எனது பார்வை


   நேற்றைய துவக்கத்தில் தடுமாறிய காளையின் ஓட்டத்திற்கு பெட்ரோல் ஊற்றி உற்சாகப்படுத்திய   பெருமை பங்காளி அமெரிக்காவுக்கே..

   இன்றும் அவர் உதவி செய்வாரா?   சந்தேகம்தான்…. கடந்த ஒரு வாரமா அவர் காசில்தான் நம்ம அண்ணன் சரக்கு அடிக்கிறார்… அந்த கேங் ஓவர் குறைய 2  நாட்கள் ஓய்வு தேவையா, இல்லையா?   அதனால் 2  நாட்கள் தடுப்பாட்டம் (Side Way)  அல்லது தடுமாற்ற ஆட்டம் (Down Way) ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன். 

 இன்றைய போக்கு சித்தனின் போக்கில்தான் அமையும்….

   2800 உடைபடுமா என்பது சந்தேகம்….

   பின்நகர்ந்து முன்நகர்தல் என்ற போர் தந்திரத்தை காளைகள் கையாளும்… 

   டவ் ஜோன்ஸ் மற்றும் நிப்டியில் ஒரே மாதிரியான அமைப்பு உருவாகியுள்ளதை பாருங்கள்…

நிப்டி 30 நிமிட சார்ட்…

nifty

டவ் ஜோன்ஸ் 4 மணி நேர சார்ட்….

dow

இன்றைய முக்கியமான நிலைகள்….

 • 2845
 • 2828
 • 2790
 • 2775
 • 2765
 • 2745
 • 2727
 • 2702
===========================================================================

 சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் என்னை கேட்ட கேள்வி இது.. “4 அனலிஸ்ட்களை ஒரு இடத்தில் அமர வைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து…அதை கேட்கும் / படிக்கும் எங்களுக்கு தலை சுத்தல். அது… ஏன்டா இப்படி குழப்பறீங்க…. ?”   

 டெக்னிகல் என்பது – முன் நிகழ்வுகளை கொண்டு, எதிர் வரும் நிகழ்வுகளை கூற முயல்வதுதான்,  இதுவும் ஜோதிடம் போல தான்..  அதாவது இதுவும் நடக்கலாம், அதுவும் நடக்கலாம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு “லாம்”  அதனால்தான் மாறுபட்ட கருத்துகள்.   அதாவது அவரவர் பார்க்கும் பார்வையில் ஏற்படும் கருத்துக்கு ஏற்ப ஆதாரங்களை தர முயற்சிப்பதுதான்.

 உதாரணத்திற்கு…  கடந்த ஒரு வாரமாக ஏற்றத்தை பற்றி சொல்லி வந்த நான் இன்று எதிர்பார்ப்பது சின்ன சரிவு May be i am in Short அதற்கு ஏற்ற மாதிரி எனது பார்வை செல்லும் அதன் வெளிப்பாடே மேலே உள்ள படங்களாக இருக்கும்.   இதே படத்தில் வேறு ஒரு நபருக்கு ஏற்றத்திற்கான சாத்தியங்கள் தெரியலாம் அது அவரோட பார்வை. 

   முதலில் நாம் ஒரு முடிவுக்கு வரும் முன் அதிகம் அலசி ஆராய வேண்டும்…  அதன் மூலம் கிடைக்கும் முடிவினை நாம் நம்ப வேண்டும்.  அந்த நம்பிக்கைதான் முதல் வெற்றி.  கூடவே பொறுமை மிக மிக அவசியம். பொறுமை இல்லாமல் என்னதான் டெக்னிகல் தெரிந்தாலும் வெற்றியடைவது சிரமம் தான்.

   அதே போல் டெக்னிகல் வர்த்தகர்கள் அடிக்கடி டெக்னிகல் முறைகளை மாற்றக்கூடாது ஒவ்வொரு முறைக்கும் சில சாதக பாதகங்கள் உண்டு. எதுவும் 100%  வெற்றி பார்முலா கிடையாது. ஒன்றை பயன் படுத்தும் முன் அதை தொடர் பரி சோதனைக்கு உட்படுத்துங்கள்.  அதன் வெற்றி தோல்விகளை அலசி திருப்தி அளித்தால் அதை பயன்படுத்தவும்… பயன்படுத்த துவங்கிய உடனும் சிறு சிறு அளவில் வர்த்தகம் செய்து அதையும் ஒரு சோதனை ஓட்டமாகவே செய்துப்பாருங்கள்.  ஏன் என்றால் காகித வணிகத்திற்கும் நிஜ வணிகத்திற்கும் வித்தியாசங்கள் வரும்.   ஒரே பார்முலாவை பின்பற்றும் போது அதிகம் வெற்றிகள் வருதோ இல்லையோ நிச்சயம் தோல்விகள் வராது.

   இரண்டு நாட்களில் ஜோதிடத்தையோ அல்லது டெக்னிகலையோ கற்க முடியாது 2 நாட்களில் இதுவரை இப்படி ஒரு விடயம் தெரியாதே…இது போன்றும் வாய்ப்பு உள்ளதே என்று தெரிந்து கொள்ளலாம்.  அதை வைத்து வர்த்தகம் செய்ய முடியாது.  இப்படி ஒரு நாள் /இரண்டு நாட்கள் வகுப்புகளுக்கு சென்று அதிகம் தோற்றவர்கள் / தோற்பவர்கள் தான் அதிகம்.   அதை வகுப்பு எடுத்தவரின் தவறு என்று சொல்வதை விட நமது தவறு என்று தான் சொல்ல வேண்டும்.

                                                                                                               தொடரும்…….

===========================================================================

   வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்….   தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்திடும் அனைத்து நண்பர்களையும் என்றும் மறக்க மாட்டேன்.

   திரு. பைசல் – கொள்கை இல்லாமல் இருக்க இது என்ன அரசியல் கூட்டணியா? அதே நேரத்தில் 100 C + 6 seat என்ற பெரிய கொள்கை குறிக்கோள் எல்லாம் இல்லை…. (ஜோக்) அதை பற்றிய விவரம் கூடியவிரைவில் எழுதுகிறேன்.

Advertisements

10 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on மார்ச் 17, 2009 at 9:50 முப

  Dear Sai anna,

  Today’s article is really superb. Your concept about the analysts and their messages are fine.

  Good Morning. Have a nice day.

 2. nice
  thanks
  rajendrann

 3. I quite often questioned
  my self what is life, the answer
  came to me on single
  word “Goodness”
  – Dr. MS Udhayamoorthy

 4. Hi Sir,
  Wish u gr8 success in saiganesh Consultants.

 5. //டெக்னிகல் வர்த்தகர்கள் அடிக்கடி டெக்னிகல் முறைகளை மாற்றக்கூடாது ஒவ்வொரு முறைக்கும் சில சாதக பாதகங்கள் உண்டு. எதுவும் 100% வெற்றி பார்முலா கிடையாது. ஒன்றை பயன் படுத்தும் முன் அதை தொடர்சோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் வெற்றி தோல்விகளை அலசி திருப்தி அளித்தால் அதை பயன்படுத்தவும்… பயன்படுத்த துவங்கிய உடனும் சிறு சிறு அளவில் வர்த்தகம் செய்து அதையும் ஒரு சோதனை ஓட்டமாகவே செய்துப்பாருங்கள். ஏன் என்றால் காகித வணிகத்திற்கும் நிஜ வணிகத்திற்கும் வித்தியாசங்கள் வரும். ஒரே பார்முலாவை பின்பற்றும் போது அதிகம் வெற்றிகள் வருதோ இல்லையோ நிச்சயம் தோல்விகள் வராது.//

  Perfect.

 6. நான் இன்று எதிர்பார்ப்பது சின்ன சரிவு May be i am in Short
  100 % happen after false rally.
  when everyone buy we should sell – I am seeing another Warren Buffet in you.

 7. வணக்கம் சாய் சார்,

  மற்றும் ஒரு மறக்க முடியாத தினம். இன்றைய வர்த்தகத்தை கண்டிப்பா டைரியில் எழுதி வைக்க வேண்டும்.

  இன்று தாங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தது போல், ஒவ்வொரு analyst ஒவ்வொரு பார்வை. இதில் என்னை பொருத்த வரை நல்லா மை போட்டு நீங்க ஜோசியம் சொல்றீங்க என்று தான் சொல்வேன்.

  we r short from 2900 levels for a tgt of 2650.

  பிறகு 2500 நிலைகள் கண்டிப்பாக உடைபடாது என்று சொல்லி long நிலைகளை எடுக்க வைத்தீர்கள். அதற்க்கு 2800 என்ற தடை நிலையை வகுத்து, அதில் இருந்து short சென்றோம். இன்று அவ்வாறு வர்த்தகம் செய்தவர்களுக்கு அதல் பலன் எப்படி இருந்தது என்பதை வணிகம் செய்தவர்கள் உணர்வர்.

  இப்போ சொல்லுங்க மை போட்டு ஜோசியம் சொல்ல்றதுல நீங்க கில்லாடி தானே.

 8. எதை மேற்கோள் காட்டி பாராட்டுறது ??? மொத்த கட்டுரையுமா ??? இன்றைய பதிவு அப்படிதான் இருக்கு. வாழ்த்துக்கள். வர்த்தக வல்லுனர்களின் செயல்பாடுகளை உளவியல் ரீதியான அணுகுமுறையில், நயமான வார்த்தைகளில் போட்டு தாக்கியுள்ளீர். மேலும் அதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பது பற்றியும், ஒரு யுக்தியை பழகி தேறுவதற்கான எழிய வழிமுறையையும் குறிப்பிட்டு, காகித வர்த்தக தடுமாற்றத்தையும் தொட்டு விலாசிவிட்டீர். மொத்தத்தில்…

  மேலும் ஒரு சிறப்பான பதிவு. நன்றி.

 9. Posted by S. Karthi, Karur on மார்ச் 17, 2009 at 7:00 பிப

  Your 2800 nifty level,,,,superb anna!!!! You are rocking,,,,,,,,

 10. வணக்கம் சாய் சார்,

  TRADE -ல் PROFIT வரவேண்டிய நேரத்தில் LOSS செய்தபொழுது அதில் நான் என்ன தவறு செய்தேன் என நீங்கள் சுட்டிக்காட்டிய சமயம் வருத்தப்பட்டது உண்மை.
  நீங்கள் குறிப்பிட்ட குறைகளை களைந்து அதன் பலனை லாபமாக உணரும் போதுதான்….
  அது ஒரு தாயின் கடிந்தலாகவும் வழிக்காட்டுதலாகவும் இருந்ததை புரிந்துக்கொண்டேன்.

  தம்பி சிம்பா சொன்ன மாதிரி உண்மையிலேயே இன்றைய
  தினம் மறக்க முடியாத தினம்.

  தொடரட்டும் உங்கள் சேவை…..

  வாழ்க வளமுடன்……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: