Archive for மே, 2009

இன்றைய சந்தையின் போக்கு 28.05.2009

மந்திரி சபை விரிவாக்கம்….    79 அமைச்சர்கள்… சட்டம் அனுமதிப்பது 81,   பிறகு ஏன் அந்த 2 இடங்களை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை.  இவ்வளவு பெரிய மந்திரி சபை!.  நல்ல மெஜாரிட்டி கிடைத்தும் ஒரு அரசு அமைய 13  நாட்கள் தேவைப்பட்டுள்ளது.   முதல் கோணலா?   

முழுமையான பட்ஜெட் ஜூலை முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லி உள்ளார் நிதி அமைச்சர்.    அது வரை பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இருக்காது.

அது வரை சந்தை தனது பயணத்தை தானாக அல்லது சர்வதேச சந்தைகளின் படி அமைத்து கொள்ளும். 

நமது அரசு பொதுதுறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்கினை விற்பதன் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு முயற்சிக்கும் என்று தெரிகிறது.   குறிப்பாக நெய்வேலி லிக்னைட் / பவர் கிரிட் மற்றும் என் டி பி சி.  முதலீட்டாளர்கள் விலை குறையும் போது இந்நிறுவன பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கலாம்.  அதைப்பற்றி தனிபதிவில் எழுதுகிறேன்.

அரசுக்கும், நிறுவனங்களுக்கும்  பெரிய தலைவலியாக இருக்கப்போவது கச்சா எண்ணை விலையேற்றம் தான் 63$ என்றளவில் உள்ளது.  மேலும் உயர்ந்தால்?  ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை பணவீக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று  ஜெட் வேகத்தில் பறக்கிறது. 

டவ் ஜோன்ஸ் கடந்த ஒரு மாதமாக 8500 மற்றும் 8200 என்ற இரு வலுவான நிலைகளுக்கு இடையில் ஊசலாடுகிறது.  தற்போது 4 மணி நேர சார்ட்டில் 8500 நிலையில் டிரிபிள் டாப் அமைப்புடன் கீழிறங்கி வந்துள்ளது.   8200 ஐ உடைக்குமா? 

நமது சந்தையில் கடந்த இரு நாட்களாக பிராபிட் புக்கிங் மற்றும்  ரோல் ஓவர் செய்வதற்காக சார்ட் கவரிங்  ஆகியவற்றால் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

நேற்றைய ஏற்றத்தில் இருந்து பின்வாங்கும் வாய்ப்புகள் உள்ளது.   4244 / 4224 / 4210 ஆகிய நிலைகள் முக்கிய சப்போர்ட்கள்.

4290 – 4305 – 4335 – 4351

4260 – 4242 – 4221 – 4210 – 4183

அலோக் இண்டஸ்டிரிஸ் நிறுவன பங்கினை 11-14 என்ற  விலையில் நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைத்தேன். தற்போது  24 விலையில் விற்பனையாகிறது.    யாராவது முதலீடு செய்திருந்தால் 50% பங்கினை விற்று போட்ட முதலீட்டை எடுத்துவிடவும். 

 இது வரை நாம் பரிந்துரைத்த முதலீட்டு பரிந்துரைகள் அனைத்தும் நல்ல லாபத்தினை தந்துள்ளது.  

இன்றைய சந்தையின் போக்கு 26.05.2009

சந்தையில் ஏற்பட்ட ஒரு சுனாமியை அடுத்து நிகழும் FNO expiry,  ஆகையால் மேடு பள்ளங்களுக்கு குறைவில்லை.   தின வர்த்தகத்திற்கு ஏற்ற நிலையில் இண்டெக்ஸின் போக்கு இல்லை.   இரு பக்கமும் ஸ்டாப் லாஸ் உடைப்பதும் மீண்டும் திரும்புவதுமாக தொடர்கிறது. 

ஒவ்வொரு நாளும் ஒரு ஹெவி வெயிட்-ஸ்டாக் தனது ஏற்றத்தினை இழந்து வருகிறது.  நேற்றைய தினம் பாரதி  (920 – 786  டிரேடிங் ரேஞ்ச்).   ரிலையன்ஸ் குருப் இன்னும் அசைய வில்லை. 

நேற்றைய சந்தையின் முடிவு –  நாம் எப்பொழுதும் சொல்வதை போல மதில் மேல் பூனை

4210- 4190   அல்லது 4270-4285  இதில் எந்த பக்கம் முதலில் செல்கிறது என்று பார்ப்போம்.  

 கச்சா எண்ணை 61$ ஆகவும்,    தங்கம் 655$  லும் நிலைப்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் சர்வதேச சந்தையில் பெரிய மாற்றம் இல்லை.  

ஆனால் வட கொரியாவின் அணு ஆயுத சோதனையும் அதை தொடர்ந்து நடத்தி வரும் ஏவு கணை சோதனைகளும் உலக நாடுகளை கொதிப்படைய செய்துள்ளது, குறிப்பாக ஜப்பானை.   இந்நிகழ்வு கவனிக்க வேண்டிய விடயம்,  சந்தையில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என்பது அடுத்தடுத்து உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கை மற்றும் இவ்விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு ஆகியவற்றை பொறுத்தே.

இன்றைய முக்கிய நிலைகள்

4220 – 4200 – 4190 – 4174  – 4151

4240 – 4263 – 4274 – 4290- 4310

இந்த வாரம் வேலை பளு காரணமாக அடுத்து இரு தினங்களுக்கு என்னால் பதிவினை அப்டே செய்ய இயலாது.  அடுத்த வாரம் தொடர்கிறேன்.

25.05.2009

வெளியூர் பயணத்தில் இருப்பதால் இன்று பதிவு எழுத இயலவில்லை..    அதற்காக வருந்துகிறேன்.
– சாய் கணேஷ்.

இன்றைய சந்தையின் போக்கு 22.05.2009

வாரத்தின் இறுதி நாள் ,  மறக்க முடியாத வாரம் இது.    உலக சந்தைகள் அனைத்தும் களைப்புடன் காணப்படுகிறது.     அதை தொடர்ந்து தங்கமும், கச்சா எண்ணையும் ஏறு முகத்தில் உள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக  டவ் ஜோன்ஸ் 8200 ஐ சப்போர்ட்டாக கொண்டு செயல் படுகிறது,   அதை உடைத்தால் 300-400 புள்ளிகள் வரை சரிவடையலாம்.

நமது சந்தையில் 3400 க்கு மேல் அனைத்தும் ஒரு செயற்கையான வளர்ச்சிதான்,   சீட்டு கட்டு கோபுரம் தான்,  எப்ப வேண்டுமானலும்  சரிவடையும்.   

முக்கிய நிலை 4150  அதை அடுத்து 3850   மேல் நிலை 4259 – 4300

இன்றைய முக்கிய நிலைகள்

4245 – 4265 – 4300 – 4343 

4200 – 4186 – 4155 – 4100 

நேற்றைய பரிந்துரை

1.  Sell Nifty – 4260  Tgts 4230/ 4200  S/l  – 4285   –  S/L hit   Loss 25  points

2. Sell Nifty –  4285  Tgts 4250 / 4220 / 4200   – Profit Booked at 4225 – 60  points  ,  The positional Traders are holding their shorts with 200 points profit.

3. Sell icici  –  780  tgt 770/ 765  – S/l hit

4. Sell Adlabs – 339 tgt 330 / 325   – All tgts achievd.

திரு சுரேஷ் – யுனிடெக் பற்றிய நினைவூட்டலுக்கு மிக்க நன்றி..  அதே போல் சன் டீவி நாம் பரிந்துரைத்த விலையில் இருந்து நன்றாக உயர்ந்துள்ளது.

சந்தை மீண்டும் 3700 க்கு திரும்பும் நிலையில் NTPC பங்கினை வாங்கலாம் நீண்ட கால முதலீட்டிற்கு..  இரண்டு- மூன்று வருடங்களில் நல்ல வளர்ச்சியை தரும்.  

இன்றைய சந்தையின் போக்கு 21.05.2009

கச்சா எண்ணை ஆறு மாதத்திற்கு முந்தைய விலையான $ 62 ற்கு உயர்ந்து உள்ளது.   மிகவும் கவனிக்க வேண்டிய விசயம்.   அதே போல் அமைதியாக முன்னேறும் தங்கம் மீண்டும் $1000 என்ற நிலையை கடக்குமா?

அமெரிக்க சந்தை அதிக மேடு பள்ளங்களுடன் பயணம் செய்கிறது. 

நமது சந்தை மீண்டும் சென்ற வார நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளது,  பல பங்குகள் அதன் உயரத்தில் இருந்து பின் வாங்குகிறது.

அதே நேரம் நாளை பிரதமர் 322 பராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன்  பதவியேற்க உள்ளார்..  அதை மையமாக வைத்து மேலே செல்லும்,  இல்லை இல்லை கீழே செல்லும் என்ற விவாதமும் நடைபெறுகிறது.

டிரெண்ட் டிசைடிங் லெவல்ஸ் –  4500  – 4150 

முக்கிய நிலைகள்

நிப்டி ப்யுச்சர்

4300 – 4320 – 4355 – 4410

4270 – 4255 – 4240- 4215 – 4160 

//I would like to remember you that, during jan 2009 you have recomended 2 shares HINDDORROL at Rs 35 and HINDMOTORS at Rs14. In this HINDDORROL has been acheived its target as Rs 55 and now is Rs 61.//

Hind Motors – 14 ல் இருந்து 20 ஆக உயந்து உள்ளது.

கண்ணன் தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.  

//yesterday i bought dlf price 394 quantity 250 nos.i have hold are sell sir pls tell me//

ஹர்ஷா –  ஏற்கனவே எடுக்கபட்ட வர்த்தக முடிவினை சரியா தவறா என்று அலசுவது சரியல்ல..   அதிக விலையில் வாங்கி உள்ளீர்கள்.   என்ன நோக்கத்தில் வாங்கபட்டது என்பதை நீங்கள் சொல்ல வில்லை.  (குறுகிய கால / நீண்ட காலம் அல்லது ஓரிரு நாட்களில் ஏறும் என்ற எதிர்பார்ப்பிலா) நீண்ட கால முதலீடாக இருந்தால் காத்திருக்கலாம்.    ரியல் எஸ்டேட் துறையின் முன்னனி நிறுவனம்.  அனைவராலும் Bull Rally துவக்கம் என்று பேசப்படுகிறது, மீன்டும் சென்செக்ஸ் 21000 கடந்து செல்லும் (2 வருடங்களில்) என நம்பபடுகிறது.   

நேற்றைய பரிந்துரை

1.  Sell Nifty – 4330 Tgts 4300 / 4275 / 4250  S/l  – 4365  –  S/L hit   Loss 35 points

2. Sell Nifty –  4360 Tgts 4330/4300/4275 /4250  – Profit Booked at 4275  

3. Sell Rell Cap – 880 tgt 870/864  – All tgts  Achieved  (low 840).

இன்றைய சந்தையின் போக்கு 20.05.2009

திங்கள் கிழமை ஏற்றத்தை நேற்றைய தினம் தக்க வைத்துள்ளது சந்தை.     1.58 லட்சம் கோடிகள் Turn Over புதிய சாதனை.   இந்த உயத்திலும் தொடர்ந்து வாங்கும் FII’s  நேற்றைய தினம் அவர்கள் 4793 கோடிகளுக்கு வாங்கியுள்ளனர். 

DII’s – 1962 கோடி அளவிற்கு விற்றுள்ளனர்.    கார்ப்ரேட் மற்றும் ரிடெய்ல் இன்வெஸ்டர்ஸ் 708 கோடிகளுக்கு விற்றுள்ளனர். 

தற்போது அனைவரது மனதிலும் எழும் பெரிய கேள்வி இந்த ஏற்றம் தொடருமா?     உலக சந்தைகளில் எதிலும் இல்லாத ஏற்றம். 

நாம் ஆகஸ்ட் / செப்டம்பர் 2008 நிலையை அடைந்துள்ளோம்.   அந்த நிலைக்கு வர பல உலக சந்தைகள் இன்னும் 40-50% உயர வேண்டும். 

உதாரணத்திற்கு டவ்ஜோன்ஸ்- செப்டம்பர் நிலை 11500  – தற்போதைய நிலை 8400. 

நமது சந்தையை பொறுத்தவரை அது எவ்வாறு 3900-4100 க்கு மேல் நிலைப்பெறுகிறது என்பதை பொறுத்தே நாம் முடிவு செய்ய முடியும்.

நேற்றைய தினம் சிப்லா, ஐடிசி, இன்போசிஸ்  மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் தங்களின் இரு நாள் ஏற்றத்தை முழுமையாக இழந்துள்ளன. 

நிப்டி ஸ்பாட் நேற்றைய தினம் டோஜி ஸ்டாராக முடிந்துள்ளது.   இந்த அமைப்பு 4500 மற்றும் கீழ்  4150 நிலைகள் ஸ்ட்ராங் என்பதையே காட்டுகிறது.  இந்த இரு நிலைகளில் எதையாவது ஒன்றை உடைக்குமா? அல்லது இடைப்பட்ட நிலையில் பக்கவாட்டு நகர்வுகளை மேற்கொள்ளுமா?

இன்றைய முக்கிய நிலைகள்.

நிப்டி ப்யுச்சர்

4360– 4399 – 4438 – 4558 – 4645 -4753

4290-4269 – 4229 -4190-4070-3875 

(இந்த லெவல்களை வர்த்தகத்திற்கு பயன் படுத்த வேண்டாம், )

நேற்றை பரிந்துரை

Sell Nifty at 4425 Tgts  4408 / 4390 / 4375 / 4350 / 4338 /4300 /4250  –   Day traders Coverd at 4350  positional traders still holding it.

(சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் ஒரு வர்த்தகம் தான்)

இன்றைய சந்தையின் போக்கு 19.05.2009

அடுத்த சில தினங்களுக்கு டெக்னிகல் வர்த்தகம் செய்வது எளிதல்ல.    Long Positions  எடுத்திருந்தவர்களுக்கு நல்ல லாபம் ஆனால் அதை நேற்றைய தினம் யாராலும் உறுதி செய்ய முடியவில்லை, வர்த்தகம் நடந்தது என்னவோ 1 நிமிடத்திற்கும் குறைவு தான்.

3400 இல் இருந்து 4500 க்கு புலி பாய்ச்சல், நம்ப முடியாத வேகம். 

நமது உற்சாகம் உலக சந்தைகளிலும் தெரிகிறது.

இன்றைய முக்கிய நிலைகள்.

நிப்டி ப்யுச்சர்

4410 – 4442 – 4475 – 4576 -4741

4331 – 4298 – 4264 – 4165 -3999