Archive for the ‘கட்டுரை’ Category

பண வாட்டமாக மாறும் பணவீக்கம்!

கடந்த இரு மாதங்களாக குறைந்து வந்த பணவீக்கத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் இன்று வெளிவந்த இது வரை வரலாறு காணாத 0.44% என்ற புள்ளி விவரத்தை பார்த்து கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்கள்.   

கடந்த வாரம் வரை  கவலையளித்து வந்த பணவீக்கம் (Inflation)  தற்போது  பண வாட்டமாக (Deflation)  மாறி விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.  

பணவாட்டம் என்றால் என்ன? 

அடுத்த வரும் நாட்களில் தமிழ் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் பாடமே எடுப்பார்கள். அதற்கு முன் நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பணவாட்டம் என்றால் பின் வரும் அர்த்தங்களை எடுத்து கொள்ளலாம்…..

விலை மலிவாக கிடைத்தும் வாங்கமுடியாத நிலை….

அல்லது  உற்பத்திக்கு ஏற்ற விற்பனை இல்லாத நிலை…..

உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும் ஒரு நிலை…..

அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி குறைய வில்லை…..  இன்னும் டிமாண்டை  குறையாமல் பார்த்துகொள்வதால் இப்படி ஒரு நிலை..    அதிக நாட்கள் அது  சாத்தியம் இல்லை..

ஏற்கனவே வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் ஆட்டம் கண்டு வருகிறது.   இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாலும் ஆச்சரியம் இல்லை.   குக்கிராமத்தில் கூட நிலத்தின் விலையை  உச்சத்தில் அமர்த்தினார்கள்.. 

இன்னொரு உதாரணம் கச்சா எண்ணை உற்பத்தி….  

அடுத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள துறை ஆட்டோமொபைல்ஸ் விற்பனை இல்லை என்றால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

அரசு என்ன செய்கிறது என்றும், வரும் வாரங்களில் வெளி வரும் புள்ளிவிவரங்கள் வீக்கமா வாட்டமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே!

என்னடா தலைப்பு இது? என்று யோசிக்க வேண்டாம் அதற்கான மேட்டர் கீழே இருக்கு…. 

என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து குறுகிய காலத்தில் 1,58,000 வாக்குகளை பதிவு செய்த அனைவருக்கும் என் நன்றிகள்.

20.02.2008 அன்றைய பதிவு…

//நிலைகள் 2828 க்கும் 2727 க்கும் தான் போட்டி இதில் எந்த நிலை முதலில் உடை படுதோ அந்த பக்கம் செல்ல வேண்டியது தான். //

16.02.2008 அன்று எழுதியது….

//அடுத்த சில நாட்களில் 2600 என்ற எனது இலக்கை அடைந்த உடன் தினசரி கட்டுரையை தவிர்க்க விரும்புகிறேன்.   Trend Reversal ஏற்படும் போது மட்டும் அதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.   வேறு என்ன மாதிரியான தகவல்களை எழுதலாம் என்று யோசிக்கிறேன்.. நீங்களும் ஆலோசனை சொல்லலாம்.//

சொன்னது போலவே அண்ணன் 2600 ஐ அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி… இந்த மன நிறைவுடன் நான் கடந்த 8 மாதங்களாக ”இன்றைய சந்தையின் போக்கு என்ற தலைப்பில்”  எழுதி வந்த  கட்டுரையை இனிதே நிறைவு செய்கிறேன்.  

இந்த காரணத்தால் தான் நான் கடந்த இரண்டு நாளாக அந்த தலைப்பையும் நிப்டியின் நிலைகளையும் தவிர்த்து வந்தேன்.

விளையாட்டாக ஆரம்பித்தது பல விசயங்களை கற்றுத்தந்தது.   இது மிக சிரமமான செயல் தான் அதாவது நாம் எழுதுவதில் சரக்கு இருக்கா? இல்லையா? என்பது இரண்டாம் பட்சம்…  தினசரி காலையில் நடைபயிற்சி செய்வேன்… தினம் காலையில் வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவேன் என்பதையே நம்மால் தொடர்ந்து செய்ய முடிவதில்லை…  அப்படி இருக்கையில் இங்கு தினம் ஒரு பதிவு என்று எழுதி வந்தது உங்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியம் இல்லை.  அதற்கு சாட்சியே நீங்கள் இதுவரை அளித்துள்ள 1,58,000  வாக்குகள். பல நல்ல நண்பர்களை எனக்கு கிடைக்க செய்ததும், இந்த கட்டுரைகள்  தான்.  

தலைப்புகள் மாறும்… தகவல்கள் கூடும்..  மற்றபடி எழுதுவது தொடரும்… உங்களின் அனபையும் ஆதரவையும் என்றும் எதிர் பார்க்க்கிறேன்.

p.s

எனது தொழில் ரீதியான தகவல்களும் இங்கு இடம் பெற்றுள்ளது என்னை சிலர் தவறாக புரிந்து கொள்ளசெய்தது. கூடிய விரைவில் அத்தகவல்கள் இங்கு இருந்து நீக்கப்படும். 

============================================================================

நமது சந்தைகள் அமெரிக்காவை பின் தொடர்வது என்று மாறுமோ…   கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன பிறகும் நாம் அவர்களை நம்பித்தான் ஓடவேண்டுமா….

சந்தை முக்கியமான நிலைகளில் மையம் கொண்டுள்ளது…  இந்த இடத்தில் இருந்து ஒரு ஏற்றதை எதிர்ப்பார்க்கிறேன்…  (பார்த்திங்களா மேல தான் சொன்னேன் இனி இலக்கு நிர்ணயித்து செயல்படுபதில்லை என்று ஆனால் பிரசவ வைராக்கியம் போல உடனே மனக்குரங்கு இன்னொரு கிளைக்கு தாவுது).  

அதை 2-3 நாட்கள் பொறுத்திருந்து முடிவு செய்யலாம்…   

சிறு வணிகர்கள் 2-3 நாட்கள் சந்தையை வேடிக்கை பார்ப்பது நல்லது. கடந்த 2 நாட்களாக 2.30 க்கு பிறகு சந்தையை சிலர் எதிர் பார்ப்புக்கு மாறாக வழி நடத்துகிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் நம்மால் வேகமாக செயல்பட முடியாது.  கடந்த இரு நாட்களாகவே நான் அதிகம் கால்ஸ் எடுப்ப்பதில்லை… எடுக்கும் 2 வர்த்தக முடிவுகளிலும் ஒன்று நம் எதிர்பார்ப்புக்கு மாறாக செயல் படுகிறது. 

=============================================================================

தொழில் என்றால் என்ன? – பல மாறுபட்ட தகவல்கள்,   கண்ணோட்டங்கள் இருக்கும்  ஆனால் அனைவராலும் ஏற்று கொள்ள கூடியது…

பிசினஸ்  =  லாபத்திற்கும் / நஷ்டத்திற்கும் ஒரு சேர வாய்ப்புகளை கொண்டது.. எல்லோரும் தொழில் ஆரம்பிக்கிறார்கள். சிலர் வெற்றியடைகிறார்கள் பலர் பல காரணங்களால் தோல்வியை சந்திக்கிறார்கள்.   இந்த ரிஸ்க்கை ஆரம்பத்தில் புரிந்து கொண்டு எந்த ஒரு வணிகத்திலும் ஈடுபட்டால் நல்லது அதை விட்டு நண்பன் சொன்னான் தோழி சொன்னாள் என்று கால்வைத்து விட்டு பின்னாடி புலம்ப கூடாது. நமது வணிகமும் ஒரு தொழிலே. லாபம் மாட்டும் தான் என்றால் எல்லோரும் தொழில் துவங்கலாம்,  (அந்த மாதிரியான தொழில் கல்வியும் அரசியலும் தான்..  அதற்கும் ஒரு தேக்க நிலை வரும் வராமல் போகாது… ஊருக்கு ஒரு கல்லூரி என்று துவங்கும் போது அது ஒரு நாள் பின்னடைவுகளை சந்திக்க வேண்டி வரும்) 

பிறந்த ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் மிகப்பெரிய சவால் – நமது  மரணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.. அதை நம்மால் மாற்ற முடியாது ஆனால் அதை எவ்வளவு நாள் நாம் தள்ளிப்போட முடியும் என்பதே நமக்கு இருக்கும் சவால்.  அதற்கு இருக்கும் பலம் நம்முடைய போராட்ட குணமே.   சிலர் பிறந்த உடனும் 5 வயதிலும் 50 வயதிலும் என்று  எந்த வயதிலும் மரணமடைகிறார்கள். 

ஏற்கனவே நமக்கு உறுதி செய்யப்பட்ட் ஒன்றை நாம் ஏன் தேடிப்போக வேண்டும்???   உண்மையில் நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் பல வசதிகள் இருக்கிறது.  ஆனாலும் இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்பட்டு நிம்மதியை தொலைத்து அலைகிறோம்.  பங்கு சந்தையில் உள்ள நமக்கு இன்று 500 / 1000 என்பது பெரிய விடயமாக தெரிவதில்லை.  பார்களிலும் / டாஸ்மார்க்கிலும் சர்வ சாதரணமாக அள்ளி வீசுகிறோம்.  ஆனால் பொது இடங்களில் நடந்து செல்லும் போது சற்று உற்று நோக்கினால் தெரியும் 5 க்கும் 10க்கும் பல மக்கள் எப்படி கஷ்ட படுகிறார்கள் என்று.   கஷ்டத்திற்காக சாவது என்று முடிவு எடுத்தால் அவன் ஆயிரம் முறையல்லவா செத்திருக்கனும். 

அண்மையில் சேலம் பஸ்நிலையத்தில் இரவு 12 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்தேன்…  வழியனுப்ப வந்த நண்பர் கூட இருந்தார்.  அந்த நேரத்தில் ஒரு பையன் தனது கையில் சப்போட்டா பழங்கள் அடங்கிய பத்து  பைகளை எடுத்து கொண்டு ஓடினான்.   பையனை அழைத்து கேட்டதில்   ஒரு பை விற்றால் 2 ரூபாய் லாபம் அவனுக்கு கிடைக்கும் என சொன்னான்.

லாஸ்ஸ்ஸ்ஸ் ஒகே போய்ட்டு போகுதுப்பா, இந்த வேகமான உலகத்தில்  நமக்கு தேவை இரண்டு நேர உணவும் நல்ல உடையும் தானே அதை செய்யமுடியாதா நம்மால்?

காதல்.. தனிமை… தொழில்… போதை…  என்று எதுவும் யாராலும் திணிக்கபடவில்லை….அனைத்தையும் நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம்…   என்னை பொறுத்தவரை எதுவும் தவறில்லை நமது மனம் நம் கட்டு பாட்டில் இருக்கும் வரை, அடுத்தவர்களுக்கு தீங்கு இழைக்காத வரை.  தப்பு சரி என்பது அவர் அவர் பார்வையை பொறுத்தது.  நான் செய்யாததை அடுத்தவன் செய்தால் அது எனக்கு தப்பா தெரியுது அதே நான் செய்யும் போது லிமிட்டா இருந்தா தப்பு இல்லைன்னு சப்பைக்கட்டு கட்டுவோம்.

அழுவதும்…. ஆர்ப்பாட்டம் செய்வதும் அழிவதும் நல்ல மனிதனுக்கு அழகல்ல… 

வாழ்க்கை வாழ்வதற்கே….. சாவதற்கு அல்ல….

இது சிலருக்கு இன்றைய சூழ்நிலையில் பயன் படும் என்பதால் எழுதினேன்.

 

பிசினஸ் என்றால் என்ன?

அனைவருக்கும் காலை வணக்கம்….

பதிவெழுதுவதில் சிறிய கால தாமதம்….    எதிர் பார்த்த 2650 கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..  

அடுத்த கட்ட பயணம் ?  அவசரம் வேண்டாம் இரண்டு நாள் பொறுத்து இருந்து பார்ப்போம்… 

அமெரிக்க சந்தைகள் தனது நீண்ட கால (8000) சப்போர்ட்டை உடைத்து  மிக வேகமாக 7000 க்கு கீழ் நழுவிவிட்டது.  

நம்ம ஆளு என்ன செய்ய போறார்? என்று தெரியவில்லை….   2500 க்கு சோதனை வருமா?   நாடே அதை எதிர் பார்ப்பதால்..  அதற்கான வாய்ப்புகள் குறைவு 🙂

எனக்கு பிடித்த அரசியல் சூடு பிடித்துள்ளது…  அவர்களின் விளையாட்டு முடியும் வரை சந்தையில் பெரிய பரபரப்பு இருக்காது..   யார் வந்தாலும் வரட்டும்… மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கட்டும் என்பதே ஒரு நடு நிலையாளனாக எனது விருப்பம். 

============================================================================

 தொலைபேசியிலும், பின்னூட்டத்திலும்  நேற்றைய பதிவினை பாராட்டிய  அனைத்து நல் உள்ளங்களுக்கும்  மிக்க நன்றிகள்.

முதலில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்….  இது எனக்கு நானே நடத்தப்போகும் அக்னிப்பரீட்சை…. எந்த வகையிலும் ஒரு விளம்பர யுக்தி இல்லை. 

சரண் –

உங்கள் சந்தேகம் நியாயமானது… எதையும் நான் மறந்து விடவில்லை…  இன்றைய சந்தையின் நிலை என்ன எப்படி பட்ட காலகட்டத்தில் நான் இதை எழுதுகிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.   

 சில சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை  அதை நான் மறுக்கவில்லை…  அதையும் மீறி எப்படி வெற்றியடைவது என்பது தான் நமக்குள்ள சவால்.  இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை.  ஹோட்டல் ஆரம்பிக்கும் அனைவரும் சரவணபவன் அண்ணாச்சியாகவோ…. அல்லது மெக்டொனால்டாகவோ ஆவதில்லை… 

டார்கெட் என்பது மிகப்பெரியது  அதை அவ்வளவு எளிதாக அடைய முடியும் என்றால் எல்லோரும் இதையே செய்யலாம்.  அதற்கு தேவையான அர்ப்பணிப்பும், உழைப்பும் இல்லாமல் முடியாது.  

நேற்றைய பதிவில் தரப்பட்ட அட்டவணை Just a Illustration – அது அப்படியே அமையும் என்று எதிர்ப்பார்க்க முடியாது..  அமையவும் செய்யாது.   பின்னூட்டத்தில்  திரு. முருகேசன் அவர்கள் சொன்னதுபோல எல்லாமும் கலந்து அமையலாம்..  நான் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்  

//முதல் வழி கொஞ்சம் எளிதானது…   10 / 20 டிரேடுகள் கூடவோ குறையவோ வாய்ப்புள்ளது..  வாரம் 2-3  வர்த்தகங்களை தேர்தெடுப்பது எளிது.//

ஒரு வேளை நீங்கள் சொல்வது போல ஒன்று இரண்டு டிரேடு  தோல்வியை தழுவினாலும் அத்தனையும் காலி எப்படி ஆகும்? ஒன்று இரண்டு படிகள் பின்னடைவு ஏற்படலாம்.  

தங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி….. 

=============================================================================

இன்று இன்னும் சில விசயங்களை எழுத விருப்பம்….  9.30 ஆனதால் மாலை எழுதலாம். 

சார் வேலையில் இருக்கிறேன், அதை விட்டு விட்டு தொழில் ஆரம்பிக்க உள்ளேன். அப்படியா சந்தோஷம் சரி  பிசினஸ் என்றால் என்ன?    வேலைக்கு போவதிலும்  பிஸினஸ்க்கும் என்ன வித்தியாசம்?    

அதேப்போல  காதல் தோல்வி… வீட்டில் பிரச்சனை தொழிலில் நஷ்டம் “ தற்கொலை செய்யலாம் போல உள்ளது”  அப்படியா, சந்தோஷம்!! – இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சவால் என்ன?   அந்த சவாலை எதிர் கொள்ள நம்மிடம் உள்ள பலம் என்ன? 

இதை பற்றி மாலை விரிவாக எழுதுகிறேன்… முதல் கேள்வி நான் தொழில் ஆரம்பிக்கும் போது எனது நண்பர் கேட்டது.  

இரண்டாவது கேள்வி  நான் அடிக்கடி சிலரிடம் கேட்பது…   

இதற்கு நீங்கள் பதில் எழுதுங்கள். 

நாளை சந்திப்போம்…  

 

இன்றைய சந்தையின் போக்கு 04.09.2009

வலுவிழந்த அமெரிக்க தாழ்வழுத்த காற்று மண்டலம் மீண்டும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர 8000 இல் மையம் கொண்டுள்ளது.    நாளையதினம் அமெரிக்க அரசு வெளியிடவுள்ள அறிவிப்புகளை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகளும் நல்ல உற்சாகத்துடன் துவங்கியுள்ளது.  

நமது சந்தையில் நேற்றையதினம் குறிப்பிட்ட

///2715 நல்லதொரு சப்போர்ட்டாக உள்ளது….      அதே போல் 2820 வேகத்தடையாக இருக்கிறது. //

இவ்விரு நிலைகளும் முக்கியமான நிலைகள்…

வேறு ஒன்றும் இல்லை எழுதுவதற்கு….

எனது பரிந்துரைகளின் சாதனைகளையும் (லாபம்)  வேதனைகளையும் (நஷ்டம்)   – அதை பயன் படுத்தும் ஒரு நண்பரே குறிப்பெடுக்கிறார் அதை அப்படியே பதிவில் தொடர்பு படுத்தி உள்ளேன்

இனிமேல் அது தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.   

BE FEARFUL WHEN OTHERS ARE GREEDY

&

BE GREEDY WHEN OTHERS ARE FEARFUL”

-Warren Buffett

ஆண்டியையும் அரசனாக்கும் ஆப்ஷன்

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பரிந்துரைத்த ஆப்ஷன்களின் விவரம்:- 

S.no Counter Buy or At Tgts Booked Qty *   Profit or
    SELL           Loss
1 NIFTY3000 PUT 89 200-250 200 50 111 5550.00
2 SATYAM PUT-170 12 15-17 120 600 108 64800.00
3 RNRL PUT-60 4 9 10 1788 6 10728.00
4 RNRL PUT-50 1 4 5 1788 4 7152.00
5 Unitech Put-40 3 5-7 10 900 7 6300.00
6 Rcom Put-120 11 20 25 350 14 4900.00
7 Ntpc Put-180 6 8/10/12 14 1625 8 13000.00
8 SATYAM Call-120 3 5 4.5 600 1.5 900.00
* minimum 1 lot taken for    Profit For the Day 113330.00
calculation    

அனைத்திலும் ஒரு லாட் வாங்கியிருந்தால் கிடைத்திருக்க கூடிய லாபம்.

சொந்த தொழில் நுட்பத்தில் தயாரிக்க பட்ட ராக்கெட் ஏவுனைகள் (Rocket Calls)

S.no Counter Buy or At Tgts Booked Qty *   Profit or
    SELL           Loss
1 RNRL  Sell 63.5 59/55 53 1788 10.5 18774.00
2 ADLABS SELL 223 200-175 180 225 43 9675.00
* minimum 1 lot taken for  Profit For the Day 28449.00
calculation  

3 வது ராக்கெட் கால் (பாரதி ஏர்டெல்)  இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது….

10,000/- ஆயிரம் 200 கோடிகள் ஆன கதை…

 

இது தான் நீண்ட கால முதலீடு என்பதா?……   ஆம்! நமது தலைமுறைக்கு பொறுமை இல்லை… இன்று காலையில் முதலீடு செய்து விட்டு…. சின்ன புள்ளைங்க புத்தகத்தில் வைத்த மயிலிறகு.. குட்டி போட்டு விட்டதா என்று அடிக்கடி எடுத்து பார்ப்பதை போல… மாலையில் இருந்தே அந்த பங்கு களின் விலையேற்ற இறக்கத்தை பின் தொடர ஆரம்பித்து விடுகிறோம். 🙂

இன்றைய சந்தையின் போக்கு 08.12.2008

இன்று இந்திய அரசியலில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உந்து கோலாக அமையும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.  அரசியல் போக்கில் ஒரு மாற்றத்திற்கான துவக்கமாக அமையும்.   

டெக்னிகல் பார்வையில் ஜன-2008 இல் துவங்கிய சரிவின் பாதை அக்டோபர் மாதம் 2008 இல் முடிவுற்றதாக ஏற்கனவே எழுதி உள்ளேன்.    

உலக பொருளாதார மேதை என்றழைக்கபடும் பாரத பிரதமர் நிதி அமைச்சகத்தை தனது கைவசப்படுத்திய பிறகு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.  சென்ற வாரம் தேர்தல் என்பதால் அவரின் வேகம் தடைபட்டு இருந்தது.    

1992 ல் நமது கையிருப்பு தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்த சூழ்நிலையில் நிதிஅமைச்சராக பல பொருளாதார சீர் திருத்தங்களை துவக்கிவைத்தவரும் தற்போதைய பிரதமர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இன்றை சந்தைக்கு சாதகமான பாதகமான செய்திகள் என்ன…

ாசிட்டிவ் :-   

  • பெட்ரோல் / டீசல் விலை குறைப்பு…
  • பங்காளி அமெரிக்காவின் (Dow Baba)  சீற்றம்…. 
  • மத்திய ரிசர்வ் வங்கியின் Repo Rat Cut நடவடிக்கை…
  • நேற்றைய தினம் அரசு அறிவித்த stimulus package
  • தேவை பட்டால் மேலும் நடவடிக்கைகள் எடுக்க அரசு தயங்காது என்ற கூடுதல் அறிவிப்பு. இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இன்னும் வாண வேடிக்கைகளை எதிர் பார்க்கலாம்.
  • மும்பை தாக்குதலை தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் ஆதரவு.
இந்த செய்திகளின் உற்சாகம் சந்தையை  துவக்கத்திலேயே ஒரு கேப் அப் ஆக துவங்க செய்யும். .  அதன் எழுச்சி நன்பகல் வரை எடுத்து செல்லும்.  அதன் பிறகு சில் தடாலடி மாற்றங்கள் நிகழலாம். 
 
நெகட்டிவ் :- 
  • இன்று வெளிவர உள்ள வடமாநில தேர்தல் முடிவுகள்…( ஆளும் கட்சிக்கு பாதகமாக அமையும் பட்சத்தில் எப்படி சந்தை பிரதி பலிக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு வேளை பாசிட்டிவாக அமையவும் வாய்ப்பு உள்ளது. )
  • பக்கத்து வீட்டு காரன் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் விடுத்துள்ள 48 மணி நேர கெடு.   (4-5 பேரை கைது செய்து அமெரிக்காவின் இயக்கத்தில் ஒரு நாடகம் அறங்கேறலாம்.)
டெக்னிகல்
மேல் நோக்கி பயணத்திற்கு தயாரான நிலையில் தான் உள்ளது..  இந்த இடத்தில் ஒரு கேப் அப் நல்லது அல்ல..  அது மேடு பள்ளங்களுக்கு தான் வழி வகுக்கும்.
 
முக்கிய சப்போர்ட் நிலை –  2650
 

இந்த மாதத்திற்கான பிவோட் நிலைகள்..    

4006 – 3652 – 3203 – 2849 – 2400 – 2046 – 1597   இதில் பிவோட் நிலையான 2849 ஐ இன்று கடக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வாரத்திற்கான  பிவோட் நிலைகள்..  

 3117 – 2980 – 2848 – 2711 – 2579 – 2442 – 2310

இன்றைய பிவோட் நிலைகள்..

2920 – 2870 – 2793 – 2743 – 2666 – 2616 – 2539

 

இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்

நமது வலைபூ நண்பர் பைசல் அவர்கள் சிங்கபூர் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் Chartnexus Charting software  என்ற மென்பொருளை பற்றிய தகவலை அனுப்பி இருந்தார்..   பயன் படுத்தி பார்த்ததில் மிகவும் பயன் உள்ளது என்பது தெரிய வந்தது. கூடவே 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும் கிடைக்கிறது.  கையாளுவது மிக எளிதாக உள்ளது.  இதை பற்றிய தகவலை நமது வலை பூ வாசகி திருமதி பிரியா விடம் சொன்ன உடன் அவரும் பயன் படுத்தி பார்த்து விட்டு..  அதை எப்படி நமது கணினியில் நிறுவது என்பதை அழகாக படங்களுடன் விளக்கி ஒரு தொகுப்பாக தந்துள்ளார்.

நன்றி பிரியா….

Chartnexus Charting software download செய்ய கீழ்கண்ட link click செய்யவும். www.Chartnexus.com அதில் free download என்று ஒரு link இருக்கும்.அதனை click செய்தால் கீழ்கண்டவையை உள்ளடக்கிய பக்கம் open ஆகும்.

1

உங்கள் கணினியில் java Virtual Machine(JVM) ஏற்கனவே இல்லாத பட்சத்தில் option 1 யும், இருக்கும் பட்சத்தில் option 2 யும் click செய்து உங்கள் local Drive ல் store செய்து கொள்ளவும்.

 

Install செய்வதற்க்கான வழிமுறைகள்.

Store செய்ததை install செய்யவும்.install செய்ததற்கு பிறகு chartnexus open செய்யவும்.open செய்தவுடன் கீழ்கண்டவாறு open ஆகும். அதில் Register Now என்பதை click செய்யவும்.

2

click செய்தவுடன் கீழ்காணும் பக்கம் open ஆகும்.

3

இதில் உங்களது personal information அனைத்தயும் type செய்து,primary market Data ல் INDIA(BSE&NSE) என்பதயும் select செய்து register செய்யவும்.submit செய்ததற்கு பிறகு உங்கள் mail ID க்கு வரும் link click செய்து confirm செய்யவும்

4

பிறகு chartnexus ற்கு சென்று உங்கள் id ஐ கொடுத்து enter ஆகவும்.

5

அதன் பக்கவாட்டில் listing click செய்து அதில் NSE click செய்யவும். Click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்

6

அதில் SGX unselect செய்து விட்டு, NSE select செய்து apply கொடுக்கவும்.  கொடுத்தவுடன் ஒரு  box open ஆகி download ஆகும்.இதனால் நேற்று வரை EOD(End Of Day) data chart ல் காண முடியும்.  தினசரி காலையில் மாலையில் இது போல் செய்தால் அப்டேட் ஆகும்.

 

 default ஆக ChartNexus ல் SGX data தான் இருக்கும். அதனால் NSE data வை நாம் தான் download செய்ய வேண்டும்.

7

அதில் NSE Install select செய்து install selected கொடுக்கவும். Installation முடிந்த பிறகு கீழ்கண்ட popup வரும்

8

அதில் yes என்று click செய்து, Listing ல் பார்த்தால் NSE List ஆகியிருக்கும். அதில் NSE யை click செய்து தேவையான stock select செய்யவும்.chart display ஆகும்.

 

அதில் கவனித்தால் மே மாதம் வரை தான் data இருக்கும். இன்றைய data வை download செய்ய

9

ஆறாவது icon click செய்யவும். அதனை click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்

10

 

 அதில் yes என்று click செய்யவும்..அதன் பிறகு ஒரு box open ஆகும். 

 

 13

 

அதில் பக்கவாட்டில் indicatiors என்ற வசதியும் இருக்கும்.அதனை select செய்தால், தேவையான indicators chart ல் display ஆகும்.

கீழ்பகுதியில்

14
 

இதில் line chart , candlestick chart, bar chartஅ என்பதயும் chart daily chart weekly chart monthly chart , என்பதயும் தேர்வு செய்து கொள்ளலாம்.

 இது ஒரு EOD Charting Software..  

Island Bottom Short Term Pattern (Bullish)

நேற்றைய தினம் வாய்க்கா தகராறு பற்றி எழுதியதால் என்னவோ… நம்ம அண்ணன் உண்மையாலுமே ஒரு வாய்க்கா வெட்டி உள்ளார்.

இது போன்ற அமைப்பு ஏறபட்டால் குறுகிய காலத்திற்கு காளையின் ஆதிக்கத்தில் சந்தை இருக்கும்.   இந்த அமைப்பை  Island Bottom (Short Term Pattern)  என்று அழைக்கிறோம். 

An Island Bottom is a bullish signal indicating a possible reversal of the current downtrend to a new uptrend. This pattern is an indication of a financial instrument’s SHORT-TERM outlook. The Island Bottom occurs when the price “gaps” below a specific price range for a number of days and then is confirmed when the price “gaps” above the original range.

தற்போது நம்ம அண்ணன் நிப்டியார் இது போன்ற ஒரு அமைப்பை (வாய்க்காலை) ஏற்படுத்தி உள்ளார்.
 

 

ஏற்கனவே நாம் எதிர்பார்த்தது போல் இந்த ஆண்டின் கீழ் நிலையாக  –  3800 மூன்றாவது முறையாக அமைந்துள்ளது.  இது வலுவான சப்போர்ட் என்பது மீண்டும் உறுதி செய்ய பட்டுள்ளது.  

 

 

 
 
 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு -இன்றைய நிலை

இன்று முக்கியமான நாள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை தாரக மந்திரமாக சொன்ன மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் 102 வது பிறந்த நாள்.

இன்று அந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலில் எந்த நிலையில் உள்ளது? என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இன்றைய தினம் அவரை நினைவு கூர்வோம், அவரின் எழுத்துக்களை படிப்போம் – அரசியலில் தான் இல்லை என்றாலும் நமது தனிப்பட்ட வாழ்வில் கடமையுடனும், கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் வாழ முயற்சிப்போம்….

குழந்தைகளுக்கு என்றும் அழியா சொத்தாகிய நல்ல கல்வியையும் / ஒழுக்கங்களையும் சேர்த்து / வழங்க சபதம் எற்போம் .

பணம் நிரந்தரம் இல்லை என்பதை பங்கு வணிகர்களாகிய நம்மை விட வேறு யாரும் சொல்லி விட முடியாது, இங்கு கோடிகளை ஒரே நாளில் தொலைத்து விடலாம்.. அதே போல் திறமை -யானவர்கள் ஆயிரங்களை கோடிகளாகவும் மாற்ற முடியும்….

ஆனால் கல்வியும் ஒழுக்கமும் என்று நிரந்தரமானது அதை கற்றவனே நினைத்தாலும் அவனால் அவனது HARD DISK -ன் மெமரியில் இருந்து அழிக்க முடியாது.

இன்று கல்வி அனைவருக்கும் கிடைக்கிறது, ஆனால் தனிமனித ஒழுக்கம் உள்ளதா? அல்லது போதிக்க படுகிறதா? என்றால் இல்லை என்பது வருத்தமே.

இன்றைய தினம் நம்மில் அதிகமானோர் பொய் சர்வசாதரணமாக பேசுகிறோம்,அதையே நம்மை அறியாமல் நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறோம், எப்படி? என்றால் நம்மை கேட்டு தொலைபேசியில் அழைப்பவரிடம், நாம் வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்ல சொல்லி குழந்தைகளை பேச சொல்கிறோம்…

பணம் ஒரு மனிதனுக்கு அந்தஸ்தை தரலாம், காலத்தால் அழியாத அடையாளத்தை நிச்சயம் தராது.

இன்றும் நாம் அனைவரும் காந்தியையும், கர்ம வீரரையும், கக்கனையும் அண்ணாவையும் நினைவில் வைத்திருக்கிறோம்., அவர்கள் சமக்காலத்தில் வாழ்ந்த செல்வ சீமான்களை பற்றி யாருக்கும் தெரியாது…

70/- ரூபாய் தினக்கூலி கூட கிடைக்காத ஏழைகள் இன்றும் நம் நாட்டில் பலகோடி மக்கள் வாழ்கிறார்கள். கிடைக்கும் அந்த சொற்பவருமானத்தில் நிம்மதியாக வாழ்கிறார்கள் பல இடங்களில் நாம் பார்க்கலாம் வாரக்கூலி / தினக்கூலி வாங்கும் பலர் ஞாயிற்றுக்கிழமை மீன், மட்டன், சினிமா என்று குதூகலமாக இருக்கிறர்கள்.அவர்களுக்கு கூலி கொடுப்பவர்கள் வாழ்வில் அந்த குதூகலம் இருக்கிறதா? என்றால் இல்லை..

இத்தனை கோடி மக்கள் அன்றாட தேவைக்கு அல்லல் படும் இந்த சூழலில் நிரந்தரமான சம்பளம் அந்தஸ்துடன் வாழும் அரசியல்வாதிகள் குறிப்பாக அரசு உயர் அதிகாரிகள் இன்று ஊழலில் திரட்டும் வருமானம் அவர்களின் எதிர்கால சந்ததிக்கு தேடி தரும் அவமானம் தான்.

அண்மையில் ஒரு சுங்க இலாகா அதிகாரியின் வீட்டில் பலகோடி கட்டுக்கட்டாக ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக படித்த பொழுது வலித்தது…. யோசித்து பார்த்தால் அரசின் உயர்ப்பதவி -களுக்கு (IAS / IPS) வரும் பலர் நிச்சயம் செல்வ சீமான் களின் புத்திரர்களாக இருக்க மாட்டார்கள், கிராமத்தையும்/வறுமையையும் பின்ணனியாக அல்லது ஒரு நல்லாசிரியரின் / அரசு கடை நிலை ஊழியரின் வாரிசுகளாக தான் இருப்பார்கள். அவர்களின் தந்தைகள் தங்களது குழந்தைகள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் தான் வளர்த்திருப்பார்கள். அப்படி இருக்கையில் இவர்கள் (ஊழல் செய்பவர்கள்) மட்டும் ஏன், தங்களின் பல தலைமுறைகள் எந்த லட்சியமும் இல்லாமல் மைனர் குஞ்சு மணிகளாக  வாழவேண்டும் என்று குறுக்கு வழியில் பணம் தேடுகிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு விகடன் மதன் கேள்வி பதில் பகுதியில் உயர்ந்த மனிதர்கள் உருவாக வறுமை காரணமா? என்ற கேள்விக்கு – பாது காப்பற்ற சூழ்நிலை தான் உயர்ந்த மனிதர்கள் உருவாக காரணம் அதனுள்ளே வறுமையும் அடக்கம் என்றும் சொல்லி இருந்தார் அப்படி சொன்னவர் உலக புகழ் பெற்ற CNN நிறுவனத்தின் Founder Ted Turner அவர்களின் தந்தை .

 

Ted Turner அவர்களின் தந்தை தன் மகன் பெரிய நிலை யில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், தன்மகனிடம் என்றும் அன்பாக நடந்து கொண்டதில்லையாம்.. அப்பா மகனுக்கு இடையில் என்றும் ஒரு பனிப்போர் போன்ற சூழ்நிலைதான்.. அவர் தந்தை படிக்க வைத்தார் ஆனால் தான் நடத்தி வப்ந்த நிறுனத்தில் மகனை சேர்த்துக்கொள்ளவில்லை, இந்த வெறியில் Ted Turner ஒரு வெறியுடன் செயல் பட்டு ஒரு விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்து விட்டார். அந்த சூழ்நிலையில் அவரது தந்தை அவரை பாராட்டாதது சோகமே… தனது வேலை காரியிடம் தன் மகனின் வளர்ச்சியைப்பற்றி பெருமையாக பேசியுள்ளார்.. ஏன், நீங்கள் உங்கள் மகனிடம் இந்த பாசத்தை பகிர்ந்து கொள்ள வில்லை? என்று கேட்டதற்கு Insecure Feel makes Great Man என்று சொல்லி விட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு தன் தந்தையின் நிறுவனத்தையும் சேர்த்து உலகின் மிக பெரிய மீடியா நிறுவனமாக சி என் என் உருவானது அனைவருக்கும் தெரியும். (இது தகவலுக்கே, இப்படி நாமும் இருக்க வேண்டும் என்று சொல்ல வில்லை)

 இன்று நாம் வம்பானிகளை பற்றி பேசுகிறோம் – நாளை அவர்களை மிஞ்சும் சில வம்பானிகள் வரலாம் ஆனால் சுதந்திர இந்தியாவில் குறிப்பாக 80 களில் அவர்களின் வளர்ச்சிக்கு நிகராக ஊழல் வளர ஆரம்பித்தது என்பதை மறக்க முடியாது. எந்த பொருளுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்வதை போல் இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்தவர்கள்.

 

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப்பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!! இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்புப்பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (Foundation for Restoration National Values -M.R NV) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார். இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் விட்டல் ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

 

சுவாமி பூமானந்தா கூறியதாவது: உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைக்குலைந்து போகும்.

 

இந்தியாவின் கறுப்புப்பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டாலே நாடு எங்கேயோ போய்விடும். சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப் பெறலாம். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும் ஆனால் செய்வார்களா? என்றால் மாட்டார்கள்….. அணு சக்தி ஒப்பந்ததை விட நல்ல விஷயமாக இது அமையும்.

 

எங்கு? எதை உண்கிறோம்? என்ன உடுத்துகிறோம்? என்பதில் வேண்டுமானால்
வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவை இரண்டு நேரம் உண்ண உணவு, உடுத்த உடை தான். மும்பையில் உருளை கிழங்கும், சதுர வடிவ பன்னும், கூட ஒரு கட்டிங் சாயாவும் (வடா பாவ் + கட்டிங் டீ ) தான் பல லட்சம் பேர்களின் உணவாக உள்ளது, எனது அனுபவமும் கூட.

 

உருளைகிழங்கும் பெரிய வெங்காயமும் உற்பத்தி சப்ளை இல்லை என்றால் அங்கு ஒரு பெரிய கலவரமே வெடிக்கும் அந்த அளவுக்கு அவை இரண்டும் மும்பை மக்களுடன் இரண்டற கலந்தது.

 

ஆனால் நாம் விவசாயத்தை பற்றிய அக்கறை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறோம்…

 

பின் குறிப்புகாலையில் சந்தையின் போக்கு கட்டுரைதான் எழுத ஆரம்பித்தேன் அதில் ஒரு வரி அறிஞர் அண்ணாவை பற்றி குறிப்பிடலாம் என்று ஆரம்பித்தேன், அது ஒரு கட்டுரையாக மாறி விட்டது. பிழைப்புக்கு பங்கு வணிகம் செய்தாலும் இது போன்ற சமூகத்தின் மீது உள்ள ஆர்வங்களையும், கோபங்களையும் செய்திகளின் அலசல்களையும் பதிவு செய்ய வேறு ஒரு வலைப்பூ ஆரம்பிக்க முடிவு செய்துள்ளேன்.

 

அணு சக்தி ஒப்பந்தம் – ஒரு கழுகு பார்வை…

அணு சக்தி ஒப்பந்தம்

இன்று இதை பற்றி பேசாத ஆளே இல்லை…. அப்படி இருக்கும் போது நீ மட்டும் ஏன்டா எதுவும் எழுதாம சும்மா இருக்கிறாய் என்று நமக்குள்ளே இருக்கும் சிங்கம் சீன்டி பார்த்ததின் விளைவே இந்த கட்டுரை

இதற்காக இரண்டு நாளாய் சேகரித்த தகவல்களின் தொகுப்பு 200 பக்கம் இருக்கும், ஆனால் அதை ஒரு கழுகின் பார்வை போன்று சுருக்க மாக பார்ப்போம்.

ஆனந்தம்….

NSG எனப்படும் அணு ச‌க்‌தி‌ தொ‌‌ழி‌ல்நு‌ட்ப நாடுக‌ள் குழு‌வி‌‌ன் (Nuclear Suppliers Group – NSG) ‌ அனும‌தி கோ‌ரி இ‌ந்‌தியா சா‌ர்‌பி‌ல் அமெ‌ரி‌க்காவால் மு‌ன் மொழியப்பட்டுள்ள தீர்மான வரை‌வுக்கு அனுமதி கிடைத்து விட்டது. நாடே சுதந்திரம் அடைந்ததை போல் உற்சாகத்தில் இருக்கிறது என்ற தோற்றத்தை சில பத்திரிக்கை மற்றும் தொலை காட்சிகளும் சொல்லி நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். நாமும் நம்பி விட்டோம். சந்தோசம் அடைவோம்.

இதில் என்ன சந்தோசம் என்று கேட்டால் 35 வருடங்களாக தனிமை படுத்த பட்ட இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி.. என்று சொல்கிறார்கள். இது பெரும் பொய் 35 ஆண்டுகளாக தனிமைபட வில்லை, தனித்து இருந்தோம் என்பது தான் உண்மை.

சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தி இருந்த நேரத்தில்

1968ல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் பார பட்சமாக இருப்பதாக சொல்லி கையெழுத்திட நம் முன்னோர் மறுத்து விட்டார்கள். நாமே மறுத்த ஒரு விசயத்தை எப்படி தனிமை படுத்த பட்டதாக சொல்வது.

தொழில் நுட்பத்தில் தனிமை படுத்த பட்டோமா என்றால் அதுவும் இல்லை. உலக விஞ்ஞானிகளுக்கு சிறிதும் சளைத்தவர்கள் அல்ல நமது தேசத்தின் விஞ்ஞானிகள் 1940 களிலேயே ஹோமி பாபா அவர்கள் அணு ஆராய்ச்சியை ஆரம்பித்து விட்டார்.(விமான விபத்தில் அவர் மரணம் அடைந்தது நமது துரதிஷ்டம்.) – எந்த ஒரு நாட்டின் உதவியும் இல்லாமல் 1974 மே 18 அன்று இந்தியா முதல் அணு குண்டு சோதனையை நடத்தியது. இந்தியாவா? அணு குண்டு சோதனையா? இது எப்படி சாத்தியம்! என்று உலக நாடுகள் அலறின குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும்.. அதன் பிறகு உலக நாடுகளின் நிர்பந்ததிற்கு பயந்து நமது விஞ்ஞானிகளை அடக்கி வாசிக்க வைத்தார்கள் என்பது வேறு விசயம்.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு விதிக்கபடும் கடுமையான தடைகள் இந்தியாவுக்கும் விதிக்கபட்டன. இருந்தும் சோவியத் யூனியன், பிரான்ஸ் ஜெர்மனி, சுவிடன் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் உதவிகளை செய்துள்ளன.

ஜெர்மனி நிறுவனம் ஒன்று நமக்கு ரகசியமாக 100 கிலோ பெரிலியம் கொடுத்ததுக்காக அந்த நிறுவனத்துக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதம் விதித்தது.

ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் அளவுக்கு மீறிய நெருக்கடியால் நமது விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு முறை சோதனை நடத்தி நமது பலத்தை உலகுக்கு பறைசாற்ற வேண்டும் என்றார்கள்.

அதற்கு 1996ல் அப்போதைய பாரத பிரதமர் திரு நரசிம்மராவ் அனுமதியளித்தார்ஆனால் இதை செயற்கைகோள் மூலமாகவோ அல்லது வேறு உளவாளிகள் வழியாகவோ தெரிந்து கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் ஏய் இந்தியா என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு என்று மிரட்ட, சோதனை கைவிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1998 மே 11 மற்றும் 13ஆகிய தேதிகளில் திரு வாஜ்பாய் அவர்கள் ஆசைபட்டதற்காக 5 அணு குண்டுகளை நமது விஞ்ஞானிகள் வெடித்து காட்டி உலக நாடுகளை மீண்டும் நம்மை திரும்பி பார்க்க வைத்தனர்.

இதை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமையிலான விஞ்ஞானிகள் கச்சிதமாக அமெரிக்க செயற்கை கோள்களின் பார்வையில் மண்ணை தூவி செய்து முடித்தார்கள் என்பதை நாம அனைவரும் நன்கு அறிவோம்.

இவற்றை எல்லாம் கவனித்தோம் என்றால் எந்த வகையிலும் தனிமை படுத்த படவில்லை என்பது தெரியும், நாமாக தனித்து இருந்தோம் என்பது தெளிவாக தெரியும். எத்தனை பெரிய தடைகளை விதித்தாலும் நமது விஞ்ஞானிகள் சாதிக்கும் திறமையை பெற்றவர்களே. ஆனால் அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய தடைகள் நமது அரசியல் வாதிகளே. (இந்த இடத்தில் மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை பாராட்டியே ஆக வேண்டும், அவருடைய அரசியல் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம் ஆனால் 1968 களில் தொடங்கி 1984 வரை அவர் நம் நாட்டின் அணுசக்தி, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு துறை விஞ்ஞானிகளை ஊக்கபடுத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரை பற்றிய பலசம்பவங்களை கனவு நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)

எப்பொழுதும் NSG –யின் கதவு திறந்து தான் இருந்தது. நாம் நினைத்து இருந்தால் என்றோ அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களுடன் கை கோர்த்து இருக்கலாம். தேவைபட்டால் அதில் திருத்தம் கோரி இருக்கலாம்..

தற்போது கூட அந்த ஒப்பந்தத்தில் நம்மை கையெழுத்திட அமெரிக்கா வற்புறுத்த வில்லை காரணம் அந்த அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டம் – 1968 ல் அணு ஆயுதம் வைத்திருந்த நாடுகளால் கொண்டுவரப்பட்டது அதன்படி அவர்களை தவிர வேற யாரும் அணு ஆயுதம் வைத்திருக்க கூடாது என்ற ரூல் தான். இன்று நம்மிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும் இருந்தும் இன்றும் நம்மை யாரும் குறிப்பாக அமெரிக்கா இந்தியா அணு ஆயுத வல்லரசு” (Nuclear Power) என்று ஏற்று கொள்ளவில்லை.. ஏன்?

கையெழுத்திடாத மற்ற நாடுகளுக்கு விதிக்கபடும் கடுமையான தடைகள் இந்தியாவுக்கும் விதிக்கபட்டன. இருந்தும் சோவியத் யூனியனும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, சுவிடன் ருமேனியா ஆகிய நாடுகள் உதவிகளை செய்துள்ளன.

NSG நாடுகளை திருப்தி படுத்தவே அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மான் அவர்கள், பாருங்கள்இந்தியாவின் குடுமி எப்படி எங்கள் கையில் உள்ளது, அவர்கள் இனிமேல் எப்பொழுதும் அணு குண்டு சோதனை செய்ய முடியாது அப்படி செய்தால் உடனடியாக ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்து விடுவோம், அவ்வாறு ரத்து ஆனால் ஏற்படும் நஷ்டம் என்னவென்று அவர்களுக்கு நன்றாக தெரியும் எனவே மறந்தும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று 8 மாத பழைய ரகசிய கடிதத்தை வெளியிட்டார்.

இந்த ஒப்பந்தம் முழுவதும் அமெரிக்காவின் தீவிர முயற்சியால் அவர்களின் ஏற்பாட்டால் அவர்களுக்காகவே நிறைவேற்றபடுகிறது.

அதற்கான விளக்கமும் அந்த ரகசிய கடிதத்தில் உள்ளது. (இந்தியாவின் மின்சாரத் தேவைக்கு உதவ என்று சொல்லவில்லை.) இந்தியாவை அணு உலைகளுக்கான இலாபகரமான சந்தை” (Lucrative Market) என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

கிடைத்துள்ளது வெற்றி என்றே எடுத்து கொண்டாலும் அது ஒரு கறை படிந்த வெற்றியே

போபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கிய பங்கு வகித்தது ஆனாலும் நமது நினைவிற்கு வருவது என்னவோ சுவிஸ் வங்கியும், குவத்ரோச்சியும் தான் அது போல

இந்த ஒப்பந்தத்தை நினைக்கும் நேரத்தில் அண்மையில் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கிய குதிரை பேரம் மற்றும் பாரளுமன்றத்தில் கொட்டபட்ட பணம் ஆகியவை தான் நிச்சயம் நம் நினைவிற்கு வரும்.

இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் வரைவை தனது பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கும் ஆனால் நாம் மட்டும் இதன் ரகசியங்களை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை அல்லது இணையதளங்களில் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏன் இந்த மூடு மந்திரம். Equal partner என்று சொல்லும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு? இது தான் நடுநிலையாளர்களின் கேள்வி.

இந்த ஒப்பந்தத்தால் தற்போது பங்கு சந்தைக்கு என்ன உடனடி பலன் என்ன என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை.

எதை தின்றால் வயிற்று வலி போகும் என்ற நிலையில் உள்ள சந்தைக்கு, அணு சக்தி ஒப்பந்தம், உணர்ச்சி வசப்பட்டு ஒரு 200 புள்ளிகள் உயர்த்த வேண்டுமானால் உதவலாம். மீண்டும் நாம் வேறு காரணம் தேட வேண்டியது தான்.

அணுசக்தி துறைக்கு உதவக்கூடிய கட்டுமானம் மற்றும் இதர தொழில் நுட்ப துறை பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்வது பலனளிக்கும். உதாரணம் L&T, HCC, BHEL, Rolta etc….

கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் திட்டங்களின் வேலை வேகப்படுத்தபடும் அதற்காக ரஷ்யாவுடன் போடபட்டுள்ள ஒப்பந்தங்களில் NSG நாடுகளால் ஏற்பட்டிருந்த நிர்பந்தங்கள் நீங்கியுள்ளது. மற்றபடி இந்த ஒப்பந்தத்தால் முழுமையான பலன் கிடைக்க குறைந்தது ஏழு ஆண்டுகள் ஆகும் என்பது அத்துறை சார்ந்த விஞ்ஞானிகளின் கருத்து.

அதாவது புதிய அணு உலைகளுக்கான திட்டம் மற்றும் வடிவமைத்தல் போன்ற செயல்களுக்கு குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு அதற்கான சாதனங்களை நமக்கு சப்ளை செய்ய சம்மந்த பட்ட நாடுகளுக்கு 3ல் இருந்து 4 ஆண்டுகள் தேவை படும். கட்டுமானம் நிறுவுதல் போன்ற வேலைகள் என்று குறைந்தது 8-9 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த ஒரு புதிய திட்டமும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் உதவியால் தயாரிக்கபடும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு என்ன என்பதை யாரும் உறுதி படுத்தவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விசயம்.

அணு சக்தி ஒப்பந்ததின் ஆரம்பம் , கடந்து வந்த பாதை ,சாதக பாதகங்கள் மற்றும் நமது மின்சார தேவை அதில் அணு சக்தியின் பங்கு ஆகியவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் .