எனது பார்வை


நேற்றைய சந்தையின் போக்கு மிகுந்த ஏமாற்றமே……  ஏமாற்றம் என்பதை விட ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான்!  எந்த இடத்திலும் கத்தியால் குத்தப்படவில்லை. ஆனால், ரத்தம் பீறிடுகிறதே என்ற பிரமிப்புதான்!!!

கடந்த ஒரு வாரமாக சந்தை எதிர் பார்ப்புக்கு மாறாக செயல் படுகிறது….    ஆயிரம் காரணங்களை அடுக்குவதில் அர்த்தம் இல்லை.   முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தேர்தல் அறிவிப்பு….  அது பற்றிய அறிவிப்புக்கு பிறகு சந்தையில் ஒரு மாறுபட்ட போக்கு தான் நிலவுகிறது.  தேர்தல் முடியட்டும் பிறகு பார்க்கலாம் என்பது போன்ற மனநிலை அனைவரிடமும் பரவலாக காணப்படுவது உண்மைதான். 

நேற்றைய முன் தினம் கூறியது போல

சிறு வணிகர்கள் 2-3 நாட்கள் சந்தையை வேடிக்கை பார்ப்பது நல்லது. கடந்த 2 நாட்களாக  சந்தையை சிலர் எதிர் பார்ப்புக்கு மாறாக வழி நடத்துகிறார்கள்.

கூடவே வதந்திகள்…

நேற்றைய சந்தையின் துவக்கத்தில் ஓ என் ஜீ சி நிறுவனத்தை பற்றிய வதந்தி சந்தையில் பின்னடைவை ஏற்படுத்தியது….   அதில் இருந்து அந்நிறுவன பங்குகள் சுதாரித்து நிலைப்பெற்றது… ஆனால் நிப்டியின் நிலை பரிதாபமாக…  

கூடவே மெக்டொவல் பற்றிய வதந்திகள்…

இந்த இடத்தில் ஒன்றை நினைவு கொள்ளுங்கள்… 

கடந்த அக்டோபரில் 2200 இல் இருந்து ஒரு வேகத்துடன் சந்தை 3298 க்கு பயணமானதும் அங்கிருந்து 2495க்கு வந்ததும் நினைவிருக்கலாம்.  அந்த சமயத்திலும் 1800-1600 என்று சொல்லி பலரை ஷார்ட் செல்லிங் செய்யவைத்ததும் நினைவிருக்கலாம். 

அது போன்ற ஒரு சூழ்நிலை தற்போதும் நிலவுகிறது….    சந்தை தனது கீழ் நிலையான (Closing Basis) 2525 ஐ இன்று உடைக்கும் ஆனால் முடிவு என்னவாக அமையும்?? என்பதே கேள்விக்குறி.

Bank Nifty –  வரலாறு காணத வீழ்ச்சியில் உள்ளது..

அக்டோபர் சரிவில் கூட இந்த அளவு கீழ் நிலையை எட்ட வில்லை….  அதைவிட 500 புள்ளிகள் சரிவடைந்துள்ளது.

இந்த அளவுக்கு அதிகமாக விற்கப்பட்ட நிலையில் (Over Sold   Zone)  உள்ளபோது ஒரு ஷார்ட்கவரிங் வேகம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். 

முக்கிய தடை நிலைகள்  –  2547 – 2566.

ஒரு மாற்றத்தை – சிறிய ஏற்றத்தை எதிர்பார்த்து இன்னும் ஓரிரு நாட்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது என்று முடிவு செய்துள்ளேன்.  

Advertisements

12 responses to this post.

 1. Sai sir,
  Mega thelivaga soli irrukurerkal, nandri.

  Thotarattum ungal thondu.

  ps

 2. Posted by S. Karthi, Karur on மார்ச் 6, 2009 at 9:17 முப

  உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  நேற்றைய சந்தை அனைவருக்கும் ஒருவித குழப்பம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்ற தங்களின் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று.

  “அளவுக்கு அதிகமாக விற்கட்ட நிலையில் (Over Sold Zone) உள்ளபோது ஒரு சார்ட்கவரிங் வேகம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்” என்ற தங்களின் வரிகள் சந்தை காளையின் போக்கில் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு சற்றே ஆறுதலான வார்த்தைகள்.

  இன்னும் ஓரிரு நாட்கள் சந்தையினை வேடிக்கை பார்ப்பது என்ற தங்களின் முடிவுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்.

  இனிய காலை வணக்கம்.

 3. //சிறிய ஏற்றத்தை எதிர்பார்த்து இன்னும் ஓரிரு நாட்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பது என்று முடிவு செய்துள்ளேன். //

  I’ll follow you the same

 4. இனிய காலை வணக்கம்

 5. Hello sir,
  As per your earlier Blog advice,
  IFCIEQ gone from 17rs to 26rs.

  Now, its came down again in 16.5, Is it advisable to buy now?

 6. HI TO ALL OUR FRIENDS.

 7. மதிய வணக்கம்

 8. THE WAYS OF APPROACH TO SUCEED.
  ——————————-
  Father : I want you to marry a girl of my choice
  Son : “I will choose my own bride!”
  Father: “But the girl is Bill Gates’s daughter.”
  Son : “Well, in that case…ok”

  Next Father approaches Bill Gates.

  Father: “I have a husband for your daughter.”
  Bill Gates: “But my daughter is too young to marry!”
  Father: “But this young man is a vice-president of the World Bank.”
  Bill Gates: “Ah, in that case…ok”

  Finally Father goes to see the president of the World Bank.

  Father: “I have a young man to be recommended as a vice-president. ”
  President: “But I already have more vice- presidents than I need!”
  Father: “But this young man is Bill Gates’s son-in-law.”
  President: “Ah, in that case…ok”
  This is how business is done!!

 9. next week holidays are

  10th March 2009 – Tue – Id-E-Milad
  11th March 2009 – Wed – Holi

 10. Hi !

 11. DEAR FRIENDS

  If you are trading only in nifty ( like me )
  plz see this sight
  http://www.niftyforum.com/niftyintraday.htm

  with regards
  mugham.m

 12. அமைதி என்று சொன்ன ஒரு வார்த்தைக்கே இன்று பல வித ஆர்ப்பாட்டங்களை செய்து சந்தை மேலே எழுந்துள்ளது… அப்போ உண்மையான ஏற்றம் எப்படி இருக்கும்…

  வணக்கம் தல…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: