தின வணிகம் – 08.10.2009


தீபாவளி போனஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடியாக 1:1 என்ற போனஸ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது…  மிகபெரிய அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியமான விசயம் தான்.      இந்த அறிவிப்பு சந்தையில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்…  சந்தை மேலும் உயர உதவுமா?    உடனடி பலன் இருக்குமா பங்குதாரர்களுக்கு?

நல்ல செய்திதான் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு…    

 உடனடியாக சந்தையில் பெரிய அளவிளான தாக்கத்தை ஏற்படுத்துமா?

நமது பார்வையில் இது  சில விசயங்களை திசைதிருப்புவதற்கான முயற்சியே…

1997 க்கு பிறகு தற்போது தான் போனஸ் அறிவித்துள்ளார்கள்….  (அன்றும் 1:1),  சமீபத்தில் அனில் அம்பானி பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.  (நேரடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது)   அதற்கு பதிலடியாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.   இது ADAG குழுமத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும்,   இது போன்ற போனஸ் அறிவிப்பை அனில் அம்பானி அறிவிக்கலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.  அண்ணன் எட்டடி பாய்ந்தால் இந்த தம்பி 16 அடி பாயும் பழக்கம் உள்ளவர்.

நமக்கு புரியாத ஒரு விசயம் இப்படி ஒரு போனஸ் வெளியிட உள்ளவர்கள் சில நாட்களுக்கு முன் 1.5 CR பங்குகளை விற்றது ஏன்?

நிப்டி

நேற்று நாம் பதிவில் குறிப்பிட்டதை போலவே 5080-5070 நிலைகளில் பின் வாங்கியது

அதே போல் சப்போட்டாக குறிப்பிட்ட 5000 – 4977 ஆகியவை உடைபட்டன, அடுத்து வரும் நாட்களில் மற்ற சப்போர்ட்கள் (4935-4900-4825) உடைபடும் என்று எதிர்பார்க்கிறேன். 

5150 நிலையினை கடக்காத வரை ஒவ்வொரு உயர்வையும் லாபத்தை உறுதி செய்யவும் / FnO வில் புதிய சார்ட் நிலைகளை எடுக்கவும் பயன் படுத்துவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. 

இன்று என்ன நடக்கும்

சிறிய கேப் அப் ஆக துவங்கும் வாய்ப்புள்ளது (உபயம் :-  மாலை3.00 மணிக்கு ஏற்பட்ட Panic Selling -ல் ஏற்பட்ட 5021-5014 க்கு இடையேயான சிறிய ரன்னிங் கேப்)   

அதன் தொடர்ச்சியாக 5035 மற்றும் 5069 ஆகிய நிலைகள் தடை நிலையாக இருக்கும்..  இந்த தடைகளை உடைக்க ரிலையன்ஸ்-ன் போனஸ் உதவுகிறதா அல்லது கடந்த இரு தினங்களாக நடந்து வரும் Profit Booking தொடருமா என்பதை சந்தையின் வேலை நேரத்தில் கவனிப்போம். 

சப்போர்ட் நிலைகள் 4970 – 4935 – 4900 – 4825.

4954 நிலையினை இன்று அல்லது நாளை எதிர்பார்க்கிறேன். 

 08102009

நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

இன்று ஒரு இணைப்பு

மிக அழகாக ஆங்கில பயிற்சியை நமது தமிழ் மொழி வாயிலாக கற்று தருகிறார்

  http://aangilam.blogspot.com/

7 responses to this post.

 1. Posted by நந்தன் on ஒக்ரோபர் 8, 2009 at 8:57 முப

  காலை வணக்கம் சாய் கணேஷ்!
  ரிலையன்ஸ் போனஸ் செய்திக்கு நன்றி….

  உண்மைதான்… இவர்களின் “பெரிய விளையாட்டு” யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் புரியாது…

  அமெரிக்க சந்தைகள் நிறுவனங்களின் முடிவுகளை எதிர்பார்த்திருகின்றன…நமது சந்தையில் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?

  //சப்போர்ட் நிலைகள் 4970 – 4935 – 4900 –4825//
  நிலைகளுக்கு நன்றி….80% 20% (S vs L) hedging ……பார்க்கலாம்…

  வலைத்தளங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு பாராட்டுகள்…
  நன்றி….
  நந்தன்.

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஒக்ரோபர் 8, 2009 at 9:11 முப

  Good Morning sai sir and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all successful trading.

 3. நிப்டியின் முடிவு;4986

 4. Today nifty may close at 5015

 5. reliance bonus…..ha ha ha !!! ottakoothan pattukku rettai thazhpal kathayaga market reaction ullathu…

  markettum perithai eravillai reliance sharum eravillai….

  veru eththanayo sharegal ullana. avatrin pakkam gavanaththai seluthuvom. sagothara sandaigal ippothaikku mudinthu thelivu kidaikkathu pol ullathal intha advise

 6. உங்கள் சேவை மிக பயன் உள்ளதாக உள்ளது. நன்றி. ஆங்கில வலைத்தளத்தை அறிமுக படுத்தியதற்கு மிக மிக நன்றி. இது போல் இன்னும் அறிமுக படுத்துங்கள் .

 7. naam nifty pe ratio 23 enbathaye dangerous engirom.Sameebaththil americavil standard and poor 500 pe ratio 143 endru padithapothu athirchi adainthen,Ithu eppadi sathyam.illai 14.3 enbathu thavaraga 143 endru achchagivittatha?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: