Archive for ஒக்ரோபர், 2009

முதலீட்டு பரிந்துரை

டெலி டேட்டா இன்பர்மேட்டிக்ஸ் பங்கினை தற்போதைய (6-7) விலையில் நீண்ட கால முதலீடாக வாங்கலாம்.   டார்கெட் 15  – 20/-   கால அளவு 6 மாதத்தில் இருந்து 1 வருடம்.

சிறிய அளவில் வாங்கலாம்… 

Overview

Balance Sheet

Profit & Loss

Advanced Patterns

புத்தாண்டு முதலீடு 2009

அனைவருக்கும்,

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்..

கடந்த ஆண்டு சுப முகூர்த்த வர்த்தக (தீபாவளி) நாளன்று நான் இங்கு பரிந்துரைத்த 43 பங்குகளின் மதிப்பு இரட்டிப்பானது அனைவரும் அறிந்ததே.

https://top10shares.wordpress.com/2008/10/28/portfolio/

https://top10shares.wordpress.com/2009/08/10/10-08-200/

அதே போல் இந்த ஆண்டும் ஆலோசனைகளை கேட்டு பலர் மெயில் அனுப்பியுள்ளனர். 

ஆனால் சென்ற ஆண்டு சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு.    அன்றைய தினம் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்ததை போல கூறு கட்டி வைத்திருந்தார்கள்.    அடி மாட்டு விலையில் கிடைத்தது என்றே சொல்லலாம்.  இருந்தும் பலருக்கு முதலீடு செய்ய தைரியம் இல்லை.  

இன்றோ நிலைமை தலை கீழ்..    சென்ற ஆண்டு மலை அடிவாரத்தின் முதல் படிக்கட்டில் இருந்தோம், அந்த இடத்தில் தடுமாறி விழுந்திருந்தாலும் அடி ஒன்றும் பலமாக இருந்திருக்காது…  ஆனால் இன்று?  அந்த மலையின் உச்சியில் அமர்ந்திருக்கிறோம் இந்த இடத்தில் தடுமாறினால் ??

சென்ற ஆண்டை போல தற்போது ஒரே நாளில் ஒரு போர்ட் போலியோவை  உருவாக்க இயலாது. இனிமேலும் அது போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான்.     ஒவ்வொரு பங்காக தேர்தெடுத்து வர வேண்டும். 

முதலீட்டிற்கான பார்வையில் (வர்த்தக பார்வை அல்ல) எனது தனிபட்ட எதிர்பார்ப்பு  நிப்டி  5150-5200 நிலைகளில் இருந்து குறைந்த பட்சம் 15ல் இருந்து அதிக பட்சம் 35% சதவீதம் வரை கீழிறங்கலாம்.   அதற்கான காரணம்?  

சந்தையை பொறுத்தமட்டில் ஒரு நிகழ்வுக்கு பிறகு தான் காரணங்கள் தேடப்படுவதும் காரணங்கள் கற்பிக்கப்படுவதும் வாடிக்கையான ஒரு வேடிக்கையாக இருந்து வருகிறது.  

2008 ஜனவரியில் Economic Recession (பொருளியல் பின்னடைவு) என்ற வார்த்தை நமக்கு அறிமுகம் இல்லை…  

ஏன் பொதுவான நிகழ்வு- சுனாமி என்ற வார்த்தையே அந்த துயர நிகழ்வுக்கு பிறகு தான் தெரிய வந்தது.   முதல் நாளன்று டிசுனாமி என்ற தலைப்புடன் தான் முன்னனி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

அது போன்று மீண்டும் ஒரு காரணங்களை நாம் தேடுவோம்.     பல மாதங்களுக்கு முன் நாம் விவாதித்த  “கிரெடிட் கார்டு” பிரச்சினையாக கூட இருக்கலாம்.

அதனால் இன்றைய சுப முகூர்த்த வர்த்தக நேரத்தில் ஒரு சில (qty) பங்குகளை மட்டும் வாங்குவது என்று முடிவு செய்துள்ளேன். 

1.  NHPC

2.  Bharti Airtel

3. NTPC

4. Rcom

மற்றபடி நீண்ட கால முதலீட்டிற்கு சில நாட்கள் / மாதங்கள் காத்திருப்பேன்.

முக்கிய செய்தி – Disclaimer

இங்கு நான் எழுதிவரும் கருத்துகள் அனைத்தும் எனது தனிபட்ட பார்வை மற்றும் எதிர்பார்ப்புகளே… எந்த வகையிலும் முதலீட்டிற்கான / வர்த்தகத்திற்கான ஆலோசனைகள் அல்ல. உங்களுக்கு கிடைக்கும் பல தரப்பட்ட செய்திகள் மற்றும் கருத்துகளில் இதுவும் ஒன்று என்றளவில் மட்டும் எடுத்து கொள்ளவும்.   நன்கு ஆராய்ந்து / ஆலோசித்து சுய முடிவுகளை எடுக்கவும். 

இங்கு யாரும் 100% சரி என்று மார்தட்டி கொள்ள இயலாது..    ஒருவர் வாங்கும் சமயம்  இன்னொருவர் விற்கிறார்.  அதில் யார் சரி?  யார் தவறு?  என்று எப்படி சொல்வது?  அது அவரவர் பார்வை.  விருப்பம்.

WISHING YOU  A HAPPY MUHURTH TRADING

தின வணிகம்-15-10-2009

உலக சந்தைகளின் உற்சாகத்தை தொடர்ந்து 5100 தடை நிலையை கடந்துள்ளது நிப்டி..   

அடுத்த தடை நிலைகள் — 5151     – 5190    

சப்போர்ட் நிலைகள் – 5090  – 5050  இந்நிலை உடைபட்டால் தான் கரடிகளுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

தின வணிகம் 14.10.2009

கடந்த திங்களன்று இணையதள இனைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிவினை எழுதவில்லை.

   உயரங்களில் திடிர் திடிரென்று செல்லிங் பிரசர் வருவதும், சப்போர்ட் நிலைகளில்   மீள்வதும் தொடருகிறது.இப்போக்கு இன்னும் சில நாட்களுக்கு தொடரும்.

வரும் வாரத்தில் மீண்டும் 4950 – 4930 என்ற நிலையினை எதிர்பார்க்கிறேன்.

இன்றைய நிப்டியை பொறுத்த வரை 5100 தடை நிலை  5020 -5000 சப்போர்ட் நிலைகள்.

நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

இன்று ஒரு இணைப்பு

இன்றைய இணைப்பு   –  அருமை நண்பர் உமா மகேஸ் அவர்கள் ஒரு வலைப்பதிவினை துவங்கியுள்ளார்.  மென்பொருள் வல்லுனரான இவருக்கு சந்தையின் மீது ஒரு தீரா காதல். பல புதிய டெக்னிகல் விசயங்களை பற்றி  தொடர் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.   அதன் விவரங்களும் அவரது பதிவில் எழுத துவங்கியுள்ளார்.

  டெக்னிகல் விசயங்களை பேசினால் எந்த வித சலிப்பும் இல்லாமல் மணிக்கணக்கில் பேசுவார். 

இது போன்ற முயற்சிகளை நாம் வரவேற்பதுடன் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும், அது மேலும் புதிய விசயங்களை நமக்கு அறிமுகப்படுத்தும்.

முகவரி

http://niftyreport.blogspot.com/

============================================================================

கடந்த திங்கள் அன்று இரவு ஒருவரே மூன்று பெயர்களில் பின்னூட்டம் எழுதியதும் இல்லாமல் அதே செய்தியை  பங்குவணிகம் பதிவிலும் வெட்டி ஒட்டி உள்ளார்.   இது முதல் முறை அல்ல கடந்த பல மாதங்களாக செய்து வருகிறார்.    ஆரம்பத்தில் கோபம் வந்தது.   ஆனால் இப்ப அவரின் பின்னூட்டங்களை பார்த்தால் “ஆஹா வந்துட்டான்யா”  என்று சிரிப்பு தான் வருகிறது.

நிப்டி 4955

//4954 நிலையினை இன்று அல்லது நாளை எதிர்பார்க்கிறேன்// 
நேற்றைய பதிவில் நாம் எதிர்பார்த்த நிலை…     இன்று அந்நிலையினை அடைந்து விட்டார்… நிப்டியார்

தின வணிகம் 09.10.2009

இன்றைய தினம் INFOSYS நிறுவனத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் அது சந்தையில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?  தீபாவளி நெருங்குவதால் அவர்களும் ஏதாவது போனஸ் அல்லது தீபாவளி இனாம் அறிவிப்பார்களா?

அடுத்து வரும் நாட்களில் வர இருக்கும் பெரிய அளவிலான கட்டுமானத்துறை நிறுவனங்களின் (ரூபாய் 12-15 ஆயிரம் கோடிகள்) பங்கு வெளியீட்டிற்கு   கிடைக்கும்  வரவேற்வினை பொறுத்தே சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும்.

நிப்டி

நேற்றைய பதிவில் குறிப்பிட்டதை போலவே ஒவ்வொரு உயர்விலும் செல்லிங் பிரசர் தொடர்கிறது.

கடந்த 23/09/2009 இல் இருந்து நிப்டியார் 4920 – 5090 என்ற எல்லைகளை கடக்காமல் ஊடாடி வருகிறார்.  இந்த இடைபட்ட அமைப்பு ஒரு ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பாக எனக்கு தெரிகிறது.    அதன் அடிப்படையில் 4935  மிக முக்கியமான நிலை.   அந்நிலை உடைபட்டால் நான் எதிர்பார்க்கும் 4825 – 4700  சாத்தியமாகும்.     இதற்கு எதிரான நிலை என்றால் வலுவான வேல்யூமுடன் 5100 நிலையை உடைக்க வேண்டும்.

(கடந்த இரு தினங்களாக  வேல்யூம் சராசரியை விட அதிகரித்து வருகிறது  அது கீழ் நிலையை உடைக்க உதவும் என்று எனது எதிர்பார்ப்பு 🙂 )

Nifty

மற்றபடி கடந்த இரு தினங்களாக நாம் சொல்லி வரும் முக்கியமான் சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டனஸ் நிலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

நிப்டியின் முடிவு என்ன?

இன்றைய நிப்டியின் (Spot)  முடிவு என்னவாக இருக்கும் மதியம் 1.00 மணிக்கு முன்பாக பின்னூட்டத்தில் எழுதுங்கள்.