Archive for the ‘வெற்றியின் ரகசியம்’ Category

ஆண்டியையும் அரசனாக்கும் ஆப்ஷன்

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பரிந்துரைத்த ஆப்ஷன்களின் விவரம்:- 

S.no Counter Buy or At Tgts Booked Qty *   Profit or
    SELL           Loss
1 NIFTY3000 PUT 89 200-250 200 50 111 5550.00
2 SATYAM PUT-170 12 15-17 120 600 108 64800.00
3 RNRL PUT-60 4 9 10 1788 6 10728.00
4 RNRL PUT-50 1 4 5 1788 4 7152.00
5 Unitech Put-40 3 5-7 10 900 7 6300.00
6 Rcom Put-120 11 20 25 350 14 4900.00
7 Ntpc Put-180 6 8/10/12 14 1625 8 13000.00
8 SATYAM Call-120 3 5 4.5 600 1.5 900.00
* minimum 1 lot taken for    Profit For the Day 113330.00
calculation    

அனைத்திலும் ஒரு லாட் வாங்கியிருந்தால் கிடைத்திருக்க கூடிய லாபம்.

சொந்த தொழில் நுட்பத்தில் தயாரிக்க பட்ட ராக்கெட் ஏவுனைகள் (Rocket Calls)

S.no Counter Buy or At Tgts Booked Qty *   Profit or
    SELL           Loss
1 RNRL  Sell 63.5 59/55 53 1788 10.5 18774.00
2 ADLABS SELL 223 200-175 180 225 43 9675.00
* minimum 1 lot taken for  Profit For the Day 28449.00
calculation  

3 வது ராக்கெட் கால் (பாரதி ஏர்டெல்)  இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது….

வெற்றியின் ரகசியங்கள் – 1

மீன் பிடிக்க கற்று தாருங்கள்…. என்ற சிலரது கோரிக்கையை ஏற்று அவ்வப்போது எனது அனுபவம் மற்றும் கற்றவைகளை இங்கு பகிர்ந்துக்கொள்ள உள்ளேன்..

மீன் பிடிக்க முதலில் நீச்சல் தெரியணும்…. அதனால்தான் புதியவர்கள் கரையோரத்தில் கைய கால முதலில் நனைத்து சின்ன சின்ன மீன்களை கரையோரமா பிடித்து பழகுங்கள். என்ன சில நாள் மீன் கிடைக்கலாம். சில நாள் கிடைக்காமல் போகலாம். நஷ்டம் இல்லாத வரை அதில் தவறொன்றும் இல்லை.

அடுத்தது ஆறு, குளம், ஏரி மற்றும் கடல் என்று மீன் பிடிக்க பல இடங்கள் உன்டு…  நாம  மீன்  பிடிக்க  நினைப்பது  கடலில்.  மீன் கிடைக்க வில்லை என்றாலும்  பரவாயில்லை..  நாம பத்திரமா  கரையேரனும்.  அதனால் சிறியவர்கள் (பண பலத்தில்) மற்றும் புதியவர்கள் ஆரம்பத்தில் அடுத்தவர்களின் உதவியுடன் சிறு, சிறு… மீன்களை (லாபம்) பிடித்து பழகுங்கள். ஒரு குறிப்பிட்ட லாபம் (AT LEAST 50000-1L) வரும் வரை ரிஸ்க் எடுக்காதீர்கள். அதற்குள்ளாக நீங்கள் ஓரளவு நெளிவு சுளிவுகளை கற்று தேர்ந்து விடுவீர்கள். இங்கு அனுபவமே சிறந்த ஆசான். புத்தகம் எல்லாம் கிடையாது, யாரும் இதை செய்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது… 

ஓ.கே….

பங்கு வர்த்தகத்தில் ஒருவருடைய வெற்றியை கீழ்க்காணும் மூன்றும் தீர்மானிக்கிறது. 

1. Stock Selection  – தேர்ந்தெடுத்தல்.

2. Entry  – செயல் படுத்துதல்.

3. Exit  – வெளியேறுதல் (லாபத்துடன்)

சந்தை காளையிடமா… கரடியிடமா… அதை பற்றி அதிகம் கவலை படாமல் கூர்ந்து ஒரு பங்கினை கவனித்தோம் என்றால்.  ஒவ்வொரு நாளும் 2% முத்ல் 5% வரை  மேலேயும் கீழேயும் சென்று வருவதை பார்க்கலாம். இதில் நாம எப்ப என்ட்ரி ஆகிறோம், எப்ப வெளியேறுகிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கி இருக்கு.

சரிப்பா… ஒரு பங்கினை தேர்தெடுப்பது மிகவும் கஷ்டமாக இருக்கு என்ன பண்ணலாம்? என்று கேட்டால்… அதுக்கு எங்களை  போன்றவர்களிடம்  (பரிந்துரை) கேட்டு பெறலாம்.  ஆனால்,  entry மற்றும் exit முடிவுகளை நீங்கள் தான் எடுத்தாக வேண்டும், என்னை கேட்டால் இதுதான் மிகவும் சிரமம். அதில் தான் லாபம், நஷ்டம் அடங்கி உள்ளது. 

ஒரு Example ….

Winners don’t do different things. But they do things differently என்பார்கள்

இந்த வலைப்பூவினை எழுத ஆரம்பித்ததில் இருந்து ஒரு நண்பர் தொடர்ந்து மெயில் செய்வார். அவர் ஒரு Internet Center ல் வேலை செய்பவர்.  பங்கு  வணிகம்  செய்ய  ஆர்வத்துடன் இருந்தார்.    எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டார், அவருக்கு அவரது வேலையை காரணமாக வைத்து ஆன் லைன் டிரேடிங் அக்கவுண்ட் துவங்கவும். “அள்ள அள்ள பணம்” புத்தகத்தை 2/3 முறை படிக்கவும் ஆலோசனை கூறினேன்.  அவரும் அப்படியே செய்தார்.     எனது கட்டண சேவையில் சேர ஆர்வம் காட்டினார்.. மேலும் உரிமையுடன் “சார் நான் சந்தைக்கு புதியவன்/ சிறியவன் அதனால் சந்தாவை 2/3 தவணைகளில் தான் கட்டுவேன்”என்றார். நானும் அவருடைய ஆர்வத்திற்காக சம்மதித்தேன்.  

அவரை பற்றி போதும்…

coming to the point….

கடந்த 20/5/2008 அன்று நாகர்ஜுனா பெர்டிலைசர் பங்கின் ஒரு கால் ஆப்ஷனை 2.50 க்கு வாங்க பரிந்துரைத்தேன்.  – இது  Stock Selection  ஆனால் Entry / Exit அவரவர் கையில், அதை பொறுத்து தான் லாபம் நஷ்டம் அமையும்..

அன்று அந்த ஆப்ஷன் 2.60 க்கு ஒபன் ஆகி 1.90 க்கு கீழே சென்று 2.90 க்கு மேலே சென்றது.. அடுத்த நாள் நான் 3.10 க்கு சிறிய லாபத்துடன் முடித்து கொள்ள அறிவுறுத்தினேன்…

அன்றைய தினம் அவரிடம் (மேலே சொன்ன நபர்) இருந்து போன் கால்… “சார் எனக்கு  நல்ல லாபம். தேங்யூ சார்” என்று. எனக்கு ஆச்சரியம் அதே வேலையில் அவர் சொன்னதில்  நம்பிக்கையும் இல்லை.  எனவே அவரிடம்  எத்தனை லாட், என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்ன விலையில் Exit செய்தீர்கள் என்ற விவரத்தை மெயிலில் எழுதுங்கள் என்று  சொன்னேன்.

அதன் விவரம் …

தொடரும்……….

பின் குறிப்பு – இங்கு நான் எழுதுவது அனைத்தும் எனது சொந்த அனுபவங்களின்  டைரி தொகுப்பே.  யாருக்கும் இது அறிவுரையோ அல்லது ஆலோசனையோ அல்ல.