இன்றைய சந்தையின் போக்கு 07-07-2009


பட்ஜெட்டினால் மேலும் ஒரு ஏற்றம் அமையாதா? என்ற ஒரு நப்பாசையால்   “லாபத்தை உறுதிசெய்யாமல்” கடந்த 1 மாதமாக காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் விற்க முயன்றதால் ஏற்பட்ட விளைவே நேற்றைய சந்தை.

பட்ஜெட் சரியில்லை சந்தை சரிகிறது என்ற செய்தி காட்டு தீயாக பரவிய போது பதட்டதில் பலர் விற்று வெளியேறினார்கள். 

அதற்கு ஏற்றார் போல சர்வதேச நிலவரங்களும் நமது சந்தைகளுக்கு எதிராகத்தான் இருந்தது.   குறிப்பாக நேற்றைய தினம் டவ்ஜோன்ஸ் 8200 என்ற முக்கிய சப்போர்ட்டை உடைத்து விட்டது.  கச்சா எண்ணையும் 63$ வரை வீழ்ச்சி கண்டது.

2000 புள்ளிகள் வரை தொடர் ஏற்றம் கண்ட சந்தையில் 250 புள்ளிகள் சரிவு என்பது பெரிய விசயமில்லை ஆனால் அடுத்து வரும் நாட்களில் இந்த FII’s ன் நடவடிக்கைகளை பொறுத்தே சந்தையின் போக்கு அமையும். 

நிப்டியில் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பு உருவாகியுள்ளதை சில தினங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன்.  அந்த அமைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

காளைகளுக்கு மிக முக்கிய நிலை 4250

இன்றைய நிலைகள்

4198 – 4209 -4250  – 4274 – 4310

4118 – 4100 – 4085 – 4052  – 3985

பட்ஜெட் :-

பாரட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை….   பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க துவங்கிய காலத்தில் சொல்லபட்ட காரணம் நிர்வாக வசதி, மற்றும் வேகமான வளர்ச்சி. ஆனால் இன்றைய நிலை அதனால் திரட்டப்படும் நிதி.  இப்படியே எத்தனை ஆண்டுகள் இருக்கும் நிறுவனங்களை விற்று அரசு காலம் தள்ளும்.  5 ஆண்டுகள் 10 ஆண்டுகள்?  இது சரியான வழிமுறை இல்லை.

இந்தியா வளர்ச்சியடைகிறது எவ்வாறு தனி மனித ஒழுக்க கேட்டை வளர்த்து விட்டு.  

நமது தமிழகத்தின் வளர்ச்சி  டாஸ்மார்க் விற்பனை வளர்ச்சியில் தான் உள்ளது,   அதை காந்தியின் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் / டெல்லியில் ஆட்சி நடத்தும் காங்கிரசார் கண்டு கொள்ளவே இல்லை. 

இலவசங்களை கண்டு முறையாக வரி செலுத்துவோர் எரிச்சல் அடையத்தான் செய்கிறார்கள், அவர்களின் பார்வையில் அது சரியே.      வருமான வரித்துறையில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை.  இன்று நாம் கணக்கு பார்த்தால் சராசரி மனிதன், வருமான வரியை விட சேவை வரி அதிகம் செலுத்துகிறோம்.  வருமான வரி செலுத்தாதவர்கள் கூட சேவை வரியினை செலுத்துகிறோம்.    நேரடி வருமான வரியின் கடுமையை குறைத்து  இது போன்ற மறைமுக வரியில் அரசு மேலும் கவனம் செலுத்தலாம்.

விவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் ஒவ்வொரு அரசும் அறிவிக்கும் கவர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பெருந்தனக்காரர்களுக்கு தான் பயன்பட்டு வந்துள்ளது.    இலவச மின்சாரம் / விவசாய கடன் தள்ளுபடி என்ற அனைத்தும் இதற்கு முறையாக திட்டமிடாததே காரணம்.   இப்படி பட்ட நிலையில் தனியார் கந்து வட்டி காரர்களிடம் சிக்கியுள்ள மஹராஷ்டிரா மாநில விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு,  இது அடுத்து வரும் அம்மாநில தேர்தலுக்கான சலுகை அறிவிப்பு.   கந்து வட்டி முறையே தவறு அதை தடுக்க சட்டத்தை கொண்டு ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.  அதை விடுத்து சலுகைகள் எதற்கு?

இப்படி நிறைய புலம்பலாம்……   இதுவும் கடந்து போகும் அடுத்த வருடம் இன்னொரு பட்ஜெட் வரும்.  

நாமும் நமது அடுத்த வேலையை பார்ப்போம்.

 TRIAL Calls கேட்டு சில நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள், அது போல்   டிரையல்  கால்ஸ் வேண்டுபவர்கள் யாஹீவில் உங்கள் மொபைல் நம்பரை தெரிவிக்கவும். அல்லது 9367506905 என்ற நம்பரில் SMS அனுப்பவும்.   

 

4 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூலை 7, 2009 at 9:06 முப

  Good Morning and thank you very much for your views sai sir.

 2. Posted by ThomasRuban-Bangalore on ஜூலை 7, 2009 at 9:26 முப

  GOOD MORNING SIR

  Thank you very much

 3. Posted by S. Karthi, Karur on ஜூலை 7, 2009 at 9:41 முப

  Dear Sai anna,

  Your lines about the budget are excellent.

  Thank you very much for your nifty levels.

  Good Morning. Have a nice day.

 4. Posted by S. Karthi, Karur on ஜூலை 7, 2009 at 1:19 பிப

  மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் சந்தையானது ஒரே நாளில் 700 புள்ளிகளுக்கு மேல் (நிப்டி) உயர்ந்து முடிவடைந்தது. மேலும் அதற்கடுத்த நாட்களில் சிறிது இறக்கங்களை தந்தாலும் அதற்கு அடுத்த நாட்களிலேயே இழந்த உயரங்கள் அனைத்தையும் மீட்டெடுத்து சந்தையில் சிறு வணிகர்கள் அனைவருக்கும் சந்தை இனி கீழே இறங்கவே இறங்காது என்ற ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. அந்த மாதிரியான கால கட்டங்களில் தாங்களோ சந்தைக்கு கீழ் நோக்கிய இலக்குகளையே தங்களது கட்டுரைகளில் வழங்கி இருந்தீர்கள்.

  தங்களுடைய இந்த தகவல் சந்தையின் நகர்வுகளை எங்களுக்கு தெளிவாய் புரிய வைத்தது. ஏனெனில் அன்றைய நாட்களில் ஊடகங்கள் (…..?????????????) அனைத்தும் சந்தை மீதான அபரிமிதமான ஒரு நம்பிக்கையினை சிறு வணிகர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சியில் மிகவும் தீவிரமாய் இருந்தன. அதற்காக அவை நிறைய சந்தை வல்லுனர்களை வேறு தங்களது தொலைக்காட்சியில் தோன்ற வைத்தன. சந்தையும் ஊடகங்களின் இத்தகைய தகவல்களை உறுதிபடுத்தும் வகையிலேயே சிறிதும் கீழே இறங்காமல் உறுதியாக (????) மேலேயே நின்றன.

  அத்தகைய கால கட்டங்களில் தங்களுடைய இந்த கருத்துகள் தங்களின் உறுதியை கூறுகின்றனவாய் அமைந்தன. மேலே சொன்ன அந்த வரிகள் எங்களை பாதுகாத்த வரிகள். அதற்கு நன்றிகள் பல எங்கள் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கு உரித்தாகுக.

  மேலும் நமது மத்திய அரசின் தற்போதைய திட்டமான “பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு முதலீட்டை திரும்ப பெறுதல்” – மீதான தங்களது கருத்து கட்டாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.

  ஊழல், இலவசம் மற்றும் தவறான நிர்வாகத்தினால் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனை தடுக்கும் முயற்சியில் சிறிது அக்கறை காட்டினாலே போதும். எவ்வளவோ பணம் மிச்சமாகும். பொதுமக்களின் உயிரை விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு என்று உறிஞ்ச தேவையில்லை. ஆனால் இவையனைத்தும் சிறிதும் நடக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

  அரசாங்கம் விதிக்கும் வரிகளை கட்டிக் கொண்டும் விண்ணைத்தொடும் விலை வாசியில் பொருட்களை வேறு வழியில்லாமல் வாங்கி உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டும்தான் இன்றைய மக்களின் நிலை என்றாகி விட்டது. தனது அண்டை வீட்டாருக்கு பணம் (ஓட்டு போடுவதற்கு) கொடுத்து தனக்கு பணம் கொடுக்க வில்லையெனில் வரும் கோபம் கூட மக்களுக்கு இது போன்ற விசயங்களில் வருவதில்லை. மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெருமை யாவும் நமது அரசியல்வாதிகளையே சேரும்.

  பின்குறிப்பு:
  எங்களது ஊரில் ஓட்டளிக்க பணம் வழங்கவில்லை என்று நிறைய மக்கள் சாலை மறியல் வரை செல்ல துணிந்து விட்டனர் மிகுந்த கோபத்துடன். ஆனால் இதிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்களுக்கு இன்னும் உணர்வுகள் இருக்கின்றன. அதனை இதற்கேனும் பயன்படுத்துகிறார்களே!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: