இன்றைய சந்தையின் போக்கு 01.06.2009


கடந்த வெள்ளிகிழமை மீண்டும் ஒரு 10-11 மாத  உயரத்தில் முடிவடைந்துள்ளது.     அடுத்து என்ன ?  அதற்கு முந்தைய வார உயரமான 4510 (ஸ்பாட்) ஐ உடைக்குமா? 

4500-4530 (ஸ்பாட்)   முக்கிய தடை நிலைகள்…    2008 ஜீலை – செப்டம்பர் மாதங்களில் அந்த நிலைகளில் நிலை கொண்டிருந்தது குறிப்பிடதக்கது. 

அண்ணன் நிப்டியாரின்  அடுத்த கட்ட பயணங்கள் என்னவாக இருக்கும்…

4510 – 4530 ஐ கடந்து அதற்கு மேல் நிலைப்பெற்றால் 4750 வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளது.   அதற்கு மாறாக இந்நிலைகளை உடைத்து முன்னேற முடியாமல் பின் வாங்கினால் 4100 நிலையினை தொட்டுவிடும் வாய்ப்புகளும் உள்ளது. 

வரும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சந்தை பயணிக்கலாம், வியாழன் வெள்ளி கிழமைகளில் ஆப்ஷன் ரைட்டர்ஸ் – கால் மாற்றும் புட் ஆப்ஸன் என்று இரண்டிலும் அதிகம் ஆர்வம் காட்டியது தெரிகிறது. 

புட் ஆப்ஸனில் 4000 மற்றும் 4200 ஆகியவை அதிக அளவில் ஆக்டிவாக இருந்துள்ளது.   இது கரடிகள் மீண்டும் ஒரு முறை கீழே இழுக்க முயற்சிக்கும்… என்பதை காட்டுகிறது.

உலக நிலவரம்

தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணை 66 $ ஐ கடந்துள்ளது.

டவ் ஜோன்ஸ்  8200-8500 என்ற எல்லையை உடைக்க வில்லை…  மீண்டும் 8500 இல் நிலை கொண்டுள்ளது.

இன்றைய முக்கிய நிலைகள்

நிப்டி ப்யூச்சர்.

4460- 4480 – 4494 – 4517 – 4529 – 4545 

4425 – 4410 – 4400 – 4385- 4361 – 4335 

முக்கிய சப்போர்ட் நிலைகள் 4390, 4355  மற்றும் 4287.

முதலீட்டிற்கான பரிந்துரைகள் வழங்குவதில்லை என்ற, சில நண்பர்களின் வருத்தத்தினை வரும் நாட்களில் சரி செய்கிறேன்.  உலக சந்தையில் நமது சந்தை மட்டுமே  என் வழி தனி வழி என்று மாறு பட்ட நிலையினை எடுத்து…  யாரும் நம் அருகில் இல்லை என்ற நிலையில் உயரத்தில் இருக்கிறது.  அதனால் இந்த பட்ஜெட் தாக்கல் ஆகும் வரை காத்திருப்போம்.

 

4 responses to this post.

 1. Posted by V.SURESH, SALEM 9842551176 on ஜூன் 1, 2009 at 7:38 முப

  Good Morning sir and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 2. Posted by David Raja on ஜூன் 1, 2009 at 8:55 முப

  Thank you sir !!!

 3. Posted by GR CHANDHRAKUMAR on ஜூன் 1, 2009 at 9:00 முப

  GOOD MORNING SAI SIR..

 4. Posted by S. Karthi, Karur on ஜூன் 1, 2009 at 10:34 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  கடந்த வருடம் அக்டோபர் மாதம் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவுகளை தந்து கொண்டிருந்தது தினமும். அதீத இறக்கங்கள் அதுவும் யாரும் எதிர்பாராத தருணத்தில். அந்த மாதம் நிப்டி மட்டுமே ஏறத்தாழ 2000 புள்ளிகளை இழந்தது. அடுத்து என்ன நடக்குமோ சந்தை கீழே எங்கு சென்று முடியுமோ என்று அனைவரும் பயந்த நேரத்தில் அந்த மாதம் முடிந்ததும் “ஜனவரியில் ஆரம்பித்த சந்தையின் சரிவுகள் அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதாகவும் முதலீடுகளை மேற்கொள்வோர் இப்பொழுதே வாங்க ஆரம்பிக்கலாம்” என்றும் தங்களது கட்டுரையில் கொடுத்திருந்தீர்கள்.

  பின்னர் சந்தை உடனடியாக மேலே உயர்ந்து மீண்டும் கீழே இறங்கியது. அந்த தருணத்தில் முதலீடு மேற்கொள்ள சந்தை இதைப்போல வேறொரு தருணத்தை தரும் என்றும் எதிர்பார்க்காதீர்கள் – என்றும் கூறியிருந்தீர்கள். அந்த வரிகள் பொன்னான வரிகள். அன்று தாங்கள் கொடுத்த 2500 என்ற நிப்டி நிலை மற்றும் அதனை உடைத்தால் மட்டுமே நாம் பயப்பட வேண்டும் , மற்றபடி தாராளமாக முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தீர்கள். அப்பொழுது நிப்டி ஏற்படுத்திய கீழ்நிலை சரியாக 2516 (தோரயமாக) .

  அதன்பின்னர் சந்தையின் அசகாய ஏற்றத்தைப் பார்த்துதான் பேச வார்த்தையின்றி வாயடைத்துப் போய் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் ஒன்றும் புரியாத நிலையில் குழம்பிக் கொண்டிருக்கிறோம்.

  ஏற்றமும் சரி இரக்கமும் சரி இரண்டுமே மிகவும் வலிமையுடன் நம்மைத் தாக்குகின்றன. இதன் முடிவுதான் என்ன???????????

  புரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: