இன்றைய சந்தையின் போக்கு 10.08.2009


கடந்த இரு நாட்களாக எதிர் பார்ப்புகளையொட்டி நகரும் சந்தைகள்…    இன்றைய தினம் ஒரு Dead Cat Bounce ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வலுவான வேல்யூம்-டன் 4510 நிலையினை கடந்தால் 4580 வரை எளிதாக சென்றடையும் வாய்ப்புகள் உள்ளது.

சென்செக்ஸ் –  சப்போர்ட் 14900   ரெசிஸ்டென்ஸ் – 15450

நிப்டி  – சப்போர்ட் 4444 – 4480 – 4490  ரெசிஸ்டென்ஸ் 4510 – 4533 – 4550 

இன்றைய நிப்டி ப்யூச்சர் நிலைகள்

4480 4490 – 4511 – 4533 – 4549 – 4585 – 4620

=============================================================================

முதலீட்டிற்கான பரிந்துரைகள் சொல்வதில்லை என்ற வருத்தம் சில நண்பர்களுக்கு இருக்கிறது.  யுனிடெக் நிறுவன பங்கினை 30 விலையில் பரித்துரைத்த சமயம் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக பரிந்துரைகளை தவிர்த்து வந்தேன்.   

மீண்டும் முதலீட்டிற்கான பரிந்துரைகளை எழுதுவதற்கு முன்பாக பழைய பரிந்துரைகளின் செயல்பாடுகள் குறிப்பாக நமது தீபாவளி 2008 போர்ட் போலியோவின் நிலை என்ன? பயனுள்ளதாக அமைந்ததா?  என்பதை மீண்டும் அலசி பார்த்தேன். (இந்த பங்குகளில் 30-35 % சதவீத லாபத்தில் நான் வெளியேறிவிட்டேன் என்பதை ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.)இன்று வரை தொடர்ந்திருந்தால்,  முதலீடு இரண்டு மடங்காக வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக பஜாஜ் ஹிந்துஸ்தான் மற்றும் ஐவிஆர்சி எல் ஆகிய பங்குகள் 5 மடங்கு உயர்ந்துள்ளது.  நமது முதலீட்டில் ஏமாற்றத்தை கொடுத்து,  நஷ்டமடைந்த நிலையில் உள்ள ஒரே பங்கு,  பாலாஜி டெலிபிலிம் மட்டுமே. 

தற்போதைய நிலை…..

PMS

சரியாக 9 மாதம் 13 நாட்களில்   போட்ட முதலீடு இரட்டிப்பாகியுள்ளது. 

2009 ஆண்டிற்கான புதிய போர்ட் போலியோவை தயார் செய்வதற்கான வாய்ப்பு நெருங்குவதாக கருதுகிறேன்.   கூடிய விரைவில் எழுதுகிறேன்.   நீங்களும் உங்களுக்கு பிடித்த / தெரிந்த பங்குகளை பரிந்துரைக்கலாம்.  என்ன சென்ற ஆண்டை போல ஒரே நாளில் முதலீடு செய்ய இயலாது. ஒவ்வொரு பங்காக அதற்கான வாய்ப்பு வரும் நேரத்தில் முதலீடு செய்வோம்.  முதலீடு அளவு 10 லட்சம் தீபாவளிக்கு முன்பாக முழுமையாக பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

சென்ற ஆண்டே பலருக்கு அழைப்பு விடுத்தேன் ஆனால் யாரும் முன்வரவில்லை. சென்ற ஆண்டை விட தற்போது  பல தமிழ் நண்பர்கள் சந்தை சார்ந்த பதிவுகளை எழுதி வருகிறார்கள்.    அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் இதில் பங்கெடுக்க.   மூத்த பதிவர் பங்கு வணிகம் திரு சரவணகுமார் -ல் இருந்து தற்போது இதில் இணைந்திருக்கும் பொன்மலர் உட்பட அனைவரையும் அழைக்கிறேன்.   பதிவு எழுதாத நண்பர்களும் கலந்து கொள்ளலாம்.

நன்றி.  

Advertisements

19 responses to this post.

 1. Hello sir,

  It’s an interesting turn back. I remember those days, when ppl fear of further fall towards 2000 and below. At that time you had initiated this.

  As far as today, from those level you have hinted for an one side move 🙂 .

 2. Posted by கார்த்திகேயன்-கரூர் on ஓகஸ்ட் 10, 2009 at 9:08 முப

  வணக்கத்திற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  தங்களுடைய பழைய போர்ட் போலியோவில் கொடுத்திருந்த பங்குகளையும் அவை அப்போது இருந்த விலையினையும் தற்போது உள்ள விலையினையும் பார்க்கையில் முதலீட்டின் மீதான நம்பிக்கை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தி விடுகிறது.

  மேலும் நிறைய சிறு வணிகர்களுக்கு தின வணிகங்களை விட இம்மாதிரியான முதலீடுகள் மட்டுமே உறுதியான லாபத்தைத் தரும் என்பதுடன் தின வணிகங்களில் ஏற்படும் இழப்புகளைக் கூட இதன் மூலம் சரிசெய்து ஓரளவுக்கு கணிசமான லாபத்துடனேயே வெளியே வரமுடியும் என்ற ஓர் அசாத்தியமான நம்பிக்கையினையும் ஏற்படுத்திகிறது. மிகச் சரியான நேரத்தில் மிகவும் சரியான ஒரு நினைவு கூறல். பார்க்கையிலேயே மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஏற்படுகிறது, என்னவோ நானே முதலீடு செய்து லாபத்தை எடுத்தது போல. மிகவும் மகிழ்ச்சி.

  தங்களது பழைய போர்ட் போலியோவில் இடம் பெற்றிருந்த டாட்டா ஸ்டீல், யுனிடெக், சுஸ்லான், மற்றும் புதிதாக HDIL பங்குகளையும் சேர்த்து அவற்றில் எப்பொழுது எந்த விலையில் முதலீடு செய்யலாம் என்ற தங்களின் மேலான கருத்தினையும் அறிவுரையினையும் எதிர்பார்க்கிறோம்.

  இனிய காலை வணக்கம்

  என்றும் நட்புடன்,
  கார்த்திகேயன்-கரூர்.

 3. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 10, 2009 at 9:09 முப

  அருண்

  வாங்க இந்த வருட “மாதிரி போர்ட் போலியோ ஒன்னு தயார் செய்யுங்க”

  //As far as today, from those level you have hinted for an one side move // அது தான் 4480 ஐ இரண்டு வண்ணத்தில் கொடுத்துள்ளேனே. அதற்கு கீழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ் கீழ் தான்…….

 4. I will try a portfolio sir. But don’t think that will be very competitive as you did.

  I have some long calls sir, taken on Friday. So will be happy if 4700 comes first before getting on to any lows ;).

 5. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 10, 2009 at 9:21 முப

  வணக்கம் சகோதரர் கார்த்திக்.

  முதலீடு தான் சிறந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை…

  தின வர்த்தகத்தில் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யலாம். அதற்கு மேல் ஆசை பட்டு செய்யும் போது ஆபத்து தான்.

  இன்றைய முதலீட்டாலர்கள் குழப்ப வாதிகளாக உள்ளனர்.

  முதலீட்டை வர்த்தகமாக மாற்றுவது…. வர்த்தகத்தை முதலீடாக மாற்றுவது என்று.

  ஒரு முதலீட்டை செய்யும் முன்பாக நன்றாக அலசி ஆராய்ந்து செயல்படனும் குறிப்பாக உங்கள் முதலீட்டின் கால அளவை முடிவு செய்யுங்கள்.

  அந்த கால அளவில் உறுதியாக இருங்கள்.

  உதாரணத்திற்கு…

  பட்ஜெட்டிற்கு முன்பாக அதீத எதிர் பார்ப்பில் 5000-5200 என்ற இலக்குடன் பல பரிந்துரைகள் வந்தன. அதை நம்பி முதலீடும் செய்தார்கள்.

  ஆனால் பட்ஜெட் அன்றும் அதை தொடர்ந்தும் சந்தை சரிந்த போது 4600 இல் வாங்கியவர்கள் 4100 இல் விற்று வெளியேறினார்கள். ஆனால் சந்தை மீண்டும் 4700 க்கு சென்றது இதில் தவறு யாருடையது.

  இரண்டு ஆண்டு – மூன்ற் ஆண்டு என்ற நீண்ட கால முதலீடு செய்து விட்டு 10 நாளில் வெளியேறினால் அதற்கு பெயர் முதலீடா ? வர்த்தகமா?

 6. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஓகஸ்ட் 10, 2009 at 9:27 முப

  Thank you for your market views sir.

  I had unitech, tvs motors in my portfolio as per your buy level and i exit from these stocks last month. Thank you once again for your valuable service.

  i suggest some low value PSU banks in your portfolio when the market falls these can be picked up for portfolio stocks. e.g. psu banks shares with below Rs.100/-

 7. ivvalavu natkalaga ithaithan ethirpartirunden sikkiram உங்கள் portfolio வை podavum .

  Thanks

 8. /// இன்று வரை தொடர்ந்திருந்தால், முதலீடு இரண்டு மடங்காக ///

  ஏன் தொடர முடியவில்லை ? தொடர சாத்தியம் உண்டா ? என் அறியாமைக்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் .

 9. Posted by சாய்கணேஷ் on ஓகஸ்ட் 10, 2009 at 11:07 முப

  திரு ராஜன்…

  நான் அதை நீண்ட கால முதலீடாக செய்யவில்லை குறுகிய கால லாபம் 30-35% போதும் என்று வெளியேறினேன்.

 10. thank u sai. romba naatkalukku piragu engal pazaiya sai parkirom.with brief view, portfolio,pinnoottum pakkathilum.ithe pol blog thinamum irunthaal romba santhosama irukkum.
  thank u sai

 11. Posted by கார்த்திகேயன்-கரூர் on ஓகஸ்ட் 10, 2009 at 1:51 பிப

  தங்களுடைய பதிலிற்கு மிக்க நன்றி அண்ணா.

  பொதுவாக குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகள் இரண்டிற்குமே நிறைய பொறுமை அவசியம். முதலீடு செய்யும்போது மட்டுமல்ல, செய்தபின்னரும் கூட. அதேபோல தாங்கள் கூறியது போல கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட கால அளவையோ அல்லது வாங்கிய பங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலையினையோ இலக்காக வைத்து காத்திருக்கலாம்.

  ஆனால் முதலீட்டாளர்கள் (அனைவரும் அல்ல) இவற்றை ஆரம்பத்தில் கடை பிடித்தாலும் பின்னர் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து தாங்கள் கூறியது போல குழப்பமடைந்து இறுதியில் தவறான முடிவில் சிக்கிக் கொள்கின்றனர். நீண்ட கால முதலீடு என்றாலும் சந்தையினை தின வர்த்தகர் போல கவனிப்பதும் இந்த குழப்பத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் சந்தையினை தினமும் கவனிக்கையில் தாங்கள் மேற்கொண்ட முதலீடு சிறிய லாபத்தில் இருந்தாலே அதனை உறுதி செய்யவே மனம் முயலும். சந்தையின் இறக்கங்களும் அதனை நிச்சயம் உறுதி செய்யும்.

  நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்கையில் இம்மாதிரியான நடவடிக்கைகளை தவிர்த்தால் தவறுகளும் தவிர்க்கப் படலாம். அவைகள் நிச்சயம் நல்ல பலனைத் தரும் கண்டிப்பாக.

 12. Dear sai sir,

  please give buy rate for investment purpose of the following stocks.

  1. UNITECH
  2. JP ASSOCIATES
  3. SUZLON
  4. INDIA BULLS SECURITIES
  5. CAIRN INDIA
  6. SESA GOA
  7. DLF
  8. BAJAJ HINDUSTHAN
  9. GUJ NRE COKE
  10. VIDEOCON INDUSTRIES
  11. ORCHID CHEMICALS
  12. RNRL

  Thanks.

  – Vimal

 13. தாங்கள் எதிர்பார்த்தபடி இன்று புள்ளிகள் மேல் நோக்கிச் செல்லவில்லை. பெரும்பாலானோர் தங்களைப் போலவேதான் எதிர்பார்த்தார்கள். நானும் அப்படித்தான். ஆனால் சந்தைகளின் இன்றைய போக்கு யாரோ விபரமான சிலர் விளையாடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

  இன்னும் ஓரிரு நாட்களில் சந்தை மேம்படும் என்றுதான் எண்ணுகிறேன். ஏனெனில் 3I Infotech போன்ற பங்குகளை இன்று கடைசி நேரத்தில் சிலர் பல ஆயிரக்கணக்கில் வாங்கிக் குவித்தனர். அவர்கள் காட்டில் தான் அடுத்த வாரம் மழை பெய்யப் போகிறது.

 14. vanakkam sai sir..
  I ‘ll surely take part in this portfolio management for the current fiscal & ‘ll inform other friends too to participate in it.

 15. மிக்க நன்றி நண்பரே

 16. தங்களின் பரிந்துரைகளை நான் வாட் டிலிட்டாக பயன்படுத்துகின்றேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது… தங்கள் பரிந்துரைகளை பயன்படுத்தி நான் யுனிடெக், சுஸ்லான், ஐவிஆர்சி எல், ஆபிஎல், டிஎல்எப், சன் டிவி, ஏர்டெல், மற்றும் ஐசிஐசிஐ ஆகிய பங்குகள் மூலம் லாபம் அடைந்தேன்.. நன்றி சாய்

 17. Dear Sai,

  Your recommendations are/will be always good. I had taken GMR as per your reco. (I did not had enough money..for other stocks…) and exited out. Waiting for this year’s portfolio..

  Regards
  Varan

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: