எனது பார்வை


நேற்றைய பதிவில் நான் சொன்னது…..

//முக்கியமான நிலைகள் – 3044 / 3066  காளைகளுக்கும்   2980 / 2970  கரடிகளுக்கும்//  

இருவருக்கும் சந்தை சம வாய்ப்புகளை தருவது போல போக்கு காட்டி,    காளைகளுக்கு சாதகமாக முடிவடைந்தது. 

காரணமே இல்லாமல் காலையில் 2960 வரை சென்றது ஆச்சரியம்!!! அதன் பிறகு எதிர் பார்க்கப்பட்ட அளவிற்கு செல்லிங் பிரசர் ஏற்படாததும்.. அமைதியாக மேலேறி 3025 க்கு மேல் தனி ஆவர்த்தனம் செய்தது அதை விட ஆச்சரியம்.

3066 என்று சொன்னதற்கு காரணம் அது கேப் டவுன் ஆனதால் ஏற்பட்ட இடைவெளி பகுதி …  அந்த பகுதிக்குள் சென்றால் 3127 – 3140 வரை சாத்தியம் என்பதால் தான்,  இன்று உலக சந்தைகளின் உற்சாகத்தை அடுத்து அந்த இடைவெளியை நிரப்பபடாமல் கூட  மேலே செல்லலாம். 

மார்ச் மாதத்தில் ஏற்பட்ட 3 கேப் அப் மற்றும் 1 கேப் டவுன் இடைவெளிகள் நிரப்பப்படாமல் உள்ளது.   கீழே 3 இடைவெளிகளை வைத்து அதிக உயரங்களை அடைய முடியாது.  அப்படி சென்றால் அது பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் கதை தான்.

இன்று நிச்சயம் பணவீக்கம், பண வாட்டமாக ஒரு 0 என்ற வட்டத்திற்கு கீழ் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பு… உள்ளது,  கூடவே தொடர்ந்து 3 நாள் விடுமுறை அதை சந்தை எவ்வாறு எதிர் கொள்கிறது என்று பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில் 3170- 3250 வரை செல்லலாம்.   

இன்றைய முக்கிய நிலைகள்  – 

3195
3140

 

3100  
3085
3050
3030 
2995
2945

=============================================================================

நேற்றைய தினம் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்…   ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு எழுத நிறைய விசயங்கள் இருக்கிறது..  ஆனால் பதிவு நீண்டு விடும் என்பதாலும் யாரும் விடு பட்டு விடக்கூடாது   என்பதாலும் அனைவருக்கும் பொதுவான நன்றிகள்.

டெக்னிகல் விசயங்களை எழுதுவதில்லை என்ற வருத்தத்தை  இந்த வாரத்தில் இருந்து நிவர்த்தி செய்கிறேன்.

சற்று கூர்ந்து கவனித்தால் கடந்த 10 நாளைய பதிவுகளில் டெக்னிகல் விசயங்களும் இலை மறை காயாக கலந்திருக்கும்.

வரும் வாரத்தில் இருந்து 2 தனிப்பதிவுகளாக எழுதுகிறேன்.   

முக்கிய வேண்டுகோள்  – புதிய உறுப்பினர்கள் சந்தை வேலை நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.  உங்களது சந்தேகங்களை யாஹூவில் கேளுங்கள். 

அனைவரும் பொதுவான சந்தேகங்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.   நிச்சயம் நான் அல்லது அதை படிக்கும் நமது நண்பர்கள் யாராவது பதில் அளிப்பார்கள்.  

=============================================================================

விமல் –

//as per ELLIOTS theory,இனி மேல் சந்தைக்கு ஏறு முகம்தான் என்று நாணயம் விகடன்-ல் போட்டு உள்ளதை பற்றி தங்கள் கருத்து என்ன என்று கூறுங்கள் //

ஏறினால் சந்தோஷமே .. ஏறக்கூடாது என்று நான், என்றும் சொல்லவில்லை…  ஏற வேண்டும் ஏறி நிலைப்பட வேண்டும் என்பதே எனது விருப்பமும்.   தற்போதைய ஏற்றம் தற்காலிகமானது என்பது தான் எனது கருத்து.

விமல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. ஆனால் ஒருவரின் பார்வையை இன்னொருவரிடம் சரியா, தவறா   என்று ஆலோசனை கேட்பது முதல் தவறு….

2550 இல் நான் டார்கெட் 2850-2925 என்று சொன்னபோது இப்படி ஒரு கிறுக்கன் சொலகிறான் அது சரியா, தவறா  என்று அவர்களிடம் கேட்டீர்களா?

அல்லது அக்டோபர் மாதம் நான் ஒரு மாடல் போர்ட் போலியோ போட்ட சமயம் யாரிடாமாவது கேட்டது உண்டா சரியா தவறா என்று.   

அவர்கள் அதிக மக்கள் படிக்க கூடிய பத்திரிக்கை…  நிச்சயம் தகுந்த ஆராய்ச்சிகளுக்கு  பிறகு தான் வெளிவிடுவார்கள் அதில் நம்பிக்கை இருந்தால் அதை பின் தொடருங்கள்… அதில் சந்தேகம் இருந்தால் அவர்களிடமே கேட்டு நிவர்த்தி செய்யுங்கள்.   

எலியட் வேவ் பற்றி நான் அதிகம் அறியாதவன் / பின் தொடராதவன் நமது வாசகர்கள் யாருக்காகவது தெரிந்திருந்தால் வரை படங்களுடன் விளக்கமளித்து மெயிலில் அனுப்புங்கள்…  உங்களது பெயரிலேயே அதை பதிவிடுகிறேன்.  அனைவரும் பயனடையட்டும்.

இது மட்டும் அல்ல வெவ்வேறு டெக்னிகல் விவரங்களை கட்டுரைகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். அவரவர் பெயரில் பதிவிட நான் தயார்.

============================================================================

வரும் திங்களில் இருந்து சிறு வேலை பளு காரணமாக ஒரு 10 நாட்களுக்கு தினசரி நிப்டியின் நிலைகளை மட்டும் எழுத உள்ளேன்.  

தொழில் ரீதியான புதிய சில முயற்சிகளை / செயல்களை துவங்க உள்ளதாலும்

கூடவே பதிவிற்கு தரும் முக்கியத்துவம் நான்  எனது வாடிக்கையாளர்களுக்கு தருவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவாலாக உள்ளது… அது உண்மையும் கூட.  அதனால் இந்த இடைவெளி தேவைப்படுகிறது.   இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் பொருட்டு டெக்னிகல் பதிவுகள் இடம்பெறும்.

கடந்த 2-3 மாதமாக ஜீரோலாஸ் டிரேடு செய்ய முடியுமா என்று சில முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன்..  ஒரு 6 விதமான இண்டிகேட்டர்ஸ்-ஐ பயன்படுத்தி ஒரு பார்முலாவை  – எழுதியபோது ஒரு புதிய என்ட்ரி எக்ஸிட் கிடைத்துள்ளது.   அதை சோதனை செய்து பார்க்க உள்ளேன்.  இதில்  குறிப்பிடதக்க விசயம் என்னவென்றால்.. ஒரு டிரேடில் என்ட்ரி செய்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நமது என்ட்ரி லெவலையே ஸ்டாப் லாஸாக நிர்ணயம் செய்து கொள்ளலாம்.   என்ன ஒன்று சந்தையில் நாம் ஏறும் இறங்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்… முடிவுகளை உடனுக்குடன் எடுக்கவும் மாற்றவும்  வேண்டும்.    இதுவும் ஒரு காரணம்.

=============================================================================

பின் குறிப்பு – இங்கு நான் தொடர்ந்து எழுதிவரும் நிலைகள் நிப்டியின் ப்யூச்சர் நிலைகளே…   அதேபோல் சந்தையின் துவக்கம் அந்த நீல வண்ணத்தையொட்டி துவங்கினால் முதல் டிரேடிற்கு பயன்படுத்துங்கள்.   2 வது 3 வது நிலைகளில் துவங்கினால் இதை பயன் படுத்த வேண்டாம். காத்திருந்து மேலே அல்லது கீழே வரும் போது எதிர் திசைக்கு பயன்படுத்தலாம். 

Advertisements

14 responses to this post.

 1. Posted by S.Karthi, Karur on ஏப்ரல் 2, 2009 at 9:27 முப

  Dear Sai Anna,

  Thank you very much for your views. Nifty levels and one or two simple lines about the market trend is enough for next ten days.

  You have said a new formula and its name. But it is all new for us.

  Hearty congratulations for your trying anna. All the best.

  Good Morning. Have a nice day.

 2. Good Morning. Have a nice day.

 3. GOOD MORNING SIR…

 4. டியர் சாய் சார்,

  என்னுடைய கேள்வி உங்களக்கு மன வருத்தத்தை அளித்ததற்கு நான் மிகவும்
  வருந்துகிறேன்.

  விமல்

 5. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 2, 2009 at 1:05 பிப

  சாய் சார் , நோ லாஸ் வர்த்தகம் செய்யும் போது நாம் வாங்கிய விலை வராமல் போனால் என்ன செய்ய வேண்டும் . எப்படி லாஸ் இல்லாமல் exit ஆக வேண்டும்

 6. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 2, 2009 at 3:11 பிப

  முன்று நாள் முன்பு LONG போனவர்கள் இன்று ஜாக்பொட் தான்.

 7. Dear sai sir,
  Dont get angry abt Mr. vimal query..
  We strongly follow ur views.
  im also read that article..
  That is for long term view till 2016.
  We thought, we have rights to clear any doubts with u if we cross like this.
  Nothing Else..

  Thanks.

 8. Posted by சாய்கணேஷ் on ஏப்ரல் 2, 2009 at 5:24 பிப

  திரு விமல் / பப்பி ராஜன்

  எனக்கு வருத்தமும் இல்லை கோபமும் இல்லை

  🙂

 9. Thanks……!!!!!

  Rajan.

 10. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 2, 2009 at 6:07 பிப

  திரு விமல் அவர்கள் , உங்கள் கேள்விக்கு சாய் அவர்கள் விளக்கமாக பதில் அளித்துள்ளார் .அதுவும் முதல் பக்கத்தில் இதில் எங்கு மன வருத்தம் வந்தது .
  TECHNICAL பார்வை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் , அவரவர் நிலையில் அது சரி .
  லாங் போகிறவர்கள் அத்ற்கு வேண்டிய நிலையை ஆராய்வார்கள் .அது போல ஷோர்ட் போகிறவர்கள் அத்ற்கு வேண்டிய நிலையை ஆராய்வார்கள்
  முடிவு உங்கள் கையில் தான்

 11. Posted by சாய்கணேஷ் on ஏப்ரல் 2, 2009 at 6:40 பிப

  Pre-open moves

  U.S. stock futures pointed to a second day of strong gains Thursday, with the G20 meeting of global leaders in London working on a deal to sharply increase the emergency resources of the International Monetary Fund.

 12. wht happend to 10K to 10L project

 13. டியர் சாய் சார்,
  /***
  திரு விமல் / பப்பி ராஜன்
  எனக்கு வருத்தமும் இல்லை கோபமும் இல்லை
  ***/
  நான் உங்கள் நீண்ட நாள் வாசகன்.
  நான் அதிகம் பின்னுடம் இடுவதில்லை
  ஆனால் உங்களின் கட்டுரைப்படி தான் நான் முடிவு எடுக்கிறேன்.

  எங்களுடைய சந்தேகங்களை கேட்க உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார் இருக்கிறர்கள் ?
  அதனால் தான் உங்களிடம் கேட்டேன்.மற்றபடி உங்களை எரிச்சல் / கோபம் உண்டாக்கும் எண்ணம் இல்லை.

  நன்றி.

  – விமல்

 14. Hi Sai,

  Thanks for the reference.
  Really helpful links

  Thanks again,
  Kumar

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: