எனது பார்வை.


நேற்றைய பதிவில் குறிப்பிட்டதைப்போலவே சந்தை துள்ளிக் குதிக்க விரும்புகிறது… ஆனால் சர்வதேச சந்தைகளின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை.   

அமெரிக்க சந்தைகள் 5 நாள் தொடர் சரிவிலிருந்து மீளும் முயற்சியில் உள்ளது…  ஆனால் டவ்வில் சரியான ஹெட் அண்ட் ஷோல்டர் (15 மினிட் சார்ட்) அமைப்பு உருவாகி தற்போது சரிவடைத்து வருவது கவலை அளிக்கிறது.  இது நமது சந்தை துவங்கிய பிறகு உருவாகியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  🙂 கடந்த மூன்று நாட்களாக கிடைக்காத ஒரு டிரேடிங் வாய்ப்பு கிடைத்திருக்கும். 

குறுகிய கால முதலீட்டாளர்கள்  இந்த இடத்தில் இருந்து 10-20% லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்….   கொஞ்சம் ரிஸ்க் தான் தேவைப்பட்டால் நீண்டக்கால முதலீடாக மாற்றி காத்திருக்க தயார் என்பவர்கள்.. மிக தைரியமாக இந்த ரிஸ்கை எடுக்கலாம். 

எனது பார்வையில்  –  பாரதி ஏர்டெல்,  சன் டீவி,   எஸ்பிஐ,  ஐசிஐசிஐ,  டைட்டான்… ஆர்காம்.

(உங்களுக்கு கிடைக்கும் தகவல்களுடன் சரிப்பார்த்து உங்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் முதலீடு செய்யவும்…   I don’t have any position in these stocks )

10 K to 10 L 

என்பதை பற்றி அதிகமான தொலைப்பேசி விசாரிப்புகள்….

நான் இதை வணிக நோக்கத்தில் செய்ய வில்லை செய்யவும் முடியாது…   காரணம் மாதத்தில் 5-6 கால்ஸ் மட்டும் தான் சாத்தியம், அதற்கான பொறுமை மக்களிடம் இருக்குமா? என்று தெரியாது கூடவே இதற்கு கட்டணம் நிர்ணயம் செய்வது சிரமம். 

ஒரு பரிசோதனை முயற்சியே… அதனால் தான் 10,000 ஐ முதலீடாக எடுத்துக்கொண்டுள்ளேன்.  ரிஸ்க் குறைவு தான். மயிரிழை கொண்டு மலையை இழுக்கும் முயற்சி.

எனது ரெகுலர் ஆப்ஷன் கால்ஸ் களுடன் இந்த கால்ஸ்களும் அனுப்பபடும் அதை நான் பிரித்து செய்ய திட்டமிடவில்லை.

இந்த வார பதிவுகளை பாராட்டி தொலை பேசியிலும் / SMS  லும் வாழ்த்திய புதிய நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்.

நண்பர் ராம் பிரசாத் – தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள்..  அரசியல்வாதிகளை திட்டாதீர்கள்…  எப்படியாவது எம்பி எம்பி MP ஆகிடலாம்னு எதிர்காலத்திட்டம்  ஒன்னு இருக்கு.  என்ன தகுதி இருக்குன்னு கேக்குறீங்களா?   இது வரை ஏழு கட்சி மாறிட்டேன் இதை விட வேறு என்ன? இப்போதைக்கு எந்த கட்சி ஆதரவாளனும் இல்லை.  

தற்போது படித்து வரும் புத்தகம் – திரு அத்வானி அவர்களின் எனது தேசமும் எனது வாழ்க்கையும்.

Advertisements

12 responses to this post.

 1. வணக்கம் சாய் சார்,
  உங்கள் முடிவை மாற்ற யாராலும் முடியாது என்று நிரூபித்து விட்டீர்கள். nifty levels-உடன் கூடிய தினசரி சந்தை செய்திகளை எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.

 2. Posted by sankarankoil arun on மார்ச் 5, 2009 at 11:51 முப

  anna .
  neenga mp aaga ennoda advance valthhugal

  mp aanaudaney enakku oru gasagency ,petrol bunk plssssssss

 3. Sai Sir, MP aaga valthukal.

  ps

 4. //எப்படியாவது எம்பி எம்பி MP ஆகிடலாம்னு எதிர்காலத்திட்டம் ஒன்னு இருக்கு.//

  seekkiram embi MP aaga vaalthukkal.

 5. //neenga mp aaga ennoda advance valthhugal

  mp aanaudaney enakku oru gasagency ,petrol bunk plssssssss//

  ENAKKUM SAI SIR.

 6. //எப்படியாவது எம்பி எம்பி MP ஆகிடலாம்னு எதிர்காலத்திட்டம் ஒன்னு இருக்கு.//

  எப்படியாவது MP ஆகி நீங்க மந்திரியா ஆகி நம்ம பங்குசந்தைக்கு ஏதாவுது செய்யுங்க சாய்… முடிஞ்ச என்னை பங்குசந்தைக்கு தலைவராக ஆக்கிவிடுங்க…… ஏன் ஓட்டு உங்களுக்கு தான்

 7. Posted by ரவிகுமார் on மார்ச் 5, 2009 at 10:10 பிப

  அன்புள்ள சாய்க்கு,

  நிதி அமைச்சர் பதவியை எனக்கு விட்டு வைங்க…..ப்ளீஸ்

 8. நான் படிக்கும் புத்தகம் என்று அழுத்தமாக சொல்வதை பார்த்தல் உங்கள் ஒட்டு அத்வானி அய்யாவுக்கே என்று ரத யாத்திரை பிரச்சாரம் தொடங்கி விடுவீர்கள் போல இருக்கு…

  வணக்கம் சாய் சார்,

  இன்றைய சந்தைகளை போல் வதந்திகள் சூழப்பட்டு இருந்த தினத்தை நான் பார்த்ததில்லை.. சந்தைகள் மேல் நோக்கி வைக்கும் ஒவ்வொரு நகர்வுக்கும் ஒரு புரளி கிளம்பி நாசம் பண்ணியது..

  தங்களது 10k to 10l பற்றி சிறிது விரிவாக எழுதவும்.. இதில் வாய்புகள் ஏதும் உள்ளதா?
  இதனை சந்தா வகையில் ஏதும் செய்யும் யோசனை உள்ளதா சார்…

  உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்…

 9. Posted by ரவிகுமார் on மார்ச் 5, 2009 at 10:39 பிப

  நிதி அமைச்சர் பதவியை விட்டு கொடுத்த அண்ணண் வாழ்க…….

 10. Sai sir

  //..அரசியல்வாதிகளை திட்டாதீர்கள்..//

  உங்க அரசியல் சேவைய என்கிட்டே இருந்து துவங்குரீங்களா ? முகவரி கொடுத்து “தானியங்கி மூவிருளீ” அதாங்க AUTO, ஆள் அனுப்ப ??

  நம்மை போன்றவர்களே நமது அரசியல்வாதிகள் என்னும் கருத்துடையவன் நான். அதனால் மாற்றம் என்பது என்னிலிருந்து துவக்கம்.

  //.. என்ன தகுதி இருக்குன்னு கேக்குறீங்களா? இது வரை ஏழு கட்சி மாறிட்டேன் இதை விட வேறு என்ன? ..//

  என்ன இப்பிடி அப்பாவியா இருக்கீங்க ??

  தகுதின்னு ஒன்னு அங்க, எங்க ??

  ரொம்ப தமாசு பண்ணுறீங்க.

 11. Posted by sankarankoil arun on மார்ச் 6, 2009 at 11:43 முப

  gopi , nan kettathi ellam kekka koodathu . sinnapullathanama irukku.

  sai anna , nennga congrasil iruntha pothu 4 group irundatha? 40 group irunthatha?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: