Archive for ஜூன் 3rd, 2009

இன்றைய சந்தையின் போக்கு 03.06.2009

நேற்றைய தினம் கரடிகள் போராடி முக்கிய சப்போர்ட் நிலையான 4465  ஐ உடைத்தும் அதை தக்க வைக்க வில்லை.   திங்கள் கிழமை கேப் அப் ஆனதால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பி விட்டு மேலெழுந்தது சந்தை. 

மீண்டும் அதே 4475-65 கரடிகளுக்கான முக்கிய நிலையாக இருக்கும்.    

இன்றைய முக்கிய நிலைகள்

நிப்டி ப்யூச்சர்.

4550 – 4580 – 4600 – 4625 – 4639  

4525 – 4495 – 4455 – 4435 – 4420 

மாறும் என்ற சொல்லை தவிர அனைத்தும் மாறும் –  தனியார் மயமாக்கலில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்த அமெரிக்க அரசு, திவாலான  உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனத்தை (ஜி.எம்) அரசுடைமையாக்கி நடத்த உள்ளது.   ஆனால் நாம் இன்றும் நல்ல லாபத்தில் இயங்கும் பொதுதுறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை யோசித்து வருகிறோம்.