Archive for நவம்பர், 2009

துபாய் சேக்குகளால் Shock ஆன பங்கு சந்தை

சமீபத்திய உயரங்களை உடைக்கமுடியாமல் தவித்து வந்த சந்தைக்கு துபாய் உலகத்தால் ஒரு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாங்களும் பணநெருக்கடியில் இருக்கிறோம்  பில் செட்டில்மெண்ட்க்கு இன்னும் கொஞ்சம் (ஆறு மாதம்)  கால அவகாசம் வேணும் என்ற அறிவிப்புக்கு தான் இந்த அதிர்ச்சி.   அது தான் உண்மையா? இல்லை நிலைமை இன்னும் மோசமா என்பது சரிவர தெரியாத நிலையில் பலவித யூக செய்திகள் வெளிவருகிறது.

சமீப காலமாக இந்த அளவு பெரிய சரிவினை சந்தை காணத நிலையில், பெரிய அளவிலான கேப்-டவுனாக துவங்கி, மேலும் வேகமாக சரிவடைந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எல்.ஐ.சி மற்றும் யூ.டி.ஐ போன்றவர்கள் பிற்பகலில் வாங்கத்துவங்கியதால் பாரிய சரிவுகளில் இருந்து மீண்டுள்ளது.

கிருஸ்துமஸ் விடுமுறை நெருங்கும் இந்த தருவாயில், அடுத்து வரும் நாட்கள் செய்திகளின் தாக்கத்தால் அதிக ஏற்ற இறக்கத்துடன் வழிநடத்தப்படும்.

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்”

என்பதை போல்

எண்ணை வளம் இருக்கும் வரை, ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற நம்பிக்கை அரபு நாடுகளுக்கு உள்ளது.

பல அரபு நாடுகள் இந்த பிரசினையை சமாளிக்க முன்வருகின்றன என்பது இன்னொரு செய்தி.

இன்று துபாய்… நாளை…..?

சிறு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம்.

இன்றைய நிப்டி ப்யூச்சரில் முக்கியமான இரு நிலைகள்.

4930 மற்றும் 4960

16.11.2009

சர்வதேச சந்தைகளின் உற்சாகம் தொடருகிறது..    அதன் தாக்கம் நமது சந்தைகளின் உயரங்களை தக்கவைத்துள்ளது.  

கடந்த வார இறுதியில் IIP குறியீட்டு எண் உடபட சில சாதகமான காரணிகள் இருந்தும் சந்தை உயரங்களை மீறவில்லை என்பது கவனிக்க பட வேண்டியது. 

From Investing Point of view  எனது தீபாவளி நிலைப்பாட்டில்   மாற்றம் இல்லை. 

இன்றைய முக்கிய நிலைகள்.

4903-4920-4934-4950-4970-4990 – 5018  –  5034 – 5051 – 5067 – 5084 – 5101

இந்த வாரம் 4974, 4940, 4890  ஆகிய நிலைகள் முக்கிய சப்போர்ட்டாகவும்,

5040 – 5065 -5165 ஆகிய நிலைகள் வலுவான தடைநிலைகளாக இருக்கும்.

 

13.11.2009

இன்றைய முக்கிய நிலைகள்

4839-4855-4871-4888-4904-4920-4936 -4953

 4985-5002-5018-5035-5052-5068-5085-5110

முக்கிய சப்போர்ட் நிலைகள்  4910 மற்றும் 4880  

இன்றைய தினம் மேல் நிலைகளில் (4985 to 5023)  35 புள்ளிகள் லாபம். 

12.11.2009

கடந்த ஒரு மாத காலமாக  வேலை பளுவினால், சிறு ஓய்விற்கு பிறகு மீண்டும் தொடரலாம் என பதிவுகளை எழுதுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.  

இன்று முதல் வழக்கம் போல்  தொடருகிறேன்….

=============================================================================

தீபாவளி பதிவில் 5150-5200 நிலைகளில் இருந்து குறைந்தபட்சம் 15% வரை  கீழிறங்கலாம் என்ற எனது எதிர்பார்ப்பினை பதிவிட்டிருந்தேன்.   

5168 நிலையில் இருந்து 11% சந்தை கீழிறங்கி,  சர்வதேச சந்தைகளின் உற்சாகம், நிறுவங்களின் திருப்திகரமான  இரண்டாவது  காலாண்டு  முடிவுகள் மற்றும் தங்கம் வெள்ளி சந்தைகளின் உற்சாகம் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது மீண்டு வருகிறது.

இன்றைய தினம்

5045 , 5077  நிலைகள் முக்கிய தடை நிலைகளாக இருக்கும்.  

4964 மற்றும் 4949 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக இருக்கும்.

இன்றைய முக்கிய நிலைகள்…

4938-4948-4965-4981 – 4997 – 5010 –  5031 – 5047 – 5064- 5081 – 5099

இன்று நமது அனைத்து கீழ்நிலைகளையும் கடந்து சென்றது.

60 புள்ளிகள் லாபம்.

===============================================================

சமீப காலமாக பின்னூட்டம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.   நமது பதிவுகளிலும் ஓரிருவர் அது போன்ற தொடர் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.   பின்னூட்டம் என்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு ஏற்ற பகுதியாகும், ஆனால் தேவைற்ற  விவதங்களுக்கான பகுதியாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.  ஆகையால் பின்னூட்ட பகுதியினை முழுமையாக நீக்குகிறேன்.

பதிவுகளை பின் தொடருபவர்கள் அனைவரும் நன்கு கற்றவர்களே!    ஒரு பதிவினை மட்டும் படிப்பதில்லை.  ஆங்கிலம் உட்பட அநேக பதிவுகளையும் படிக்கும் சமயம் உங்களுக்கு பிடித்ததை / சரியானதை தொடருங்கள்.   தவறானவற்றை ஒதுக்கி தள்ளுங்கள்.

தொடர்ந்து நான் சொல்லி வருவது – இங்கு நான் எழுதிவரும் கருத்துகள் அனைத்தும் எனது தனிபட்ட பார்வை மற்றும் எதிர்பார்ப்புகளே… எந்த வகையிலும் முதலீட்டிற்கான / வர்த்தகத்திற்கான ஆலோசனைகள் அல்ல. உங்களுக்கு கிடைக்கும் பல தரப்பட்ட செய்திகள் மற்றும் கருத்துகளில் இதுவும் ஒன்று என்றளவில் மட்டும் எடுத்து கொள்ளவும்.   நன்கு ஆராய்ந்து / ஆலோசித்து சுய முடிவுகளை எடுக்கவும்.