Archive for ஏப்ரல், 2009

இன்றைய சந்தை 29.04.2009

இன்றைய முக்கிய நிலைகள்

 3375 – 3393 – 3423 -3470 

3340 – 3323 – 3293 – 3244

நேற்றைய சரிவுகளை மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளது.      

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations. 

இன்றைய சந்தை 28.04.2009

இன்றைய முக்கிய நிலைகள்…

3550-3524 -3500- 3480 3451 – 3433 – 3406 – 3361

3515-520  நிலை ஒரு டபுள் டாப் நிலையாக உள்ளது,  எனவே அது உடை படாத வரை  மேல் நிலைகள் சாத்தியம் இல்லை.  டபுள் டாப் தாக்கம் 3400-3360 நிலைக்கு சென்றால் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations.

 

இன்றைய சந்தை 27.04.2009

உள்ளூர் நிகழ்வுகள்
  • ஆறு வார உயர்வு… அதை தக்கவைத்துள்ள 7 வது வாரம்.      ( ஆறு வாரமாக higher high and higher low வாக அமைந்த சந்தை 7 வாரத்தில் lower high and lower low வாக முடிவடைந்துள்ளது)
  • ஐசிஐசிஐ யின் Q4 ரிசல்ட்  35% அளவிற்கு வருமானம் குறைந்துள்ளது.  
  • இந்த வாரம் வெளிவர உள்ள, மிக பெரிய இரண்டு தகவல் தொடர்பு நிறுவனங்களான பாரதி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்- ன் Q4 ரிசல்ட்.   அதே போல DLF நிறுவனத்தின் ரிசல்ட்.
  • மிக முக்கியமாக –  ஒரே நேரத்தில் 50 நிறுவனங்கள் முதல் முறையாக FnO வர்த்தகத்தில் இருந்து நீக்கப்படும்   நிகழ்வு, இந்த 3 நாளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விசயம். 
  • வார இறுதியில் 4 நாள் தொடர் விடுமுறை.    இந்திய தொலைகாட்சிகளில் மன்னிக்கவும் பங்கு சந்தையில் அதிகம் விடுமுறை விடப்பட்ட மாதம் இதுவாகத்தான் இருக்கும்.
உலக நிகழ்வுகள்
  • அமெரிக்காவில் பரவி வரும் புது விதமான வைரஸ் காய்ச்சல், உலகுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்ற செய்தி.
  • வெள்ளிகிழமை உயர்வினை தற்போது இழந்து வரும் அமெரிக்க / ஐரோப்பிய சந்தைகள்.
  • கடந்த 4 வாரமாக 8000 இல் நிலை கொண்டுள்ளது டவ் ஜோன்ஸ் ஆனால்  நாம் கடந்த 4 வாரத்தில் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளோம். 
இன்றைய முக்கிய சப்போர்ட் நிலைகள்
3452 – 3410 – 3388 – 3328  
An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations 

இன்றைய சந்தை 24.04.2009

அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியை தீர்மானிக்கப்போகும் தேர்தலில் 50%  தொகுதிகளுக்கு வாக்கு பதிவு முடிவடைந்துள்ளது.

அதே போல் இந்திய பங்கு சந்தையில் முக்கியப்பங்கு வகிக்கும் பெருவாரியான நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்து விட்டது.   எதிர் பார்ப்பே மோசமாக இருந்ததால், எதிர் பார்த்ததை விட நல்ல ரிசல்ட் என்றே சொல்லலாம்.

நமது எதிர்பார்ப்பை போலவே கீழிருந்து 3370-80 வரை சென்றது 3375-80 களில்,  மதில் மேல் பூனையாக 3 மணி நேரத்திற்கும் அதிகமாக வர்த்தகமானது.

பிற்பகலில் ரிலையன்ஸ் ரிசல்டை தொடர்ந்து 3390 என்ற முக்கிய ரெஸிஸ்டன்ஸை உடைத்து மேலே 3440 இல் முடிவடைந்துள்ளது.   ( 3390 ஐ உடைத்து மேலே முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை)

தற்போதைய முக்கிய சப்போர்ட் நிலைகள் –  3420 – 3410 – 3390 – 3370 -3333 – 3249     இதில் கடைசியில் உள்ள இரண்டும் மிக மிக வலுவான நிலையில் உள்ளது.

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations 

இன்றைய சந்தை 23.04.2009

சரிவுகள் உறுதி செய்யப் பட்டாலும், அதிகமானவர்கள் சரிவினை எதிர் பார்ப்பதால்,  கால தாமதப் படுத்தும் வேலைகள் நடைப் பெறும்.  காரணம் சந்தையில் என்றும் பெரும்பான்மை ஜெயிப்பதில்லை,  அரசியலைப் போல இங்கும் மைனாரிட்டிக்கு மவுசு ஜாஸ்தி..

சென்ற வாரம் வரை உயர்வுகளைப் பற்றி பேசி வந்த மீடியாக்கள் உட்பட அனைவரும் எதிர் பார்ப்பது சரிவினை.   எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றம் தான்.  கடந்த சில நாட்களாக அனைவரும் எதிர்பார்ப்பது கரடியார் செஞ்சுரி அடிப்பார் என்று ஆனால், அவரோ நிதானமாக ஆடி வருகிறார்.  ஆனால், யாரும் எதிர்பார்க்காத சமயம் செஞ்சுரி அடிச்சு அசத்தலாம்.

3370 வரை சந்தைகள் உயர வாய்ப்புகள் உள்ளது.  அதன் தொடர்ச்சியாக சரிவடையலாம்.

Bear markets have no support    –  only resistance  தற்போது  3390 என்ற நிலை  கரடிகளுக்கான பாதுகாப்பு அரண்.

இன்றைய முக்கிய நிலைகள்  –  3355   – 3320

இன்றைய சந்தை 3388  – 3250 க்கு இடையில் ஊசலாடலாம். 

 

 

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations 

 

 

 

கோல்டன் ரூல்ஸ் – நினைவூட்டல்

=============================================================================

வினோத்ஜி நமஸ்தே… உங்களின் நேற்றைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.   ஒரு வட இந்தியரின் குறிப்பாக பங்கு வணிகத்தில் கொடிகட்டி பறக்கும்  ராஜஸ்தானியர்களில் ஒருவரிடம் இருந்து,  ஒரு தமிழனுக்கு கிடைக்கும் இந்த பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.    நிச்சயம் சந்தையில் தங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதை, அறிமுக உரையாடலில் தாங்கள் கேட்ட கேள்விகளே பறை சாற்றியது.  என்னடா வில்லங்கமான கேள்வி எல்லாம் கேட்கிறாரே, தமிழ் தெரிந்த மார்வாடி ஜெயினுக்கு நாம் கால்ஸ் தந்து திருப்தி படுத்த முடியுமா என்று தயங்கியது உண்மை.  எனது முதாலாளி ஒரு ராஜஸ்தான் காரர் தான் அதன் தொடர்ச்சியாக பலர் நெருங்கிய நண்பர்கள்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளார்கள்.  அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் ஆட்களை எடை போடுவதில் கெட்டிக்காரர்கள்.   நான் பொறாமையுடன் (தொழில் செய்யும் வித்தை மற்றும் தங்கள் சமூகத்தில் உள்ள ஒற்றுமை,  போட்டியின்றி தொழில் நடத்தும் விதம்)  விரும்பும் சமூகத்தில் இருந்து பாராட்டுப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. 

பாராட்டியதைப் போல எனது தவறினை சுட்டிக் காட்டவும் தயங்க வேண்டாம்.

எனது முதலாளி-யிடம் நான் கற்ற பாடம் – யாரும் ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லாதே –  அது உனது தவறை மறைக்கும் செயல்.   ஏமாந்து விட்டேன் என்று உனது தோல்வியை ஏற்று கொள் அது உன்னை மேம்படுத்தும்.  என்பார், அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

=============================================================================

தம்பி கரூர் கார்த்தி –  மோகன் ராஜ் என்ற பெயரில் பின்னூட்டம் எழுதிய காலத்தில் இருந்து நான் உங்கள் எழுத்தின் ரசிகன்.   ஜீரோலாஸ் பிரேக் அவுட் – பற்றி சரியான நேரம் வரும் போது நிச்சயம் விளக்குகிறேன்.   மெட்டா ஸ்டாக்கில் உருவாக்கியுள்ள ஒரு இண்டிகேட்டர் தான் வேற ஒன்றும் இல்லை.  பயன் படுத்துவது மிக எளிது.  கடந்த ஒரு வாரமாக எனது ஆலோசனைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்.  ரிசல்ட் திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளது.   சில காரணங்களால் இங்கு படங்களை கூட பதிவிடவில்லை.   நேரில் வரும் சமயம் விளக்குகிறேன்.

நிப்டி நிலைகளை –  திட்டமிட்டே தவிர்க்கிறேன்.  காரணம் தேவையற்ற மன உளைச்சல் தரும் விமர்சனங்களை தவிர்க்கவே.   தற்போது கூட ஒரு புண்ணியவான் நமது வலைப்பதிவை தடை செய்ய சொல்லி செபியில் புகார் செய்ய உள்ளதாக மிரட்டல் பின்னூட்டம் எழுதி சென்றுள்ளார்.  🙂

இன்றைய சந்தை 22.04.2009

     நேற்றைய பதிவில் எந்த மாற்றமும் இல்லை… தொடர்ந்து 5 வது நாளாக காளைகள் போராடி வருகிறது.

     முதல் சுற்றில் ஓரளவு கரடிகளின் கை (நான் அந்த கையை சொல்லவில்லை 🙂  ) உயர்ந்து உள்ளது.  

      ஏதோ ஒரு காரணத்திற்காக சரிவுகளை தள்ளி போடுகிறார்கள்…    சந்தை 3500 ஐ உடைத்து மேலே செல்வது தற்போது சிரமமான காரியம்.  

     தற்போதைய சார்ட் ஆகஸ்ட் மாத சார்ட்டினை நினைவு படுத்துகிறது.  அன்று   4500 தற்போது 3500 அன்றைய முக்கியமான ஒரு சப்போர்ட் 3800, அந்த இடத்தில் ஒரு இடைவெளி இருந்தது.   தற்போது 2800 – 2860 இல் இடைவெளி.  அன்று 4500-4200 இடையே நீண்ட நாள் போராட்டம்.  இன்றும் அதே நிலை.  அன்றைய அரசியல் அணு சக்தி ஒப்பந்தம். தற்போது பொதுதேர்தல்.    அன்றை தினம் வாராந்திர சார்ட்டில் ஆர் எஸ் ஐ –  98  இன்றும் அதே நிலை. 

     ரிசல்ட் எப்படி அமையும் – வாக்காளர்களின் மன நிலையை நாம் சொல்ல முடியாது அதை போல,  வணிகர்களின் மன நிலை எப்படி என்றும் சரியாக கணிக்க முடியாது.   தேர்தலில் முக்கிய பங்காற்றும் பண பலம் / கூட்டணி பலத்தை போல சந்தையில் சித்தர்களின் கூட்டணி தான் ரிசல்டினை முடிவு செய்யும்.   நம்மை போன்ற சிறு வணிகர்களின் கையில் இல்லை.

     எனது zero loss indicator கரடிகளின் ஆதிக்கம் உயர்வதை காட்டுகிறது.. குறிப்பாக 3320 நிலைக்கு கீழ் ஒரு மணி நேரம் வர்த்தகம் ஆனால் கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்பிரதேசங்களுக்கு சென்றுள்ள பொசிசனல் கரடிகளும் களம் காண்பார்கள்.

     5  டி எம் ஏ விற்கு கீழ் முடிவடைந்துள்ளது… அடுத்த சப்போர்ட் 11 மற்றும் 13 டி.எம்.ஏ.

=============================================================================

     நேற்றைய பதிவில் எனது தவறினை உரிமையுடன் சுட்டி காட்டி திருத்தம் கோரிய நண்பர்களுக்கு மிக்க நன்றி.  என்ன செய்வது நானும் சாதரண மனிதன் தானே.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். 

=============================================================================

An investment/trading involves considerable risk. Invest/trade at your own risk to the extent you are comfortable. The analyst shall not be responsible for any Profit / Losses incurred for acting on these recommendations

இன்றைய சந்தை 21.04.2009

தொடர்ச்சியாக நான்காவது நாள் காளைகள் கரடிகளின் பக்கம் சந்தை செல்லாமல் தடுத்துள்ளன.    இன்றும் அந்த போராட்டம் தொடரும் 3300 நிலையில் போராடி மீட்பதற்கு முயற்சிக்கும்.   அந்த முயற்சி தோல்வியடைய அதிக வாய்ப்ப்புகள் உள்ளன.  ஆனால் இன்று கரடிகள் வலுவடைய வாய்ப்புகள் அதிகம்.

//மீண்டும் உயர்வதற்கான சில அறிகுறிகளை விட்டு வந்துள்ளது.  3440 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள//

நேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே 3440 வரை சென்றது… அதற்கு மேல் காளைகள் போராட்டத்தை கைவிட்டது.

இன்று சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் வங்கிதுறை பங்குகள், அதிலும் குறிப்பாக ஐசிஐசிஐ முக்கிய பங்கு வகிக்கும்.

என்னுடைய ஜீரோ லாஸ் பிரேக் அவுட் இண்டிகேட்டர் தற்காலிகமாக சந்தை கரடியின் கையில் நழுவி உள்ளதை 3420 இல்  Sell Signal வாயிலாக காட்டியுள்ளது.  3300 ஐ உடைத்தால் அது வலுவடையும்.

இன்றை முக்கிய நிலைகள்…   3400 – 3391 – 3361 – 3350 – 3333 –  3250