இன்றைய சந்தை 17.04.2009


ஆச்சரியம்!!! நான் இன்றைய தினம் பதிவினை எழுதிவிட்டு திரு. சரவணன் அவர்களின் பதிவினை பார்த்தால் –  இருவரின் பதிவும் ஒரே மாதிரி  இருந்தது.  (தேர்தல்+ சுவீஸ் வங்கி)   நான் சொல்ல நினைத்ததை விட அவர்  தெளிவாக சொல்லியிருக்கிறார்.   அதனால் எனது பதிவினை மாற்றி விட்டேன். 

கூடுதல் செய்தி மட்டும் –   சுவீஸ் வங்கியில் உள்ள இந்த கருப்பு பணம் இந்திய பங்கு சந்தையில் மட்டும் அல்ல உலக சந்தைகள் அனைத்திலும் முதலீடு செய்யப்படுகின்றன.  அல்லது முதலீடு செய்ய வற்புறுத்த பட்டுள்ளன,   என்ற செய்தி / வதந்தி உலா வருகிறது.   உண்மையில் இந்த பணம் இடம் பெயரத்துவங்கியுள்ளது.  

அது பங்கு சந்தையில் எந்த அளவு என்று நம்பமுடியவில்லை.  அதே வேளை இதை வதந்தி என்று மறுப்பதற்கும் இல்லை.   காரணம் இவ்விசயத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்ததில் இருந்து தான் சந்தை மேலேறி வருகிறது. 

  இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி தங்களது நாட்டு பணம் அதிகம் இப்படி முடக்கப்பட்டிருக்குமோ அதை தங்களது பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க பயன் படுத்தலாமா என்று அவர்கள் யோசித்து இதில் ஆர்வம் செலுத்தியதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..  அதில் அதிக பணம் இந்தியருடையது.

டேக்ஸ் ஹேவன் என்றழைக்கப்படும் சுவிஸ் உட்பட சில குட்டி நாடுகளில் உள்ள இந்த  வங்கிகளில் உள்ள இந்தியர்களுடைய பணத்தின் தோராய மாதிப்பு 74 லட்சம் கோடிகள் என்று உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.   (இன்னும் அதிகமாகவும் இருக்கலாம்).  தற்போது ஜெர்மனி 3000 நபர்களின் உறுதி செய்யபட்டுள்ள தகவல்களை சேகரித்து உள்ளது. ஆனால் அந்த தகவலும்  இந்தியாவிடம் இல்லை.)

இந்த டேக்ஸ் ஹேவன் வங்கிகள் யார்? இவர்களின் நோக்கம் என்ன?   சுவிஸ் உட்பட பல குட்டி நாடுகளில் இம்மாதிரியான வங்கிகள் செயல் படுகின்றன். இவர்களுக்கு எந்த ஒரு தர்ம நியாயமும் கிடையாது.  ரகசியத்தை பாதுகாக்கிறோம் / உயிரே போனாலும் ரகசியத்தை வெளியிட மாட்டோம் என்ற கொள்கை தான்.   பணம் எந்த வழியில் வந்தாலும் கவலை இல்லை தங்களுக்கு தேவை முதலீடு.

சரி – இதில் ஜெர்மனி எப்படி தகவல்களை திரட்டியது என்றால் – ஜெர்மன் நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம், தங்களது நாட்டை சேர்ந்த போதை பொருள் /ஆயுத கடத்தல் கும்பல் / ஊழல் புரிவோர் எல்.ஜி.டி என்ற வங்கியில் முதலீடு செய்துள்ளனரா என்று!.  முள்ளை முள்ளால்-தால் எடுக்க வேண்டும் என்பதற்கு இணங்க,   அவ்வங்கியில் வேலை செய்பவர்களுக்கு பெரும் பணம் லஞ்சமாக கொடுத்து, அதிக அளவு  பணத்தை முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை வாங்கி விட்டது.  அதை வைத்து தான் பல விவாதங்கள் அரசியல் களத்தில் சூடேறுகின்றன.

இப்பிரச்சினை – தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் முக்கிய பங்கு வகிக்கும்.   இப்பணத்தை திருப்பி கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் நெருக்கடியால் ஓரளவு சாத்தியமே என்பது வல்லுனர்களின் கருத்து.

இந்தியாவுக்கு உள்ள எளிய வழி –  சிறப்பு சலுகை வழங்கப்படலாம்..   எப்படி வந்தது என்று கேள்வி கேட்கபடமாட்டாது. குறிப்பிட்ட சதவீதம் வரியாக செலுத்தி  கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி கொள்ளுங்கள் என்று.  இது போன்றதொரு சலுகை சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

(இது தான் எளிதான வழி- அதை விடுத்து இதை அரசு கஜானாவிற்கு மொத்தமாக கொண்டு வருவோம் / வருவார்கள் என்பது நடக்குமா நமது நாட்டில். )

ஆனால் நமது சந்தேகம் – ரெய்டு வருவாங்கன்னு சந்தேகம் வந்தாலே பல ஆவணங்களை /பொருட்களை இடம் பெயர செய்யும் வழக்கத்தை சின்ன சின்ன பிஸினஸ் ஆட்களே செய்யும் போது.    கடந்த 2 மாதமாக பெரும் சர்ச்சையில் உள்ள இவ்விசயத்தில் சம்பந்தபட்டவர்கள், அவர்களுக்கு ரகசியம் காப்போம் என்ற உத்திரவாதம் அளித்தவர்கள் என்ன சும்மாவா இருப்பார்கள்?

எது எப்படியோ பங்கு சந்தையில் வரும் நாட்களிலும் இப்பணம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

=============================================================================

நேற்றைய தினம் முக்கியமான சப்போர்ட் நிலையில் (3368 )  முடிவடைந்துள்ளது.  இதை உடைத்து கீழே செல்லுமா என்பது சந்தேகம் தான் கடந்த 10-15 நாட்களில் 3-4 முறை முக்கிய சப்போர்ட்டில் நழுவ விடாமால் மேலெழும்ப செய்தார்கள். இன்றும் அவ்வாறான முயற்சிகள் நடக்கலாம்.

 

தற்போதைய முக்கிய சப்போர்ட் நிலைகள்  – 3333 –  3300 இவ்விரு நிலைகளை உடைக்காத வரை கரடிகள் போராட வேண்டி வரும்.  

இன்றைய முக்கிய மேல் நிலை 3400  –  3434 

3333 க்கு கீழ் வரும் நாட்களில் நழுவினால் – 2800 வரை செல்லும் வாய்ப்புகள் அதிகம்.  

Advertisements

8 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 17, 2009 at 9:22 முப

  Excellent article. All the lines are simply superb and acceptable one.

  Thank you very much for your views.

  Good Morning. Have a nice day.

 2. Thankyou very much sai sir for your wonderful and useful views.

  without you it is impossible to me to get these news.

 3. Thank you sir !

 4. Posted by செல்வி. on ஏப்ரல் 17, 2009 at 10:06 முப

  TOP 10 SHARES வலைப்பதிவு 2,00,000 வாசிப்புகளை கடந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  -செல்வி

 5. பயனுள்ள பதிவு… சிறுமுதலீட்டாளர்களுக்கு தக்க நேரத்தில் தேவைப்படும் மிகச் சரியான எச்சரிக்கை தந்தமைக்கு நன்றி!!!

 6. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 17, 2009 at 9:03 பிப

  Your views are excellent.

 7. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 17, 2009 at 10:34 பிப

  எனது கருத்து நம் சந்தை நிச்சயம் கீழ்தான் இறங்கும் . உண்மையான திசை தெரியும் வரை தினசரி வணிகம் சிறந்தது.

 8. Mr.SAI.hatsoff your views & analysis are
  excellent.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: