இன்றைய சந்தை 14.05.2009


ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது.  சூறாவளி சுற்று பயண பிரச்சாரம் செய்த தலைவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும் நம்மால்  ஒரு மணிநேரம் வெயிலில் ஊர்சுற்ற முடியவில்லை.   அரசியலும் அவ்வளவு எளிதல்ல.    அதற்கு உண்டான கஸ்டமும் இருக்கு, ஆனால் இன்று அந்த அரசியல் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக  இருக்கிறது.   எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு பணம் விளையாடியது.  யாருக்கும் வெட்கம் இல்லை.   இந்த நிலை நீடித்தால் எதிர் கால அரசியல்?    எதுவும் நிரந்தரம் இல்லை “மாறும் என்ற சொல்லை தவிர, அனைத்தும் மாறும்” என்ற நம்பிக்கையுடன் நாமும் நமது வேலையை பார்ப்போம்.

அடுத்த 3 நாட்களுக்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.. அரசியல் ஆர்வலர்களுக்கு தொலைகாட்சிகள் நல்ல தீனி போடுகின்றன.  

படிப்பறிவில் முன்னேறிய மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் ஒரு நடுநிலையான செய்தி தொலைகாட்சி இல்லையே என்பது பெரிய குறை.  கட்சி சார்பு தொலைகாட்சிகளும் ஓட்டு பதிவு நேரத்தில் கூட பாலியல் பிரச்சினைகளுக்கும் / மகப்பேறு பிரச்சினைகளுக்கும் டாக்டரின் ஆலோசனைகள் வழங்குவது என்ன கொடுமை?  

அதே போல் தேசிய அளவில் பெயர் பெற்ற ஆங்கில தொலைகாட்சிகள் தமிழகத்தை புறக்கணிக்கின்ற போக்கு இன்னும் மாற வில்லை.   அனைவரும் பெயரளவிற்கு ஓரு நிருபரை வைத்துள்ளனர்,  ஏன் இந்தி தெரியாது என்பதாலா?  அல்லது ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் தலைவர்கள் இல்லை என்று நினைக்கிறார்களா?  

சரி –  தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளிவந்து உள்ளது..  நிலவரம் பலரின் வயிற்றில் கலவரத்தை உருவாக்கும் போல தெரிகிறது.

இழுபறியாகத்தான் இருக்கும் என்பது தெரிகிறது.

அமெரிக்க பிரதிநிதி திடீரென்று திரு. அத்வானி அவர்களை சந்தித்ததை அனைவரும் சற்று உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.  குறிப்பாக சந்தை.

சரி அரசியல் போதும் எப்படி இருந்தாலும் சனிகிழமை ரிசல்ட் தெரிந்து விடும்.

=============================================================================

நேற்றைய சந்தையின் போக்கு மேடு பள்ளங்களுடன் இருந்தது இந்த மாதிரியான நிலையில் வர்த்தகம் எளிதல்ல குறிப்பாக தின வர்த்தகம்.     நாளின் இறுதியில் விழுந்த வேகத்தை NSE – Server வேகக்குறைவால் கட்டு படுத்தியது என்றே சொல்லலாம் இல்லையென்றால் Panic Selling வேகமாக இருந்திருக்கும்.

இந்நிலை இன்னும் ஓரிரு நாட்களுக்கு தொடரும்….  

டெக்னிகல்

முக்கிய சப்போர்ட் 3574 – 3531  – 3517 – 3494.  

மேலே தடை நிலை என்றால் அது 3710 தான் அதற்கு மேலே 3756 – 3820.   

கடந்த ஒரு வாரமாக 3710 நிலையை கடந்து நிலைப்பெற முடியவில்லை.

உலக சந்தைகளும் கரெக்சனை எதிர் நோக்கி மந்தமான நிலையில் தான் உள்ளது.

DLF Ltd  – நிறுவன புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க 10% பங்கினை 3860 கோடிக்கு விற்று உள்ளனர்.  சந்தை இதை ஆரோக்கியமான விசயமாக பார்க்கிறது.

இன்றைய முக்கிய நிலைகள்.

3655 – 3674 – 3705

3625-3600-3573-3524-3494-3473

  

டிவிட்டரில் என்னை பின் தொடர எனது ஐடி –  saiganesh

Advertisements

5 responses to this post.

 1. Gud morning Sai sir…

 2. Posted by suppanna on மே 14, 2009 at 9:17 முப

  சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததுன்னு , எப்பண்ணா வந்ததுன்னேன் எனக்கும் தெரியலைன்னார் அப்பன்னா நாமும் இப்போ அடிமைகள் தானே அண்ணா

 3. Posted by GR CHANDHRAKUMAR on மே 14, 2009 at 9:28 முப

  GOOD MORNING SAI SIR……..

 4. Posted by S. Karthi, Karur on மே 14, 2009 at 9:42 முப

  Dear Sai anna,

  Thank you very much for your information regarding the market.

  Good Morning. Have a nice day.

 5. அருமையான பதிவு.என்னோட கனிப்புபடி பாஜக வாஇப்பு இருக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: