Archive for மார்ச் 13th, 2009

அது போன வாரம், இது இந்த வாரம்

இது  போன வாரம்…………
cartoon-bear_bull-paper-money2
இது இந்த வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………….
bull
சொன்னது போல 100 அடித்த அண்ணன் காளை நிப்டியார் வாழ்க…..

எனது பார்வை

FII & DII Turnover (BSE + NSE)
(Rs. crore)
  FII DII
Trade Date Buy Sales Net Buy Sales Net
12/3/2009 1,863.16 2,050.02 -186.86 725.96 498.86 227.1
9/3/2009 974.01 1,058.95 -84.94 680.25 380.53 299.72
6/3/2009 1,788.28 2,062.96 -274.68 672.6 373.66 298.94
Mar, 09 8,514.43 11,467.81 -2,953.38 5,660.01 3,378.65 2,281.36

கடந்த ஒரு சில நாட்களாக இந்திய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.  

கடந்த மூன்று நாட்களில் சர்வதேச சந்தைகள் தங்களின் கீழ் நிலைகளில் இருந்து 6% வரை உயர்ந்துள்ளன…  ஆனால நாம் ?

நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல கரடிகள் எளிதாக தங்களது ஆட்டத்தை முடித்து கொள்ள விரும்ப வில்லை.  அவர்களின் ஆட்டம் தான் பாரதி ஏர் டெல் நிறுவன சீ ஈ ஓ தனது கையிருப்பு பங்குகள் (1.20 லடசம் பங்குகளை) விற்று விட்டார் என்ற செய்தியை சரியாக காலை 10.10 க்கு வெளியிட்டு உற்சாகமாக துவங்கிய சந்தையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.   இதுவும் சித்தர்களின் கைவரிசை தான்,  இதன் மூலம் மீண்டும் முன்னனி டி.வி நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்வி குறியாகியுள்ளது.   அதவது அந்த விற்பனை நடந்தது 6 மற்றும் 9 ம் தேதிகளில் அதற்கு அடுத்து இரண்டு நாட்கள் இருந்தது.  அப்போது எல்லாம் கிடைக்காத அறிய செய்தி இவர்களுக்கு சரியாக 10.10 க்கு கிடைத்தது எப்படி.  ? கூடவே சர்வதேச சந்தைகள் நேற்றைய தினம் நமக்கு சாதகமாக இல்லை.

வெச்ச குறி தப்பாது….

எது எப்படியோ சரிவும் / ஏற்றமும் கால தாமதப்படுத்தபட்டால் அதன் வேகம் அதிகமாக இருக்கும்.

நமது குறி 2850/2925.   ஒரு செஞ்சுரி முடிந்தால் டபுள் செஞ்சுரி…..  பார்ப்போம் என்ன நடக்கிறது என்று…. 

நேற்றைய நிலைகளே இன்றும், குறிப்பாக 2565 க்கு கீழ் நழுவாத வரை பெரிய பாதகம் இல்லை.

பின் குறிப்பு :-

மேலே Down Load என்ற பக்கத்தில் புதியவர்களுக்கு பயன் தரும் வகையில் ஏற்கனவே நாம் பதிவுகளில் எழுதிய சில  தகவல்களுக்கு  இனைப்புகளை தொகுத்து உள்ளோம்.  இன்னும் சில தகவல்களை ஒவ்வொரு பதிவாக படித்து தொகுத்து வருகிறோம்… வருகிறோம் என்று சொல்வதை விட வருகிறார் (சகோதரி பிரியா) என்று தான் சொல்ல வேண்டும்.   இந்த வேலையில் எனக்கு மிகுந்த உதவியாக செயல் பட்டு வருகிறார்.

சிலர் என்னிடம் கேட்கும் சில தகவல்களுக்கு உடனடியாக பதில் சொல்வதில்லை என்று வருந்த வேண்டாம் ஒரே நேரத்தில் பலருடன் பேசுவதால் தான். 

உங்களுக்கு தேவையான தகவலுக்கு உடனடியாக நாட வேண்டிய இடம் Mr Google ஆண்டவர் நாம் கேட்டு அவர் இல்லையென்று சொல்வதில்லை.  ஒரு வார்த்தை கேட்டால்  ஓராயிரம் பக்கங்களை அள்ளி தருவார்.  படிக்கத்தான் நம்மிடம் நேரம் இருக்காது.   கடந்த 2008 வரை 83 க்கும் அதிகமான வகுப்புகளுக்கு சென்றிருந்தாலும் எனது டெக்னிகல் அறிவை அதிகம் வளர்த்தவர் அவர் தான்.   ஒரு நாள் / இரண்டு நாள் வகுப்புகளில் நம்மால் பெரிதாக கற்று கொள்ள இயலாது… ஆனால் அங்கு கிடைத்த சிறு தகவல்களை நெட்டில் அலசினோம் என்றால் அதனால் கிடைக்கும் பலன் அதிகம்.

சரி சின்ன கேள்வி :-  இங்கு பதிவிடப்பட்ட சில PDF டெக்னிகல் புத்தகங்களை டவுன்லோடு செய்தவர்களில் யார் யார் முழுமையாக படித்து உள்ளீர்கள்?.

கீழ் காணும் இரு புத்தகங்கள் நன்றாக உள்ளது…  ஆர்வம் உள்ளவர்கள் படித்து பார்க்கவும்…

The Technical Analysys Course – By Thomas A. Meyers.  

How To Make Money Trading Derivaties –  Ashwani Gujral

Published By – Vision Books   (இவர்களிடம் சந்தை / டெக்னிகல் புத்தகங்கள் பல கிடைக்கும்)