Archive for ஜூலை, 2009

இன்றைய சந்தையின் போக்கு 31.07.2009

நேற்றைய சந்தை Short Covering உதவியால் வலுவான நிலையில் முடிவடைந்துள்ளது.    அடுத்து வரும் நாட்களின் போக்கினை தீர்மானிக்கும் வகையில் இன்றைய நாள் மிக முக்கியமானதாக இருக்கும்.  வாரத்தின் இறுதி நாள்,  மற்றும் மேலும் சந்தை உயர புதிய Buying வர வேண்டும். 

சென்செக்ஸ் : (15388)  15000 நல்ல சப்போர்ட்டாகவும் 15600 தடை நிலையாகவும் உள்ளது.

நிப்டி (4571) :  4500 -4475 நல்ல சப்போர்ட்… மேலும் உயர 4600-650 கடந்தாக வேண்டும்.

டவ்ஜோன்ஸ் : –  9000-9100 என்ற தடை நிலையில் கடந்த ஒருவாரமாக நிலைபெற்றுள்ளது.  இந்நிலையில் சிறிய அளவில் பின்வாங்கலாம்.

இன்றைய நிப்டி ப்யூச்சர் நிலைகள்

4575 – 4604 – 4625  – 4645  -4666

4565 – 45 49 –  4535 – 4520 – 4505 

இன்றைய சந்தையின் போக்கு 30.07.2009

கடந்த ஒரு வாரமாக சிறு வேலை பளு மற்றும் காலையில் சிலருக்கு டெக்னிகல் பயிற்சி  வகுப்பு எடுப்பதன் காரணமாக பதிவுகளை எழுதவில்லை. அதற்காக வருந்துகிறேன்.  

மேலும் சந்தையை பற்றி குறிப்பிடுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை உயரங்களில் செல்லிங் பிரசரை தவிர்க்க இயலாது என்பதை இதற்கு முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

நிப்டி கடந்த 2 மாத காலமாக 4700 என்ற வலுவான தடை நிலையை உடைக்க இயலாமல் போராடி வருகிறது. 

4650 ஐ உடைத்து முன்னேறினால் 4800-5100 வரை செல்லலாம்…  ஆனால் எனது பார்வையில் அதற்கான வாய்ப்புகள்  குறைவு என்றே கருதுகிறேன்.

நேற்றைய தினம் நிப்டி ப்யூச்சர் 22 மற்றும் 23/7  நாட்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பிய உடன் அதை சப்போர்ட்டாக எடுத்து சரிவுகளை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 4400 ஐ உடைக்கும் சமயத்தில் 4150 நிலையினை அடையும் வாய்ப்பு உள்ளது.    

இன்றைய முக்கிய நிலைகள்…

4520 –  4539 – 4547 – 4569 – 4580 

4475 –  4444 –  4419 – 4396 – 4365 

 

இன்றைய சந்தையின் போக்கு 23.07.2009

வலுவான தடைநிலையினை உடைக்க முடியாமல் தடுமாறிய சந்தை  – சப்போர்ட் நிலையில் முடிவடைந்துள்ளது.   மீண்டும் மேல் நோக்கிய பயணத்திற்கு முயற்சி நடைபெறும்.     உயரங்களில் இது போன்ற செல்லிங் பிரசரை தவிர்க்க இயலாது.

இன்றைய முக்கிய நிலைகள்

4427 – 4439 – 4453 – 4467 -4479 -4494

4400 – 4383 – 4367 – 4349 – 4323 – 4293

 

Success takes longer than expected, since Trading is all about probabilities

இன்றைய சந்தையின் போக்கு 22.07.2009

டெக்னிகல் பார்வையில் சந்தை –  வலுவான நிலையில் உள்ளது, தொடர் ஏற்றத்திற்கு  முக்கியமான / பலமான  தடைநிலைகளை கடந்து செல்ல strong breakout  தேவை.   அப்படியொரு  breakout நடைபெறாதவரை பக்கவாட்டு நகர்வுகள் தொடரும். 

நமது இண்டெக்ஸ்-கள் தனது கீழ் நிலைகளில் இருந்து 90% மேல் உயர்ந்துள்ளது ,  ஆனால் உலக சந்தைகளின் இண்டெக்ஸ்கள் இந்த அளவு உயரவில்லை.    சந்தை உயரத்துவங்கி 21 வாரங்கள் ஆகின்றன.  

முக்கிய மான நிலைகள்

சப்போர்ட் – 4440 – 4400

ரெசிஸ்டென்ஸ் –  4520 – 4550 -4615

இன்றைய நிலைகள்

4482 – 4499 – 4513 – 4545 – 4567

4460 –  4444 – 4431 – 4415  – 4390

இன்றைய சந்தையின் போக்கு 21.07.2009

நாளைய தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளது…  கூடவே பலவித வதந்திகளுக்கு வழி வகுத்துள்ள  சூரிய கிரகணம் ,  அந்த வதந்திகளை மறுக்கும் அறிவியல் வல்லுனர்களும் ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகிறோம் என்று சொல்லி உள்ளார்கள்.  நமது சந்தையிலும் இந்த கிரகணத்தை மையமாக கொண்டு சில செய்திகளை அனுப்பி வருகின்றனர் 🙂

நேற்றைய சந்தை  எதிர் பார்த்ததை போல 4500 வரை முன்னேறியுள்ளது…  இந்நிலை முக்கிய தடை நிலையாக உள்ளதால்.  ஒரு செல்லிங் பிரசர் உருவாக வாய்ப்புள்ளது.    அதே நேரம் 4500-4550 ல் நிலைபெற்றால் 4650 வரை தடை இன்றி முன்னேறலாம்.

இன்றைய முக்கிய நிலைகள்

4520 – 4534 – 4545 – 4567 – 4589

4490 – 4483 –  4465 – 4453 – 4432 – 4390    

இன்றைய சந்தையின் போக்கு 20.07.2009

சென்ற வார திங்கள் அன்று யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் சந்தை 4400 வரை உயரும் என்று. அன்றைய அதீத எதிர் பார்ப்பு 3700-3600 என்றிருந்ததது.  

இன்றைய தினம் 90% மக்களின் எதிர் பார்ப்பு 4600 என்று உள்ளது.  

சர்வதேச சந்தைகளின் ஏற்றம் மற்றும் Divestment மீதான அதிக எதிர் பார்ப்பு என்று செய்திகளால் வழிநடத்தப்படும் சூழ்நிலைதான். 

பட்ஜெட்டை தொடர்ந்து உருவான downward channel க்கு மேல் சென்ற வார சந்தை முடிந்துள்ளது. இது நிலைக்கும் பட்சத்தில் 4500-4550 வரை உயர வாய்ப்புள்ளது.  அதே நேரம் குறைவான Volume போன்ற காரணிகள் எந்த நேரத்திலும் ஒரு செல்லிங் பிரசர் உருவாகலாம் என்பதை எச்சரிக்கை செய்கின்றன.   3900 நிலைகளை மீண்டும் தொட்டு பார்க்கவும் சாத்தியங்கள் உள்ளது.   

சந்தை அதிக எதிர்பார்ப்புகளுக்கு எதிராக செயல்படுவது வேடிக்கையான வாடிக்கையாக உள்ளது. 4700 இல் மக்கள் எதிர்பார்த்தது 5200 ஆனால் 3900 க்கு பயணம் ஆனது.   4100 ஐ உடைத்த உடன் அதிகம் எதிர்பார்க்கபட்டது 3700-3600-3400  அதுவும் Gap Filling நடைபெறும் என்ற வல்லுனர்களின் எதிபார்ப்பு ஆனால்  கடந்த 3 மாதத்தில் 3-4 இடங்களில் இடைவெளியை தொட்டு விட்டு தொடரும் ஏற்றம் என்ற போக்கு நிலவுகிறது.

இன்றைய முக்கிய நிலைகள்

4410 – 4422 – 4439  – 4453 – 4467 – 4485 –  4530

4389 – 4366 – 4343 – 4300 – 4265 

செய்திதுளி

VSNL என்ற டாட்ட கம்யூனிகேசன் நிறுவனம் உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் கேபிள் இனைப்புகளை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை / பெயரை பெற்றுள்ளது.

=============================================================================

Real time Data

நீண்ட நாளாக டெக்னிகல் வகுப்புகளை துவங்கும் முன்பாக மிக குறைந்த கட்டணத்தில் ரியல் டைம் டேட்டா சேவையினை வழங்க ஆசை ஆனால் அதற்கான ஆள் பலம் மற்றும் நேரம் இல்லாததால் காலம் கடத்தி வந்தேன். 

நமது வலைப்பதிவின் மூலம் அறிமுகம் ஆன  நண்பர் திரு விஜயகுமார் இத்துறையில் ஏற்கனவே கால்பதித்து உள்ளவர்.  திடிரென்று – “வாங்க சார்” சேர்ந்து செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்தார்.   

அதை தொடர்ந்து மிகக்குறைந்த கட்டணத்தில் அவர் அவர் தேவைக்கு ஏற்றார் போல பிரித்தும் டேட்டாவினை வழங்க வேண்டுகோள் விடுத்தேன் அதையும் அவர் ஏற்று கொண்டார்.  தமிழகத்தில் மிகக்குறைந்த கட்டணம் இது தான் என்று சொல்லலாம். 

என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்கு இதை பரிந்துரைக்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு. 

http://imayammoneyget.com 

மெட்டா ஸ்டாக் மற்றும் அமிபுரோக்கர் உட்பட அனைத்து முன்னனி சாப்ட்வேரிலும் பயன்படுத்தலாம்.  

புதியவர்களுக்கு டெக்னிகல் பயிற்சியும் தொடர் வாடிக்கையாளர் சேவையும் வழங்கப்படும்.

 தேவைப்படுபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளவும். 

– சாய் கணேஷ்.

 இச்சேவையை பயன்படுத்த Broad Band மிக அவசியம்.

இன்றைய சந்தையின் போக்கு 16.07.2009

எதிர்பார்ப்புகளையொட்டி நகரும் சந்தைகள்….  கடந்த வார இறுதியில் எதிர்பார்க்கபட்ட ஒரு மீள்ச்சி இந்த வாரத்தில் நடைபெற்றுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வதேச சந்தைகளை பின் தொடரத்துவங்கியுள்ளது நமது சந்தை. இந்த ஏற்றம் அமெரிக்க சந்தையின் எழுச்சியால் தான்.

தற்போதைய சூழ்நிலையில்    4240 மற்றும் 4330 ஆகிய நிலைகள் முக்கிய தடை நிலைகள்.

4190 – 4160 மற்றும் 4060 ஆகியவை முக்கிய சப்போர்ட் நிலைகளாக இருக்கும்.

இன்றைய முக்கிய நிலைகள்:

4255 – 4269 – 4280 – 4300 – 4319 – 4344 – 4400 

4221 – 4205 – 4190 – 4165  – 4135  

கடந்த ஒரு வாரமாக அதிக அலைச்சல்,  அந்த அசதியால் சிறு உடல் நலக்குறைவு காரணமாகவும்,  பி எஸ் என் எல் இன்  மகத்தான சேவை (இண்டெர்னெட்  )  காரணமாகவும் பதிவு எழுத இயலவில்லை.   நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

 

இன்றைய சந்தையின் போக்கு 10.07.2009

கடந்த மூன்று தினங்களாக பெரிதாக வர்த்தக வாய்ப்பினை தராமல் 30-40 புள்ளிகளுக்கு இடையே ஊசலாடி வருகிறது.     

இன்று வெளிவர இருக்கும் இன்போசிஸ் காலாண்டு முடிவுகளை பற்றி பலவிதமான வதந்திகள் கடந்த ஒரு வாரமாக பரப்பபட்டு வருகிறது.   ஆனால் நல்ல விதமான முடிவுகள் வரும் பட்சத்தில் சந்தையில் ஒரு சார்ட் கவரிங் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுப்பதற்கில்லை.

சென்ற முறையும் இது போலவே நடந்தது குறிப்பிடத்தக்கது.  

4120 – 4160 நிலையினை கடக்கும் பட்சத்தில் நல்ல மீள்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.

4085 –  4105 –  4127  –  4165

4055 – 4034 – 4000 – 3985 – 3965 

 

இன்றைய சந்தையின் போக்கு 09.07.2009

சந்தை முக்கியமான கட்டத்தில் உள்ளது,    உலக சந்தைகளில் இதுவரை நிகழதா ஒரு பெரும் இடைவெளிப்பகுதியின் விளிம்பில் உள்ளது.  அடுத்து வரும் நாட்களில்  இந்த இடத்தில் கேப் டவுன் ஆனால் ஒரு Island Top அமைப்பு உருவாகும்.   இடைவெளி என்பது மிகப்பெரியது முழுமையாக நிரப்பபடுமா?   காத்திருப்போம்.

கடந்த திங்கள் அன்று  ஏற்பட்ட சரிவினை அடுத்து  இரு தினங்களாக சந்தை மீள்ச்சியடைய முயற்சிக்கிறது.  ஆனால் சர்வதேச சூழ்நிலைகளாலும்,  உடனடியாக 3700-3600 நிலைகளை எதிர்பார்த்து அதிகமானவர்கள் Short நிலைகளை எடுப்பதாலும் சந்தையால் அம்முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை. 

தொடர்ந்து சரிவடையாமல் அதற்கு முன்பாக சிறிய அளவில் மீள்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளது. 

அனைத்தும் சர்வதேச சந்தைகளின் போக்கினை பொறுத்தே அமையும். 

இன்றைய முக்கிய நிலைகள்.

4080 –  4099 –  4115 –  4165

4051 – 4034 – 4000 – 3965 – 3845

இன்றைய சந்தையின் போக்கு 07-07-2009

பட்ஜெட்டினால் மேலும் ஒரு ஏற்றம் அமையாதா? என்ற ஒரு நப்பாசையால்   “லாபத்தை உறுதிசெய்யாமல்” கடந்த 1 மாதமாக காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் விற்க முயன்றதால் ஏற்பட்ட விளைவே நேற்றைய சந்தை.

பட்ஜெட் சரியில்லை சந்தை சரிகிறது என்ற செய்தி காட்டு தீயாக பரவிய போது பதட்டதில் பலர் விற்று வெளியேறினார்கள். 

அதற்கு ஏற்றார் போல சர்வதேச நிலவரங்களும் நமது சந்தைகளுக்கு எதிராகத்தான் இருந்தது.   குறிப்பாக நேற்றைய தினம் டவ்ஜோன்ஸ் 8200 என்ற முக்கிய சப்போர்ட்டை உடைத்து விட்டது.  கச்சா எண்ணையும் 63$ வரை வீழ்ச்சி கண்டது.

2000 புள்ளிகள் வரை தொடர் ஏற்றம் கண்ட சந்தையில் 250 புள்ளிகள் சரிவு என்பது பெரிய விசயமில்லை ஆனால் அடுத்து வரும் நாட்களில் இந்த FII’s ன் நடவடிக்கைகளை பொறுத்தே சந்தையின் போக்கு அமையும். 

நிப்டியில் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பு உருவாகியுள்ளதை சில தினங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன்.  அந்த அமைப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

காளைகளுக்கு மிக முக்கிய நிலை 4250

இன்றைய நிலைகள்

4198 – 4209 -4250  – 4274 – 4310

4118 – 4100 – 4085 – 4052  – 3985

பட்ஜெட் :-

பாரட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை….   பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க துவங்கிய காலத்தில் சொல்லபட்ட காரணம் நிர்வாக வசதி, மற்றும் வேகமான வளர்ச்சி. ஆனால் இன்றைய நிலை அதனால் திரட்டப்படும் நிதி.  இப்படியே எத்தனை ஆண்டுகள் இருக்கும் நிறுவனங்களை விற்று அரசு காலம் தள்ளும்.  5 ஆண்டுகள் 10 ஆண்டுகள்?  இது சரியான வழிமுறை இல்லை.

இந்தியா வளர்ச்சியடைகிறது எவ்வாறு தனி மனித ஒழுக்க கேட்டை வளர்த்து விட்டு.  

நமது தமிழகத்தின் வளர்ச்சி  டாஸ்மார்க் விற்பனை வளர்ச்சியில் தான் உள்ளது,   அதை காந்தியின் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் / டெல்லியில் ஆட்சி நடத்தும் காங்கிரசார் கண்டு கொள்ளவே இல்லை. 

இலவசங்களை கண்டு முறையாக வரி செலுத்துவோர் எரிச்சல் அடையத்தான் செய்கிறார்கள், அவர்களின் பார்வையில் அது சரியே.      வருமான வரித்துறையில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை.  இன்று நாம் கணக்கு பார்த்தால் சராசரி மனிதன், வருமான வரியை விட சேவை வரி அதிகம் செலுத்துகிறோம்.  வருமான வரி செலுத்தாதவர்கள் கூட சேவை வரியினை செலுத்துகிறோம்.    நேரடி வருமான வரியின் கடுமையை குறைத்து  இது போன்ற மறைமுக வரியில் அரசு மேலும் கவனம் செலுத்தலாம்.

விவசாயிகளுக்கு சலுகை என்ற பெயரில் ஒவ்வொரு அரசும் அறிவிக்கும் கவர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பெருந்தனக்காரர்களுக்கு தான் பயன்பட்டு வந்துள்ளது.    இலவச மின்சாரம் / விவசாய கடன் தள்ளுபடி என்ற அனைத்தும் இதற்கு முறையாக திட்டமிடாததே காரணம்.   இப்படி பட்ட நிலையில் தனியார் கந்து வட்டி காரர்களிடம் சிக்கியுள்ள மஹராஷ்டிரா மாநில விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு,  இது அடுத்து வரும் அம்மாநில தேர்தலுக்கான சலுகை அறிவிப்பு.   கந்து வட்டி முறையே தவறு அதை தடுக்க சட்டத்தை கொண்டு ஆளும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.  அதை விடுத்து சலுகைகள் எதற்கு?

இப்படி நிறைய புலம்பலாம்……   இதுவும் கடந்து போகும் அடுத்த வருடம் இன்னொரு பட்ஜெட் வரும்.  

நாமும் நமது அடுத்த வேலையை பார்ப்போம்.

 TRIAL Calls கேட்டு சில நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள், அது போல்   டிரையல்  கால்ஸ் வேண்டுபவர்கள் யாஹீவில் உங்கள் மொபைல் நம்பரை தெரிவிக்கவும். அல்லது 9367506905 என்ற நம்பரில் SMS அனுப்பவும்.