எனது பார்வை.


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த வெள்ளியன்று எதிர்பார்த்ததை விட அதிகமாக சரிவுகளை மீட்டெடுத்தது… 

ஆனால் இந்த நிலைகளை தக்கவைக்க இயலுமா….    சின்ன சின்ன (2540, 2563 2573)  இடங்களை காலியாக வைத்து சென்றுள்ளார்.

அடுத்து வரும் இரண்டு நாட்களும் சந்தைகளுக்கு விடுமுறை என்பதால்….  மந்தமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.  

2620 க்கு மேலே நிலைப்பட்டால்  2645/65 வரை வாய்ப்புகள் உள்ளது…   மாறாக 2595/90 க்கு கீழ்

நழுவினால் 2550 வரை செல்லலாம்.

============================================================================

இன்னொரு விடயம்….

டவ் ஜோன்ஸ்  தனது அதிக பட்ச உயரமான 13851 இல் இருந்து தற்போது தான் 52 % அளவு சரிவடைந்துள்ளது.

ஆனால் நிப்டி இன்றும் தனது அதிகபட்ச உயர்வான 6357 இல் இருந்து 59%  சரிவில் உள்ளது..  அதிகபட்சமாக நாம் (2252 ஸ்பாட்)  64.50 % வரை சரிவடைந்துள்ளோம்.  

அதாவது இன்னும் உலக சந்தைகள் சம நிலையில் இல்லை…  நமது சரிவுகள் அதிகமாக உள்ளது.    உண்மையான பொருளாதார வீழ்ச்சி அவனுடையது ஆனால் அதிகம் அடி வாங்கியது நாம்.   இதைத்தான் தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்  என்பதா?

சந்தையில் புரியாத புதிர்கள் பல உண்டு அவ்வப்போது நமக்கு ஆச்சரியங்களை தரும்.. 

அந்த வகையில் மாருதி நிறுவன பங்கினை சொல்லலாம்..

கடந்த அக்டோபர் வீழ்ச்சியில் சரிவடையாத நிறுவனம் இது….   அதே போல் நிப்டியின் போக்கிற்கு நேர் எதிரில் பயணம் செய்கிறது…  கவனித்து பாருங்கள்…

Advertisements

10 responses to this post.

 1. Posted by S. Karthi, Karur on மார்ச் 9, 2009 at 9:27 முப

  மதிப்பிற்குரிய சாய் அண்ணா அவர்களுக்கு,

  இனிய காலை வணக்கம்.

  தங்களுடைய கட்டுரை நன்றாக இருக்கிறது. “2620 க்கு மேலே நிலைப்பட்டால் 2645/65 வரை வாய்ப்புகள் உள்ளது… மாறாக 2595/90 க்கு கீழ்” – என்று இரண்டே வரிகளில் சந்தையின் தற்போதைய நிலையினை மிகவும் தெளிவாக எடுத்துரைத்து விட்டீர்கள்.

  இந்த மாதிரியான குறுகிய நிப்டி நிலைகள் சந்தையில் தின வணிகத்திற்கு மட்டுமின்றி ஓரிரு நாட்கள் தங்களது நிலைகளை வைத்திருந்து பார்ப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

  அமெரிக்க சந்தை பற்றிய தகவல் அருமை. மாருதி நிறுவன பங்குகளைப் பற்றி தாங்கள் கூறியுள்ளதைப் போல் ஹீரோ ஹோண்டா நிறுவனப் பங்குகளும் நீண்ட நாட்களாக கீழே இறங்காமலேயே உள்ளது.

 2. இனிய காலை வணக்கம்.

 3. Thank you sir !!!

 4. THANK YOU SAI SIR.

 5. Posted by sankarankoil arun on மார்ச் 9, 2009 at 11:33 முப

  இனிய காலை வணக்கம்.

  தங்களுடைய கட்டுரை நன்றாக இருக்கிறது. “2620 க்கு மேலே நிலைப்பட்டால் 2645/65 வரை வாய்ப்புகள் உள்ளது… மாறாக 2595/90 க்கு கீழ்” – என்று இரண்டே வரிகளில் சந்தையின் தற்போதைய நிலையினை மிகவும் தெளிவாக எடுத்துரைத்து விட்டீர்கள்.

  any possible to come near 2700?

 6. thank u sai.ithu pothum.thank u so much.

 7. இன்னமும் எத்தனை நாளைக்கு அமெரிக்க சந்தைகளை தொடர்ந்து கொண்டிருக்க போகிறோமோ?
  ????????????????????????????

 8. சாய்…. இரண்டு நாட்களும் சந்தைகளுக்கு விடுமுறை

  இதே நிலை நீடித்தால் ஒரு வாரம் வேண்டும் என்றாலும் லீவு விடலாம்….

  நான் Jain Irrigation பங்கை கவணித்து வருகின்றேன் நல்ல ஏற்ற இறக்கங்களுடன் சந்தையில் இருந்துவருகின்றது வாங்கலாம? தயவு கூர்ந்து தெரிந்தவர்கள் பதில் கூறவும்… நன்றி……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: