இன்றைய சந்தையின் போக்கு 05.08.2009


கடந்த சில தினங்களாக நிப்டி 4650-700 நிலைகளில் போராடி வருகிறது… இந்நிலை மிக முக்கியமான நிலையாகும் எனவே அடுத்த சிலதினங்கள் இந்த மேடுபள்ள ஆட்டம் தொடரும்.

கடந்த காலங்களில் நிப்டி 4700 நிலையினை கடந்து செல்ல 4 முறை முயற்சி செய்து ஒரு முறை மட்டும் வெற்றி கண்டுள்ளது.   தற்போது கடந்து செல்லுமா?  அல்லது பின்வாங்குமா.. என்பதை வரும் நாட்களில் பார்ப்போம். இந்த வார முடிவு மிக முக்கியமானதாக அமையும்.

கடந்த இருதினங்களில்  முக்கிய சப்போர்ட்டாக இருந்து வந்த 4680 நிலையினை உடைத்து கீழே சென்று அடுத்த சப்போர்ட்டான 4630 ல் திரும்பி மீண்டும் 4680ல் முடிவடைந்துள்ளது. 

முக்கியமான மேல் நிலைகள் 4710 – 4730 – 4780

கீழ்நிலைகள் – 4680 – 4633 –  4586 – 4492

சென்செக்ஸ்-ம் தனது முக்கியமான தடை நிலையான 16000 ஐ தொட்டுவிட்டு பின்வாங்கியுள்ளது.    15600 – 15725  மற்றும் 15900 – 16050 -16500 ஆகிய நிலைகள் முக்கியமானவை.

குறைந்து வரும் மழையின் அளவு…  விவசாய உற்பத்தி குறைவு… கடுமையான விலைவாசி ஏற்றம்..  சிக்கன நடவடிக்கையின் பெயரில் நடைபெற்றுவரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…. ஆகியவற்றை மனதில் கொண்டு குறுகிய கால முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நலம்.  

நிப்டி ப்யூச்சரின் இன்றைய நிலைகள்…

4685 – 4704 –  4718 – 4738 -4758

4670- 4655 – 4635 –  4598 – 4578

 

 

10 responses to this post.

 1. Good morning Sai sir…

 2. Thank you sir !!!

 3. Posted by S. Karthi-Karur on ஓகஸ்ட் 5, 2009 at 9:49 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தங்களுடைய கட்டுரையை படிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எங்கள் அனைவருக்கும். சந்தை கடந்த பல நாட்களாகவே பெரிய மாற்றங்கள் எதுவுமின்றி மேலேயே சென்ற வண்ணம் உள்ளது. இந்நிலையில் வர்த்தகம் செய்வதற்கும் சற்றே பயமாகவும் இருக்கிறது. எங்கே திடீரென கீழே சரிந்து விடுமோ என்று.

  கடந்த மூன்று மாத சந்தையின் ஏற்றங்களை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாகவும் மிகுந்த வியப்பையும் மட்டுமே தருகிறது. நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கடந்த அக்டோபர் மாத சரிவுகள் முடிந்தபின்னர் சந்தையின் சரிவுகள் ஏறக்குறைய முடிந்தே விட்டன. எனவே முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை ஆரம்பித்துவிடலாம் என்று தாங்கள் தங்களுடைய கட்டுரையில் எழுதிய வரிகள் இருந்தது பொன்னான வரிகள். ஆனால் தவற விட்டுவிட்டோம். மிகுந்த வருத்தமளிக்கிறது. எனினும் தங்களுடைய வரிகள்தான் நிறைய சந்தர்ப்பங்களில் எங்களை பாதுகாப்பாக வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறது என்பதனை நினைத்துப் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  இனிய காலை வணக்கம்.

 4. Strongly Except Market will fall from 4700-4800 levels.

 5. thank u sai

 6. கலக்கலான பதிவு மீண்டும் சந்தை 3900 வரை வந்து மேல் நோக்கி பாயும் என நான் நம்புகின்றேன்.

 7. arumai thodarnthu eluthunkal nanpare

 8. சில நாட்களாகவே சிறு வணிகம் செய்பவர்களுக்கு மிக சோதனையான காலம் அதிலும் தினவர்த்தகர்கள் stoploss பின்பற்றாமல் வணிகம் செய்வது மிக ஆபத்தானது உங்களின் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.

 9. திரு.ரஹ்மான்,
  குறை இருப்பின் சுட்டிகாட்டுவதும்
  நிறை இருப்பின் பாராட்டுவதுமே
  மனித பண்பு.
  நீங்கள் அந்த பண்பினை வெளிப்படுத்தியது
  மனித மாண்பு.

 10. S. Karthi-Karur — Yes Karti i too feel the same.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: