எங்கே செல்லும் இந்த பாதை?


கடந்த 3 மாத காலமாக 5100 நிலையினை தக்கவைத்து, புயல் சின்னம் போல் நிலை கொண்டுள்ள இந்திய பங்கு சந்தைகள்.  துபாய் நெருக்கடி போன்ற சில செய்திகளால் 2-3 முறை பெரிய அளவில் பின் வாங்கினாலும். அடுத்த ஓரிரு நாட்களில் எந்த ஒரு நெருக்கடியும் இன்றி இழப்பினை மீட்டெடுக்கும் போக்கு தொடருகிறது. 

நான் தீபாவளியன்று குறிப்பிட்ட 5150-5200 நிலையினை இன்னும் கடக்கவில்லை.

என்னளவில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால்…    தீபாவளிக்கு பிறகு 5150 நிலையில் இருந்து 4600 க்கு சென்ற போதும், சென்ற வாரத்தில் 4800 நிலையினை அடைந்த போதும்,  500-300 புள்ளிகள் இழப்பினை சர்வசாதரணமாக மீட்டெடுக்கும் சந்தை 5100-150 நிலையில் “பிரேக்” போடுவது ஏன்? 300 புள்ளிகள் ஏறிய சந்தையால் இன்னும் 30-40 புள்ளிகள் கடக்க இயலாததற்கு என்ன காரணம்? யார் காரணம்?

சென்ற வாரம் வெள்ளியன்று வெளியான IIP குறியீட்டு எண்கள் மோசம் இல்லை என்றாலும்,  அதீத எதிர்பார்பினை நிறைவேற்றப்படாத காரணத்தினால் பின் வாங்கினார்கள்.

டெக்னிகலாக 5181 நிலை டபுள் டாப் (இந்நிலை உடைப்படாத வரை)  அமைப்பாக அமைந்துள்ளது.  அதன் தாக்கம் எங்கு சந்தைகளை அழைத்து செல்கிறது, என்று பார்ப்போம்.

இன்று வெளியாக இருக்கும் பண வீக்க விகிதம் எந்தவித சலசலப்பினை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்க  வேண்டும்.

இந்த குறியீட்டு எண்கள் அனைத்தும் அரசியல் வாதிகளின் அறிக்கைகளை போல் தான் உள்ளது.   அத்தியாவசிய விலைவாசி ஏற்றம் எந்த வகையிலும் கட்டுபடுத்தபடவில்லை.

1980-90 களில்  ஏழைகளின் காய்கறியாக இருந்த கத்தரிக்காய் தற்சமயம் வசதியானவர்களின் காயாக மாறியுள்ளது.  காரைக்குடியில் கிலோ 80/-  உங்கள் ஊரில்?

தடுமாறும் தங்கம் / கச்சா எண்ணை.

கடந்த 6 மாத காலமாக உலகபங்கு சந்தைகளின் ஏற்றத்துடன் சேர்ந்தே பயணம் செய்த கமாடிட்டி சந்தையில் கடந்த வாரம் சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

 1226$ உயரம் வரை சென்ற தங்கம் அந்நிலையில் இருந்து 100 $ சரிவினை சந்தித்து 1114 $ ல் நிலைகொண்டுள்ளது,1100 என்பது நல்லதொரு சப்போர்ட் அதை உடைத்தால் 1065 மற்றும் 1045 வரை செல்லலாம். 

கச்சா எண்ணெயின் சப்போர்ட்டாக 66$  இருக்கும்.

இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விசயம்…2007 டிசம்பரில் தான் தங்கம் இதற்கு முந்தைய வரலாற்று உயரத்தினை அடைந்தது.   தற்போது மீண்டும் ஒரு உயரத்தினை அடைந்துள்ளது.  2007 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பங்கு சந்தையில் என்ன விதமான உற்சாகம் நிலவியதோ, எப்படி சாதகமான விசயங்கள் மட்டும் பேசப்பட்டு – அதீத எதிர்பார்ப்பு மக்கள் மத்தில் நிலவியதோ அதே நிலைதான் இன்றும் .

 ஜனவரி-2008 வரலாறு திரும்பாமல் இருந்தால் சந்தோஷம்.

விடுமுறை.  / நீண்ட கால முதலீட்டின் லாபத்தினை உறுதி செய்யும் வாய்ப்பு.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உலக அளவில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்று சொல்லலாம், இச்சூழ்நிலையில் கிருஸ்த்மஸ் புத்தாண்டுவிடுமுறைக்கு முன்பாக லாபத்தினை உறுதி செய்யும் வாய்ப்புகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. 

ஓராண்டிற்கு மேலான முதலீடுகள் நீண்ட கால முதலீடாக கருதப்படுவதால் சென்ற டிச-2008-ஜன-2009 ல் முதலீடு செய்த உள்நாட்டு முதலீட்டாளர்கள் வரும் நாட்களில் லாபத்தை உறுதி செய்யலாம்.

இந்நிலையில்  5181 உடைபடாத வரை எனது எதிர்பார்ப்பு 5034…4965..4949

5181 உடைபட்டால் 5250 வரை செல்லலாம்.

=====================================================

 
 தொடர் பதிவு எழுதுவதில்லை என்று பல நண்பர்கள் தங்கள் வருத்தத்தினை நேரடியாகவும்,  மெயிலிலும் தெரிவித்துள்ளார்கள்.  அதில் ஆச்சரியமான விசயம்! பல பெயர்களில் தொடர் எதிர் கருத்துகளை தெரிவிக்கும் திருநெல்வேலி நண்பர் யாஹூ சேட்டில் “எழுதுங்க சார்” என்று கேட்டுகொண்டது.  (எழுதுடா அப்பத்தான் நான் வந்து திட்ட வசதியா இருக்கும் என்ற நோக்கத்திலா 🙂 )  தொடர் ஆதரவு வழங்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: