இன்றைய சந்தை – 05.05.2009


முக்கிய தடை நிலைகள் அனைத்தையும் உடைத்து மேலே சென்றிருந்தாலும், 4% அளவிற்கு கேப் அப்…  என்பது நல்ல விசயம் இல்லை.  இது மீண்டும் கீழே வருவதற்கான அறிகுறிதான். 

அதற்கு முன்பாக 3800 வரை செல்லவும் வாய்ப்பு உள்ளதை மறுப்பதற்கில்லை.   அடுத்து வரும் நாட்களின் டிரேடிங் ரேன்ஞ் 3800-2800. 

இறுதி கட்ட தேர்தலுக்கு இன்னும் 6 வர்த்தக தினங்களும், தேர்தல் முடிவிற்கு 8 வர்த்தக தினங்களும் தான் உள்ளது.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு பலர் ஆசை படுகின்றனர்.

 அடுத்த வாரம் இறுதியில் விடை கிடைத்து விடும்.  

இந்த நிலையில் 3550 – 3600 நிலையினை 2 வாரம் தக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

இன்றைய சந்தை 3630 ஐ உடைக்காத வரை கரடிகளுக்கு வாய்ப்பில்லை அதிலும் குறிப்பாக நேற்றைய கீழ் நிலையை உடைக்காத வரை.   அதற்கு கீழ் ஒரு புதைக்குழி என்றே சொல்லலாம்.

இன்றைய முக்கிய நிலை.

நிப்டி ப்யூச்சர்

3662-3674-3692-3721   

3640-3628-3610-3580

=============================================================================

இன்று ஒரு தகவல்.

கடந்த புதன் அன்று கீழ் கண்ட நிலைகளை  கொடுத்து   

இன்றைய முக்கிய நிலைகள்

 3375 – 3393 – 3423 -3470 

3340 – 3323 – 3293 – 3244

நேற்றைய சரிவுகளை மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளது// என்று சொல்லியிருந்தேன்.

அதற்கு காரணம் 28/04 அன்று காலையில் ஏற்பட்ட சிறிய கேப் டவுன், 1% குறைவான கேப் அப் அல்லது கேப் டவுன் 99% அன்றே நிரப்பபடும் ஒரு சில நாட்களில் மட்டும் அதை விட்டு வைத்து செல்கிறது / செல்கிறார்கள். இது யார் யாருக்கும் தரும் சிக்னல் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் நிரப்பபடுகிறது.    அன்று கூடவே 10.10 க்கு மீண்டும் ஒரு ரன்னிங் கேப் ஏற்பட்டது.   இதை அடிப்படையாக கொண்டே சரிவுகளை மீட்டெடுக்கும் என்று சொல்லியிருந்தேன். (இதை உறுதி செய்ய வேறு சில தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது நல்லது.)

nifty2904

இது போல் உங்கள் கண்களில் எதுவும் சிக்கினால் சொல்லுங்கள்.

============================================================================

நேற்றைய தினம் நாம் எழுதிய உடன் நிப்டி சார்ட்டில் பிரேக் அவுட் பார் அதிகம் ஏற்பட்டது. யார் யார் அதை கவனத்தில் எடுத்தீர்கள்? எத்தனை பார் ஏற்பட்டது?  பின்னூட்டம் எழுதலாம்.

Advertisements

9 responses to this post.

 1. Posted by GR CHANDHRAKUMAR on மே 5, 2009 at 9:28 முப

  GOOD MORNING SAI SIR

 2. Posted by S. Karthi, Karur on மே 5, 2009 at 9:31 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  நேற்றைய சந்தையின் உயர்வு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எந்த ஒரு நிலையிலும் சிறிதும் சந்தையினை கரடியின் பிடியில் விட்டுக் கொடுக்காமல் மிகவும் சாமர்த்தியமாக மேலே கொண்டு சென்றது.

  மிகவும் நல்ல விசயம்தான் சந்தை மேலே சென்றது, ஆனால் இந்த உயர்வினால் எத்தனை சிறு முதலீட்டாளர்கள், தின வணிகர்கள் பயனடைந்து இருப்பார்கள்?

  கடந்த வாரத்தில் செவ்வாயன்று சந்தை ஏற்படுத்திய சரிவை மீட்டெடுக்கும் என்று தாங்கள் கூறியது மூன்று அல்லது நான்கு நாட்களில் ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அடுத்த நாளே சந்தை மிகவும் அனாயாசமாக இழந்த புள்ளிகளை திரும்ப பெற்று மேலே சென்றது. தங்களின் கணிப்பும் அதனை எங்கள் அனைவருக்கும் பயன் தரும் வகையில் சுட்டிக் காட்டிய விதமும் மிகவும் அருமை. மனமார்ந்த நன்றிகள்.

  தங்களது கட்டுரைகளில் கடந்த சில நாட்களாகவே தாங்கள் புதிதாக குறிப்பிட்டுவந்த “ஜீரோ லாஸ் பிரேக் அவுட்” பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. எனினும் மெட்டா ஸ்டாக் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

  சந்தையின் நேரம் மட்டுமின்றி கிடைக்கும் ஒய்வு நேரங்களில் கூட சந்தைகள் மற்றும் அது பற்றிய டெக்னிகல் விசயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தாங்கள் சந்தையின் மேல் வைத்திருக்கும் பற்றினை வெளிப்படுத்துகிறது. அது போன்ற சமயங்களில் தாங்கள் கற்று அறிந்து கொள்ளும் விஷயத்தை எங்களுக்கும் தெரியப்படுத்துவது தங்களின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகிறது. தங்களின் நட்பு எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்கிறோம்.

  நிப்டி நிலைகள் தாங்கள் வழங்கி வருவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும் அதனை வைத்து தங்களுக்கு தொல்லைகள் வருவதனால் தாங்கள் அதனை நிறுத்திக் கொள்ளலாமே அண்ணா? எனது வேண்டுகோளை சற்றே பரிசீலிக்கவும்.

  இனிய காலை வணக்கம்.

  அன்புடன்,
  கார்த்தி, கரூர்.

 3. Posted by thomasruban on மே 5, 2009 at 9:33 முப

  Good morning sir…
  thankyourtips

 4. Posted by A.P.Arumugam on மே 5, 2009 at 11:26 முப

  Sir,

  Daily morning I read your blogs,Thanking you!

  Past Few days you solidly mentioned that market will come down shorlty,becouse there are lot of gap is there….

  But Now you Change your View and give market will go to 3800 Level….

  Have Not you think this is the wrong guid?

  A.P.Arumugam
  Bangalore

 5. Posted by ராஜன் , சென்னை on மே 5, 2009 at 11:30 முப

  இன்று ஒரு செய்தி :
  தின வர்த்தகம் நட்ந்து நேற்றைய எற்றம் வந்து இருதால் அது மிக வலிமையான எற்றம் தான். ஆனால் நேற்றைய எற்றம் gap up எற்றம் .சந்தை அதே வேகத்துடன் இறங்கும். ஆசியா சந்தை / அமெரிக்க சந்தை இறங்கும் போது இது நடக்கும்

 6. Posted by சாய்கணேஷ் on மே 5, 2009 at 12:45 பிப

  திரு ஆறுமுகம்..

  தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

  2800 வரை சொல்லும் நான் 150 புள்ளிகள் வரை மேலே செல்லவும் வாய்ப்பு உள்ளது என்று சொல்வதில் தவறில்லை. காரணம் அத்தனை வலுவான தடைகளை உடைத்து முன்னேறி உள்ளது. நேற்றைய ஏற்றம் என்பது காகித அளவில் தான் 130 புள்ளிகள் no trade zone டிரேடு ஆனது என்னவோ 3610 – 3660 அதில் யாரும் அவ்வளவு எளிதாக தின வர்த்தகம் செய்திருக்க முடியாது.

  இன்றைய கட்டுரையில் எனது நிலைப்பாடு சரிவு என்பதை மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

  //3550 – 3600 நிலையினை 2 வாரம் தக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை//

  // 4% அளவிற்கு கேப் அப்… என்பது நல்ல விசயம் இல்லை. இது மீண்டும் கீழே வருவதற்கான அறிகுறிதான்//

  //3630 ஐ உடைக்காத வரை கரடிகளுக்கு வாய்ப்பில்லை அதிலும் குறிப்பாக நேற்றைய கீழ் நிலையை உடைக்காத வரை. அதற்கு கீழ் ஒரு புதை குழி என்றே சொல்லலாம்.//

  இந்த அளவு சொன்ன பிறகு ஒரு வேளை மேலே எந்த அளவு சாத்தியம் என்பதையும் சொல்வது அவசியம் என்று கருதியதாலே 3800 என்று சொல்லி உள்ளேன்.

  நீங்கள் கேட்ட மற்ற தகவல்களை இங்கு எழுதுவதில்லை என்பதை ஏற்கனவே பதிவில் சொல்லி விட்டேன்.

  தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

  என்றும் நட்புடன்.

  சாய்கணேஷ்.

 7. Posted by V.SURESH, SALEM 9842551176 on மே 5, 2009 at 8:04 பிப

  Good evening sai sir.

  i agree with your view that market will come down sharply due to correction/profit booking/political uncertainity. i think sensex/nifty stocks are in overbought zone. Let us see.

 8. Posted by sankarankoil arun 9994190773 on மே 5, 2009 at 10:38 பிப

  மிகவும் நல்ல விசயம்தான் சந்தை மேலே சென்றது, ஆனால் இந்த உயர்வினால் எத்தனை சிறு முதலீட்டாளர்கள், தின வணிகர்கள் பயனடைந்து இருப்பார்கள்?

  mutual fund investors may got some gain?
  but?////////

  even mutual fund managers also didnot expect a very big gap up opening?

 9. Posted by sengodan on மே 5, 2009 at 10:42 பிப

  Thank you sir..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: