இன்றைய சந்தையின் போக்கு 07.08.09


நேற்றைய பதிவில் குறிப்பிட்டதை போல இரண்டு நிலைகளையும் ஒரே நாளில் சந்தை சந்தித்தது.    

 கேப் அப் / கேப் டவுன் பகுதியில் கூடுமான வரை இடைவெளியை நிரப்பிய பிறகு 5-10 புள்ளிகளை ரன்னிங் கேப் போன்று  2-3 நாட்கள் வைத்திருப்பதும் அதை தொடர்ந்து இது போன்ற பெரிய அளவிலான ஸ்விங் நடைபெறுவதையும் தொடர்ந்து கவனிக்கும் போது இது திட்டமிட்டே செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு.  இண்டெக்ஸ்களில் இவ்வாறு செயல்பட முடியுமா? என்பதும் யோசிக்க வேண்டிய விசயம்.   இதில முக்கியமாக கவணிக்க வேண்டிய விசயம் இது போன்று நடைபெறுவது அதி முக்கியமான சப்போர்ட் மற்றும் ரெஸிஸ்டென்ஸ் நிலைகளில் தான் என்பது.  அதனால் நாம் டெக்னிகல் என்றே எடுத்து கொள்வோம்.

A.  31.07 அன்று சந்தை  சுமார் 60 புள்ளிகள் கேப் அப் ஆக துவங்கியது அன்றையதினமே சந்தை 4585 வரை இறங்கி வந்தது ஆனால் சிறிய இடைவெளியை நிரப்பாமல் மேலே சென்றது.

B. 04.08 அன்று முந்தைய நாள்/வாரத்தின் முடிவான 4727 இல் இருந்து 35 புள்ளிகள் வரை கேப் டவுனாக துவங்கிய சந்தை அன்றைய தினமே 4714 வரை சென்றது…  அதற்கு அடுத்து  05/08 அன்று  4711 மற்றும் 4718 வரை இரண்டு முறை  சென்று திரும்பியது.  நேற்றைய தினம் 4 வது முறையில் அந்த சிறிய இடைவெளியை நிரப்பியது. (4 என்ற எண் சந்தையில் அதிக  முக்கியத்துவம் வாய்ந்தது). 

இன்றைய சந்தை…..

மீண்டும் சந்தை வலுவான சப்போர்ட் நிலைகளில்   முடிவடைந்துள்ளது….

அடிபட்ட பாம்பாக சீற (மேலே) வாய்ப்புள்ளது… ஆனால் அதற்கு வில்லனாக, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் வங்கிகளின் வேலை நிறுத்தம் அமையலாம்.   மார்ஜின் பிரசர் ஏற்படுவதால் மேலும் சிலர் லாங் பொசிசன்களில் இருந்து வெளியேறலாம்.    

தற்போது 4585 மற்றும் 4490 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகள். 

4610 மற்றும் 4633 ஆகியவை மேல் நிலைகள். 

சென்செக்ஸ்-ம் 15500 என்ற சப்போர்ட்டில் முடிவடைந்துள்ளது  மேலே செல்ல 15640 என்ற தடை நிலையை கடந்தாக வேண்டும்.    

இன்றைய நிப்டி ப்யூச்சர் நிலைகள்….

4585 – 4612 – 4633 – 4649 – 4668 – 4698

4560 – 4533  – 4520 – 4505 – 4490 – 4478

=============================================================================

செய்தி துளி

இன்றை தினம் 12 மணி 34 நிமிடம் 56 செகண்ட் 07/08/09 என்பது 1  டூ 9 என்ற வரிசையில் அமையவுள்ளது. இது போன்று மீண்டும் அமைய இன்னும் 81 வருடங்கள் ஆகும். 

இதையும் மேலை நாடுகளில் கொண்டாட உள்ளார்கள் என்பது ஊடக செய்தி. 

 

 

 

8 responses to this post.

 1. Good morning Sai sir…

 2. Posted by கார்த்திகேயன், கரூர். on ஓகஸ்ட் 7, 2009 at 9:34 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இன்றைய கட்டுரையின் தகவல்கள் மிகவும் அருமை. நிப்டியின் சிறிய இடைவெளிகளை நிரப்பாமல் சென்றது பற்றிய தகவல் யோசிக்க வைக்கின்றன.

  நிப்டி நிலைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 3. இனிய காலை வணக்கம்.

 4. GOOD MORNING,
  THANK YOU FOR YOUR BRIEFLY VIEWS.

 5. very useful news

 6. 4520,4505 exact points. well done sai

 7. இன்றை தினம் 12 மணி 34 நிமிடம் 56 செகண்ட் 07/08/09

  12 மணி 34 நிமிடம் 5 செகண்ட் 06/07/(19)89
  12 மணி 34 நிமிடம் 5 செகண்ட் 06/07/(20)89
  like that many will come
  9மணி 9நிமிடம் 9செகண்ட் 09/09/09 dubai will start metro train
  thanks for the information

 8. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் – 1

  http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: