இன்றைய சந்தை 22.04.2009


     நேற்றைய பதிவில் எந்த மாற்றமும் இல்லை… தொடர்ந்து 5 வது நாளாக காளைகள் போராடி வருகிறது.

     முதல் சுற்றில் ஓரளவு கரடிகளின் கை (நான் அந்த கையை சொல்லவில்லை 🙂  ) உயர்ந்து உள்ளது.  

      ஏதோ ஒரு காரணத்திற்காக சரிவுகளை தள்ளி போடுகிறார்கள்…    சந்தை 3500 ஐ உடைத்து மேலே செல்வது தற்போது சிரமமான காரியம்.  

     தற்போதைய சார்ட் ஆகஸ்ட் மாத சார்ட்டினை நினைவு படுத்துகிறது.  அன்று   4500 தற்போது 3500 அன்றைய முக்கியமான ஒரு சப்போர்ட் 3800, அந்த இடத்தில் ஒரு இடைவெளி இருந்தது.   தற்போது 2800 – 2860 இல் இடைவெளி.  அன்று 4500-4200 இடையே நீண்ட நாள் போராட்டம்.  இன்றும் அதே நிலை.  அன்றைய அரசியல் அணு சக்தி ஒப்பந்தம். தற்போது பொதுதேர்தல்.    அன்றை தினம் வாராந்திர சார்ட்டில் ஆர் எஸ் ஐ –  98  இன்றும் அதே நிலை. 

     ரிசல்ட் எப்படி அமையும் – வாக்காளர்களின் மன நிலையை நாம் சொல்ல முடியாது அதை போல,  வணிகர்களின் மன நிலை எப்படி என்றும் சரியாக கணிக்க முடியாது.   தேர்தலில் முக்கிய பங்காற்றும் பண பலம் / கூட்டணி பலத்தை போல சந்தையில் சித்தர்களின் கூட்டணி தான் ரிசல்டினை முடிவு செய்யும்.   நம்மை போன்ற சிறு வணிகர்களின் கையில் இல்லை.

     எனது zero loss indicator கரடிகளின் ஆதிக்கம் உயர்வதை காட்டுகிறது.. குறிப்பாக 3320 நிலைக்கு கீழ் ஒரு மணி நேரம் வர்த்தகம் ஆனால் கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்பிரதேசங்களுக்கு சென்றுள்ள பொசிசனல் கரடிகளும் களம் காண்பார்கள்.

     5  டி எம் ஏ விற்கு கீழ் முடிவடைந்துள்ளது… அடுத்த சப்போர்ட் 11 மற்றும் 13 டி.எம்.ஏ.

=============================================================================

     நேற்றைய பதிவில் எனது தவறினை உரிமையுடன் சுட்டி காட்டி திருத்தம் கோரிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.  என்ன செய்வது நானும் சாதரண மனிதன் தானே.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். 

=============================================================================

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations
Advertisements

11 responses to this post.

 1. Posted by vinoth kumar kewalchand on ஏப்ரல் 22, 2009 at 9:08 முப

  today ur comments were fantastic and u look , say and predict like a gnani or saint,,,and i also think u have won the temperment of the market. nothing is affecting you., and so the market reacts lastly to u r said destination, i think now that i have the rightman to follow..and also i find great ” sevai ” pleasure for u r articles in tamil.commendable research by sai…i admire you sai

 2. Posted by சாமிக்கண்ணு ,திருவண்ணாமலை on ஏப்ரல் 22, 2009 at 9:14 முப

  மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை .முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவனே மனிதன்.முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் ………..

 3. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 22, 2009 at 9:27 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகள் நேற்று முன்தினம் தந்த சரிவுகளுக்கு நமது சந்தையினை தவிர மற்ற ஆசிய சந்தைகளும் சரிவினை தந்தன. ஆனால் நமது சந்தையோ சிறிய அளவில் இறங்கு முகத்தில் ஆரம்பித்து பெரிதாக கீழே செல்லாமல் உடனடியாக மேலே எழுந்து வந்துவிட்டன. இதன் மர்மம்தான் என்ன?

  “தற்போதைய சார்ட் ஆகஸ்ட் மாத சார்ட்டினை நினைவு படுத்துகிறது” என்ற வரிகள் இதற்கு தகுந்த பதிலாக உள்ளது. மேலும் பல விசயங்களை தாங்கள் ஒப்பிட்டு பார்த்து சொல்லியிருப்பது சந்தையில் தற்போது உள்ள விபரீதத்தை எங்களுக்கு உணர்த்துகிறது.

  “zero loss indicator ” என்று தாங்கள் எதையோ சொல்லுகிறீர்கள். ஆனால் அது எங்களுக்கு என்னவென்று தெரியவில்லை. (Technical- இன் ஆரம்பமே எங்களுக்கு தெரியாதே !!!!!!!)

  ஒரு சில நாட்கள் தாங்கள் நிப்டி நிலைகள் தருகிறீர்கள். அதனை தினமும் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே,,,,,,

  இனிய காலை வணக்கத்துடன்,
  கார்த்தி, கரூர்.

 4. dear sai sir,

  please put the disclaimer everyday.

  then only no one will will question you and also disturb you.

  this is my personal request.

  Thank you for your views about market.
  your view is very useful to me.

 5. Posted by Venkatasubramaniam on ஏப்ரல் 22, 2009 at 11:12 முப

  //முதல் சுற்றில் ஓரளவு கரடிகளின் கை (நான் அந்த கையை சொல்லவில்லை 🙂 ) உயர்ந்து உள்ளது.//
  //ஆனால் கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்பிரதேசங்களுக்கு சென்றுள்ள பொசிசனல் கரடிகளும் களம் காண்பார்கள்.//

  அன்பு சாய் அவர்களுக்கு,
  உங்கள் எழுத்தின் சுவை மென்மேலும் பெருகிக் கொண்டே உள்ளது. அருமை. 🙂
  வாழ்த்துக்கள்.

 6. Posted by கனகராஜ் on ஏப்ரல் 22, 2009 at 1:20 பிப

  “zero loss indicator ” என்று தாங்கள் எதையோ சொல்லுகிறீர்கள். ஆனால் அது எங்களுக்கு என்னவென்று தெரியவில்லை. (Technical- இன் ஆரம்பமே எங்களுக்கு தெரியாதே !!!!!!!).
  உண்மைதான். தயவு செய்து அதை விளக்கிவிடுங்களேன்

 7. Nse to exclude 50 stocks from F&O after expiry of existing contracts.. (1) 3i (2) alok (3) amtek auto (4) Aptech (5) arvind balaji tele (7) ballarpur ind (8) bata (9) birla corp (10) bombay dye (11) Central bank (12) dcb (13) edelwises (14) escorts (15) everon (16) gdl (17) gitanjali (18) gnfc (19) gujalk (20) havells (21) hcl info (22) hoec (23) irb (24) jet air (25) jsl (26) kesoram (27) ksk (28) karnataka bank (29) lmw (30) maha life (31) mahaseamless (32) mindtree (33) monnet ispat (34) mrf (35) nb venture (36) ndtv (37) net18 (38) niit (39) penisula land (40) rajesh export (41) riil (42) skumar (43) srei (44) srf (45) star (46) thermax (47)torrent power (48) tvs motor (49) utv (50) wockpharma

 8. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 22, 2009 at 3:12 பிப

  ///வணிகர்களின் மன நிலை எப்படி என்றும் சரியாக கணிக்க முடியாது/// 100/100 உண்மை . மனிதனின் மனநிலை வர்த்தகம் முன் வர்த்தகம் பின் என மாறுபடும் . ஆகையால் தான் சில ANALYST டிப்ஸ் மட்டும் கொடுபார்கள் TRADE செய்யமாட்டார்கள் .கோடிக்கணக்கான மனநிலை அறிந்து அதில் நாம் வெற்றி பெறவேண்டும் . நினைத்து பார்கள். ஆனால் சிலர் சந்தையை சூதாட்டம் என்று கூறுவது மிகவும் மிகவும் வருத்தம் அளிக்கிறது. சந்தையை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் இதை சொல்வது மிகவும் வேதனை

 9. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 22, 2009 at 9:23 பிப

  கேள்வி பட்டவை :-

  ஹர்ஷத் மேத்தா தொடங்கியப் பங்குத் தரகு நிறுவனத்தின் பெயர் – Growmore Research & Asset Management Ltd தலைமை அலுவலகம் 1208, நாரிமன் பாயிண்ட்

 10. திரு சாய் அண்ணா?
  நான் சொன்ன புக் படித்து விட்டேர்களா? பணமழை கொட்டுது பங்கு சந்தையிலே

  எப்படி இருந்தது? அவர் சொல்லித்தான் கிராப் பார்த்து ட்ரடிங் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
  புக் மிகவும் விரிவாக இருப்பதாக நினைக்கிறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: