இன்றைய சந்தையின் போக்கு 30.06.2009


2009-2010 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதி நாள்… இந்திய Fund Manager -கள் நல்லதொரு balance sheet-களை காண்பிக்க உள்ளார்கள். 

நாளை முதல் அல்லது நிதிநிலை அறிக்கைக்கு பிறகு,  அவர்கள் அதீத லாபத்தில் உள்ளவற்றை விற்று ரொக்க கையிருப்பை அதிகரிக்க செய்யலாம் என்ற எதிர் பார்ப்பும் உள்ளது. 

22/06/2009 பதிவில் நாம் குறிப்பிட்ட 5/20 டி.எம். ஏ  -ve crossover நிலைக்கவில்லை தற்போது அது மீண்டும் +ve வாக மாறவாய்ப்பு உள்ளதை கீழே உள்ள சார்ட்டில் பார்க்கலாம்.

4444 முக்கிய தடை நிலையாக இன்றும் இருக்கும்.   இந்நிலையை உடைத்தால் 4500 சாத்தியம்.

சப்போர்ட் – 4340 மற்றும் 4320.

இன்றைய நிப்டி நிலைகள்

4410 – 4427 – 4444 – 4460 – 4483

4367 – 4355 – 4340 – 4310 – 4290

பட்ஜெட்.

கடந்த  10-15 ஆண்டுகளில் கூட்டணி கட்சிகளின் தொந்தரவு (அதிகம்) இல்லாமல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் என்பதால்-  எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.    அரசின் முன் இருக்கும் சவால் சலுகையா?  – சீர்திருத்தமா?  அல்லது சலுகையுடன் கூடிய சீர்திருத்தமா?    அரசின் வருமானம் குறைந்து வரும் நிலையில் மேலும் சலுகைகள் மற்ற எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வது என்பது சிரமமான காரியம் தான்.   

அரசு நிதி ஆதாரத்தை பெருக்க அதிகம் நம்பியுள்ளது – பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம்  (45-50000 கோடிகள்).

கம்யூனிஸ்ட்கள் – பாராளுமன்றத்தில் பலமிழந்திருந்தாலும் அவர்களின் உன்மையான பலமான தொழிற்சங்கங்கள் வாயிலாக எதிர்ப்புகள் இருக்கும்.

ஏற்கனவே தி.மு.க. வின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட நெய்வேலி லிக்னைட் – பங்கு விற்பனையை மீண்டும் அனுமதிப்பார்களா? அல்லது எதிர்ப்பு என்ற நிலையெடுத்து சமீபத்தில் ஏற்பட்ட மன்கசப்பை (கேபினெட்)  தீர்க்க துருப்பு சீட்டாக பயன்படுத்துவார்களா? 

அதே போல் ரயில்வே அமைச்சர் மம்தா பாணர்ஜியும் பலவகையில் தடையாக இருப்பார்.

ஏற்கனவே இந்த அரசு அறிவித்த விவசாய கடன் தள்ளுபடிக்கு முழுமையாக நிதி ஆதாரத்தை ஏற்படுத்தவில்லை.  இந்நிலையில் தற்போதைய தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் நிதிச்சுமை.

அடுத்து வர உள்ள மாநில தேர்தலை மனதில் கொண்டு சில செயல்திட்டங்கள்.

மழை போதிய அளவு இல்லாததால் உணவு பஞ்சம் / தட்டுபாடு ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கை / நிதி ஒதுக்கீடு. 

இப்படி நிறைய சவால்கள்.. 

அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் வரும் திங்கள் அன்று திரு பிரணாப் பாபு பதில் சொல்லிவிடுவார். அதுவரை நாமும் காத்திருப்போம்.

Advertisements

5 responses to this post.

 1. Posted by David Raja on ஜூன் 30, 2009 at 8:57 முப

  Thank you sir !!

 2. Posted by S. Karthi, Karur on ஜூன் 30, 2009 at 9:35 முப

  Dear Sai anna,

  Today your article explains all the matters regarding the budget announcement. Very useful information for all of us.

  Thank you very much.

  Have a rocking day,,,,

 3. Good morning Sai sir…

 4. EXCELLENT ARTICLE ABOUT BUDGET

 5. very superb article.thank u sai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: