காந்தியால் காப்பாற்ற பட்ட பங்குச்சந்தை


நேற்றைய தினம் உலகமே சரிவில் இருந்த சமயம் நமது சந்தை காந்தியின் பெயரால் தப்பியது.

சிங்கப்பூர் நிப்டியின் குறியீடு 4930 வரை வர்த்தகமானதை பார்த்த  பலருக்கு நமக்கு மட்டும் விடுமுறை விட்டுட்டாங்களே… என்ற வருத்தமும், சிலருக்கு அப்பா தப்பித்தோம் என்ற நிம்மதியும் இருந்திருக்கும்.

திங்கள் கிழமை என்னாவாகும் என்று பார்ப்போம்..

கடந்த இரு நாட்களில் கவனிக்க வேண்டிய விசயம் குறைவான வேல்யூம்…. புதன் கிழமை இந்த  ஆண்டின் இரண்டாவது மிகக்குறைவான வேல்யூம் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது சந்தை அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய சந்தைகளின் செயல்பாட்டால் தான் வழி நடத்தப்படுகிறது…  வரும் நாட்களிலும் இது தொடரும்.

உள்நாட்டு காரணிகள் – பலத்த கால தாமதத்திற்கு, நாடெங்கிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்ற ஆறுதலான விசயத்தை தவிர வேறொன்றும் இல்லை.

அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் தொடர் ஏவுகணை சோதனையால் கச்சா எண்ணெய் சந்தையில் மேடுபள்ளங்கள் அதிகரிக்கிறது.

அடுத்து வரும் நாட்களில் ஈரானின் தாக்கம் உலக சந்தைகளில் இருக்கும், குறிப்பாக இந்திய சந்தைகளில்…  காரணம் நமது ஈரான் உறவு, ஈராக்-கை போன்றதல்ல.   ஈரானின் கச்சா எண்ணெய் /எரி வாயு ஆகியவற்றின் தேவை நமக்கு அதிகம்,  கூடவே அந்த வளங்களின் மீதான சீனாவின் பார்வை..   நாம் ஈரானிடம் இருந்து விலகினால் / ஒதுங்கினால் சீனா அந்த இடத்தை பிடிக்க தயாரக இருக்கிறார்கள்…இதற்கு இடையே நமது அமெரிக்க நட்பு.    இப்பிரச்சினை நமக்கு திரிசங்கு நிலையைத்தான் ஏற்படுத்தும்.

பங்கு சந்தையின் வீழ்ச்சியும் / எழுச்சியும் – பொருளாதாரத்தின் வீழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது,  குறிப்பாக நமது நாட்டில். அது தவறு. 

2008 ஆம் ஆண்டின் நமது வீழ்ச்சியும், தற்போதைய கடந்த ஆறு மாத எழுச்சியும் FII’s என்பவர்களால்தான்.  இது நிலையானது இல்லை.   நீர்க்குமிழி போன்றது தான்.    அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்வார்கள். அவர்களின் நோக்கம் நல்ல லாபம் தான்,  நமது சந்தையை தூக்கி நிறுத்துவது அல்ல!….

இந்த இணைப்பை கிளிக் செய்து How To Trade Stocks என்ற புத்தகத்தை டவுன் லோடு செய்யலாம்.. 

 இன்னொரு புத்தகம் High Probability Short Term Trading Strategy

9 responses to this post.

 1. thank u for this update

 2. dear sai,

  thanks for the valuable information

 3. wonderful observation ! 5000 put niraya vechchirunden…enda moodinangannu erichal than enakku!!!!!

  thingakizhamai market vizhame thappichcha innum erichal jasthiyavum. ithai padichingala endru bathil tharavum

 4. Dear sai,
  ungalin thani thiramai enge?
  yean ippadi ungalin valai pathivu ippadi soarnthu ponathu?
  ungalin miga neenda naalin vaasagan. aanaal orumurai kooda pinnoottam ittathu illai.
  ippothum pinnootttam idum ennaam enakku illai.aanaalum oru aathangam.
  yaanai pasikku sola pori pondru irukkirathu ungal pathivu.ungal pathivinai thinamum thodarungal.
  ithu enathu vinnappam. naan kavanitha varai pona varudam ithe maatham eppadi irunthathu ungal valai pathivuu?
  appothu ungalai paaraattiyavargal ellaam ippothu enge poanaargal?
  oru sila peyargal thinasari idam perum. ippothu enge ponathu?
  atharkkaana kaaranathaiyum arinthu nivarthi seythu ungalathu valai thala paniyinai idaiyaraathu thodaravum.
  ippadikku ungal vaasagan,
  S.M.S.

 5. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஒக்ரோபர் 4, 2009 at 5:47 பிப

  Sai sir,

  We expect your daily updates on stock market /national -international news which affects stock market.

  everybody is giving a hope for 21000 level by this financial year end including dalal street new issue.
  but what about FIIs who are wholly responsible for this uptrend and lastyear’s down trend.
  No body knows but one thing is sure. they will vanish from indian market once they get huge profit thus making the sensex to 10000 level

 6. hi sai
  happy evening

  excellent view

  please atleast update like this

  it is not necessary nifty levels daily

  i bougut longterm as u said (NHPC, SANGAI MOVERS)

  THANK U

 7. i am the first post god help u

 8. sms

  saiyum manithar than…oru nerathil sorvu yerpattu temporaryaga allathu permanentaga bloggai niruthubavargal ullargal…

  naamum inge namathu karuthukalai ezhuthi blogukku uyir koduppom
  yosithu parungal ..pangu markettil varudam 365 naalum urchagamaga ulla yarenum unda?

 9. திரு சுரேஷ், வஞ்சீஸ்வர்,/ விமல் – நன்றி.

  எஸ்.எம். எஸ் – நீண்ட கடிதமே எழுதிவிட்டு SMS என்று சொன்னால் எப்படி… பெயரை சொன்னால் நன்றாக இருக்கும். any way தங்களின் உற்சாக மூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

  சில செண்டி மெண்டான மற்றும் சில பெர்சனல் காரனங்களால் அதிகம் ஆர்வம் காட்டாமல் எழுதி வந்தேன்..

  இன்று முதல் எப்பொழுதும் போல் தொடருகிறேன்.

  திரு சங்கர்
  – தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி… 5000 புட் இன்று ஓரளவு லாபம் தரும் என்று எதிர்பார்க்கிறேன்.

  தங்களின் 2வது பின்னூட்டத்தின் சிலவரிகளை சங்கடங்களை தவிர்ப்பதற்காக நீக்கி விட்டேன், தங்களின் அனுமதி இல்லாமல் செய்வதற்கு மன்னிக்கவும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  தொடரட்டும் உங்கள் பின்னூட்ட கருத்து பரிமாற்றம்.

  திரு தேவராஜன் – தங்களின் வருகைக்கும் / வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து எழுதுகிறேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: