இன்றைய சந்தை 15.05.2006


     சந்தையில் ஆடு புலி ஆட்டம் தொடருகிறது…. பெரிய அளவில் கேப் டவுனாக துவங்கி அமைதியாக மேலே சென்றது, அவ்வாறு  மேலே சென்றபோது பெரிய அண்ணன்கள் யாரும் (ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் கேபிட்டல்,  ரிலையன்ஸ் இன்ப்ரா etc)  கூட பயணம் செய்யவில்லை.

     நேற்றைய தினம் SBI ,  ICICI, RelCap, Axis ஆகியவற்றில் புதிய Short நிலைகளை அதிகமானவர்கள் எடுத்துள்ளனர்.

     நானும்கூட ஐசிஐசிஐ வங்கி 480 என்ற இலக்கை இருதினங்களில் அடையும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளேன்.  இம்மாத இறுதிக்குள் 400 வரை செல்லலாம்.   (இது பரிந்துரை அல்ல)

     வாரத்தின் இறுதி நாள் அல்லது  திங்கள் அன்று புதிய    பாராளுமன்ற            உறுப்பினர்கள் யார் என்று தெரிந்து விடும்.  ஆனால் பிரதமர் யார் என்று தெரிவதற்கு ஒரு வாரம் ஆகும் என்றே நினைக்கிறேன்.

     கடந்த இரு தினங்களாக அனைத்து செய்தி சேனல்களும் Exit Poll சர்வே என்ற பெயரில் இவர்களுக்கு இத்தனை சீட் அவர்களுக்கு இத்தனை சீட் என்ற புள்ளி விவரங்களை சொல்லி வருகிறார்கள்.  2004 Exit Poll சர்வே ரிசல்ட் அனைத்து முன்னணி செய்தி சேனல்களும் சொன்னது NDA 240-275 இடங்களை பெறுவார்கள் என்று ஆனால் கிடைத்தது என்னவோ 187 தான், அதனால் இந்த முறை முன்னெச்சரிக்கையாக செயல் படுகிறார்கள் இச்செய்தி நிறுவனங்கள்.   10-15 சீட்கள் மட்டுமே வித்தியாசம் இரு கூட்டணிகளுக்கு இடையே என்று வருகிறது அனைவரின் சர்வேயும். 

     இதில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம் – வரும் நாடாளுமன்றம் Hung Parliment தான், UPA has a slight lead over the NDA or NDA  has a slight lead over the UPA.

     கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் டெல்லி அரசியலில் முக்கிய பங்கு வகிப்பதை போல் இந்த முறையும் அனைவராலும் கவனிக்க படும் மாநிலம் தமிழ் நாடு.

     அமைதியா இருந்த சரத்பவார் திடீரென்று பிரதமர் பதவிக்கு முன்னணியில் வருகிறார்.     அதிமுகவின் ஆதரவு இவருக்கு உண்டு என்று எதிர் பார்க்கபடுகிறது. 

     தேமுதிக – வின் Vote Sharing என்ன என்று தெரியாமலேயே அனைவரும் எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியிட்டு உள்ளார்கள் என்று நினைக்கிறேன்.  முதல் முறையாக போட்டியிடும் பிரஜா ராஜ்ஜியம்               சிரஞ்சீவிக்கு அளிக்கும் முக்கியத்துவம் கூட தேமுதிக-விற்கு அளிக்கவில்லை என்பது ஆச்சரியம் தான், ஆனால் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.   கூர்ந்து கவனித்தோம் என்றால் தமிழகத்தில் சிறந்த வேட்பாளர் தேர்வு அவர்களுடையது.  என்ன? கூட்டணி இல்லை என்ற பிடிவாதம் Right Peoples are in Wrong Place என்றாகிவிட்டது.   

     சரி…. எக்ஸிட் போல் சொல்வதை போல அதிமுக அதிக இடங்களை பிடித்தால் – ?  

      அக்கட்சியின்  தலைவி, அவ்வளவு எளிதாக முடிவினை அறிவிக்க மாட்டார்.

     மாநில அரசியல் நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு சில உறுதி மொழிகளை பெற வேண்டும்.  புதிதாக அவர் கையில் எடுத்திருக்கும் இலங்கை பிரச்சினைக்கு ஏதாவது செய்ய வேண்டும்,  இதற்கு எல்லாம் ஏற்றவாறு தான் முடிவு எடுக்க முடியும். 

     முதல் சாய்ஸ் – பாஜாக அவர்களுக்கு போதிய ஆதரவு கிடைத்தால்.. 

      (பாஜாக ஆட்சிக்கு வந்தால் ஆடிட்டர் குரு மூர்த்தி போன்றவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள், அவர் கடந்த 2004 இல் இருந்து P-note மற்றும் சந்தை சார்ந்த பல கேள்விகளையும் ஆட்சேபணைகளையும் எழுப்பி  வந்துள்ளார்.   ஆகையால் சந்தையில் சின்ன எதிர்மறையான   தாக்கமும்   இருக்கலாம்.)

     இரண்டாவது சாய்ஸ் – சரத்பவார் அல்லது வேறு ஒரு நபர் – அப்படி ஒரு அரசு அமைந்தால் அது,  சந்திரசகர், ஐகே குஜ்ரால் தேவ கவுடா அரசுகளை போலத்தான் அமையும்.  (ஜோதிடர்களின் கருத்து வெற்றியடையும் – அவர்கள் 2010 இல் மீண்டும் தேர்தல் என்று சொல்கிறார்கள்).

     மூன்றாவது சாய்ஸ் – காங்கிரஸ்க்கு ஆதரவு…  அதிமுக காங்கிரஸ்க்கு ஆதரவா?  அதிர்ச்சி வேண்டாம், அரசியலில் அதுவும் டெல்லி அரசியலில் எதுவும் நடக்கலாம்.   கம்யூனிஸ்ட்கள் மதவாத சக்திகளை எதிர்க்க – காங்கிரஸ் ஆதரவு  என்ற அறுந்து போன டேப்பை மீண்டும் ஒட்டி ஒலிக்க செய்யலாம். ஆனால் அதிமுக காங்கிரஸை ஆதரித்தால் இலங்கை பிரச்சினையில் சில உறுதியான வாக்குறுதிகளை வாங்க வேண்டி வரும்,  காங்கிரஸ் தலைகீழான நிலையினை எடுக்க வேண்டி வரும்.  அவ்வாறு செய்வார்களா? என்பது சந்தேகம் தான். ஒரு வேளை திமுக-வை வெளியேற்றினால்- தா.மா.கா உதயமாகலாம்.

இதை அனைத்தையும் சந்தை கூர்ந்து கவனித்து வருகிறது.  

சரி அரசியல் போதும்.   

டெக்னிகல் என்ன சொல்கிறது. 

     சந்தை பெரிய அளவில் இல்லையென்றாலும் சில நூறு புள்ளிகள் சரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  

     கடந்த 9 நாட்களாக சந்தை –  3710 ஐ உடைத்து முன்னேற வில்லை.      முக்கிய சப்போர்ட் நிலைகள் 3590 / 3527 இல் உள்ளது. 

இன்றைய முக்கிய நிலைகள். 

3625 – 3639 – 3665-3700

3595 – 3580 – 3560 – 3520 

     இன்றைய தினமுடிவில் பொசிசனல் டிரேடர்ஸ்  / ப்யூச்சர் டிரேடர்ஸ் லாங் அல்லது சார்ட் நிலைகளை கையில் வைத்திருந்தால் எதிர் திசை நிலை எடுத்து-  ஹெட்ஜிங் செய்வது பாதுகாப்பானது.

     Container Corporation of india நிறுவனத்தின் ரிசல்ட் மோசம் இல்லை. கடந்த ஒரு வருடமாக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தும் பெரிய அளவில் பாதிப்படையவில்லை. 1700 கோடிகளை ரொக்க கையிருப்பாக சொல்லியிருப்பது மிகபெரிய பாசிட்டிவ்வான விசயம். 

     800 என்ற தற்போதைய விலை சிறிது அதிகம்…. விலை குறையும் போது நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கலாம்.

=======================================================================================

     நேற்றைய முன் தினம் – நமது பதிவின் பாஸ்வேர்டு திருடபட்டு குறிப்பிட்ட 6-7 பதிவுகளை / சில பின்னூட்டங்களை என்று சிலவற்றை  DELETE செய்துள்ளனர்.    இது நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆன்லைனில் இருந்ததால், தெரிய வந்தது.  உடனடியாக பாஸ்வேர்டை மாற்றி தப்பித்து கொண்டேன்.  அவர்கள் இரவில் செய்திருந்தால் முழுமையாக பதிவினை இழந்திருக்கலாம். மிக எளிமையான பாஸ்வேர்டை வைத்திருந்தது எனது தவறுதான். என்னை குறி வைத்து தனிப்பட்ட தாக்குதலை தொடர்வது யாரென்று தெரியவில்லை.   அதில என்ன லாபம் என்றும் தெரியவில்லை.

     பதிவு எழுதுவதை நிறுத்தலாம் என்று கூட நினைத்தேன்.  ஆனால் 2-3 நபர்களுக்காக பதிவெழுதுவதை ஏன் நிறுத்த வேண்டும்?  முன் எப்பொழுதும் இல்லாத வகையில் புது வேகத்துடன் பல விசயங்களை எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன்.  

Advertisements

15 responses to this post.

 1. Posted by GR CHANDHRAKUMAR on மே 15, 2009 at 8:51 முப

  GOOD MORNING SAI SIR…….

 2. Posted by GR CHANDHRAKUMAR on மே 15, 2009 at 9:00 முப

  எப்பொழுதும் இல்லாத வகையில் புது வேகத்துடன் பல விசயங்களை எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன்.
  வாழ்த்துக்கள்…………….

 3. Posted by mugham.m on மே 15, 2009 at 9:22 முப

  dear sai
  “முன் எப்பொழுதும் இல்லாத வகையில் புது வேகத்துடன் பல விசயங்களை எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன். ”
  well done go ahead

  with regards
  mugham.m

 4. Posted by V.SURESH, SALEM 9842551176 on மே 15, 2009 at 9:25 முப

  Good morning sai sir.

  We are expecting your update on politics/market trend everyday and overall analysis during weekend.

  So continue your service and we are all with you.

  Good morning to everybody and wish you all a successful trading.

 5. / *********
  பதிவு எழுதுவதை நிறுத்தலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் 2-3 நபர்களுக்காக பதிவெழுதுவதை ஏன் நிறுத்த வேண்டும். முன் எப்பொழுதும் இல்லாத வகையில் புது வேகத்துடன் பல விசயங்களை எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன்.
  **********/

  நல்ல முடிவு சார் இது. நீங்கள் கஷ்டப்பட்டு எழுதியவைகளை தேலேடே
  செய்ய எப்படி மனம் வருகிறதோ இந்த கயவர்களுக்கு.

  நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்.
  நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் சார்.

 6. நம்முடைய சரவணக்குமார் அவர்கள் பங்கு சந்தை பற்றி எழுதுவதை நிறுத்தியதற்கு இந்த மாதிரி எதாவது காரணம் இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

 7. Posted by S. Karthi, Karur on மே 15, 2009 at 9:33 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  தங்களுடைய வலைத்தளத்தில் கட்டுரைகளை தினமும் படிப்பதில் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். மேலும் சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளையும் தங்களது எழுத்துக்கள் மூலமே பெற்று எங்களை அப்டேட் செய்து கொள்கிறோம்.

  தங்களுடைய அரசியல் விசயங்களை தாங்கி வரும் எழுத்துக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தாங்கள் ஒரு பார்வையாளராக இருந்து பார்க்கும் வரையிலும் தங்களுடைய சந்தை சார்ந்த தகவல்களையும் கட்டுரைகளையும் நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். அரசியலில் தாங்கள் இடுபட்ட பின்னர் அதன் பாதிப்பு இதில் நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் கவலைப் பட ஒன்றுமில்லை. ( எனினும் தற்போது நமது நாட்டு அரசியல் சென்று கொண்டிருக்கும் பாதை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த நிலை இவ்வாறு தொடர்ந்தால் அரசியல் வாதிகளின் லஞ்சங்களினால் 2020- இல் இந்தியா சோமாலியா போன்று மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு விடும் நிச்சயமாக. தற்போது மூன்று வேளை உணவு உண்பவர்கள் ஒரு வேளை உணவு உண்பதே கடினம் என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு சென்று விட்டு விடுவர். பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாக ஆகுவான். ஏழை மேலும் கீழ் நிலைக்கே சென்று கொண்டிருப்பான். அப்பொழுது நாடெங்கிலும் நிறைய கஞ்சி தொட்டிகளை பார்க்கலாம்.)

  இந்த மாதிரியான சூழ்நிலையில் தாங்கள் அரசியலில் இறங்குகிறீர்களா? யோசிக்கவும்.

  தங்களுடைய பதிவின் பாஸ்வேர்டு திருடப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரிய கண்டிக்கத்தக்க செயல் ஆகும். இது போன்ற நபர்கள் எப்பொழுது திருந்துவார்களோ என்று தெரியவில்லை.

  என்றும் நட்புடன்,
  கார்த்தி, கரூர்.

 8. Posted by முத்துக்குமார் கோ on மே 15, 2009 at 12:07 பிப

  “முன் எப்பொழுதும் இல்லாத வகையில் புது வேகத்துடன் பல விசயங்களை எழுதுவது என்று முடிவு செய்துள்ளேன்.”

  நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்கிறது!

 9. hello sir
  YOUR ICICI BANK TIPS GREAT I LOST 6000 KEEP IT UP

 10. Posted by சாய்கணேஷ் on மே 15, 2009 at 5:20 பிப

  guna

  ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று உளற கூடாது. ஐசிஐசிஐ – பங்கிற்கு நான் entry or S/l எதுவும் எழுத வில்லை.

  இப்படி வில்லங்க விமர்சனங்களை தவிர்க்கவே, மிக தெளிவாக – “இது பரிந்துரை அல்ல” என்றும் எழுதியிருந்தேன்.

  அதன் பிறகு YOUR ICICI BANK TIPS GREAT I LOST 6000 KEEP IT UP என்றால் என்ன சொல்வது. ??

  எதன் அடிப்படையில் வணிகம் செய்தீர்கள்- என்ன விலையில் விற்கலாம் என்ன ஸ்டாப் லாஸ் என்று காலையில் கேட்டீர்களா?

 11. Posted by Suresh Kumar V on மே 15, 2009 at 7:26 பிப

  \\ நானும்கூட ஐசிஐசிஐ வங்கி 480 என்ற இலக்கை இருதினங்களில் அடையும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளேன். இம்மாத இறுதிக்குள் 400 வரை செல்லலாம். (இது பரிந்துரை அல்ல) \\

  நண்பர் குணா அவர்களுக்கு,

  பதிவை சரியாக படிக்க வேண்டியது உங்களுடைய பொறுப்பு. அதைவிடுத்து அடுத்தவர்களை குறை கூறுவது அழகல்ல… இம்மாதிரி உபயோகமான பக்கங்களை தமிழில் பார்ப்பது என்பது அரிதாக இருக்கும் பொழுது, எழுதுபவர்களை குறை கூறி தயவு செய்து எழுதுபவர்களின் சந்தோசத்தை கெடுக்க வேண்டாம்.

  தாங்களின் தவறு எங்கு என்று பார்த்து அதை சரிசெய்து கொள்ள முயற்சிக்கவும்.

 12. kurai solvathu ena mudivu seythu vittu, parinthurai alla endru solli irukkave neengal athai trade seytheergal enbathu nambathagunthathu pol illai kaaranam kidaithaal pothum endru sollum kurai pol ullathu guna ungaludaiya varigal.

 13. sir,

  i dont criticize you. just i am giving my view. plz give me suggestion as per market condtion. your aim only market come down (bear analyser). no bear!!! no bull!!! be winner always. If you have guts, Can you show daily performance in your blog? . i am sorry to say this. if you show your performance, nobody watch your website. Not only you most of analyser doing like this. Plz daily show your performance blog………. i hope you show this content in your blog

 14. Posted by சாய்கணேஷ் on மே 17, 2009 at 8:51 பிப

  புஸ்பா மேரி…

  bull or bear – இங்கு எழுதுவது என்னோட தனிப்பட்ட கருத்துகள்….

  plz give me suggestion as per market condtion. – எந்த தனிப்பட்ட நபருக்கும் நான் இங்கு சொல்ல வில்லை.

  எனது தனிப்பட்ட கருத்துகளை சொல்லிய பிறகு தினசரி நிப்டி ப்யூச்சர் லெவல்களை இரண்டு சைடிலும் தொடர்ந்து தந்து வருகிறேன்.

  அதில் எந்த கரடிக்கும் / காளைக்கும் முக்கியத்துவம் இல்லை.

  இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல 3625 க்கு மேல் லாங் என்று 3625 – 3639 – 3665-3700 என்று தெளிவாக சொன்ன பிறகு நான் கழுதையாக இருந்தால் என்ன? கரடியாக இருந்தால் என்ன?

  எனது பதிவை யாரையும் படிக்க சொல்லி கட்டாயப்படுத்த வில்லை. உங்களது எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக இருக்கும் ஒரு செய்தியை தொடர்ந்து படிக்க வேண்டியது அவசியாமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

  எனது தினசரி லெவல்களை தயவு செய்து முடிந்தால் நீங்கள் தொகுத்து லாபம் நஸ்டம் பாருங்கள்.

  விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

 15. pushamary,

  it is very rare to see these kind of tamil blogs in internet. But the guy who write this,will loose patience because of ur comments and may stop writing. Please do not let him to do that. He is doing a good job to others and let him do that. The nifty levels which he is giving is good. His intension is to help others. Please allow him to do his best. ONE GUY GUNA HAS SENT A COMMAND STATING THAT HE HAD A LOSS OF 6000 RUPEES. I THING HE DOESNT KNOW TAMIL. IF HE WAS ABLE TO UNDERSTAND THE LINES [நானும்கூட ஐசிஐசிஐ வங்கி 480 என்ற இலக்கை இருதினங்களில் அடையும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளேன். இம்மாத இறுதிக்குள் 400 வரை செல்லலாம்.(இது பரிந்துரை அல்ல)] HE COULD HAVE NOT DONE THAT TRADE.HE IS BLAMING THE ANALYST. THIS IS NOT ACCEPTABLE.

  REGARDS,
  PRABHU

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: