அன்பு அண்ணனின் பிரிவு


ஒருவரின் மரணத்தை பற்றி கையாலாகாத்தனம்,முட்டாள்தனம் என்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் பேசலாம் நாம் அந்த வலியை சந்திக்காதவரை ஏன் சாய் அண்ணாவும் மரணத்தை பற்றி எழுதியிருக்காங்க தானும் அந்த வலியை சந்திக்கபோவது தெரியாமல்.

நம்பிக்கை துரோகிகளை உடன் வைத்திருந்தால் ஒருவரின் வாழ்க்கை என்னவாகும் என்பதற்க்கு உதாரணம் சாய் அண்ணாவின் வாழ்க்கை. அந்த மரணம் தானாக வந்ததா அல்லது   உறவுகள், நண்பர்கள் என்று கூடவே இருந்து குழிபரித்த சில நம்பிக்கை தூரோகிகளால் வரவைக்கப்பட்டதா என்பது சாய் அண்ணாவை முழுமையாக அறிந்தவர்களுக்கு தெரியும். அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் அதில் கஷ்டங்களும் துன்பங்களும் தான் அதிகம் என்பது கூடவே இருந்து அவர் பட்டகஷ்டங்களை அனுபவித்தவள் என்ற முறையில் எனக்கும் இன்னும் சிலருக்கும் தான் தெரியும்.

தற்கொலை செய்யவேண்டும் என்று நினைத்திருந்தால் 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருக்க வேண்டும் ஆனால் அனைத்து கஷ்டங்களை போராடி வெல்லப்போகிற நேரத்தில் காரணம் இல்லாமல் தற்கொலை செய்தார் என்று மற்றவர்கள் கூறும்போது வேதனையிலும் சிரிக்கத் தோன்றுகிறது.

அன்பு பாசம் மற்றவர்களுக்கு உதவுவது இரக்ககுணம் இப்படி அனைத்து நல்ல குணங்களையும் கொண்ட அவருக்கு அந்த குணம் தான் அவர் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை அடைய காரணமாக அமைந்தது. இரக்கப்பட்டு சில உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் அவர் உதவியது தான் இந்த முடிவுக்கு காரணம்.

பாத்திரம் அறிந்து பிச்சை போடவேண்டும் என்பது பணத்திற்க்கு மட்டும் அல்ல அன்பு பாசம் இரக்ககுணம் அனைத்திற்க்கும் பொருந்தும் அதை மறந்து பிச்சை இட்டால் நம்மை அனைத்திலும் பிச்சைகாரனாக்கிவிடும்.

சாய் அண்ணா நம்மை விட்டு பிரிந்து சென்றார் என்பதை இங்கு நான் அறிவிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை அண்ணா எப்போதும் என்னுடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் சாய் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று வேண்டி அவரின் ஆசை, கனவு, லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்பு தங்கை……………………………………………….

8 responses to this post.

 1. சாய் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.

 2. சாய் உங்களுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

  உங்கள் அன்பு நண்பன்,

  ரவிகுமார்

 3. சாய் அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்

 4. Posted by சக்திவேல், ஈரோடு. on மே 17, 2012 at 11:13 பிப

  திரு. சாய் அவர்களின் மரணம் குறித்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டவன் என்றும் துணை நிற்பாராக.

  மிகுந்த மன வருத்ததுடன்,

  சக்திவேல், ஈரோடு.

 5. Posted by Gopinath Chidambaram on ஜூன் 26, 2012 at 6:12 பிப

  My heartfelt condolences.. I wish that God gives his family and dear ones the strength to overcome this great loss. May his soul rest in peace..

 6. sai work is wonderful for the traders in tamilnadu. he helps to the traders. i don’t know what happened, i pray god to fulfill his desires, who cheats him all are punished.

 7. yet another year gone without Sai,My deep condolences.words are not coming out any how let God give good strength to get out this sorrow to their family and friends

 8. one year gone without sai why did that how it happened ,id don’t know . i don’t interact with him more, but he is wonderful i his works,really it is big loss for all

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: