Archive for செப்ரெம்பர், 2009

25.09.2009

25092009

24.09.2009

24092009

மேலே உள்ள விவரங்கள் தின வர்த்தகர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Chart Pattern – களில் ஆர்வம் உள்ளவர்கள்  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தினசார்ட்டினை  பார்க்கவும்.

 Two Bar Key Reversal அமைப்பு தெரிகிறது….. இது பற்றிய மேலும் விவரங்களுக்கு நமது பழைய பதிவு…

 

https://top10shares.wordpress.com/2008/08/27/two-bar-key-reversal-bearish/

அதே போல மிக சரியான ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பிற்கு நிப்டியின் 15 நிமிட சார்ட்டை பாருங்கள்.

hsnifty

சந்தையில் நிலவும் உற்சாகத்தில் கவனிக்கபட வேண்டிய விசயங்கள்

சென்ற வாரம் ரிலையன்ஸ் நிறுவனம் 1.5 கோடி பங்குகளை விற்றது….  அம்பானி லேசுபட்டவர் இல்லை.   இந்த இடத்தில் விற்க காரணம்?   (இதற்கு முன்பும் பெரிய அளவில் இவர்கள் பங்குகளை விற்றது எல்லாம் உச்ச கட்ட விலையில் தான்… என்பது குறிப்பிடத்தக்கது)

சீன எல்லையில் படைகள் குவிப்பு மற்றும் பதட்டம் என்றும் வலம் வரும் உறுதிபடுத்தபடாத செய்திகள்.

=============================================================================

சென்ற வாரம் பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.  

நந்தன் தங்களின் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.  

23.09.2009

23092009

ஈகை திரு நாள் நல் வாழ்த்துகள்

பசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்

– நபிகள் நாயகம்

mecca1

 நண்பர்கள் திரு சாஜ்,  திரு பாட்சா, திரு பைசல், திரு பஷிர் மற்றும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது சார்பாகவும் மற்ற நண்பர்கள் சார்பாகவும் “ரம்ஜான் என்ற இந்த ஈகை திரு நாள்” நல் வாழ்த்துகள்.

15.09.2009

காளைகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் நிலவினாலும், ஒரு வித தயக்கம் / பயம் இருப்பது தெரிகிறது.

சர்வதேச சந்தைகளில் இன்னும் சில நாட்களில் சிறிய (Corection) பின்னடைவிற்கான   வாய்ப்புகள் தெரிகிறது.. அதன் தாக்கம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கும்.

Sensex ஐ பொறுத்த வரை 16050 உடைபடாதவரை காளைகளுக்கு வாய்ப்புகள் நீடிக்கும்… தடை நிலை என்றால் 16400.

அதே போல் நிப்டி – யில் 4800-4790 – 4780 நிலைகள் வலுவான ஆதரவு நிலையாக உள்ளது இந்நிலைகள் உடைபடாதவரை காளைகள் ஆதிக்கம் செலுத்தும்.   4780 உடைபட்டால் 4730 அடுத்த ஆதரவு நிலை.  

யாரும் எதிர்பாராத நிலையில் 4800 உடை படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.  

தடை நிலை என்றால் 4900 … 

வெறொன்றும் சொல்வதற்கில்லை நமது சந்தையை பற்றி.

 

14.09.2009

எனது முதலீட்டிற்கான  பங்குகள்…

1.  NHPC   –  34 /- Entry Price..

2.  Shanghvi Movers

3.  NTPC.

4. NMDC

 5.கோவையில் செயல்படும்  L.G.Balakrishana

6. Sun Tv 

மேலே உள்ள பங்குகளில் NHPC தவிர மற்ற பங்குகளை தேர்தெடுத்து வைத்துள்ளேன்…  சரியான விலைக்காக காத்திருந்து வாங்கலாம் (அந்த விவரங்கள் வரும் நாட்களில் அப்டேட் செய்யப்படும்)

பி.குறிப்பு – இந்த வாரம் 50 பங்குகளை  தேர்ந்தெடுத்து, முழுமையாக இந்த பதிவினை எழுதுகிறேன்.

09.09.09-09-09-09

Risingwedge

Risingwedge1
இந்த அமைப்பை பற்றிய மேலும் விவரங்களுக்கு –

http://stockcharts.com/school/doku.php?id=chart_school:chart_analysis:chart_patterns:rising_wedge_reversa

சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்

2010 ஆம் ஆண்டு  முதலீட்டிற்கான எனது அடுத்த தேர்வு சாங்வி மூவர்ஸ் லிமிட்டேட்(SANGHVI MOVERS LIMITED)  கிரேன்களை (Heavy Duty Hydraulic and crawler cranes) வாடகைக்கு விடும் நிறுவனம். இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 9வது இடத்திலும்  உள்ளது.

Demag_HC_340

ரிலையன்ஸ் / சுஸ்லான் / என் டி பி சி / டாட்டா ஸ்டீல்  போன்ற முன்னனி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளார்கள்.

http://www.sanghvicranes.com  

புதிதாக மின் உற்பத்தியிலும் கால் பதிக்கிறார்கள்…  (செய்தி சென்ற வார பிஸினஸ்லைன் – http://www.thehindubusinessline.com/2009/09/01/stories/2009090151100300.htm )

டெக்னிகல் சார்ட் பார்க்கும் போது  அதிகம் வாங்க பட்ட நிலையில் உள்ளது.   நீண்ட கால முதலீட்டிற்கு சிறுக சிறுக வாங்கலாம். 

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

 

==============================================================================

நிப்டி மற்றும் சென்செக்ஸ் – 2009  ஆம் ஆண்டின் அதிகபட்ச உயரத்தை அடைந்துள்ளது.   இந்நிலையில் இருந்து எங்கு செல்லும் என்பது தான் எங்கும் நடை பெறும் விவாதம்.

இரண்டு இண்டெக்ஸ்களின் தினசரி சார்ட்டில் Rising Wedge (Reversal) என்ற அமைப்பு தெரிகிறது.   அதிக பட்ச உற்சாகத்தில் அனைவரும் உள்ள இந்த நேரத்தில் படத்துடன் விளக்கினால் நன்றாக இருக்காது.

அதனால், இந்த அமைப்பை பற்றிய மேலும் விவரங்களுக்கு –

http://stockcharts.com/school/doku.php?id=chart_school:chart_analysis:chart_patterns:rising_wedge_reversa

==============================================================================

நம்து பதிவு மூன்று லட்சம் ஹிட்களை –  பெறும் இந்த வேளையில் ….. தினசரி பதிவு எழுதுவதை நிறுத்துவது என்ற முடிவு செய்துள்ளேன்…   எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை.   தொடர்ந்து எழுதுவதால்  ஏற்படும் ஆர்வகுறைவும்,   சலிப்பும் தான். 

ஆர்வமின்றி நிப்டி லெவல்களை மட்டும் எழுதுவதை நிறுத்திவிட்டு வாரத்தில் 1-2 பதிவுகள் அர்த்தமுள்ளதாக (டெக்னிகல் – மற்றும் முதலீட்டிற்கான தேர்வுகள் )  எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இன்றைய சந்தையின் போக்கு 07.09.2009

கடந்த வெள்ளியன்று Short Covering  அதிகம் நடை பெற்றதால்..  அந்த வாரத்தின் முக்கிய எதிர்ப்பு நிலையான 4650 உடைபட்டதை அடுத்து… வேகமாக முன்னேறியது.  4650 நிலையினை பற்றி வியாழன் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சரிவுகள் தள்ளி போடப்பட்டுள்ளது..   

தற்போதைய நிலையில் –  4690 – 4737 ஆகிய நிலைகள் எதிர்ப்பு நிலைகளாக இருக்கும்

4660 – 4640 – 4600 – 4580  ஆகியவை முக்கிய கீழ்நிலைகள்.

சென்செக்ஸ்ல் – 15900 மற்றும் 16050 எதிப்பு நிலைகளாக செயல்படும்.   15400 கரடிகளுக்கான வாய்ப்பாக அமையும்.

மேடுபள்ளங்கள் தொடரும்..   

2009-2010 ஆம் ஆண்டிற்கான  எனது மாதிரி போர்ட்போலியோவில் முதலில் இடம் பிடிக்கும் பங்கு சென்ற வாரம்  சந்தையில் அறிமுகம் ஆன NHPC.

தற்போதைய விலை 35/- டார்கெட் 70/-   குறைந்த பட்ச கால அளவு – ஒரு வருடம்.   

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

இன்றைய சந்தையின் போக்கு 03.09.2009

தொடர்ச்சியாக இரண்டு  நாட்கள் சரிவு அதை தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று சரிவுடன் தொடங்கினாலும் முந்தைய நாளின் முடிவு நிலையை தக்கவைத்துள்ளது. 

4580 நிலையினை உடைத்தால்  4555  – 4535 – 4505  என்ற நிலைகளுக்கு எளிதாக பயணம் செய்யும்.

மேலே செல்ல, சரிவில் இருந்து தப்பிக்க, / சரிவினை தள்ளி போட , 4650 நிலையினை கடந்து நிலைப்பெற வேண்டும்.

சென்செக்ஸ் :- முக்கிய நிலைகள்  15350   மற்றும் 15550 / 15640.

நிப்டி ப்யூச்சர் நிலைகள்

4600 – 4580 – 4567 – 4547  – 4500

4630 -4647 – 4664 – 4680 – 4700 

=============================================================================

 திருமண வாழ்த்து

Rajkumar

Weds

Yogalakshmi

Venue – Chennai

wedding-wishes

இனிமையான இல்லற  வாழ்வில்  இன்று (03.09.2009) அடியெடுத்து வைக்கும் நமது வலைப்பதிவின் நீண்டகால வாசகர் / நண்பர்  ராஜ் குமார் மற்றும் யோகலட்சுமி  இருவரையும் வாழ்த்துகின்றேன்.

மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ நண்பர்கள் அனைவர்  சார்பிலும்,  வாழ்த்துகின்றோம்.