Archive for the ‘டெக்னிகல்’ Category

Island Top – Short Term Pattern (Bearish)

இடைவெளி நிரப்பப்பட்டது 🙂  

அனைவருக்கும் வணக்கம் –  நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு பதிவு எழுத துவங்குகிறேன். ,   

ஏற்கனவே நமது பழைய பதிவுகளில் ஐஸ்லாண்ட் டாப் / பாட்டம் அமைப்புகளை பற்றி எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். 

தற்போதைய நிப்டி சார்ட்டில் “ஐஸ்லாண்ட் டாப்” அமைப்பு உருவாகியுள்ளது,  படம் மேலே.   

5060  வரை மேலே சென்று இந்த இடைவெளி நிரப்பப்படாத வரை இந்த அமைப்பின் தாக்கம் இருக்கும்.   

நமது முந்தைய பதிவு –

http://wp.me/pd3Xh-iR

இந்த அமைப்பு பற்றிய மேலதிக விவரங்களுக்கு –

http://www.trending123.com/patterns/island_reversal.html

 

 

==============================================================================

தற்போதைய சந்தையின் போக்கு சர்வதேச சந்தை நிலவரங்களால் வழி நடத்தப்படுவதை நாம் நன்கறிவோம்.   

  இதற்கு முந்தைய பதிவுகளில் “டவ்ஜோன்ஸ் மற்றும் எஸ் அன்ட் பி”  சார்ட்களை பார்த்தோம், அவற்றின் தற்போதைய நிலை என்ன்?

முக்கியமான சப்போர்ட் நிலைகள் என்று பார்த்த 10930 மற்றும் 1080 நிலைகளை உடைத்து கீழிறங்கி  அடுத்த வலுவான சப்போர்ட் நிலைகளில் புயல் சின்னம் போல் நிலை கொண்டுள்ளது.  இந்நிலைகள் உடைபட்டால் பெரிய அளவில் சரிவுகளை சந்திக்க நேரிடும்.  மாறாக இந்நிலைகள் தக்கவைத்தால் ஏற்றமடையலாம்.

Advanced Patterns

09.09.09-09-09-09

Risingwedge

Risingwedge1
இந்த அமைப்பை பற்றிய மேலும் விவரங்களுக்கு –

http://stockcharts.com/school/doku.php?id=chart_school:chart_analysis:chart_patterns:rising_wedge_reversa

இன்றைய சந்தையின் போக்கு 13.08.2009

நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போல சரிவுகளை மீட்டெடுத்தது…. (இந்த அளவு சரிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை 🙂 )

கரடிகள் பலமிழந்து விட்டன…     நல்ல நிலையில் நேற்றைய சந்தையின் முடிவு அமைந்துள்ளது.   

4490 நல்ல சப்போர்ட்டாக இருக்கும் அடுத்து வரும் நாட்களில்.       4585  வரை இன்று சந்தை செல்லும் என்று எதிர் பார்க்கிறேன்.    அதை தக்கவைத்தால் 4650 வரை அடுத்து வரும் நாட்களில் முன்னேறும், வாய்ப்புகள்.

சென்செக்ஸ்  :-    சப்போர்ட்  14900  –  14820  – 14650   ரெசிஸ்டென்ஸ் – 15240 

நிப்டி :-   சப்போர்ட் – 4390 – 4420 –  4450  – 4490

ரெசிஸ்டென்ஸ் –  4520 – 4545 – 4585 – 4620

நேற்றைய தினம் வெளிவந்த IIP குறீயீட்டு எண் நல்லதொரு பாசிட்டிவ் செய்தியாக அமைந்துள்ளது.   ஆனால் இந்திய சந்தைகளுக்கு பெரிய சவால் குறைவான மழை அளவும்.  நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள பன்றி காய்ச்சலும் தான். 

 கடந்த 10  ஆண்டுகளில்  தகவல்  தொழில் நுட்ப  துறைக்கு வழங்கிய முக்கியத்துவத்தில்  10% அளவு கூட விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை, இந்நிலையில் தற்போதைய மழையின் குறைவால் மேலும் பாதிப்படையும் நிலை.

 ஏற்கனவே கடுமையான நெருக்கடியை சந்தித்துவரும் விமான சேவை மற்றும் ஹோட்டல் / டூரிசம் விருந்தோம்பல் துறைகள் பன்றி காய்ச்சல் பீதியால் மேலும் அடி வாங்கும் நிலை. மற்ற துறைகளிலும் இதன் மறைமுக தாக்கம் இருக்கும். 

3 நாளைக்கு முந்தைய பதிவில் நான் எழுதிய 4 என்ற எண்ணிற்கும் சந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று முருகன்  என்ற நண்பர் மெயிலில் கேட்டிருக்கிறார்.  இது பெரிய விசயம் இல்லை.   சந்தையில் எந்த ஒரு செயலும் (ஏற்றம் / இறக்கம்) தொடர்ச்சியாக 4 முறை நடந்தால் அதற்கு அடுத்து அதன் போக்கில்,  5 வது முறை மாற்றம் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை, மிக பழமையான ஒரு வணிக முறை என்று கூட சொல்லலாம்.  இன்றும் பலரால் பின்பற்ற படுகிறது இது 90% சரியாக இன்றும் அமைந்து வருகிறது. 

இந்த படத்தை கூர்ந்து கவனியுங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.

dow weekly

இன்றைய சந்தையின் போக்கு 12.06.2009

நிப்டி மற்றும் சென்செக்ஸ் 1 மணி நேர சார்ட்டில் மிகவும் அரிதான Megaphone Top என்ற அமைப்பு (Pattern) உருவாகியுள்ளது.  

இந்த அமைப்பு ஒரு ஸ்டாக் அல்லது இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் அதன் உயரத்தில் காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடைபெறும் போரட்டத்தை வெளிப்ப்படுத்தும் விதமாக அமைவதாகும்.

mp

mp1

தற்போது நிப்டியார் 4375 – 4350 ஐ நோக்கி பயணம் செய்வாரா அல்லது  ஸ்டாப்லாஸ் 4720 ஐ உடைத்து மேலும் ஒரு புதிய உயரத்தை அடைவாரா?

வர்த்தகர்கள் மேலே உள்ள தகவலை தகவல் என்ற அடிப்படையில் மட்டும் எடுத்துகொள்ளவும் இதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கவேண்டாம்.    

முதலீட்டாளர்களின் மனநிலையை பார்த்தால்

2008 ஜனவரி மாத சரிவுக்கு முன் சில வாரங்கள் என்ன மன நிலை காணப்பட்டதோ அதே மாதிரியான மனநிலைதான் தற்போதும் நிலவுகிறது என்றால் மிகையில்லை.   தற்போதைய Volume அன்றைய நிலவரத்தையே பிரதிபலிக்கிறது.  ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் லாபத்தில் உள்ளார்கள்,  ஆனால் இன்று விட்டால் இனி இந்த விலையில் கிடைக்காது என்பதை போல இந்த உயரத்திலும் முதலீடு செய்கிறார்கள்.  2007 நவ – 2008 ஜன இல் எவ்வாறு அதை வாங்குங்க இதை வாங்குங்க என்று பரிந்துரைக்கபட்டதோ அதே போல் தான் இன்றும் பரிந்துரைகள் வருகின்றன.

 இன்றைய முக்கிய நிலைகள்

4726- 4686 – 4667-4650 – 4620  – 4590 – 4578 –  4560 – 4538

4600 மற்றும் 4550 முக்கிய சப்போர்ட் நிலைகள்.   

பங்கு சந்தை தொழில் நுட்ப பகுப்பாய்வு

அதி காலையில் எழுந்து ஆர்வ கோளாறில் – பதிவு எழுதும் ஆர்வத்தில் Blog -ஐ திறந்த உடன் தான் இன்று சந்தைக்கு விடுமுறை எனபது நினைவுக்கு வந்தது.  அந்த அளவுக்கு இணையதள அடிமை / பதிவு போதை.  சரி “எனது பார்வை” -க்கு பதிலாக சில புத்தகங்களுக்கு / தகவல்களுக்கு இணைப்புகளை பதிவாக்குவோம்.

எனது சேமிப்பில் இருக்கும் டெக்னிகல் சம்பந்தப்பட்ட இரு புத்தகத்திற்கு இணைப்பு தந்துள்ளேன். டெக்னிகல் ஆர்வம் உள்ளவர்கள் டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்.

(இந்த புத்தகங்களுக்கான நிரந்தர இனணப்புகள் மேலே உள்ள Down Load பக்கத்திலும் உள்ளது)
===========================================================================
சந்தை தொடர்பான அடிக்கடி கேட்கப்படும்
 (இந்த தொடர்பை கிளிக் செய்யவும்)
பல கேள்வி பதில்கள் பயன் உள்ளவை ஆர்வம் உள்ளவர்கள் படித்து பாருங்கள்…  யாராவது இதை தமிழாக்கம் செய்தால் பலருக்கும் பயன் படும்.. 

Moving Average Convergence-Divergence (MACD)

(MACD) was originally constructed by Gerald Appel an analyst in New York. Originally designed for analysis of stock trends, it is now widely used in many markets.
 
MACD is constructed by making an average of the difference between two moving averages. The difference of the original two moving averages and the moving average of the difference can be plotted as two lines, one fast and one slow.
 
Uses

Most modern charting software now includes MACD as standard. Once selected to display in your charting software it normally shows up as two lines plotted on an open scale against the zero line. These two lines will normally be of different color or one line a solid line and the other a dotted line. Frequently used settings are 12 and 26 period exponential moving averages with 9 period exponential moving average as the signal line.

Although there are three moving averages mentioned you will only see two lines. The simplest method of use is when the two lines cross. If the faster signal line crosses above the slower line then a buy signal is generated and vice versa. It is also used as an overbought and oversold indicator. The higher above the zero both lines are the more overbought it becomes and the lower below the zero line both lines are the more oversold it becomes.

It may also lead to a stronger signal if the signal line crosses down when it is overbought and crosses up when it is oversold. The last common use of MACD is that of divergence.

If the MACD is making new lows and the price of the security is not making new lows that is one form of divergence (bullish divergence). Also, if the MACD has made a high and starts to head down but price continues up that is another type of divergence (bearish divergence) and may lead to an indication of a change in direction.

My Own Use Of MACD

I like to use the MACD as a trend indicator with parameters set at 8 and 18 period exponential moving averages with a 9 period exponential moving average as the signal line. All I am trying to do is establish a trend in a higher time period than the one I intend to trade.

If you were trading day charts you would be looking at the MACD on the weekly. If you were trading an hourly chart you might look at the MACD on the daily. As long as the signal line remains above or below the MACD line on the next higher time frame you know the trend is still in place.

As you can see from the chart examples of the 30 min Cash DJIA there was a sell signal on the 9th May 02. This was my higher time frame as I was trading intraday. I then went to the 5 min chart of the Cash DJIA and sold the rallies, confident to stay short as long as my higher time period MACD trend in the 30 min stayed intact. If the 30 min MACD signal line were to cross up I would have closed all short positions.

இன்றைய சந்தையின் போக்கு 12.02.2009

நேற்றைய தினம் டெக்னிகல் அல்லாமல் பொதுவாக 2800 என்று குறிப்பிட்டது உற்சாகம் மிகுதியால்…  அது தவறு தான்..    கொஞ்சம் முன் கூட்டியே சொல்லி வருகிறேன் இந்த முறையும்..   வரும் நாட்களில் 2626  எனது டார்கெட் / எதிர் பார்ப்பு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.  

2870 மிகவும் வலுவானதாக உள்ளது என்பது நேற்றும் நிருபிக்கபட்டது.  

சர்வதேச சந்தைகளின் போக்கிற்கு மாறாக நாம் செயல் படுவது / குறுக்கு சால் ஓட்டுவது  இது முதல் முறை அல்ல.  ஆனால் இது கொஞ்சம்  ஓவர்.   முந்தைய நிகழ்வுகளில் பார்த்தோமானால் இரவில் டவ் ஸ்பாட் அதிகம மாக விழுந்திருந்தாலும்.. காலையில் நமது சந்தை துவங்கும் முன்பாக ப்யூச்சரில் சரிவை மீட்டெடுக்க முன்னேறி இருக்கும்.  தற்போது அது போன்றும் அமைய வில்லை..    இன்றும் ஆசிய சந்தைகள் சரிவடைகின்றன.

கடந்த இரு தினங்களில் தங்கம் 40 – 45 $ வரை உயர்ந்துள்ளது.    இது போன்ற சூழ்நிலையில் சரிவுகள் தள்ளிப்போடப்பட்டால் மீண்டும் ஒரு சத்ய சோதனை தான்.   அதாவது அடி பலமாக இருக்கும்.

சரி நாம் சரிவை எதிர் பார்க்கிறோம் என்பதற்காக உடனடியாக சரியுமா என்ன.?     ஆனால் நிப்டியின் பங்குகள் அனைத்தும் ஒரு சரிவிற்கு தயாரான நிலையில் தான் உள்ளது.   எந்த ஒரு சின்ன செய்தியும் பின்னடைவை ஏற்படுத்தும்.  பின்நகர்ந்து முன்னேறுவது தான் சந்தைக்கும் நல்லது. 

கடந்த வாரம் பணவீக்கம் விகிதம் வெளியான அன்று வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர் பார்த்தோம்..  அன்று 4250 இல் இருந்த பேங்க் நிப்டி அந்த எதிர்பார்ப்பால்  4600 வரை முன்னேறிவிட்டது. ஆனால் இன்னும் அறிவிப்பு இல்லை.    கூடவே 16.2 அன்று வெளி வர உள்ள மினி பட்ஜெட்டும்  கூடுதல் காரணம், சந்தை மேலே நிலைப்பெற. 

எனது ஆலோசனையின் பேரில் 2650-2700 நிலையில் யாராவது முதலீடு செய்திருந்தால் லாபத்தை உறுதி செய்யவும்.  

இன்றை முக்கியமான நிலைகள் 

2955  மற்றும் 2870,  2856  

==========================================================================

சரி இன்று தகவல் என்ற அடிப்படையில் ஒரு நிருபிக்கபட்ட டெக்னிகல் தகவலை பார்ப்போம்

கடந்த வாரம் பேங்க் நிப்டி 4200 இருந்த  போது 4250 உடைத்த உடன் 4600 என்றும்  மெக்டவல் 520 இல் இருந்த போது 550 உடைத்தால் 750 என்று சிம்பா மற்றும் ரவி உள்ளிட்ட நண்பர்களிடம் மட்டும் தெரிவித்தேன்.  🙂 நமது மருந்தை அடுத்தவர்கள் மீது தானே பரிசோதிக்கனும். 

 டார்கெட் என்ன அடிப்படையில் என்ற காரணம்  அவர்கள் கேட்டபோது சொல்லவில்லை.  பெரிதாக ஒன்றும் இல்லை.  நாட்களுக்கு இடையேயான இடைவெளி  தான்.   இதை உறுதிபடுத்த கூடுதலாக   சில சப்போர்ட்டிங் இண்டிகேட்டஸையும் பயன் படுத்த வேண்டும். 

இதை 10-15 முன்னனி பங்குகளில் 2 வருட டேட்டாவை ஆய்வுக்கு எடுத்து கொண்ட பிறகே இங்கு பதிவிடுகிறேன். குறுகிய கால முதலீட்டிற்கு 90-100%  பயன் உள்ளது.  ப்யூச்சருக்கு 80-90% பயன் தருகிறது.

mcdowell

 

bank-nifty

(இந்த இந்த பங்குகளில் இடைவெளி உள்ளது, என்று ஆர்வத்தில் யாஹுவில் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்…  முடிந்தால் இங்கு பின்னூட்டமாக எழுதி மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.)

இன்னொரு விசயம் – நாம் சில காரணங்களுக்காகத்தான் யாஹுவில் invisble select செய்கிறோம் ஆனால் அதை கண்டு பிடிக்கவும் சில வெப்சைட்கள் உள்ளது என்று அதன் மூலம் ஒருவரை தொந்தரவு செய்வதும் ஒரு வகையில் Trespassing தானே.  நேற்றைய இரவில் ஒருவர் அவ்வாறு  ஹலோ சொன்னார் நான் பதில் தரவில்லை உடனே எனக்கு தெரியும் நீங்கள் ஆன்லைனில் உள்ளீர்கள் என்றார்.

சத்யத்தினால் வந்த சத்திய சோதனை

இப்படி ஒரு சரிவு (ஒரே நாளில் 250 புள்ளிகள் வரை) நிச்சயம் உண்டு என்று தெரியும், அதைத்தான் கரடியாக கத்தி வந்தேன்.. ஆனால் அது சத்யம் வழியாக வரும் என்று சத்தியமாக தெரியாது. 

கரடி கட்சி தலைவருக்கும் அதை ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் இன்று நல்ல விருந்து குறிப்பாக புட் ஆப்ஷனில்.   

3000 புட் 89 இல் இருந்து 200 பிளஸ்

2800 புட்  30 இல் இருந்து 120 பிள்ஸ்

நாம் செவ்வாய் அன்று டெக்னிகல் அடிப்படையில் பரிந்துரைத்த சத்யம் 170 புட் ஆப்ஷன் 12 இல் இருந்து 118 இல் லாபம் பார்த்தோம்.

நினைவூட்டல் …. 

கடந்த 24/12/2008 அன்று சத்யம் பற்றி நான் சொன்ன கருத்துகளும், அதற்கு நண்பர் ராம் பிராசாத் அவர்கள்.. நயமான சுட்டிகாட்டல் என்று பாராட்டி இருந்தார் அன்று மலிவாக கிடைக்கிறதே என்று வாங்கியவர்கள் கையை  சுட்டு கொண்டார்கள்.

//சத்யம் பற்றி சிலர் கேள்வி கேட்டிருந்தார்கள்…  எரிகிற வீட்டில் எடுத்தவரை லாபம் என்பார்கள் ஆனால் அது சிலநேரம் நம்மை காயப்படுத்தவும் வாய்ப்பு உள்ளதால். தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது.   அடுத்து அடுத்து வரும் செய்திகள் (உலக வங்கி தடை) அனைத்தும் பாதகமாகவே உள்ளது.///

என்னதான் நாம் லாபம் அடைந்தாலும் ஒரு நடுநிலையாளனாக சத்யத்தின் நிலைமையை ஜீரணிக்க முடியவில்லை. எப்படி 53000க்கும் அதிகமானவர்கள் வேலை பார்க்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தில் இப்படி ஒரு நிலைமை.   கணக்குகளில் இப்படி ஒரு தில்லு முல்லு செய்ய முடியும் என்றால்,   என்ன சொல்வது.

இன்னும் யார் யார் எல்லாம் இப்படி இருக்கிறார்களோ…  சமீப காலத்தில் அசூர வளர்ச்சி அடைந்த நிறுவனங்களை சந்தேகிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.  எந்த புற்றிற்குள் எந்த பாம்பு இருக்கிறதோ தெரியவில்லை.  

கடந்த 10-15 நாளாக நான் தூக்கத்தை தொலைத்தேன் என்றால் மிகையில்லை… அந்த அளவு கடுமையான விமர்சனங்கள் கேலி பேச்சுக்கள்.   ஆனால் மீண்டும் ஒரு முறை தின வர்தகர்கள் கரடியின் ஆதிக்கத்தில் தான் அதிகம் லாபம் பார்க்க முடியும் என்று சந்தை நிருபித்து உள்ளது.    கடந்த ஆறு நாட்களில் காளை கண்ட ஏற்றத்தினை இன்று ஒரே நாளில் தட்டி பறித்து விட்டது. . 

சந்தை இறங்கும் இறங்கும் என்று தொடர்ந்து எழுதியதை கண்டு சிலர் எரிச்சல் அடைந்திருப்பீர்கள் அதனால் பெரிய லாபம் இல்லை என்றாலும் தக்க நேரத்தில் எச்சரிக்கை செய்தோம் அதனால் ஒரு சிலருக்காவது பயன் இருந்திருக்கும் என்ற திருப்தி எனக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 10-15 நாட்களாக எனக்கு துணை இருந்து தொடர்ந்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் குறிப்பாக  திரு ரவி,  திரு அருண் மற்றும் ஆர்கே உள்ளிட்ட நண்பர்கள் அனைவருக்கும்  நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.  

பின்குறிப்பு :- 

சந்தை இன்னும் முழுமையாக வலுவிலக்கவில்லை….  ஒரு நிறுவனத்தின் போக்கால் ஒட்டு மொத்த சந்தையும் பாதிப்படைய கூடாது… சரிவின் வேகத்திற்கு ஏற்றவகையில் ஒரு சிறிய அளவில் அதாவது 3000-3050 வரை செல்லவும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. 

Candlesticks,Fibonacci and Chart Pattern- தொழில் நுட்ப புத்தகம்

எனது சேமிப்பில் இருக்கும் இன்னொரு புத்தகத்திற்கும் இணைப்பு  தந்துள்ளேன்.    டெக்னிகல் ஆர்வம் உள்ளவர்கள் டவுன் லோட் செய்து கொள்ளுங்கள்.

 

The best way to predict your future

is to create it.