இன்றைய சந்தையின் போக்கு 20.07.2009


சென்ற வார திங்கள் அன்று யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் சந்தை 4400 வரை உயரும் என்று. அன்றைய அதீத எதிர் பார்ப்பு 3700-3600 என்றிருந்ததது.  

இன்றைய தினம் 90% மக்களின் எதிர் பார்ப்பு 4600 என்று உள்ளது.  

சர்வதேச சந்தைகளின் ஏற்றம் மற்றும் Divestment மீதான அதிக எதிர் பார்ப்பு என்று செய்திகளால் வழிநடத்தப்படும் சூழ்நிலைதான். 

பட்ஜெட்டை தொடர்ந்து உருவான downward channel க்கு மேல் சென்ற வார சந்தை முடிந்துள்ளது. இது நிலைக்கும் பட்சத்தில் 4500-4550 வரை உயர வாய்ப்புள்ளது.  அதே நேரம் குறைவான Volume போன்ற காரணிகள் எந்த நேரத்திலும் ஒரு செல்லிங் பிரசர் உருவாகலாம் என்பதை எச்சரிக்கை செய்கின்றன.   3900 நிலைகளை மீண்டும் தொட்டு பார்க்கவும் சாத்தியங்கள் உள்ளது.   

சந்தை அதிக எதிர்பார்ப்புகளுக்கு எதிராக செயல்படுவது வேடிக்கையான வாடிக்கையாக உள்ளது. 4700 இல் மக்கள் எதிர்பார்த்தது 5200 ஆனால் 3900 க்கு பயணம் ஆனது.   4100 ஐ உடைத்த உடன் அதிகம் எதிர்பார்க்கபட்டது 3700-3600-3400  அதுவும் Gap Filling நடைபெறும் என்ற வல்லுனர்களின் எதிபார்ப்பு ஆனால்  கடந்த 3 மாதத்தில் 3-4 இடங்களில் இடைவெளியை தொட்டு விட்டு தொடரும் ஏற்றம் என்ற போக்கு நிலவுகிறது.

இன்றைய முக்கிய நிலைகள்

4410 – 4422 – 4439  – 4453 – 4467 – 4485 –  4530

4389 – 4366 – 4343 – 4300 – 4265 

செய்திதுளி

VSNL என்ற டாட்ட கம்யூனிகேசன் நிறுவனம் உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் கேபிள் இனைப்புகளை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை / பெயரை பெற்றுள்ளது.

=============================================================================

Real time Data

நீண்ட நாளாக டெக்னிகல் வகுப்புகளை துவங்கும் முன்பாக மிக குறைந்த கட்டணத்தில் ரியல் டைம் டேட்டா சேவையினை வழங்க ஆசை ஆனால் அதற்கான ஆள் பலம் மற்றும் நேரம் இல்லாததால் காலம் கடத்தி வந்தேன். 

நமது வலைப்பதிவின் மூலம் அறிமுகம் ஆன  நண்பர் திரு விஜயகுமார் இத்துறையில் ஏற்கனவே கால்பதித்து உள்ளவர்.  திடிரென்று – “வாங்க சார்” சேர்ந்து செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்தார்.   

அதை தொடர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் அவர் அவர் தேவைக்கு ஏற்றார் போல பிரித்தும் டேட்டாவினை வழங்க வேண்டுகோள் விடுத்தேன் அதையும் அவர் ஏற்று கொண்டார்.  தமிழகத்தில் மிகக்குறைந்த கட்டணம் இது தான் என்று சொல்லலாம். 

என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்கு இதை பரிந்துரைக்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு. 

http://imayammoneyget.com 

மெட்டா ஸ்டாக் மற்றும் அமிபுரோக்கர் உட்பட அனைத்து முன்னனி சாப்ட்வேரிலும் பயன்படுத்தலாம்.  

புதியவர்களுக்கு டெக்னிகல் பயிற்சியும் தொடர் வாடிக்கையாளர் சேவையும் வழங்கப்படும்.

 தேவைப்படுபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும். 

– சாய் கணேஷ்.

 இச்சேவையை பயன்படுத்த Broad Band மிக அவசியம்.

One response to this post.

  1. Posted by chandrubangalore on ஜூலை 20, 2009 at 9:01 பிப

    Thanks for your valuable information and inputs sir..
    Chandru

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: