எனது பார்வை


வெள்ளிக்கிழமை டவ் மற்றும் ஐரோப்பிய ஃப்யூச்சர் சந்தைகளில் லாபத்தை உறுதி செய்யும் பொருட்டு… ஏற்பட்ட சிறு சரிவின் தாக்கம் தற்போதைய ஆசிய  மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் தெரிகிறது. 

ஆகையால், நமது சந்தையிலும் துவக்கத்தில் சிறு சரிவு காணப்படலாம் அதிக பட்சம் 3044 வரை செல்லலாம் பிற்பகலில் சர்வதேச சந்தைகளின் போக்கில் ஏற்படும் மாற்றத்தை அடுத்து அடுத்தக்கட்ட பயணம் தீர்மானிக்கப்படும்.

ஆனால் நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக நமது சந்தையை வழி நடத்தும் சித்தர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வில்லை. 

கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள்தான் சந்தையை வழி நடத்தினார்கள் என்றால் மிகையில்லை.

 பிற்பகலில் சர்வதேச சந்தைகள் பலவீனமாக இருந்தும் நமது சந்தையை 3140 என்ற முக்கியநிலைக்கு எடுத்து சென்றார்கள். 

 இன்றைய முக்கிய நிலைகள்

3040 என்பது பொசிசனல் கரடிகளுக்கான ஒரு கேட் பாஸ்..

 அதற்கு கீழ் நழுவாத வரை காளைகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். 

 • 3211
 • 3175
 • 3154
 • 3140 
 • 3115
 • 3100
 • 3075
 • 3044   – இந்த இடத்தில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகும்..
 • டெக்னிகல்  –

  Bear’s will Give  a Mega hit in coming Days….

  எனது பொசிசனல் டார்கெட்டான 2800 என்பது உறுதி அதற்கு அடுத்த கட்டமாக  2575 க்கு கீழ் நழுவினால் 2200-2000 என்பது எனது புதிய பார்வை.   அதுவே அதிகபட்ச கீழ் நிலையாக இருக்கலாம்..

  சந்தை முக்கியமான நிலையில் உள்ளது,  சிறு முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்வதை தவிர்க்கலாம் என்பதே எனது கருத்து.  தற்போது அதை வாங்கலாம் இதை வாங்கலாம் என்று பரிந்துரைகள் பல வருகின்றன. ஆனால், அனைத்து பங்குகளும் 15-20-30 % வரை கடந்த மாதத்தில் உயர்ந்துள்ளது என்பதை மனதில் கொள்ளவும்.

  3350 க்கு மேல் நிலைப்படாதவரை இந்த ஏற்றத்தை தக்கவைக்க இயலாது.  தற்போதைய சூழ்நிலையில் 3300 என்பது அவ்வளவு எளிதல்ல.   

  ===========================================================================

  சந்தையில் வலம் வரும் வதந்திகளில் –  இரண்டு…

  1. சுவிஸ் வங்கியில் உள்ள பணம் உலக பங்கு சந்தைகளுக்கு இடம் பெயரத்துவங்கியுள்ளது குறிப்பாக இந்தியர்களுக்கு சொந்தமான 84 லட்சம் கோடிகள்.

  2. தேர்தல் செலவிற்காக அரசியல் கட்சிகளின் ஆசியுடன் சந்தையில் விளையாடுகிறார்கள்.

  உதராணத்திற்கு ஒரு விளையாட்டு அக்ருதி 10 நாளில் 1000 இல் இருந்து 2300 அங்கிருந்து ஒரே நாளில் 1000 க்கும் கீழ் சென்று விட்டது.

  இவை இரண்டும் வதந்திகளே…   ஆனாலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

  Advertisements

  9 responses to this post.

  1. Posted by கோவை சக்தி on மார்ச் 30, 2009 at 9:40 முப

   அன்புள்ள சாய் சார் ,
   இனிய காலை வணக்கம் .தங்கள் எச்சரிக்கை மற்றும் தகவல்களுக்கு மிக்க நன்றி .எச்சரிக்கை பயணம் தொடரலாம் .

  2. வணக்கம்
   நன்றி – எச்சரிக்கை & தகவல்களுக்கு

  3. Posted by S. Karthi, Karur on மார்ச் 30, 2009 at 10:51 முப

   உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

   சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கி தவிக்கும் நாட்களில் எல்லாம் பெரிய சந்தைக்கு மிகவும் சாதகமான விஷயங்கள் வந்தாலும் கூட அதற்கு சந்தையின் பிரதிபலிப்பு என்னவோ சுமார் 30 முதல் 50 புள்ளிகள் வரை மட்டுமே இருக்கும்.

   ஆனால் கடந்த வாரங்களில் சந்தை மிகவும் சர்வ சாதரணமாக 100 புள்ளிகளை அடித்தது, அதிலும் அவ்வளவு உயர்வுக்கு தகுந்த மாதிரியான பெரிய விஷயங்கள் ஒன்றும் இல்லாமலே. இந்த மாதிரியான உயர்வுகள் அனைத்தும் பயத்தையே ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இப்படிப்பட்ட உயர்வுகள் அனைத்தும் பின்னாளில் சந்தைக்கு பெரிய பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கின்றன பெரிய அளவில்.

   எனவே இந்த மாதிரியான சூழ்நிலைகளில் தங்களுடைய நிப்டியின் புதிய கீழ் நிலை தகவல் மிகவும் அருமை.

   “Bear’s will Give a Mega hit in coming Days….” என்ற சிறு வரியில் மிகப் பெரிய ஒரு தகவல் களஞ்சியத்தையே வைத்து விட்டீர்கள். மிகவும் அருமை அண்ணா.

   தங்களுடைய மற்ற தகவல்களும் கட்டுரையும் மிகவும் அற்புதமாக இருக்கிறது. தகவல்களுக்கு மிக்க நன்றி. நிப்டி நிலைகள் அருமை.

   இனிய காலை வணக்கம்.

  4. Posted by ராஜன் , சென்னை on மார்ச் 30, 2009 at 12:05 பிப

   3044 – இந்த இடத்தில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகும்..
   உருவானது. தினவர்த்தகம் உதவி இருக்கும் .as at 12.05PM

  5. //எனது பொசிசனல் டார்கெட்டான 2800 என்பது உறுதி.//

   🙂

  6. //3044 – இந்த இடத்தில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகும்.. //

   WOW GREATPA!!!!!!!!!

  7. Posted by ரவிகுமார் on மார்ச் 30, 2009 at 7:52 பிப

   அன்புள்ள சாய்க்கு,

   ஏன் வதந்தி என சொல்கிறீர்கள்…. நான் தைரியமாக சொல்வேன் இது ஒரு நடாகம் என்று…. என் செல் நம்பரோடு போடுங்க….எல்லோரும் பயந்தா பூனைக்கு யார் மணி கட்டுவது….

  8. Posted by ரவிகுமார் on மார்ச் 30, 2009 at 7:53 பிப

   சந்தையில் வலம் வரும் வதந்திகளில் – இரண்டு… அதற்கான பின்னுட்டம்…….

  9. Posted by சாய்கணேஷ் on மார்ச் 30, 2009 at 8:09 பிப

   கணேஷா நான் வக்கீலு வந்திருக்கேன்… நண்பர்கள் எல்லாம் வந்திருக்காங்க…

   என்று மட்டும் சொன்ன பத்தாது தலை

   முடிந்தால் ஒரு பொது நல வழக்கு போடுங்க

   சந்தையின் வேலை நேரத்தில் அறிவிப்புகள் எதுவும் இருக்ககூடாதுன்னு.. இது எந்த ஒரு குறிப்பிட்ட அரசுக்கும் எதிரானது இல்லை.. எல்லா அரசிலும் அதிகாரிகள் தான் இது போன்ற அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google+ photo

  You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  w

  Connecting to %s

  %d bloggers like this: