பதிவுலகில் எனது ஒரு வருடம்


அனைவருக்கும் வணக்கம்…

நான் முக்கியமான நாள் என்று சொன்னது இதைத்தான்….  பதிவுலகில் நான் கிறுக்க ஆரம்பித்த நாள்.. ஒரு வருடத்தை பூர்த்தி செய்து, இன்று இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கின்(றேன்)றோம்.

வடிவேலின் “நானும் ரவுடிடா” என்ற காமெடி ஸ்டைலில் … நானும் பதிவர்டா என்று அலப்பறை செய்த ஆரம்ப நாட்கள் நினைவில் வருகிறது. 

தமிழில் எழுதவேண்டும் என்று துவங்கிவிட்டேன் முதல் 2 மாதங்கள் அதிகமாக எழுதவில்லை. காரணம்  ஒரு வித கூச்சம், தயக்கம்,  தடுமாற்றம்..    நாம் எழுதுவதை யார் படிப்பார்கள்..? அந்த அளவிற்கு நாம் கிறுக்குவது அடுத்தவர்களுக்கு பயன் தருமா ?   பலரின் பார்வையில் வைக்கும்  போது நமது கணிப்புகள் சரியாக இருக்கவேண்டுமே ஒரு உளறலாக இருக்கக்கூடாதே என்ற பயம்.    அதையெல்லாம் உடைத்தெறிய பல நண்பர்கள், தோழிகள் உதவியாக இருந்தனர். 

 பல வருட அனுபவம் இருந்தாலும் நமது கருத்துகளை  ஒரு தொகுப்பாக நமது கைப்பட் எழுதும் போது நம்மை மென்மேலும் மேம்படுத்த உதவுகிறது.  அந்த வகையில் எனது கடந்த ஒரு வருடப்பயணம் மிகப்பயன் உள்ளதாக அமைந்தது. 

முன்பொருமுறை நான் சொன்னது போலவே ஆங்கிலத்தில் கொட்டிக்கிடக்கும் பதிவுகளோடு / தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது எனது பதிவுகள் ஒன்றும் இல்லை. இருந்தும் தமிழில் ஒரு பெரிய வெற்றிடம் (இடைவெளி) உள்ளது, அந்த வகையில் தான் என் போன்றவர்களின் கிறுக்கல்களுக்கும் ஒரு மேடை கிடைத்துள்ளது.  உங்களின் ஆதரவுடன் எனக்கு கிடைத்துள்ள இந்த இடத்தை / அங்கீகாரத்தை தக்க வைத்து கொள்ள  இந்த வருடத்தை பயன்ப்படுத்த வேண்டும்.  தினசரி ஒரு சில வரிகள் கிறுக்காமல் பலருக்கும் பயன் தரும் வகையில் பல புதிய விஷயங்களை உள்ளடக்கியதாக இனி பதிவுகள் வரவேண்டும் என்பதே எனது ஆசை… அதற்கு உங்களின் ஆதரவு என்றும் தேவை.

கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள்,  மற்றும் பின்னூட்டம் / தொலைப்பேசி வாயிலாக தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

எனது பதிவுகளை பலருக்கு அறிமுகப்படுத்திய தமிழ்மணம், திரட்டி மற்றும் தமிழிஷ் தளங்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

என்றென்றும் நட்புடன்…

சாய்கணேஷ்.

பிற்சேர்க்கை  – 

இன்றைய எனது பார்வை கட்டுரையை வலையேற்றம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் காலதாமதமாக வலையேற்றியுள்ளேன். 

 

Advertisements

44 responses to this post.

 1. Posted by கோவி.கண்ணன் on ஏப்ரல் 1, 2009 at 8:00 முப

  வாழ்த்துகள், வேர்ப்ரஸ் பதிவுகளுக்கு பதிவர்கள் பின்னூட்டம் இடுவது சற்று கடினமானது

 2. Posted by ரவிகுமார் on ஏப்ரல் 1, 2009 at 8:00 முப

  அன்புள்ள சாய்க்கு,

  தங்கள் சேவை மற்றும் சாதனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்……

 3. Posted by ராஜன் , சென்னை on ஏப்ரல் 1, 2009 at 8:05 முப

  எனக்கு உங்கள் இணையம் ஒரு மாதமாக தான் தெரியும். நன்றாக உள்ளது .வாழ்த்துக்கள். நன்றி !

 4. DEAR SAIJI!!
  CONGRATULATIONS….
  thank u very much for ur effort and hoping to continue in the years to come…i too came to know about our blog only three months back. it is a great and wonderful job…that too u r writing in tamil…we too improved a lot by reading ur posts…it is very very useful.
  thanks again…
  skarthee…

 5. கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

 6. Incredible efforts!
  Keep writing!

 7. வணக்கம் சார்
  வாழ்த்துக்கள். . .
  தொடரட்டும் உங்கள் பணி. . .
  அதற்கு எல்லாம் வல்ல ஷிரடி பாபா துணை இருப்பார். . .

 8. தங்கள் சேவை மற்றும் சாதனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

 9. மேலும் முன்பெல்லாம் டெக்னிகல் விஷயங்களை சொல்லித் தருவீர்கள்.ஆனால் இப்போது அது குறைந்து விட்டது.நாங்கள் எல்லாம் இன்னும் டெக்னிகல் விஷயங்களில் சொல்லிக்கொள்ளும் படி தெரிந்து கொள்ள வில்லை.
  இனி வரும் காலங்களின் சொல்லித்தருவீர்கள் என நம்புகிறோம்.

 10. Posted by Venkatasubramaniam on ஏப்ரல் 1, 2009 at 8:40 முப

  அன்பு சாய் அவர்களுக்கு,
  வாழ்த்துக்கள்.
  தாங்கள் நீளாயுள், நிறைசெல்வத்தோடு வாழ எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்.

 11. வணக்கம் சாய் சார்,
  வாழ்த்துக்கள், உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி.

 12. வாழ்த்துகள்

 13. Posted by சரவணக்குமார் on ஏப்ரல் 1, 2009 at 9:17 முப

  வாழ்த்துகள் சாய் கனேஷ்…

  சிறப்பான முதலாண்டு…மேலும் சிறக்க தொடரட்டும் உங்கள் பணி….

  -சரவணக்குமார்.

 14. Posted by S.Karthi, Karur on ஏப்ரல் 1, 2009 at 9:18 முப

  Dear Sai anna,

  Your articles getting mature and contents a lot of messages regarding the market news and other important world business events related to stock market.

  The readers who read your blog daily collecting much news about the market and trade well and safe.

  I am very happy to read your blog last one year. Your this service will continue forever for all of us.

  My hearty congratulations to you. God will always be
  above you to bless you
  below you to support you
  before you to guide you
  behind you to protect you
  beside you to comfort you
  and
  inside you to sustain.

  Good Morning. Have a nice day.

 15. வாழ்த்துக்கள்.

 16. ஷிரடி பாபா துணை.
  தங்கள் சேவை மற்றும் சாதனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
  உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி.

 17. Dear Sai,
  Hearty Congrats to your continued service.
  Right from the 1st blog onwards i never missed any of your words.
  Wish you to continue this ever!!!

 18. congratulations.

 19. Posted by நல்லசாமி தமிழ்செல்வன் கொச்சி on ஏப்ரல் 1, 2009 at 9:37 முப

  உங்களின் சேவை எஙகளுக்கு தேவை.
  பங்குசந்தை என்ற இருட்டறையில் உங்களின் பதிவு எங்களுக்கு தீபம்.ஆரம்பத்தில் இருந்த
  டெக்னிக்கள் விளக்கங்களை தற்போது மிகவும் குறைத்து கொண்டீர்கள்.
  இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

 20. dear sai
  தங்கள் சேவை மற்றும் சாதனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்……

  with regards
  mugham.m

 21. Posted by ப்ரியா on ஏப்ரல் 1, 2009 at 9:48 முப

  உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணா.மேன்மேலும் வெற்றிக்கொடி நாட்ட இறைவனை ப்ராத்திக்கிறேன்.

  தங்கை
  ப்ரியாசேகர்

 22. வாழ்த்துக்கள் சாய் சார் .நான் உங்கள் பதிவை ஆரம்பம் முதல் படித்து பயன் அடைந்து இருக்கிறேன் .உங்கள் சேவைக்கு நன்றி மென்மேலும் உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .

 23. வாழ்த்துக்கள்

 24. வாழ்த்துக்கள்!

 25. வாழ்த்துக்கள். . .
  தொடரட்டும் உங்கள் பணி. . .

 26. Posted by sankarankoil arun on ஏப்ரல் 1, 2009 at 10:36 முப

  வணக்கம் சாய் சார்,
  வாழ்த்துக்கள், உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி.

 27. உளமார்ந்த வாழ்த்துகள்!!

  எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே நீங்கள் வெறும் தொழில்முறை ஆலோசகர் மட்டுமல்ல!! மனம் திறந்த நண்பர்!! அனைவரிடமும் நட்பு பாராட்டும் இந்த குணம் உங்களை வாழ்வின் உயரங்களுக்கு இட்டுச் செல்ல வாழ்த்துகள்!!

  எவ்வளவோ சுவராஸ்யமான பதிவுகளை இந்த ஒரு வருடத்தில் அளித்துள்ளீர்கள்…ஒரே டெம்ப்ளேட்டில் இல்லாமல் தினசரி ஒரு நடையில் எழுதுவதே தங்களது தனித்துவம்..என்றும் தங்களது இப்பணியும் நமது நட்பும் இதே போல் தொடர விரும்பும்..rk

 28. அன்புள்ள சாய்க்கு,

  தங்கள் சேவை மற்றும் சாதனை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

 29. Posted by சேகர் on ஏப்ரல் 1, 2009 at 11:27 முப

  Many More Happy Returns Of The Day….

  “TOP10SHARES”

  🙂

  Sekar
  Bangalore

 30. Best Wishes…

  RAJAN.

 31. Posted by MUNAWAR BASHA.G.A. on ஏப்ரல் 1, 2009 at 1:06 பிப

  வணக்கம் சாய்,

  முதலாமாண்டில் இருந்து இரண்டாம் ஆண்டிற்கு அடியெடுத்து வைக்கும் “TOP 10 SHARES” க்கு மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள்.

  நீங்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் புகழோடும் செல்வத்தோடும் குடும்பத்துடன் இன்புற்று வாழ வேண்டுமாய் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  பங்கு சந்தையிலும் பதிவுலக பாதையிலும் உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும்…..

 32. Posted by Senthil kumar.R on ஏப்ரல் 1, 2009 at 3:13 பிப

  வாழ்த்துக்கள்! :):):)

 33. congrats sir Many More Happy Returns Of The Day….

 34. வணக்கம் தல…

  சிறிது இடைவேளைக்கு பிறகு சரியான நேரத்துக்கு வந்துடோம்ல… இன்றைய பதிவை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்தேன்… பதிவுலகின் ஒருவருட வாழ்க்கை என்பது சாதாரண விடயம் அல்ல… அதிலும் குறிபிட்ட துறை சார்ந்த பதிவுகளை மட்டும் தொடர்ந்து எழுவது என்பது, அதிலும் பலருக்கு வழிகாட்டியாக இருப்பதும் மிகவும் சாதரண வேலை இல்லை…

  பங்கு வர்த்தகத்தில் உங்களது சேவை நிச்சயம் ஒரு நாள் இலக்கை அடையும்.

  இது மேலும் தொடர வேண்டும் என்ற சிரிய ஆசையுடன்

  அன்பு தம்பி அருண்…

 35. HAI SAI ANNA,
  HOW ARE YOU? MY HEARTY CONGRATULATIONS TO YOU FOR YOUR WONDERFUL SERVICE.KEEP UP THE GOOD WORK.
  I WISH YOU ALL SUCCESS IN YOUR LIFE.PLEASE CONTINUE YOUR SERVICE AND BE HAPPY. THANKYOU.

 36. Posted by செல்வி on ஏப்ரல் 1, 2009 at 6:04 பிப

  சாய் சார் அவர்களுக்கு வணக்கம்.

  முதலாம் ஆண்டினை முழுதே நிறைவு செய்து இரண்டாம் ஆண்டினில் இனிதே அடியெடுத்து வைக்கும் TOP10SHARES க்கு வாழ்த்துக்கள்.
  முதலாமாண்டு வாழ்த்து என்பது எங்கள் வீட்டு குழந்தைக்கு வாழ்த்து கூறும்போது ஏற்படும் உணர்வும் உவகையும் தான் தோன்றுகிறது.
  தாங்கள் இந்த வலைப்பதிவினை ஆரம்பித்த நாள் முதலே வாசித்து அதனால் பயனும் அடைந்து வருகிறேன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள், சோதனைகளை சாதனைகளாகவும் தடைக்கற்களை படிக்கற்களாகவும் மாற்றும் வல்லமையோடு வாழ்வில் மென்மேலும் உயர இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

  செல்வி.

 37. HAPPY BIRTH DAY

 38. Posted by madurai gann traders on ஏப்ரல் 1, 2009 at 7:48 பிப

  DEAR SAI UNGAL PANI SIRAKKA ENGAL VALTHUKKAL

 39. Posted by V.SURESH, SALEM on ஏப்ரல் 1, 2009 at 9:05 பிப

  BEST WISHES FROM

  V.SURESH
  SALEM

 40. Dear sir Thanks for your work. please continue & write lot of market news

 41. DEAR சாய்,

  உமது குழந்தையின் முதல் வருட பிறந்த

  நாளுக்கு எனது பாராட்டுடன் கூடிய ஆசிகள்.

  நீங்களும் உமது குழந்தையும் மேன்மேலும்

  வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

 42. வாழ்த்துக்கள்…

 43. hello sai sir
  i saw your site just now only. happy for your one year help to all . keep help us. we are all member of your family thank u sai sir

 44. வாழ்த்துக்கள் சாய் கணேஷ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: