Archive for மார்ச், 2010

இன்றைய சந்தையின் போக்கு 31.03.2010

நேற்றைய தினம் எதிர்பார்த்ததை போலவே சிறிய அளவில் பின்வாங்கியது..  

முக்கியமான சப்போர்ட் நிலையை (5260)   உடைக்கவில்லை… இந்நிலை உடைபட்டால் 5200 / 5180 வரை கீழிறங்கும் வாய்ப்புள்ளது.  எனது எதிர்பார்ப்பு 5260 நிலையினை உடைக்கும் முன்பாக சிறிய அளவில் உயரலாம்.

அதேபோல் – 5350  வலுவான தடை நிலையாக இருக்கும்.

ஹெச் டி எப் சி(-3.06%) / ஆக்ஸிஸ்(-2.08%) போன்ற வங்கிகள் பெரிய அளவில் சரிவடைந்தும் பேங்க நிப்டி – பேங்க் இண்டியா (+5.3%) , ஓரியண்ட் பேங்க் (+2.48%), பேங்க் ஆப் பரோடா (+1.75%)   போன்ற சிறிய வங்கிகளின் உயர்வால் சரிவில் இருந்து  தப்பியது.   

இன்றைய நிப்டி நிலைகள்.

5280 – 5301 – 5319  – 5327

5260 – 5241 – 5225-5210 – 5190

இங்கு நான் குறிப்பிடும் நிப்டி நிலைகள – ப்யூச்சர் நிலைகளே. 

இன்றைய சந்தையின் போக்கு 30.03.2010

புதிய உயரத்தினை தனதாக்கி முன்னேறி செல்கிறது நிப்டி.   டெக்னிகல் பார்வையில் இந்த ஏற்றம் தொடருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருந்தாலும் இந்த இடத்தில் முதலீட்டாலர்கள்  திடிரென லாபத்தை உறுதி செய்ய முற்படலாம்  அதன் தாக்கம் சிறு பின்னடைவை ஏற்படுத்தலாம்.     FnO வணிகத்தில் அதிகம் வாங்கபட்ட நிலை காணப்படுகிறது.   புதிய நிலைகளை எடுக்க் நினைப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் இது.   அதே போல் லாபத்தில் உள்ள நிலைகளை “டைட் ஸ்டாப் லாஸ்”  வாயிலாக பாதுகாப்பதும் நல்லது.

இன்றைய முக்கிய நிலைகள். 

5340 –  5362 –  5378

5307 – 5290 – 5277 – 5260

 

இன்றைய சந்தையின் போக்கு – 29.03.2010

தொடர்ந்து 7 வாரங்களாக  உயர்ந்து வருகிறது.    2007  ல் 8 வாரங்கள் தொடர்ந்து உயர்ந்து வந்தது தான் நிப்டியின் முந்தைய சாதனை..  அதனை முறியடிக்குமா?

  • சென்ற வாரம் நிப்டியின் உயர்வு  22 புள்ளிகளே, ஆனால் பேங்க்நிப்டியின் உயர்வு சுமார் 200 புள்ளிகள்.
  • அதற்கு நேர் எதிராக மிட்கேப்ஸ் பங்குகள் அதிக அளவில் பின்வாங்கியுள்ளன.
இந்த வாரம்   4 நாட்களே சந்தை இயங்கும், அதில் மூன்று நாட்கள் இந்த நிதியாண்டின் இறுதிநாட்கள். எனவே   மிதமான போக்கு நிலவ அதிகம் வாய்ப்புள்ளது.
இந்தவாரத்தின் பிவோட் நிலை – 5260  அதே முக்கியமான சப்போர்ட் நிலையாகும் இந்நிலை உடைபட்டால், சந்தை பின்வாங்குவதற்கான முதல் அறிகுறியாக அமையும்.  அதற்கு அடுத்த சப்போர்ட் நிலை 5190.
இன்றைய முக்கிய நிலைகள் –
5310  – 5329 –  5340
 
5290-5280
 
5275 – 5252 -5237 -5220

இன்றைய சந்தையின் போக்கு 26.03.2010

நாள் நெடுகில் பக்கவாட்டு நகர்வினை மேற்கொண்ட சந்தை மதியத்திற்கு பிறகு யாரும் எதிர் பாராத நேரத்தில் கட்டுடைத்து வலுவான உயர்நிலையில் முடிவடைந்துள்ளது.

தற்போதைய  நிலையில் 5300-325 நிலைகள்  தடை நிலையாகவும் 5220 ஆதரவு நிலையாகவும் இருக்கும். 

இன்றைய முக்கிய நிலைகள்

5275  –  5295 –  5310

5250 –  5235  – 5220 – 5210

இன்றைய சந்தையின் போக்கு 25.03.2010

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்களும் வாரந்திர பிவோட் நிலையான 5218 ஐ மையமாக கொண்டே சந்தையின் போக்கு அமைந்தது.   அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு துவங்கும் சந்தை.   

இன்றைய தினம் FnO Expiry  என்பதால் மதியம் வரை பக்கவாட்டு நகர்வுகளுக்கே அதிகம் வாய்ப்பு உள்ளது.  

5168  முக்கிய ஆதரவு நிலையாக இருக்கும் அது உடைபடும் பட்சத்தில்

மார்ச் மாத இறுதி நாட்களில் மேடு பள்ளங்கள் அதிகம் காணப்படலாம்.

இன்றைய முக்கிய நிலைகள். 

5240 – 5261  – 5275

5205  – 5190 – 5171

===============================================================================

நண்பர்கள் சிலர் எந்த டிரேடிங் செட்டப் எளிமை மற்றும் லாபகரமானது.   எந்த இண்டிகேட்டர் சிறந்தது என்று கேள்வி கேட்டு மெயில் அனுப்பியுள்ளனர்.

என்னை பொறுத்தளவில் அனைத்து டிரேடிங் செட்டப்களும் சிறந்ததே..   ஆனால் நாம் ஒன்றை பின்பற்றும் முன்பாக நன்கு பரிசோதித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.  தேர்ந்தெடுத்ததை பின்பற்ற வேண்டும். அதில் தான் சிக்கலே. 

இண்டிகேட்டர் / டிரேடிங் செட்டப் எல்லாம் ஒரு ஒரு பச்சோந்தியை போல சந்தையின் போக்கிற்கு ஏற்றவாறு நிறம் / திசை மாறும்.   அதற்கு ஏற்றவாறு நாமும் வேகமாக செயல்படவேண்டும் அதற்கான மனதிடம் முடிவெடுக்கும் திறன் / ஆளுமையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் வெற்றி பெற மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய மனதைரியம் வேண்டும். 

சிலருக்கு கட்டுப்பாடு இல்லாத மனதரியம் இருக்கும்.   – இவர்கள் தான் அதிகம் நஸ்டத்தை சந்திக்கிறோம்.   நான் இந்த வகை.    தைரியமாக எல்லா ரிஸ்கும் எடுப்போம் ஆனால் தேவையான இடத்தில் வெளியேறமல் அதிகம் ரிஸ்க் எடுப்போம், 

சிலருக்கு தேவைக்கு அதிகமாக கட்டுப்பாடு இருக்கும்  ஆனால் வர்த்தகத்தில் இறங்கவே தைரியம் இருக்காது.    எல்லாம் முடிந்த உடன் இந்த இடத்தில் லாங் சென்றிருந்தால்  50 பாய்ண்ட் கிடைத்திருக்கும் இங்கே சார்ட் சென்றிருந்தால் 40 பாய்ண்ட் கிடைத்திருக்கும் என்று சொல்வார்கள்.  

முடிந்த ஒன்றை படம் போட்டு காட்டுவது எங்களுக்கு எளிதான வேலை ஆனால் அந்த இடத்தில் முடிவெடுப்பதில் தான் நமது வெற்றி தோல்வியே அடங்கியுள்ளது.

நண்பர் மோகன் மேலும் தாங்கள் கேட்ட மெட்டாஸ்டாக்  (MetaStock )  எக்ஸ்பர்ட் அட்வைசர் Codeஐ  தனி மெயிலில் அனுப்பாமல், அனைவருக்கும் பயன் படும் வகையில் இங்கே தனி பதிவாக மதியம் எழுதுகிறேன்.

இன்றைய சந்தையின் போக்கு 17.03.2010

பல நாட்கள் சோதனைக்கு பிறகு நேற்றைய தினம் வலுவான தடை நிலை 5160  ஐ உடைத்து முன்னேறியுள்ளது.

சென்ற பதிவில் ரிலையன்ஸ்-ன் தடைநிலையாக குறிப்பிட்ட 1038  துவக்கத்திலேயே உடைக்கபட்டு ஏற்றத்தை உறுதி செய்தது.

சந்தையின் வேகத்தை நேற்றையதினம் பெரிய அளவில் கட்டுபடுத்தியது வங்கித்துறை பங்குகளே!    மதியம் வங்கித்துறை பங்குகள் சரிவிலிருந்து மீழத்துவங்கிய பிறகே ஏற்றம் அதிகரித்தது.

இன்றைய தினம் 5230 தடை நிலையாகவும், 5190   சப்போர்ட்டாகவும்    இருக்கும்.

அடுத்து வரும் நாட்களுக்கு 5160 /5140 சப்போர்ட் நிலைகளாக இருக்கும்.

 

இன்றைய சந்தையின் போக்கு 15.03.2010

தினவணிகர்களுக்கு குறிப்பாக இண்டெக்ஸ் வர்த்தகர்களுக்கு சோதனையான கால கட்டம் 20 புள்ளிகளை எல்லையாக கொண்டு நகரும் போது தினசரி 5 மணிநேரம் சும்மா வேடிக்கைபார்ப்பது என்பது  சிரமமான ஒன்றாக உள்ளது.  

சென்ற வியாழன் அன்று 5140 நிலைகளை உடைத்திருந்தாலும் பெரிய அளவில் நகர்வுகள் இல்லை.   

இந்த வாரத்திற்கான – பிவோட் நிலை 5134.

இன்றைய தினம் முக்கியமான நிலைகள்

காளைகளுக்கு  –  5160

கரடிகளுக்கு –  5130

வலுவான சப்போர்ட் நிலைகள் – 5100 / 5070 

எனது தனிபட்ட உடனடி எதிர்பார்ப்பு –  5050/40 வரை கீழிறங்கி மேலே செல்லும் என்று எதிர் பார்க்கிறேன்.

ரிலையன்ஸ் – தனது பட்ஜெட்டிற்கு பிந்தைய ஏற்றத்தினை இன்று  அல்லது நாளை முடித்து கொள்ளும் வாய்ப்பு தெரிகிறது.

இன்றைய தினம் 1023 -1020 நிலைகளை உடைத்தால்- கீழே   1010  / 1000 / 991 வரை செல்லலாம்… 

மேலே செல்ல 1038 வலுவான தடைநிலையாக இருக்கும்.