இன்றைய சந்தை 23.04.2009


சரிவுகள் உறுதி செய்யப் பட்டாலும், அதிகமானவர்கள் சரிவினை எதிர் பார்ப்பதால்,  கால தாமதப் படுத்தும் வேலைகள் நடைப் பெறும்.  காரணம் சந்தையில் என்றும் பெரும்பான்மை ஜெயிப்பதில்லை,  அரசியலைப் போல இங்கும் மைனாரிட்டிக்கு மவுசு ஜாஸ்தி..

சென்ற வாரம் வரை உயர்வுகளைப் பற்றி பேசி வந்த மீடியாக்கள் உட்பட அனைவரும் எதிர் பார்ப்பது சரிவினை.   எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றம் தான்.  கடந்த சில நாட்களாக அனைவரும் எதிர்பார்ப்பது கரடியார் செஞ்சுரி அடிப்பார் என்று ஆனால், அவரோ நிதானமாக ஆடி வருகிறார்.  ஆனால், யாரும் எதிர்பார்க்காத சமயம் செஞ்சுரி அடிச்சு அசத்தலாம்.

3370 வரை சந்தைகள் உயர வாய்ப்புகள் உள்ளது.  அதன் தொடர்ச்சியாக சரிவடையலாம்.

Bear markets have no support    –  only resistance  தற்போது  3390 என்ற நிலை  கரடிகளுக்கான பாதுகாப்பு அரண்.

இன்றைய முக்கிய நிலைகள்  –  3355   – 3320

இன்றைய சந்தை 3388  – 3250 க்கு இடையில் ஊசலாடலாம். 

 

 

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations 

 

 

 

கோல்டன் ரூல்ஸ் – நினைவூட்டல்

=============================================================================

வினோத்ஜி நமஸ்தே… உங்களின் நேற்றைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.   ஒரு வட இந்தியரின் குறிப்பாக பங்கு வணிகத்தில் கொடிகட்டி பறக்கும்  ராஜஸ்தானியர்களில் ஒருவரிடம் இருந்து,  ஒரு தமிழனுக்கு கிடைக்கும் இந்த பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.    நிச்சயம் சந்தையில் தங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதை, அறிமுக உரையாடலில் தாங்கள் கேட்ட கேள்விகளே பறை சாற்றியது.  என்னடா வில்லங்கமான கேள்வி எல்லாம் கேட்கிறாரே, தமிழ் தெரிந்த மார்வாடி ஜெயினுக்கு நாம் கால்ஸ் தந்து திருப்தி படுத்த முடியுமா என்று தயங்கியது உண்மை.  எனது முதாலாளி ஒரு ராஜஸ்தான் காரர் தான் அதன் தொடர்ச்சியாக பலர் நெருங்கிய நண்பர்கள்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளார்கள்.  அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் ஆட்களை எடை போடுவதில் கெட்டிக்காரர்கள்.   நான் பொறாமையுடன் (தொழில் செய்யும் வித்தை மற்றும் தங்கள் சமூகத்தில் உள்ள ஒற்றுமை,  போட்டியின்றி தொழில் நடத்தும் விதம்)  விரும்பும் சமூகத்தில் இருந்து பாராட்டுப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. 

பாராட்டியதைப் போல எனது தவறினை சுட்டிக் காட்டவும் தயங்க வேண்டாம்.

எனது முதலாளி-யிடம் நான் கற்ற பாடம் – யாரும் ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லாதே –  அது உனது தவறை மறைக்கும் செயல்.   ஏமாந்து விட்டேன் என்று உனது தோல்வியை ஏற்று கொள் அது உன்னை மேம்படுத்தும்.  என்பார், அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

=============================================================================

தம்பி கரூர் கார்த்தி –  மோகன் ராஜ் என்ற பெயரில் பின்னூட்டம் எழுதிய காலத்தில் இருந்து நான் உங்கள் எழுத்தின் ரசிகன்.   ஜீரோலாஸ் பிரேக் அவுட் – பற்றி சரியான நேரம் வரும் போது நிச்சயம் விளக்குகிறேன்.   மெட்டா ஸ்டாக்கில் உருவாக்கியுள்ள ஒரு இண்டிகேட்டர் தான் வேற ஒன்றும் இல்லை.  பயன் படுத்துவது மிக எளிது.  கடந்த ஒரு வாரமாக எனது ஆலோசனைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்.  ரிசல்ட் திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளது.   சில காரணங்களால் இங்கு படங்களை கூட பதிவிடவில்லை.   நேரில் வரும் சமயம் விளக்குகிறேன்.

நிப்டி நிலைகளை –  திட்டமிட்டே தவிர்க்கிறேன்.  காரணம் தேவையற்ற மன உளைச்சல் தரும் விமர்சனங்களை தவிர்க்கவே.   தற்போது கூட ஒரு புண்ணியவான் நமது வலைப்பதிவை தடை செய்ய சொல்லி செபியில் புகார் செய்ய உள்ளதாக மிரட்டல் பின்னூட்டம் எழுதி சென்றுள்ளார்.  🙂

Advertisements

10 responses to this post.

 1. Posted by சாமிக்கண்ணு,திருவண்ணாமலை on ஏப்ரல் 23, 2009 at 8:37 முப

  ரோஜாவின் மலரைப் பார்த்து மயங்காதே.முல்லை பார்த்து பயப்படாதே. மலரும் முள்ளும் சேர்ந்ததுதான் ரோஜா.சந்தையும் ரோஜாவை போன்றதே.

 2. சாய்ஜிக்கும் மற்ற நண்பர்களுக்கும் காலை வணக்கம்!!
  இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு,
  -200 எதிர்பார்க்கலாமா?
  தற்போது கூட ஒரு புண்ணியவான் நமது வலைப்பதிவை தடை செய்ய சொல்லி செபியில் புகார் செய்ய உள்ளதாக மிரட்டல் பின்னூட்டம் எழுதி சென்றுள்ளார்.
  பழுத்த மரம் என்று மறுபடியும் நிருபணம் ஆகிவிட்டது!!
  வாழ்த்துக்கள்!!
  நன்றி
  அன்புடன்
  skarthee

 3. நமது நண்பர்களுக்கு இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ கால்ஸ் கொடுத்தால்தான் மதிப்பார்கள்..தமிழில் இப்படியொரு அருமையான தினசரி சேவையை அளித்து வருவது கண்டிப்பாக செபியிடம் புகார் செய்ய வேண்டிய விடயம்தான்!! 🙂

 4. GOODAFTER NOON SIR OTHER FOOL MAN TELL SEBI COMPLIANT BUT IAM AND YOUR CLIENT IS VERY CONFIDENT SAI SIR .THANKYOU

 5. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 23, 2009 at 2:03 பிப

  உங்களது 10K-10L மீது எலோருக்கும் ஒரு கண் உள்ளது போல …

 6. இன்றயா பதிவை பார்க்கும் போது தமிழ்நண்டு கதைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. கதை தெரியாதவர்களுக்கு இதோ கதை . எல்லா பாட்டில்களிலும் இரண்டு நண்டுகள் இருக்கும் அதுவும் ஒவ்வோறு மாநிலத்து நண்டுகள், ஒருபாட்டிலில் இரண்டு பஞ்சாப் நண்டு ,ஒன்றில் கர்நாடகா ஒன்றில் கேரளா என்று பல் வேறு மாநிலத்து நண்டுகள்.
  இரண்டு இரண்டு நண்டுகளாக பாட்டிலில் போட்டு விட்டார்கள்.கொஞ்சம் நேரத்தில் எல்லா மாநிலத்து நண்டுகளும் பாட்டிலை விட்டு வெளியே வந்து விட்டன. ஆனால் தமிழ் நண்டுகள் மட்டும் வெளியே வரவில்லை. காரணம் ஒரு நண்டு ஏற முயற்ச்சிக்கும் போதே மற்ற நண்டு காலை பிடித்து வாரி விடும் இப்படி மாற்றி மாற்றி காலை வாரினால் எப்படி பாட்டிலை விட்டு வெளியே வர முடியும்.

  நம் தமிழர்களின் ஒற்றமைக்கு இதை விட சிறந்த கதை வேறு ஏதும் இருந்து விட முடியாது மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் ஒற்றுமையின் சிகரங்கள் என்று சாய் அவர்கள் தங்களின் அனுபவம் மூலம் ராஜஸ்தான் காரர்கள் ஒற்றுமை, போட்டியின்றி தொழில் நடத்தும் விதம் பற்றி கூறி இருக்கின்றார் அது போல் இல்லாமல் நம் தமிழன் நண்டு போல் ”தடை செய்ய சொல்லி செபியில் புகார் செய்ய உள்ளதாக மிரட்டல்” மிரட்டுவது சரியல்ல?

 7. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 23, 2009 at 5:38 பிப

  எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றம் தான்.இந்த வார்த்தை சந்தைக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொருத்தும் நேற்று 3290௦ வந்தபிறகு எல்லோரும் எதிர்பார்ப்பு 3150௦ ஆனால் இன்று காளை 100 புள்ளிகள் இழுத்து சென்று விற்றார். எனது நிலை நிபிட்டி ஏப்ரல் எக்ஸ்பிரி 3050-3100 முடிய வாய்ப்பு அதிகம் . தவறாக இருக்கலாம் .இருதாலும் எனது கணக்கு இது

 8. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 23, 2009 at 5:50 பிப

  மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  தங்களது கட்டுரையில் எனது பின்னூட்டத்திற்கு மதிப்பளித்து பதிலளித்ததற்கு மிக்க நன்றி. எனது பெயரை (நீண்ட நாட்களுக்கு பிறகு) இன்றைய தங்களது கட்டுரையில் பார்த்த உடனே எனது மனம் மிகவும் பரவசம் அடைந்தது. உண்மையில் சிறு குழந்தையின் மகிழ்ச்சியைப் போல. ஏனென்றால் பங்கு சந்தை பற்றி நமது தாய்மொழியில் அளப்பரிய ஒரு சேவையினை அளித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரபலத்தின் வலைப்பதிவில் எனது பெயர் வருகிறதென்றால் மனம் இவ்வளவு குதூகளிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லையே.

  கடந்த பல மாதங்களுக்கு முன்னர் தாங்கள் தினமும் நிப்டி நிலைகளை கொடுத்து வந்தீர்கள். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. அதிலும் குறிப்பாக தின வணிகத்திற்கு மிக்க உதவியாக இருந்து வந்தது. இதனை மனதில் வைத்தே நான் நிப்டி நிலைகள் குறித்த எனது வினாவினை எழுப்பியிருந்தேன். ஆனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அதனை வைத்து பின்னூட்டம் வருகையில் நிப்டி நிலைகளை தாங்கள் தவிர்ப்பதில் தவறேதுமில்லை.

  தற்போதைய கால கட்டத்தில் தொழில் நுட்ப புரட்சியின் மூலம் கிடைத்திருக்கும் அற்புத பரிசான இந்த வலைப்பூவின் மூலம் தங்களுக்கு தெரிந்த விசயங்களை பிறரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நல்ல எண்ணத்தில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களை வேதனைப் படுத்தும் வகையில் பின்னூட்டங்கள் அனுப்புவதன் மூலம் இவர்கள் சாதிப்பதுதான் என்ன??????? அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

  தேசிய தினத்தன்று சட்டையில் தேசியக் கொடியை குத்திக் கொள்வதும் விளையாட்டுப் போட்டிகளின்போது முகத்திலும் ஆடைகளிலும் தேசியக் கொடியின் வர்ணங்களை பூசிக் கொள்வதும், இது போன்ற செயல்கள் மட்டுமே நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் செயல்கள் அல்ல.

  தாங்கள் கற்றறிந்த விசயங்களை அடுத்தவரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற நல்ல எண்ணத்தில் உழைத்துக் கொண்டிருக்குப்பவர்களுக்கு நாம் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டாம், அவர்களை ஊக்கப்படுத்தக் கூட வேண்டாம், குறைந்த பட்சம் அவர்களுக்கு இது போன்ற தொல்லைகளை தராமலாவது இருக்கலாமல்லவா,,,,,,,இருக்கலாம்,,,,சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவும்,,,,,,

  எவ்வளவோ நல்ல விசயங்களை நமக்கு முன் வாழ்ந்தவர்கள் செய்து விட்டு போனதாக புத்தகளில் படிக்கிறோம். நமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் நாமும் அதனை செய்யலாமே! அதற்கு முதலில் தேவை நல்ல மனது மட்டும்தான், மற்றவையெல்லாம் பின்னர்தான். இருக்கும் சிறிது காலத்திலாவது நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும். மனிதனாய் பிறந்ததற்கு ஒரு அடையாளம் வேண்டுமே,,,,அதற்காகத்தான்,,,,,,

  இந்த பின்னூட்டத்திற்கு தங்களது வலைப்பூவில் இடமளித்ததற்கு சாய் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

  இனிய மாலை வணக்கத்துடன்,
  கார்த்தி, கரூர்.

 9. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 23, 2009 at 6:01 பிப

  Good evening sir.

  We expect your post-market and pre-market analysis before 7 a.m. which will be helpful for many people. kindly consider this.

 10. Posted by sankarankoil arun on ஏப்ரல் 24, 2009 at 10:19 முப

  hi,
  whatever t think in my mind that r the words from karthi,s comments

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: