கடந்த இரு மாதங்களாக குறைந்து வந்த பணவீக்கத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் இன்று வெளிவந்த இது வரை வரலாறு காணாத 0.44% என்ற புள்ளி விவரத்தை பார்த்து கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்கள்.
கடந்த வாரம் வரை கவலையளித்து வந்த பணவீக்கம் (Inflation) தற்போது பண வாட்டமாக (Deflation) மாறி விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.
பணவாட்டம் என்றால் என்ன?
அடுத்த வரும் நாட்களில் தமிழ் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் பாடமே எடுப்பார்கள். அதற்கு முன் நாம் சுருக்கமாக பார்ப்போம்.
பணவாட்டம் என்றால் பின் வரும் அர்த்தங்களை எடுத்து கொள்ளலாம்…..
விலை மலிவாக கிடைத்தும் வாங்கமுடியாத நிலை….
அல்லது உற்பத்திக்கு ஏற்ற விற்பனை இல்லாத நிலை…..
உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும் ஒரு நிலை…..
அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி குறைய வில்லை….. இன்னும் டிமாண்டை குறையாமல் பார்த்துகொள்வதால் இப்படி ஒரு நிலை.. அதிக நாட்கள் அது சாத்தியம் இல்லை..
ஏற்கனவே வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் ஆட்டம் கண்டு வருகிறது. இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாலும் ஆச்சரியம் இல்லை. குக்கிராமத்தில் கூட நிலத்தின் விலையை உச்சத்தில் அமர்த்தினார்கள்..
இன்னொரு உதாரணம் கச்சா எண்ணை உற்பத்தி….
அடுத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள துறை ஆட்டோமொபைல்ஸ் விற்பனை இல்லை என்றால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அரசு என்ன செய்கிறது என்றும், வரும் வாரங்களில் வெளி வரும் புள்ளிவிவரங்கள் வீக்கமா வாட்டமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Posted by S. Karthi, Karur on மார்ச் 19, 2009 at 7:25 பிப
Today’s inflation gave a shock treatment for all of us.
This message about the deflation is superb.
Thank you very much.
Good Evening anna.
Posted by சாய்கிருஷ்ணமுராரி on மார்ச் 19, 2009 at 8:00 பிப
your slang super sir
Posted by SAAJ on மார்ச் 19, 2009 at 8:06 பிப
உங்கள் அலசல் இன்றைய நிலையை பற்றி நன்கு உணர்த்துகிறது.
Posted by simba on மார்ச் 19, 2009 at 9:41 பிப
வணக்கம் சாய் சார்,
நமது இந்திய அரசின் ஒரு சில விசித்திர நடவடிக்கைகளை புரிந்து கொள்ள யுகங்கள் பல ஆகும். அதிலும் இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பலவித குழப்பத்தையே ஏற்ப்படுத்துகின்றன.
எது உண்மை? எது பொய்? இதில் பல விவாதங்களை முன்னிறுத்த வேண்டும். அப்படி ஒரு கண்கட்டு நிகழ்ச்சியே இன்று வெளியான பணவீக்க விகிதம் என்று நினைக்கிறன்.
ஓட்டு போடுவதே இவர்களுக்கு அல்லது இவைகளுக்கு நாம் கொடுக்கும் ஒரு சுப முடிவாக இருக்கும்.
Posted by puppyrajan on மார்ச் 20, 2009 at 1:30 முப
Dear sir,
Good article and wish u to get 10L soon.