சந்தையும் தேர்தல் முடிவுகளும்.


மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…  

யாரும் எதிர் பாராத முடிவுகள்.. நிச்சயம் காங்கிரஸ் கட்சியினரே எதிர் பார்க்காத வெற்றி அவர்களுடையது.     262 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று உள்ளது.

எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாத வகையில் ஆட்சி அமைய உள்ளது. 

உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைவது நமது நாட்டிற்கு நல்லதே, அந்த வகையில் மகிழ்ச்சி.

அனைவரும் இனி கூட்டணி ஆட்சி தான் என்று சொல்லி வந்த நிலையில் 206  இடங்களை பெற்று இன்னும் ஒரு கட்சி ஆட்சி முறைக்கு வாய்ப்பு உள்ளது என்று நிருபித்து உள்ளனர்.

அகில இந்திய அளவில் எந்த ஒரு ஆதரவு அலையும் இல்லாமல் இந்த வெற்றி எவ்வாறு சாத்தியமானது? 

NDA – கூட்டணி பெரிய அளவில் பாதிப்படைய வில்லை 14  இடங்களை இழந்துள்ளனர்.  ஆனால் மூன்றாவது அணியினர் 36 இடங்களையும்,  லாலு பிரசாத், பாஸ்வான் மற்றும் முலாயம் சிங் யாதவ் கட்சியினர் 37 இடங்களையும் இழந்து, காங்கிரஸ் கூட்டணி 80 இடங்களை அதிகமாக பெற உதவியுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியினருக்கு கிடைத்த வெற்றி என்பதை விட – இடது சாரிகளின் தோல்வி,   மற்றும் சில மாநில கட்சிகளின் சந்தர்ப்ப வாத கூட்டணியின் தோல்வியே இவ்வெற்றி

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி யின் கூட்டணி இத்தேர்தலின் திருப்பு முனை.

262 இடங்களுடன் ஆட்சியமைக்க உள்ள பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களுக்கு உள்ள சாதக பாதகங்கள் என்ன?

206 இடங்களை பெற்று தனிபெறும் கட்சியாக காங்கிரஸ் உள்ளதால் – கூட்டணி ஆட்சி என்று சொல்வதை விட காங்கிரஸ் ஆட்சி என்றே சொல்லலாம். 

மம்தா பானர்ஜி  மற்றும் திமுக தலா 18 இடங்களை பெற்றிருந்தாலும் பெரிய அளவில் அரசுக்கு நெருக்கடிகள் இருக்காது, குறிப்பாக – குறிப்பிட்ட கேபினெட் மற்றும் மந்திரி பதவிகளை கேட்டு பிடிவாதம் பிடிக்கும் நிலையில் இக்கட்சிகள் இல்லை.  

(வருத்தமான செய்தி –  கடந்த 10-13  ஆண்டுகளாக டெல்லியின் கடி வாளம் தமிழகத்திடமும் இருந்து வந்தது, அது தற்போது இருக்க போவதில்லை)

அதனால் முக்கிய கேபினட் மந்திரி பதவிகளை காங்கிரஸ் தங்கள் கை வசம் வைத்து கொள்ள இயலும். 

முடிவுகளை எடுப்பதில் சுதந்திரமும் வேகமும் இருக்கும்.

பாதகங்கள் என்ன?    பாதகங்கள் என்று சொல்வதை விட சாவால்கள் என்று சொல்லலாம்.   இந்த அரசு எதிர் நோக்கியுள்ள மிக பெரிய சாவால்கள்…

இத்தேர்தலில் வடமாநிலங்களில் அவர்கள் வழங்கியுள்ள 2 ரூபாய்க்கு கோதுமை போன்ற கவர்ச்சி திட்டங்களை நிறை வேற்றுதல்,  நாட்டின் பாதுகாப்பு,  விமான நிலையம் போன்ற கட்டுமான துறைகளில் வேகமான வளர்ச்சி,  வங்கிதுறை, காப்பீடு மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் தேவையான எக்கனாமிக் ரீபார்ம்ஸ்.

இடது சாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்த உள்ளதால், நல்ல விசயம் இனி அவர்களது இடையூறுகள் இருக்காது என்று சொல்ல முடியாது,  அவர்களின் பலமே டிரேடு யூனியன்கள் தான், மேற் சொன்ன துறைகளில் அவர்களின் மறைமுக எதிர்ப்பு நிச்சயம் இருக்கும். 

சந்தையில் என்ன விதமான தாக்கத்தை காங்கிரஸ் கட்சியின் வெற்றி ஏற்படுத்தும்? 

நேற்றைய தினம் ஊடகங்கள் மக்களை குறிப்பாக சந்தை சார்ந்த மக்களை உற்சாகத்தின் உச்சாணி கொம்பிற்கே அழைத்து சென்றனர்.     திங்கள் அன்று Upper Circuit ஆகும்,  10-20 % உயர்வு திங்களன்றே இருக்கும், சென்செக்ஸ் 16000 புள்ளிகள் என்றும் பேசினார்கள்.  தற்போது அந்த உற்சாகம் குறைந்து சகஜ நிலைக்கு வரத்துவங்கியுள்ளனர்.  திங்கள் கிழமை சந்தை துவங்கும் முன்   இன்னும் சகஜம் அடையலாம்.

திங்கள் அன்று நிச்சயம் ஒரு வலுவான கேப் அப் இருக்கும், அது Short Rally-யா  அல்லது Long Rally-யா என்பது உலக சந்தைகளின் போக்கினை பொறுத்தே.  Short Rally -யாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.   இரண்டு நாட்கள் அமைதியாக இருந்து முடிவு எடுப்பது நல்லது.  

நான் Short Side-ல் இருப்பதால் இக்காரணங்களை அடுக்க வில்லை.  சேலம் திரு. சுரேஸ் போன்ற நண்பர்கள் கேட்டதற்கு இணங்க எனது கருத்துகளை பதிவு செய்கிறேன்.

2004 ல் 1300 இல் இருந்த நிப்டி 6300 க்கு சென்றதும் இதே ஆட்சியில் தான், அங்கிருந்து 2200 க்கு வந்ததும் இதே ஆட்சியில் தான்.  

தற்போது மீண்டும் அதே டீம் தான்.   பெரிய மாற்றம் இல்லை.   மெஜாரிட்டி என்பதை தவிர வேறு சிறப்பு என்ன?   – அப்படி இருக்கையில் இந்த தேர்தல் முடிவினையடுத்து சந்தையில் தற்போது நிலவுவது அளவிற்கதிகமான எதிர்பார்ர்ப்பே.

ஒரு அரசு என்பது பங்கு சந்தையை      மட்டும்    கவனிக்காது.  அதற்கென பல சாவால்கள் உள்ளன.  . 

அமெரிக்க அதிபராக  ஒபாமா வெற்றி பெற்ற சமயம், அதன் பிறகு பதவியேற்ற போதும்  இருந்த உலக நாடுகளின் எதிர்பார்ப்பு நாம் அறிந்ததே.  பதவியேற்பின் போது  கரடிகள் தான் வரவேற்பு அளித்தது.

அதே போல் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான உடன் சந்தையில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு 5200 ஆனால் அது உள்ளூர் விவகாரம், உலக  விவகாரத்தை தான் பின்பற்றுவேன் என்று சென்றது நமது சந்தை.

ஜனவரியில் அரசு ஒரு சலுகை மற்றும் ஊக்க அறிவிப்புகளை வெளியிட்ட போது சந்தை உயர வில்லை. 

ஆனால் அரசு இயந்திரம் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம் சந்தை தானாக உயர ஆரம்பித்தது, சரியாக சொல்ல வேண்டும் என்றால் 20.03.2003 அன்று சந்தை 2800 இல் இருந்த சமயம் திங்கள் அன்று சரிவடையும் என்ற எதிர் பார்ப்பு இருந்தது.    22.3.2009 ஞாயிறு அன்று அமெரிக்க அறிவித்த வங்கிகளுக்கான பெயில் அவுட் பிளானை தொடர்ந்து,  23.3.2009  திங்கள் கிழமை பிரேக் அவுட் ஆன உயர்வு 4.5.2009 வரை தொடந்து உள்ளது. 

கடந்த 10 நாட்களாக சர்வதேச சந்தைகளின் பக்கவாட்டு நகர்வினை தொடர்ந்து 3600-3700ல் நிலை கொண்டுள்ளோம்.

சர்வதேச சந்தைகளை யொட்டியே நமது நகர்வுகளும் அமையும். இந்த புதிய நிலையான அரசு அமைய உள்ளதை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கொண்டாடுவோம்.  

சந்தை  தெரிந்து கொள்ள விரும்பி காத்திருக்கும் செய்திகள்?

அடுத்த நிதியமைச்சர் யார்?   – திரு. அலுவாலியா?  திரு.  ரங்கராஜன்?  திரு. சிதம்பரம்?  திரு. பிரனாப் முகர்ஜி? அல்லது பிரதமரே நிதியமைச்சகத்தையும் கவனிக்க உள்ளாரா. ?  

கேரளாவில் வெற்றி பெற்ற சசி தாருர் எந்த துறை கேபினெட் அமைச்சர் ஆவார்?

ஓய்வு பெற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் – ஒய்.வி. ரெட்டிக்கு அரசில் முக்கியத்துவம் கிடைக்குமா?

இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டது. 

முழுமையான பட்ஜெட் அடுத்து தாக்கல் செய்யப்பட வேண்டும் .  இது வரை நிறுவனங்களின் நிதி நிலைமையை தான் அலசி வந்தோம், இந்த பொருளாதார நெருக்கடியில் நாட்டின் நிதி நிலைமை எப்படி உள்ளது.    ஏற்கனவே விவசாய கடன் தள்ளுபடியால் ஏற்பட்டுள்ள நெருக்கடி.   இன்னும் தொடரும் விவாசாயிகளின் தற்கொலைகள்.

  தற்போதைய தேர்தல் வாக்குறுதி சலுகைகள் எவ்வாறு நிறைவேற்றபடவுள்ளது?

நீண்டகாலமாக காத்திருக்கும் Insurance Bill  எப்பொழுது பாஸாகும்?   P-Notes Norms மாற்றம் இருக்குமா?  பொதுதுறை நிறுவனங்களின் பங்கு விற்கபடுமா?

வருமான வரி உச்ச வரம்பு உயர்த்த படுமா? 

இது போன்ற கேள்விகளுக்கு பட்ஜெட் பதில் சொல்லுமா?

நிறைய எதிர் பார்ப்புகள் இருக்கின்றன.  

அரசு இயந்திரம் சந்தைக்கானது மட்டும் அல்ல.    

டெக்னிகல் என்ன சொல்கிறது. 

சந்தை ஏற்கனவே 2500 இல் இருந்து 48%  திரும்பி பார்க்காமல் உயர்ந்துள்ளது அதுவும் இரண்டே மாதத்தில்.

Resistence Becomes Support,  Support Beomes Resistene என்பது தொடர்கிறது…

3520 வலுவான ரெஸிஸ்டென்ஸாக 12 தினங்கள் இருந்தது.   அப்போதைய சப்போர்ட் நிலையான 3300 ஐ உடைத்து கீழே செல்லும் எதிர்பார்ப்பை பொய்யாக்கி 3700க்கு வந்து கடந்த 10 நாட்களாக நிலை கொண்டுள்ளது.   நாளை இந்த ரெஸிஸ்டென்ஸை உடைத்து முன்னேறினால் 3700 சப்போட்டாக மாறும் ஒரு சுழ்நிலை.

3500-520 ஐ ஸ்டாப் லாஸாக வைத்து செயல்பட்ட அதிகமான வர்த்தகர்கள் ஒரு பெரிய அளவிலான கேப் அப்பால் தங்களது நிலைகளை தொடர்ந்தார்கள்.  

கடந்த 10 நாட்களில் பெரிதான வர்த்தக வாய்ப்பினை தராமால் நகர்ந்து வந்த சந்தை மீண்டும் ஒரு கேப் அப்-ஐ சந்திக்கும் போது?   

3850 கடந்து அடுத்து வரும் நாட்களில் நிலைப்பெறுகிறதா என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.  

மேலே  நிலைத்து நிற்காமல் 3850 இல் நழுவினால் அடுத்து பெரிய எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லாததால்,  3600 -3550 வரை வேகமாக திரும்பும் வாய்ப்புகள் உள்ளது.   தொடர் ஏற்றத்தில் ஒரு பிராபிட் புக்கிங் நிச்சயம் நடக்கும். 

இன்று 100 க்கு 100 சதவீதம் மக்கள் தொடர்ந்து ஏறும் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்..  பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. கடந்த வெள்ளி கிழமை 3800 கால் ஆப்ஸன் அதிகம் வாங்க பட்டுள்ளது அதே போல் 3600 மற்றும் 3400 புட் ஆப்சன்களும் அதிகம் ஆக்டிவாக இருந்தது.

கீழே உள்ள தினசரி சார்ட்டில்  கேப் சப்போர்ட்ஸ் மற்றும் கேப் ரெஸிஸ்டென்ஸ் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன். 

அதில் கீழே உள்ள இரு இடைவெளிகளை நாம் கணக்கில் எடுக்க வில்லை என்றாலும் 3100 வரை கரெக்சன் வர வேண்டும் ஆனால் அது எப்பொழுது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.  

3850 என்பது (2500-4650)   Febo Retracement லெவலின் 61.8 %  

மற்ற அனைத்து ஓசிலேட்டர்களும் சந்தை அதிகம் வாங்க பட்ட நிலையில் இருப்பதைதான் காட்டுகிறது.  

ஏற்கனவே Long நிலையில் உள்ளவர்களுக்கு மன மார்ந்த வாழ்த்துகள்.    

 புதிய அரசுக்கு பெரிய தலைவலியாக இருக்க போவது கச்சா எண்ணை விலையேற்றம், சந்தை தொடர் ஏற்றத்தில் இருப்பதால் யாரும் கச்சா எண்ணையை கவனிக்க வில்லை 60$ வரை உயந்துள்ளது.   இந்த இடத்தில் பிரேக் அவுட் ஆனால் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.

சரிவடைந்த தங்கமும் கடந்த 3 வாரமாக அமைதியாக முன்னேறுகிறது.

 Nifty

1999-2000 த்தில்  காளையின் ஆதிக்கத்தை தொடர்ந்து 2001 இல் கரடியின் ஆதிக்கதில் இருந்தது சந்தை,  2002 இல்  மீண்டும் ஒரு Bull Rally Start ஆன சமயம் முக்கியமான 88/140/160/200 மூவிங் ஆவரேஜ் கிராஸ் ஓவர் சமயத்தில் சந்தை எவ்வாறு போராடி பின்வாங்கியது என்பதை விளக்கும் வாரந்திர சார்ட்- படம் மற்றும் அதை போலவே தற்போதும் ஒரு சூழ்நிலையை விளக்கும் 2 வது படம்.   

அடுத்து வரும் நாட்களில் மிகவும் கவனிக்கதக்க வேண்டிய நிலையில் சந்தை உள்ளது 3850 ஐ கடந்து நிலைப்பெறுகிறதா அல்லது பின் வாங்க உள்ளதா என்பதை.  அல்லது முன்பை போலவே பின் வாங்கி 2003 இல் துவங்கிய Bull Rally ஐ போல வேகமாக முன்னேறுமா.??   கிராஸ் ஓவர் எவ்வாறு நிகழ உள்ளது?

1

 

2
Advertisements

10 responses to this post.

 1. மிகமிக துல்லியமான கணிப்பு. நம் சந்தைகள் உலக சந்தைகளைத்தான் பின்பற்றும். ஓரிரு நாட்கள் வேண்டுமானால் அல்லது இந்த வாரம் வரை காங்கிரஸ் வெற்றி பெற்றதை நம் சந்தையும் கொண்டாடலாம்.

 2. Posted by V.SURESH, SALEM 9842551176 on மே 18, 2009 at 8:39 முப

  Thank you very much for your answer for my question.

  Market may go upward for one or two days but there may be profit booking/correction by this week end. This is my prediction.

  Good morning to everybody and wish you all successful trading.

 3. Posted by chandhrakumar on மே 18, 2009 at 8:46 முப

  GOOD MORNING SAI SIR

 4. Posted by David Raja on மே 18, 2009 at 9:25 முப

  Thank you sir !

 5. Good analysis.
  Thanks.

 6. Trading halted as markets hit upper circuit
  Market to re-open at 10.55 am for trading

 7. he market will re-open at 11.55am and trading will be halted for two hours, reports NDTV Profit. BSE and NSE to issue a joint press release on the same immediately.

 8. Posted by senthil on மே 18, 2009 at 12:53 பிப

  Today trading has done by operators for kill the small and retail investors, i thing no one have that much margin amount in their account for F/O trading(600+ points), huge loss for small investors who’s have shorts in nifty and heavy wight stocks and not good day for long traders also because they could not able to book their profit in few seconds trading, i am expecting tomorrow market may open Lower circuit and then continue ,let us wait and see

  very very sad day for futures traders(shorts),

 9. welcome,well india

 10. Posted by சாய்கணேஷ் on மே 18, 2009 at 8:24 பிப

  புஸ்பா மேரி,
  இது கடந்த கால பெர்பார்மான்ஸ்…
  என்னால் இது தொகுக்க படவில்லை நண்பர் அருண் என்பவரால் தொகுக்கபட்டது.. இடையில் அவர் அதை தொடர வில்லை.

  http://www.editgrid.com/user/top10shares/Sai_Calls

  கடந்த கால பெர்பார்மன்ஸ் சொல்வதை விட அன்றாடம் சொல்வது நல்லது நாளையில் இருந்து நீங்கள் கேட்பதை போல தினசரி வெளியிட தயார்.

  ஒரு வகையில் ஆரோக்கியமான சவால் தான்,

  உங்களுக்கு சம்மதம் என்றால், உங்களது மொபைல் நம்பரை தெரிவிக்கவும் நான் எனது கால்ஸ் ஐ நேரடியாகவே அனுப்புகிறேன், டிரேடு செய்ய வேண்டாம் ஜஸ்ட்.. பெர்பார்மன்ஸ் ஐ உறுதி செய்யுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: