இன்றைய சந்தை


கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு உயர்ந்து வருகிறது ….   செயற்கையான ஏற்றமாகத்தான் தெரிகிறது

 08/04/2009  – 3157 க்கு சென்று நாள் இறுதியில் 3360 க்கு முடிந்தது.   நேற்றைய தினம் 3325 இல் துவங்கி நாள் இறுதியில் 3500 வரை சென்றது.    எந்த ஒரு வலுவான காரணங்களும் இல்லாமல் தான்.

 

டவ் ஜோன்ஸ் மற்றும் நிஃப்டி  சார்ட்டுகளையும் பாருங்கள்….

 

 

டவ் ஜோன்ஸில்கடந்த 10 நாட்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை  02/04/2009 அன்று 8000 தொட்ட பிறகு அதே நிலையில் பக்கவாட்டு நகர்வுகளை மேற்க் கொண்டு வருகிறது. ஆனால் நாம் கடந்த ஆறு வர்த்தக தினங்களில் 500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளோம்.   

 

இந்த அளவு என் வழி தனி வழி என்று பாதை மாறிய பயணத்திற்கு என்ன  காரணம்.சிறு முதலீட்டாளர்கள் இவ்வோட்டத்தில் பங்கு பெறுகிறார்கள்?   வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்களாஇல்லை என்பதே பரவலான பதில்.  (தரகு நிறுவன நண்பர்கள் பதில் அளிக்கலாம் எந்த அளவு சிறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று)

 

சரி… சமீப காலத்தில் இது போல நாம் அதிகம் விலகி சென்றது உண்டாஆம் ஜூலை 16 இல் இருந்து ஆகஸ்ட் 16 காலகட்டத்தில் டவ் ஜோன்ஸ் 11500 – 11700 இல் நிலையாக நின்ற சமயம் நாம் 3800 இல் இருந்து 4600 க்கு பயணம் செய்தோம்.  

 

அதற்கு பாராளுமன்றத்தில் நிகழ்ந்த் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அரசு வெற்றி பெற்றது மற்றும் பல சர்ச்சைகளுக்கு இடையில் அதிக எதிர்பார்ப்புடன் நிறைவேறிய அணு சக்தி ஒப்பந்தம் என்று காரணங்கள் இருந்தது.  

 

4600 க்கு பிறகு நடந்த நிகழ்வுகள் சந்தையின் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன

 

இன்றைய முக்கிய நிலைகள்

3600-  3550 – 3533 – 35173473 – 3440 – 3390 – 3308

 

==================================================================================================

நான் எதிர் பார்த்த சரிவுகள் தள்ளி போகிறது  தள்ளி போடப்படுகிறது.    தள்ளிப்போடப்படும் எந்த ஒரு செயலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். 

 

டிரெண்ட் ரிவர்சல்தொழில் நுட்ப பகுப்பாய்வில் இம்முறை எனக்கு தோல்வியே..

 

///எனது நிலை…… எனது பொசிஷனல் டார்கெட்டான 2800-2600 இல் எந்த மாற்றமும் இல்லை….  இதை நான் யார் மீதும் திணிக்கவில்லை. ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம்……!!!!!!!……?????? –  Anbu////

 

எனது எதிர்பார்ப்பு தவறியது  உன்மைதான்….   அதில் என்ன சந்தேகம்….   ?  அந்த வரிகளிளேயே தெளிவாக இருக்கிறது,

 

1. இதை நான் யார் மீதும் திணிக்கவில்லை.

2. ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம்.

 

அதன் பிறகு  அதில் இத்தனை ஆச்சரிய குறிகளுக்கும், கேள்வி குறிகளுக்கும் என்ன வேலை?

தாங்கள் சொல்ல வருவது என்ன என்று 2 வரி சேர்த்து எழுதி இருந்தால் நன்றாகருந்திருக்கும்.

 

தங்களின் முதல் வருகைக்கும்  !!!!!!!  ????????  க்கும் மிக்க நன்றி. 

 

முன்பு ஒரு முறை சொன்னதை போல நான் சொல்வது போலத்தான் சந்தையின் போக்கு என்றும் அமையும் என்றால் இந்தியாவின் அடுத்த அம்பானி நானாகத்தான் இருப்பேன்”  தொடர் வெற்றி என்பது எத்துறையிலும் சாத்தியம் இல்லை.    இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

 

நண்பர்களே 

 

இங்கு நான் எழுதும் சில வரி செய்திகளால் பெரிதாக எந்த ஒரு பலனும் இருக்கப்போவதில்லை. எனது பார்வையில் ஏற்படும் சொந்த கருத்துகளை பதிவிட்டு வருகிறேன்.    அதை உங்களுக்கு கிடைக்கும் தகவல்களில் ஒன்றாக மட்டும் எடுத்துகொள்ளுங்கள்.   உங்களுக்கு கிடைக்கும் மற்ற தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து முடிவினை சுயமாக  எடுங்கள்.

Advertisements

12 responses to this post.

 1. yes. 100% correct

 2. Dear sir , We are always with you . We Respect your views. Don’t worry about !!!!!…????..

 3. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 16, 2009 at 1:21 பிப

  “நான் சொல்வது போலத்தான் சந்தையின் போக்கு என்றும் அமையும் என்றால் இந்தியாவின் அடுத்த அம்பானி நானாகத்தான் இருப்பேன்”

  உண்மையான வரிகள் குறை சொல்பர்வர்கள் சீந்திக்கலாம்.

 4. Posted by S. Karthi, Karur on ஏப்ரல் 16, 2009 at 1:23 பிப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  “கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு உயர்ந்து வருகிறது …. செயற்கையான ஏற்றமாகத்தான் தெரிகிறது” – என்ற முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வரியுடன் இன்றைய கட்டுரையை துவக்கி உள்ளீர்கள்.

  சந்தை இது போன்று நிறைய தருணங்களில் அதிர்ச்சி கலந்த குழப்பங்களை அளித்துவிட்டு சென்றிருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் ஒரு திசை நோக்கிய நகர்வில் மட்டுமில்லாமல் மேல் மற்றும் கீழ் என்று இரண்டு பக்கமுமே ஓரவஞ்சனை இல்லாமல் அரங்கேறியிருக்கின்றன. கீழே இறங்க ஆரம்பித்தால் சிறிதும் தயக்கமே இல்லாத இறக்கம், அதேபோல் ஏற ஆரம்பித்தாலும் சிறிதும் ஓய்வே இல்லாத ஏற்றம்,,,,,தற்போது ஏற்றத்தில்,,,,,,

  பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சந்தையின் இந்த உயர்வை பற்றி தங்களது செய்திகளில் குறிப்பிடுவது சந்தை பக்கம் அதிகம் வராமல் ஒதுங்கி இருக்கும் சிறு வணிகர்களிடையே சந்தைக்குள் வர வேண்டுமென்ற ஒரு எண்ணத்தையே ஏற்படுத்துவதாக தெரிகிறது. ஏனெனில் சந்தையின் சரிவுகளில் தரமான நிறைய நிறுவங்களின் பங்குகள் மிகவும் மலிவு விலையில் கிடைத்தன. (eg: tatasteel Rs. 149 on 06Mar09. but today it’s price is 299 high)

  அந்த மாதிரியான நேரங்களில் இவர்களின் முடிவுகள் சந்தைக்குள் இப்பொழுது வரவேண்டாம் என்றுதான் இருந்தன. ஆனால் தற்போது பெரும்பாலான நிறுவன பங்குகள் அனைத்தும் மிகவும் உயர்ந்தே காணப்படுகின்றன. இந்த சூழ்நிலைகளில் சிறு வணிகர்கள் சிறிதும் பயமின்றி சந்தைக்குள் வரவேண்டுமென்றே நினைக்கின்றனர். சந்தை பற்றிய விசயங்களில் தொடர்ச்சியான தகவல் அறிதலில் இருந்து இவர்கள் ஒதுங்கிருப்பதால் இவ்வாறான முடிவுக்கு வருகின்றனர்.

  ஆனால் தின வணிகர்களிடையே மற்றும் சந்தையினை தொடர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் இந்த உயர்வுகள் நல்லதாக படவில்லை. ஏனெனில் தாங்கள் கூறியபடி இந்த மாதிரியான உயர்வுகள் பெரும் சரிவுகளையே தந்துள்ளன. எனவே ஒருவித எச்சரிக்கை உணர்வுடன்தான் தற்போது சந்தையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

  “தொடர் வெற்றி என்பது எத்துறையிலும் சாத்தியம் இல்லை” – அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.

  தங்களுடைய மிகுந்த பணிகளுக்கு இடையிலும் எங்களுக்காக இதுபோன்ற கட்டுரைகளை வழங்கி வரும் தங்களுடைய அயராத முயற்சிக்கு நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம்.

 5. டியர் சாய் சார்,
  வணக்கம். இன்று முதல் உங்களின் ஆதிக்கம் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்.
  மற்றபடி, மற்றவரைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
  காரணம் காய்த்த மரம்தான் எப்போதும் கல்லடிபடும்.
  உதைபடும் பந்துதான் மேலே எழும்பும்.

  ராஜன்.

 6. சாய் சார்,

  / ***
  நான் எதிர் பார்த்த சரிவுகள் தள்ளி போகிறது… தள்ளி போடப்படுகிறது. தள்ளிப்போடப்படும் எந்த ஒரு செயலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.
  ***/

  உண்மையான வரிகள்.

  காட்டாற்று வெள்ளம் போல சந்தை நிலைமை இன்று ஆகி விட்டது.

  நாங்கள் எப்போதும் உங்களோடுதான்

  தங்களின் எச்சரிக்கைக்கு மிகவும் நன்றி.

  நன்றி

 7. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 16, 2009 at 6:30 பிப

  Nothing is permanent .

  yesterday more than 100points rise.
  Today morethan 100 points fall.

  Intraday traders will be very cautious if they daily gothrough your blog.

  Sai sir ,Keep it up.
  This type of rise and fall is due to operators.
  But small investors position(?)
  Dont worry about comments.
  All the best in your efforts.

 8. share market magic .10% – 20% chages in a single day with out any important reason.

 9. “தான‌ம் கொடுத்த‌ மாட்டை ப‌ல்ல‌ புடிச்சி பாத்தானாம்” ம்னு ந‌ம்ம‌ ஊர்ல‌ ஒரு ப‌ழ‌மொழி உண்டு

  அந்த‌ மாதிரி ஆளுங்க‌ க‌மெண்ட்ஸ் கெல்லாம் FEEL ப‌ண்ணாதீங்க‌ சாய் சார்.

  நிப்டி லெவ‌ல் நீங்க‌ சொன்ன‌ ப‌டியே ச‌ரியா வ‌ந்த‌ப்ப‌ ஒரு பின்னூட்ட‌மும் போடாத‌வ‌ங்க‌ இப்ப‌ ம‌ட்டும் எதுக்கு பின்னூட்ட‌ம் எழுத‌றாங்க‌.

  உங்க‌ உண‌ர்ச்சியை அலைக்க‌ழிப்ப‌தே அவ‌ர் நோக்க‌ம்.அத‌ற்கு இட‌ம் த‌ர‌ வேண்டாம் சாய் சார்.

  WE ARE ALWAYS WITH YOU

 10. sai sir dont worry cary on

 11. Posted by சரவணன் ஓசூர் on ஏப்ரல் 17, 2009 at 12:04 முப

  திரு சாய் சார் அவர்களுக்கு,

  நான் சரவணன் ஓசூர் , டெக்னிகல் பற்றி ஓரளவு தெரிந்த முறையில் நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த சமயத்தில் பல மினி நிபிட்டி களை செல்லிங் பண்ணி வைத்தேன் . அந்த சமயம் உங்கள போல் யாரும் எனக்கு அறிவுரை சொல்ல இல்லை எனவே அந்த பெரும் சரிவு எனக்கும் பெரிய சரிவாக முடிந்தது.

  இந்த முறை நான் மனம் தளர போவதில்லை . உங்களை போல் நானும் நம்புகிறேன் i still belivemarket will touch 3150 before expiry.

 12. Posted by சரவணன் ஓசூர் on ஏப்ரல் 17, 2009 at 12:15 முப

  பலர் nifty 2548 முதல் 3505 வரை சென்ற காளை ஓட்டத்திற்கு அநியாயமாக ELIOTS WAVE தியரி மேல் பழி போட்டார்கள் . அனால் அதுவும் கடந்த மூன்று நாட்களாக பொய்த்து போனது. பிறகு எதை நோக்கி இந்த காளைகளின் ஓட்டம் ? ? . . .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: