானே தவறுகள் செய்ய நேரிடலாம். இங்கு நம்மை விட சந்தை தான் Supreme Commendor அவர் என்ன முடிவு எடுப்பார் என்று யாருக்கும் தெரியாது,  ஆனால் நிப்டியார் நமக்கு உறவு முறை (அண்ணன்) என்பதால் நம்மை கை விடமாட்டர்.  இங்கு ஒவ்வொரு நாளும் புதிய போரட்டம் தான். நேற்றைய வெற்றி இன்றைய வெற்றிக்கு உத்திரவாதத்தை தராது. அன்றைய நிகழ்வுகளை அன்றைய தினமே மறந்துவிட்டு அடுத்த நாளை புதியதாக துவங்குவோம். 

ஆர்.கே – அந்த லிஸ்டில் நீங்க தான் முதல் இடத்தில்..  விமல் – யுவராஜின் ஆட்டத்தை ஆடட்டும் நாம சச்சின் மாதிரி நிலைத்து ஆடி சாதனைகளை நமதாக்குவோம்.

தனம் – தங்களின் உணர்ச்சி பூர்வமான பின்னூட்டம் மகிழ்ச்சியை தந்தது. அதிகம் எமோஷனல் ஆகாதிங்க Life is Risk….  so what….  Risk it.  நடந்ததும், நடப்பதும்,  நடக்கப்போவதும் நன்மைக்கே.. 

.

இன்றைய சந்தையின் போக்கு 04.12.2008

நேற்றைய தினம் மிக பெரிய போரட்டமே நடந்தது…. காளைக்கும் (2720) கரடிக்கும் (2580) இடையில்.  இதைத்தான் ஒரு வரியில் சொல்லி இருந்தேன்.   2600 மிக அருகில் இருந்தும் கரடி அதனை வெல்ல இயலவில்லை.  அதிக பட்சம் 2610 ஐ கடந்து செல்ல விடாமல் காளை தடுப்பாட்டம் ஆடியது.  இன்று அதிரடியாக ஆடலாம், அப்படி ஆடி 2735 கடந்தால் அண்ணன் அடுத்து வரும் நாடகளில் 2900 மற்றும் 3000 நிலைகளுக்கு எளிதாக செல்வார்.

டெக்னிகல் பார்வையில் சந்தை மிகவும் சுவரஸ்யமாக இருந்தது…  இந்த போராட்டம் இன்றும் தொடரும்.   நான் காளையின் பக்கம்.    அதற்கு பங்காளியின் நேற்றைய உயர்வு (172 புள்ளிகள்)  ஓரளவு உதவியாக இருக்கும்.  நீங்க யாரு பக்கம்?. 

ஒரு வேளை 2600 உடைபட்டாலும் 2510/2490 மிகவும் வலுவான தடுப்பு நிலைகள் அவற்றை உடைக்கும் அளவுக்கு மிக பாதகமான சூழ்நிலை இல்லை.  ஆனால் கவனிக்க வேண்டிய அரசியல் நிகழ்வுகள்… 

1.  வடமாநில தேர்தல் முடிவுகள்..

2.  20 பேரை ஒப்படைக்க கோரும் இந்தியா,  அவர்கள் யார் என்று தெரியாது சொல்லும் பாகிஸ்தானின் சவடால்.. அதை கண்டிக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்.  இந்த நாடுகளின் ஆதரவுடன் இந்தியா பாகிஸ்தானால் ஆக்கிரமிக்க பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள சில தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தலாம் என்று வரு செய்திகள்.

சன் டிவி  அபாரம். 

கடந்த வாரம் எனது விருப்ப பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கும் சன் டிவி பங்கினை 135 விலையில் வாங்கலாம் என்று சொல்லி இருந்தேன்…  கடந்த 2 நாட்களாக ரெக்கை கட்டி பறக்குது. தற்போதை விலை 175  – 31 %  உயர்ந்துள்ளது.   235, 265, 310 வரை செல்லலாம் என்று எதிர் பார்க்கிறேன்.

இதை தேர்ந்தெடுக்க என்ன காரணம்….  தொடர் சரிவுக்கு பிறகு 135 நிலைகளில் டபுள் பாட்டம் நிலையில் சென்ற வாரம் இருந்தது.  அதே நேரத்தில் வரலாற்று சிறப்பு 🙂 மிக்க குடும்ப இணைப்பு நிகழ போவதாக தகவல் கிடைத்தது.  (நன்றி  ஜூ வி கழுகார்). டெக்னிகல் + செய்தி இரண்டு காரணங்களையும் இணைத்து பார்த்தேன்.

இன்றை பரிந்துரை

United Spirits  – சாராய சாம்ராஜ் (MCDOWELL) விஜய் மல்லையாவின் இந்நிறுவன பங்குகளை 810-850 விலையில் வாங்கலாம்,  டார்கெட் -990,1230 மற்றும் 1450 வரை.

லாபம் அடந்தாலும் நஸ்டம் அடைந்தாலும்,  சந்தோஷம் மற்றும் துக்கம் என்று அதிகமானவர்கள் எப்பவும் தேடி போகும் நிறுவனம் இது.  இந்தியாவில் விற்பனை யாகும் அதிகமான் மது பான பிராண்ட்கள், இவர்களின் தயாரிப்பு தான்.

HDFC நிறுவன மீயுச்சுவல் பண்ட் கள் – 12 லட்சம் பங்குகளில் முதலீடு செய்துள்ளன.

(இந்த பரிந்துரையை உங்களுக்கு கிடைக்கும் தகவல்களுடன் சரிபார்த்து கொள்ளவும்)

நேற்றைய பதிவினை பாராட்டி பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் மிக்க நன்றி..  இது அனைவரும் பொதுவாக செய்யும் தவறுகள் தான்.  சில நண்பர்கள் என்னை தனே இப்படி பதிவில் குறிப்பிட்டு காலை வாரி உள்ளீர்கள் என்று வருத்த பட்டார்கள்.  உண்மையில் யாரையும் குறிப்பிட்டு எழுத வில்லை. செவ்வாய் இரவு ஒரு நண்பர் உடன் பேசினேன். அவருடைய தவறுகளை சுட்டி காட்டி அவரிடம் பேசி கொண்டிருந்த போது அவர் தான் இதே தவறுகள் அனைவரும் செய்றாங்க எழுதுங்க சாய் என்றார்.  

செவ்வாய் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த முன்னனி வெற்றியாளர்..  பாஸ் ஏன் பெயரை குறிப்பிடவில்லை நீங்களே எழுதுங்கள் என்றார்.   எனது அருமை நண்பர் ஆர் கே வால் அறிமுகம் செய்யப்பட்ட நண்பர் S.K.VIMAL /கரூர்.  அவரின் வெற்றி எனக்கும் இந்த வலைப்பதிவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.  இந்த வலைப்பதிவு மூலம் அறிமுகம் ஆனவர்களில், பங்கு சந்தையில் இழந்ததை முழுமையாக மீட்டெடுத்து விட்ட முதல் நபர்,  எனது லட்சியம் குறைந்தது ஒரு 10 கோடிஸ்வரர்களை உருவாக்குவது,  இதுவரை 5 நபர்களை அடையாளம் கண்டுள்ளேன், அந்த லட்சியத்தில் திரு விமல் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன். அதற்கு எனது இஷ்டதெய்வங்களான சாய்+கணேஷ் இருவரும் அருள் புரிய வேண்டும் எனக்கு துனை நிற்க வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.  நண்பர் விமல் அம்மாவிடம் சொல்லி கண் திருஸ்டி கழிக்க சொல்லுங்கள். ஒரு வாரம் இடைவெளி விட்டு  உங்கள் வெற்றி  பயணத்தை தொடருங்கள் . வணிகத்தின் அளவை பாதியாக குறைத்து கொள்ளுங்கள்.  

 

 

Wednesday, December 03, 2008
Cash and Future -Day Trading
Calls  Target Result
Buy ONGC 648 655/662 1st Target Achieved 
Buy ICICI 325 332/36/38 All Targets Achived
Buy Tata Power 642 646/48/53 Target Achieved.
Future 
Calls  Target Result
Buy Nifty 2634 2655/78/702 Two targtes Achieved – high 2672
Option 
Calls  Target Result
Buy 2800 call at 81 94/98 day traders booked at 100