Archive for the ‘குறுகிய கால சாகுபடி’ Category

சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்

2010 ஆம் ஆண்டு  முதலீட்டிற்கான எனது அடுத்த தேர்வு சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்(SANGHVI MOVERS LIMITED)  கிரேன்களை (Heavy Duty Hydraulic and crawler cranes) வாடகைக்கு விடும் நிறுவனம். இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 9வது இடத்திலும்  உள்ளது.

Demag_HC_340

ரிலையன்ஸ் / சுஸ்லான் / என் டி பி சி / டாட்டா ஸ்டீல்  போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளார்கள்.

http://www.sanghvicranes.com  

புதிதாக மின் உற்பத்தியிலும் கால் பதிக்கிறார்கள்…  (செய்தி சென்ற வார பிஸினஸ்லைன் – http://www.thehindubusinessline.com/2009/09/01/stories/2009090151100300.htm )

டெக்னிகல் சார்ட் பார்க்கும் போது  அதிகம் வாங்க பட்ட நிலையில் உள்ளது.   நீண்ட கால முதலீட்டிற்கு சிறுக சிறுக வாங்கலாம். 

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

 

==============================================================================

நிப்டி மற்றும் சென்செக்ஸ் – 2009  ஆம் ஆண்டின் அதிகபட்ச உயரத்தை அடைந்துள்ளது.   இந்நிலையில் இருந்து எங்கு செல்லும் என்பது தான் எங்கும் நடை பெறும் விவாதம்.

இரண்டு இண்டெக்ஸ்களின் தினசரி சார்ட்டில் Rising Wedge (Reversal) என்ற அமைப்பு தெரிகிறது.   அதிக பட்ச உற்சாகத்தில் அனைவரும் உள்ள இந்த நேரத்தில் படத்துடன் விளக்கினால் நன்றாக இருக்காது.

அதனால், இந்த அமைப்பை பற்றிய மேலும் விவரங்களுக்கு –

http://stockcharts.com/school/doku.php?id=chart_school:chart_analysis:chart_patterns:rising_wedge_reversa

==============================================================================

நம்து பதிவு மூன்று லட்சம் ஹிட்களை –  பெறும் இந்த வேளையில் ….. தினசரி பதிவு எழுதுவதை நிறுத்துவது என்ற முடிவு செய்துள்ளேன்…   எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை.   தொடர்ந்து எழுதுவதால்  ஏற்படும் ஆர்வகுறைவும்,   சலிப்பும் தான். 

ஆர்வமின்றி நிப்டி லெவல்களை மட்டும் எழுதுவதை நிறுத்திவிட்டு வாரத்தில் 1-2 பதிவுகள் அர்த்தமுள்ளதாக (டெக்னிகல் – மற்றும் முதலீட்டிற்கான தேர்வுகள் )  எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இன்றைய சந்தையின் போக்கு 10.08.2009

கடந்த இரு நாட்களாக எதிர் பார்ப்புகளையொட்டி நகரும் சந்தைகள்…    இன்றைய தினம் ஒரு Dead Cat Bounce ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வலுவான வேல்யூம்-டன் 4510 நிலையினை கடந்தால் 4580 வரை எளிதாக சென்றடையும் வாய்ப்புகள் உள்ளது.

சென்செக்ஸ் –  சப்போர்ட் 14900   ரெசிஸ்டென்ஸ் – 15450

நிப்டி  – சப்போர்ட் 4444 – 4480 – 4490  ரெசிஸ்டென்ஸ் 4510 – 4533 – 4550 

இன்றைய நிப்டி ப்யூச்சர் நிலைகள்

4480 4490 – 4511 – 4533 – 4549 – 4585 – 4620

=============================================================================

முதலீட்டிற்கான பரிந்துரைகள் சொல்வதில்லை என்ற வருத்தம் சில நண்பர்களுக்கு இருக்கிறது.  யுனிடெக் நிறுவன பங்கினை 30 விலையில் பரித்துரைத்த சமயம் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக பரிந்துரைகளை தவிர்த்து வந்தேன்.   

மீண்டும் முதலீட்டிற்கான பரிந்துரைகளை எழுதுவதற்கு முன்பாக பழைய பரிந்துரைகளின் செயல்பாடுகள் குறிப்பாக நமது தீபாவளி 2008 போர்ட் போலியோவின் நிலை என்ன? பயனுள்ளதாக அமைந்ததா?  என்பதை மீண்டும் அலசி பார்த்தேன். (இந்த பங்குகளில் 30-35 % சதவீத லாபத்தில் நான் வெளியேறிவிட்டேன் என்பதை ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.)இன்று வரை தொடர்ந்திருந்தால்,  முதலீடு இரண்டு மடங்காக வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக பஜாஜ் ஹிந்துஸ்தான் மற்றும் ஐவிஆர்சி எல் ஆகிய பங்குகள் 5 மடங்கு உயர்ந்துள்ளது.  நமது முதலீட்டில் ஏமாற்றத்தை கொடுத்து,  நஷ்டமடைந்த நிலையில் உள்ள ஒரே பங்கு,  பாலாஜி டெலிபிலிம் மட்டுமே. 

தற்போதைய நிலை…..

PMS

சரியாக 9 மாதம் 13 நாட்களில்   போட்ட முதலீடு இரட்டிப்பாகியுள்ளது. 

2009 ஆண்டிற்கான புதிய போர்ட் போலியோவை தயார் செய்வதற்கான வாய்ப்பு நெருங்குவதாக கருதுகிறேன்.   கூடிய விரைவில் எழுதுகிறேன்.   நீங்களும் உங்களுக்கு பிடித்த / தெரிந்த பங்குகளை பரிந்துரைக்கலாம்.  என்ன சென்ற ஆண்டை போல ஒரே நாளில் முதலீடு செய்ய இயலாது. ஒவ்வொரு பங்காக அதற்கான வாய்ப்பு வரும் நேரத்தில் முதலீடு செய்வோம்.  முதலீடு அளவு 10 லட்சம் தீபாவளிக்கு முன்பாக முழுமையாக பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சென்ற ஆண்டே பலருக்கு அழைப்பு விடுத்தேன் ஆனால் யாரும் முன்வரவில்லை. சென்ற ஆண்டை விட தற்போது  பல தமிழ் நண்பர்கள் சந்தை சார்ந்த பதிவுகளை எழுதி வருகிறார்கள்.    அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் இதில் பங்கெடுக்க.   மூத்த பதிவர் பங்கு வணிகம் திரு சரவணகுமார் -ல் இருந்து தற்போது இதில் இணைந்திருக்கும் பொன்மலர் உட்பட அனைவரையும் அழைக்கிறேன்.   பதிவு எழுதாத நண்பர்களும் கலந்து கொள்ளலாம்.

நன்றி.  

குறுகிய கால முதலீடு

blue star infotech பங்கினை 70-72/- விலையில் வாங்கலாம் டார்கெட் – 90/-

SANRA SOFTWARE

இந்த பங்கினை தற்போதைய விலையான 53-55/- ல் வாங்கலாம்.

ஸ்டாப் லாஸ் – 46/-
டார்கெட் – 65/- காலம் – 1 மாதம்.

TARGET ACHIEVED ON 21/05/2008  HIGH – 90.65

இந்தியன் ஹோட்டல் கம்பனி

இந்த பங்கினை 115 என்ற விலையில் நீண்ட கால/குறுகிய கால முதலீடாக வாங்கலாம்.

இந்நிறுவனம் தாஜ் குரூப் என்ற பெயரில் 10 ஆயிரம் அறைகள் கொண்ட 84 ஆடம்பர ஹோட்டல்களை பல நாடுகளில் நடத்தி வருகிறது.

Icsa india

இந்த பங்கினை  440 என்ற விலையில் வாங்கலாம்… 1-2 மாத காலத்தில் டார்கெட் விலை 525/-

கோர் புராஜக்ட்ஸ்

Core Projects – 190 என்ற விலையில் வாங்கலாம் 1-2 மாத காலத்தில்

240 விலை டார்கெட்