இன்றைய சந்தை 04.05.2009


நீண்டதொரு விடுமுறைக்கு பிறகு துவங்க உள்ள சந்தை…  மே மாதம் என்றாலே மேடு பள்ளங்களுக்கு குறைவிருக்காது என்பது பலரின் நம்பிக்கை. 

கடந்த 10 நாடகளில் 2 முறை 3500 ஐ கடந்து செல்ல முயற்சி செய்து பின் வாங்கியது… தற்போது மூன்றாவது முறையாக உடைக்குமா?   உடைத்து நிலைப்பெறுமா?

இன்றைய முக்கிய நிலைகள்

நிப்டி ப்யூச்சர்

3485 – 3502 – 3527 – 3567  

3460- 3443 – 3420 – 3370 

============================================================================

ஜீரோ லாஸ் பிரேக் அவுட் – ஒரு அறிமுகம்

இந்த 4 நாள் விடுமுறையில் – ஜீரோ லாஸ் பிரேக் அவுட்டினை மேலும் Fine Tune செய்து  முழு வடிவம் கொடுத்தேன்.       அதை நிப்டியின் 50 பங்குகளிலும் 1 வருட டேட்டாவை கொண்டு முழுமையாக பரிசோதித்து பார்க்கவும் இந்த விடுமுறை பயன் பட்டது.   அந்த வகையில் மகிழ்ச்சி. 

இந்த முறையில் சந்தை அடுத்த வாரம்,  அடுத்த மாதம் என்னவாகும் என்று நம்மால் கணிக்க இயலாது ஆனால் உலக சந்தை நிலவரம் , உள்ளூர் நிலவரம், என்று  எதை பற்றியும் கவலைபடாமல்,  மற்ற விவரங்களை மனதில் வாங்காமல் தெளிவான மன நிலையில் இந்த indicator ஐ  பின் தொடர்ந்தால் நஸ்டம் இல்லாமல் லாபம்  பார்க்கலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.   (இந்த ரூல் அனைத்து டெக்னிகல் முறைக்கும் பொறுந்தும் ஆனால் அதை கடை பிடிப்பதில் தான் எவ்வளவு சிரமம்.! )

niftyintra2

தின வர்த்தகத்திற்கு

Green Line -க்கு மேல் முழுமையாக கடந்த செல்லும்  போது வாங்கலாம் அல்லது கீழ் செல்லும் போது விற்கலாம்.    இங்கு நமது எதிர் பார்ப்பிற்கு வேலை இல்லை,  சந்தையின் போக்கில் நாம் செல்ல வேண்டும்.  எத்தனைமுறை திசை மாறினாலும், நாமும் நமது வணிகத்தை மாற்ற வேண்டும். 

மேலே உள்ள சார்ட்டில் – கடந்த 7 நாளில் 8 வணிக வாய்ப்புகளை தந்துள்ளது.  அதில் 2வது, 3வது மற்றும் 6 வது வணிகத்தில் நமக்கு லாபம் இல்லை, அதிகபட்சம் 40-50புள்ளிகள் நஸ்டம்.  ஆனால் 1, 4,5,7 மற்றும் 8 வது வணிகத்தில் நமக்கு கிடைத்திருக்கும் குறைந்த பட்ச லாபம் 280-300 புள்ளிகள். 

பொசிசனல் டிரேடிங்.

niftypositional1

இங்கு பச்சை வண்ணத்திற்கு பதிலாக மஞ்சள். 

பின் குறிப்பு –  இந்த இண்டிகேட்டரை மூன்று மாதம் பயன் படுத்தி பார்த்த பிற்கு மெட்டா ஸ்டாக் பிளக்கின் – ஆக அடுத்தவர் பயன் பாட்டிற்கு தர உள்ளேன்.   அகையால்  இங்கு உள்ள சார்ட்டில் –  படம் முழுமையானதாக  இல்லை… சில சப்போர்ட்டிங் இண்டிகேட்டர் கோடுகளை  நீக்கி உள்ளேன்.

இது ஒன்றும் புதிய விசயம் இல்லை.  எனது எதிர் பார்ப்பிற்கு ஏற்றவாறு உருவாக்கிய Custom Indicator தான்,  மூவிங் ஆவரேஜ்களின் கலவை.   சிறப்பு அம்சம் என்ன என்றால்.   கூடுமான வரை வாங்கிய / விற்ற விலையே அல்லது அதிகபட்சம் 15 புள்ளிகள் தான் ஸ்டாப் லாஸ் என்பதே.

=============================================================================

மற்றும் ஒரு டெக்னிகல் தகவல் –  இது பலருக்கு தெரிந்த விசயம் தான்.

ஒரு இண்டெக்ஸ் அல்லது பங்கின் சார்ட்டில் ஒரு பார் உயரமாகவும் அதை தொடர்ந்து 3 பார்கள் முதல் பாரின் மேல் கீழ் நிலைகளுக்குள்  உள்ளடங்கியதாகவும் (Inside Bar)  அமைந்தால்.   நாம் முதல் பாரினை பிரேக் அவுட் பாராக எடுத்து கொள்ளலாம்.   அதை தொடர்ந்து,  மேல் பகுதி உடைத்தால் மேலே செல்லும் கீழ் பகுதி உடைத்தால் கீழே செல்லும்.   

 படத்தை பாருங்கள்…

breakout

இது கடந்த புதன் கிழமை 5 நிமிட சார்ட்டில் 2.00 மணியளவில் ஏற்பட்ட அமைப்பு.   இதற்கு கீழ் நிலையை ஸ்டாப் லாஸாக எடுத்து கொள்ளலாம்.

=============================================================================

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations.

=============================================================================

சந்தை வேலை நேரத்தில் நாம் நமது எதிர் பார்ப்பின் அடிப்படையில் அல்லது அந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் போது தான் சிக்கல்கள் ஆரம்பமாகிறது.     (நானும் இதற்கு   விதி விலக்கல்ல –  சந்தை துவங்கும் முன்பாக சரியாக கணித்து நிப்டியில் நிலைகளை எடுப்பவன், சந்தையின் வேலை நேரத்தில் 30-40 புள்ளிகளுக்கு முன்பாகவே  சில நிர்பந்தங்களால் (செய்திகள்/தகவல்கள்)  முடிவினை மாற்றுகிறேன். ) 

ஒரு வித பதட்டம்  தான் காரணம்.   இதற்கு சந்தை வேலை நேரத்தில் நாம் – அடுத்தவர்களுடன் / டெக்னிகல் தெரிந்தவர்களுடன் / தெரியாதவர்களுடன் விவாதிப்பது / பேசுவது கூட நமது முடிவுகளில் சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.   இது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைதான்.   இன்று முதல் நான் யாருடனும் சந்தை நேரத்தில் விவாதிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன்.  நண்பர்களும் எனக்கு தகவல்களை பார்வேர்டு செய்வதை தவிர்க்கவும்.  மாலை நேரத்தில் விவாதிப்போம்.   ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

 ============================================================================

Advertisements

12 responses to this post.

 1. Hi Sai Sir,
  Very interesting. thanks for your technical informations.

  warmest regards,
  Muthu

 2. Posted by ப்ரியா on மே 4, 2009 at 8:09 முப

  வணக்கம் அண்ணா..
  நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தைக்குள் வருகிறேன் தாங்கள் இருக்கும் தைரியத்தில்.Technical Information அனைவருக்கும் புரியும் விதத்தில் அருமையாக அமைந்துள்ளது.விட்டுப்போன 2 மாத பதிவை ஒரே மூச்சில் படித்தேன் இன்று காலை.வேறு எந்த இணையத்தளத்தையும் பார்க்காமல் சந்தைக்குள் என்ன நடந்தது இந்த 2 மாதத்தில் என்று நமது வலைப்பதிவை படித்தே தெரிந்து கொண்டேன் அண்ணா..

 3. Posted by ராஜன் , சென்னை on மே 4, 2009 at 8:40 முப

  வெளிபடையான எழுத்துகள் . இதுதான் உங்கள் தளத்தை தினமும் படிக்கச் சொல்கிறது .\\\ 30-40 புள்ளிகளுக்கு முன்பாகவே சில நிர்பந்தங்களால் (செய்திகள்/தகவல்கள்) முடிவினை மாற்றுகிறேன்.\\\

  இன்று ஒரு செய்தி :

  தின வர்த்தகர்கள் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றால் தினமும் குறைவாக அசைபட வேண்டும்.

 4. Posted by GR CHANDHRAKUMAR on மே 4, 2009 at 9:08 முப

  GOOD MORNING SAI SIR

 5. Posted by கோவை சக்தி on மே 4, 2009 at 9:12 முப

  சாய் சார் ,
  நல்ல அழகான நடையில் டெக்னிக்கல் விளக்கங்கள் .பயனுள்ள தகவல்கள் .

 6. Posted by puppyrajan on மே 4, 2009 at 9:21 முப

  டியர் சாய் சார்,
  நீண்ட நாட்களுக்கு பிறகு டெக்னிகல் விஷயங்கள் பற்றி எழுதி இருப்பது
  மகிழ்ச்சி. இதை தொடர்ந்து எதிர் பார்க்கிறோம். நன்றி.

  ராஜன்.

 7. Posted by David Raja on மே 4, 2009 at 9:33 முப

  Thank you sir !

 8. Posted by Vigneshkumar on மே 4, 2009 at 11:40 முப

  Thanks for sharing your technical analysis informations with us.It stimulates us to know more from you. Thanks for your good work.

 9. Posted by sathya on மே 4, 2009 at 2:24 பிப

  vanakkam,
  thangalin thagavalgalukku mikka nandri.

 10. Posted by samikkannu tiruvannamalai on மே 4, 2009 at 2:32 பிப

  இது அனைவருக்கும் ஏற்படும் பிரச்சினைதான். இன்று முதல் நான் யாருடனும் சந்தை நேரத்தில் விவாதிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன்.

 11. வாழ்த்துக்கள்.

  தொடரட்டும் இதுபோன்ற தங்களின் ஆராய்ச்சிப் பணிகள். இனிமேல் புதியதாக பங்குச்சந்தைக்கு வருபவர்களுக்கு யோகம்தான். பங்குகளில் லாபம் என்பதைவிட நஷ்டம் ஏற்படாமல் இருக்க கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே.

  என்றும் அன்புடன்,
  ஜாஃபர்.

 12. Sir,
  Im intrested in Tech.analysis. pl.tell me about ZERO LOSS BREAKOUT SYSTEM.
  naren

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: