12.11.2009


கடந்த ஒரு மாத காலமாக  வேலை பளுவினால், சிறு ஓய்விற்கு பிறகு மீண்டும் தொடரலாம் என பதிவுகளை எழுதுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.  

இன்று முதல் வழக்கம் போல்  தொடருகிறேன்….

=============================================================================

தீபாவளி பதிவில் 5150-5200 நிலைகளில் இருந்து குறைந்தபட்சம் 15% வரை  கீழிறங்கலாம் என்ற எனது எதிர்பார்ப்பினை பதிவிட்டிருந்தேன்.   

5168 நிலையில் இருந்து 11% சந்தை கீழிறங்கி,  சர்வதேச சந்தைகளின் உற்சாகம், நிறுவங்களின் திருப்திகரமான  இரண்டாவது  காலாண்டு  முடிவுகள் மற்றும் தங்கம் வெள்ளி சந்தைகளின் உற்சாகம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மீண்டு வருகிறது.

இன்றைய தினம்

5045 , 5077  நிலைகள் முக்கிய தடை நிலைகளாக இருக்கும்.  

4964 மற்றும் 4949 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக இருக்கும்.

இன்றைய முக்கிய நிலைகள்…

4938-4948-4965-4981 – 4997 – 5010 –  5031 – 5047 – 5064- 5081 – 5099

இன்று நமது அனைத்து கீழ்நிலைகளையும் கடந்து சென்றது.

60 புள்ளிகள் லாபம்.

===============================================================

சமீப காலமாக பின்னூட்டம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.   நமது பதிவுகளிலும் ஓரிருவர் அது போன்ற தொடர் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.   பின்னூட்டம் என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு ஏற்ற பகுதியாகும், ஆனால் தேவைற்ற  விவதங்களுக்கான பகுதியாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.  ஆகையால் பின்னூட்ட பகுதியினை முழுமையாக நீக்குகிறேன்.

பதிவுகளை பின் தொடருபவர்கள் அனைவரும் நன்கு கற்றவர்களே!    ஒரு பதிவினை மட்டும் படிப்பதில்லை.  ஆங்கிலம் உட்பட அநேக பதிவுகளையும் படிக்கும் சமயம் உங்களுக்கு பிடித்ததை / சரியானதை தொடருங்கள்.   தவறானவற்றை ஒதுக்கி தள்ளுங்கள்.

தொடர்ந்து நான் சொல்லி வருவது – இங்கு நான் எழுதிவரும் கருத்துகள் அனைத்தும் எனது தனிபட்ட பார்வை மற்றும் எதிர்பார்ப்புகளே… எந்த வகையிலும் முதலீட்டிற்கான / வர்த்தகத்திற்கான ஆலோசனைகள் அல்ல. உங்களுக்கு கிடைக்கும் பல தரப்பட்ட செய்திகள் மற்றும் கருத்துகளில் இதுவும் ஒன்று என்றளவில் மட்டும் எடுத்து கொள்ளவும்.   நன்கு ஆராய்ந்து / ஆலோசித்து சுய முடிவுகளை எடுக்கவும். 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: