இன்றைய சந்தையின் போக்கு 28.05.2009


மந்திரி சபை விரிவாக்கம்….    79 அமைச்சர்கள்… சட்டம் அனுமதிப்பது 81,   பிறகு ஏன் அந்த 2 இடங்களை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை.  இவ்வளவு பெரிய மந்திரி சபை!.  நல்ல மெஜாரிட்டி கிடைத்தும் ஒரு அரசு அமைய 13  நாட்கள் தேவைப்பட்டுள்ளது.   முதல் கோணலா?   

முழுமையான பட்ஜெட் ஜூலை முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லி உள்ளார் நிதி அமைச்சர்.    அது வரை பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இருக்காது.

அது வரை சந்தை தனது பயணத்தை தானாக அல்லது சர்வதேச சந்தைகளின் படி அமைத்து கொள்ளும். 

நமது அரசு பொதுதுறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்கினை விற்பதன் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு முயற்சிக்கும் என்று தெரிகிறது.   குறிப்பாக நெய்வேலி லிக்னைட் / பவர் கிரிட் மற்றும் என் டி பி சி.  முதலீட்டாளர்கள் விலை குறையும் போது இந்நிறுவன பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கலாம்.  அதைப்பற்றி தனிபதிவில் எழுதுகிறேன்.

அரசுக்கும், நிறுவனங்களுக்கும்  பெரிய தலைவலியாக இருக்கப்போவது கச்சா எண்ணை விலையேற்றம் தான் 63$ என்றளவில் உள்ளது.  மேலும் உயர்ந்தால்?  ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை பணவீக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று  ஜெட் வேகத்தில் பறக்கிறது. 

டவ் ஜோன்ஸ் கடந்த ஒரு மாதமாக 8500 மற்றும் 8200 என்ற இரு வலுவான நிலைகளுக்கு இடையில் ஊசலாடுகிறது.  தற்போது 4 மணி நேர சார்ட்டில் 8500 நிலையில் டிரிபிள் டாப் அமைப்புடன் கீழிறங்கி வந்துள்ளது.   8200 ஐ உடைக்குமா? 

நமது சந்தையில் கடந்த இரு நாட்களாக பிராபிட் புக்கிங் மற்றும்  ரோல் ஓவர் செய்வதற்காக சார்ட் கவரிங்  ஆகியவற்றால் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

நேற்றைய ஏற்றத்தில் இருந்து பின்வாங்கும் வாய்ப்புகள் உள்ளது.   4244 / 4224 / 4210 ஆகிய நிலைகள் முக்கிய சப்போர்ட்கள்.

4290 – 4305 – 4335 – 4351

4260 – 4242 – 4221 – 4210 – 4183

அலோக் இண்டஸ்டிரிஸ் நிறுவன பங்கினை 11-14 என்ற  விலையில் நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைத்தேன். தற்போது  24 விலையில் விற்பனையாகிறது.    யாராவது முதலீடு செய்திருந்தால் 50% பங்கினை விற்று போட்ட முதலீட்டை எடுத்துவிடவும். 

 இது வரை நாம் பரிந்துரைத்த முதலீட்டு பரிந்துரைகள் அனைத்தும் நல்ல லாபத்தினை தந்துள்ளது.  

Advertisements

5 responses to this post.

 1. Dear sai sir,

  From the morning onwards, I have refreshed this page for 5-6 times. no entries are updated.

  but suddenly, the blog was updated.

  real surprise.

  thanks for your efforts & informations.

  – vimal

 2. விடுப்புக்கு பின்பு… அரசியல் மற்றும் பங்குசந்தை பற்றி பல கேள்விக்குறிகளுடன் மிகச்சிறப்பாக உங்கள் எண்னத்தை பதிவுசெய்து உள்ளீரக்ள் மிக்க நன்றி….

  சாய்… நீங்கள் பரிந்துரைத்த Suzlon Energy @ 50, Thermax,Sun TV Network,Unitech,Jaiprakash Asso ஆகிய பங்குகள் நல்ல விலையில் உள்ளது.. விற்று லாபம் பார்க்கலாமா? உங்கள் ஆலோசனை கிடைத்தால் மிக நன்றாக இருக்கும்…

 3. <>

  ஆம் உண்மைதான் பிப்ரவரி 26 அன்று நீங்கள் பரிந்துரைத்த CALS தற்போது 87 Paise.

  ================================================நண்பர் ஒருவர் அவருக்கு கிடைத்த தகவலின் படி ஆலோசனை கேட்டார்… எனக்கு கிடைத்த தகவல்களுடன் சரிபார்த்து இந்த ஆலோசனையை வழங்கிறேன்.

  100% ரிஸ்க் – சில ஆயிரம் % லாபமடைய வாய்ப்புள்ளது.
  52 வார அதிக பட்ச விலை – 59 குறைந்த பட்சவிலை – 0.41

  Cals Refineries-Bse Code-526652
  இந்நிறுவன பங்கினை தற்போதைய விலையான 45 பைசாவுக்குவாங்கலாம்…. ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர்கள் 10000 பங்குகளை4500/- க்கு வாங்கலாம்.
  ================================================

 4. Posted by Rajan, chennai on மே 29, 2009 at 2:10 பிப

  INFORMATION ALERT:

  CALS REF LTD.

  52WEEK -HIGH =6.70 LOW 0.32.

  SOURCE: http://WWW.BSEINDIA.COM

  LINK :http://www.bseindia.com/stockreach/stockreach.htm?scripcd=526652

 5. Download all important technical analysis books for free from:
  http://www.forex-book.org/

  Has got all of the most important TA books.
  The Password for all the book is “http://www.forex-book.org/”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: