அனைவருக்கும் காலை வணக்கம்….
பதிவெழுதுவதில் சிறிய கால தாமதம்…. எதிர் பார்த்த 2650 கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..
அடுத்த கட்ட பயணம் ? அவசரம் வேண்டாம் இரண்டு நாள் பொறுத்து இருந்து பார்ப்போம்…
அமெரிக்க சந்தைகள் தனது நீண்ட கால (8000) சப்போர்ட்டை உடைத்து மிக வேகமாக 7000 க்கு கீழ் நழுவிவிட்டது.
நம்ம ஆளு என்ன செய்ய போறார்? என்று தெரியவில்லை…. 2500 க்கு சோதனை வருமா? நாடே அதை எதிர் பார்ப்பதால்.. அதற்கான வாய்ப்புகள் குறைவு 🙂
எனக்கு பிடித்த அரசியல் சூடு பிடித்துள்ளது… அவர்களின் விளையாட்டு முடியும் வரை சந்தையில் பெரிய பரபரப்பு இருக்காது.. யார் வந்தாலும் வரட்டும்… மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கட்டும் என்பதே ஒரு நடு நிலையாளனாக எனது விருப்பம்.
============================================================================
தொலைபேசியிலும், பின்னூட்டத்திலும் நேற்றைய பதிவினை பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.
முதலில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்…. இது எனக்கு நானே நடத்தப்போகும் அக்னிப்பரீட்சை…. எந்த வகையிலும் ஒரு விளம்பர யுக்தி இல்லை.
சரண் –
உங்கள் சந்தேகம் நியாயமானது… எதையும் நான் மறந்து விடவில்லை… இன்றைய சந்தையின் நிலை என்ன எப்படி பட்ட காலகட்டத்தில் நான் இதை எழுதுகிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
சில சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அதை நான் மறுக்கவில்லை… அதையும் மீறி எப்படி வெற்றியடைவது என்பது தான் நமக்குள்ள சவால். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. ஹோட்டல் ஆரம்பிக்கும் அனைவரும் சரவணபவன் அண்ணாச்சியாகவோ…. அல்லது மெக்டொனால்டாகவோ ஆவதில்லை…
டார்கெட் என்பது மிகப்பெரியது அதை அவ்வளவு எளிதாக அடைய முடியும் என்றால் எல்லோரும் இதையே செய்யலாம். அதற்கு தேவையான அர்ப்பணிப்பும், உழைப்பும் இல்லாமல் முடியாது.
நேற்றைய பதிவில் தரப்பட்ட அட்டவணை Just a Illustration – அது அப்படியே அமையும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.. அமையவும் செய்யாது. பின்னூட்டத்தில் திரு. முருகேசன் அவர்கள் சொன்னதுபோல எல்லாமும் கலந்து அமையலாம்.. நான் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்
//முதல் வழி கொஞ்சம் எளிதானது… 10 / 20 டிரேடுகள் கூடவோ குறையவோ வாய்ப்புள்ளது.. வாரம் 2-3 வர்த்தகங்களை தேர்தெடுப்பது எளிது.//
ஒரு வேளை நீங்கள் சொல்வது போல ஒன்று இரண்டு டிரேடு தோல்வியை தழுவினாலும் அத்தனையும் காலி எப்படி ஆகும்? ஒன்று இரண்டு படிகள் பின்னடைவு ஏற்படலாம்.
தங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி…..
=============================================================================
இன்று இன்னும் சில விசயங்களை எழுத விருப்பம்…. 9.30 ஆனதால் மாலை எழுதலாம்.
சார் வேலையில் இருக்கிறேன், அதை விட்டு விட்டு தொழில் ஆரம்பிக்க உள்ளேன். அப்படியா சந்தோஷம் சரி பிசினஸ் என்றால் என்ன? வேலைக்கு போவதிலும் பிஸினஸ்க்கும் என்ன வித்தியாசம்?
அதேப்போல காதல் தோல்வி… வீட்டில் பிரச்சனை தொழிலில் நஷ்டம் “ தற்கொலை செய்யலாம் போல உள்ளது” அப்படியா, சந்தோஷம்!! – இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சவால் என்ன? அந்த சவாலை எதிர் கொள்ள நம்மிடம் உள்ள பலம் என்ன?
இதை பற்றி மாலை விரிவாக எழுதுகிறேன்… முதல் கேள்வி நான் தொழில் ஆரம்பிக்கும் போது எனது நண்பர் கேட்டது.
இரண்டாவது கேள்வி நான் அடிக்கடி சிலரிடம் கேட்பது…
இதற்கு நீங்கள் பதில் எழுதுங்கள்.
நாளை சந்திப்போம்…
Posted by Murugesan on மார்ச் 3, 2009 at 10:01 முப
DEAR SAI
NOW DAYS YOU ARE DOING VERY WELL IN THE BLOG
VICTORY OR GITTERY ,LOSS OR GAIN , ALL ARE SAME ,SAYING LIKE THIS IS VERY EASY BUT IN PRACTICAL VERY DIFFICULT.BUT IF WE PRACTISE THIS CAN BE POSSIBLE, THEN WE WILL ACHIEVE
I FEEL KEEPING EQUALITY IN EVERY MANNER IS GREAT DEAL.
THANK YOU FOR GOOD TOPIC
mURUGESAN
Posted by PS on மார்ச் 3, 2009 at 10:13 முப
அன்புள்ள அண்ணா…
நாளுக்கு நாள் புது புது தகவல்களும்,எழுத்து நடையும் அருமையிலும் அருமை..
இருப்பினும் எனக்கு ஒரு மிகப்பெரிய மனவருத்தம்……………
நான் System ON பண்ணின உடனே முதலில் OPEN செய்வது TOP10SHARES தான்..அதில் இன்றைய கட்டுரை படித்து விட்டு தான் மற்ற பக்கத்திற்க்கே போவேன்….
அது இல்லாமல் எதையோ இழந்தது போல் இருக்கு அண்ணா..
தங்களின் முடிவை இந்த தங்கைக்காக மறுபரிசீலனை செய்யக்கூடாதா??????
–ப்ரியாசேகர்..
Posted by PS on மார்ச் 3, 2009 at 10:21 முப
///அதேப்போல காதல் தோல்வி… வீட்டில் பிரச்சனை தொழிலில் நஷ்டம் “ தற்கொலை செய்யலாம் போல உள்ளது”///
இதை படித்தவுடன் எனக்கு பிடித்து படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது..
அது உங்களின் பார்வைக்கு…
வாழ்க்கை என்பது…
காதல் தோல்விகளும்
கடன் தொல்லைகளும்
கயிற்றை மாட்டவைக்கின்றன
கழுத்தில்..
காலம் முடியுமுன்னே
காலனை வரவைப்பது
கையாலாகாத்தனமல்லவா..,
ஊனம் உள்ளவன்கூட
உயிர்வாழும்போது
தானே உயிரை மாய்ப்பது
தலைகுனிவல்லவா
உன்னைப் படைத்தவனுக்கு.. !
விலைமதிப்பில்லா உயிரை
விடைகொடுத்து அனுப்பவேண்டாம்,
கடமையைச் செய்தால்
கலங்காது செய்தால்..
விலங்கல்ல வாழ்க்கை,
விபரம் புரிந்தால்
விலகும் திரைகள்,
இலகுவாய் வெற்றி
இனிதாய் உனக்கு,
இல்லைநேரம் சாவை நினைக்க..
வாழ்க்கை என்பது
வாழ்ந்திடத்தானே…!
Posted by simba on மார்ச் 3, 2009 at 10:28 முப
கலக்குங்க அண்ணாத்த…
இரண்டு நாளும் உங்க கட்டுரை கலக்கலோ கலக்கல்.. ஏதாவது ஒரு சிறு எதிர்பாப்போ அல்லது பிடிப்போ வேண்டும். அதோடு தொடர்ந்து வரும் சவால்கள் மற்றும் அதனை எதிர்த்து போராடும் வழி போன்றவைகளால் வாழ்க்கைக்கே ஒரு இனிமை கிடைக்கிறது…
இதில் அனுதினமும் நாம் கடந்து போகும் பாதையில் சந்திக்கும் மனிதர்கள் பலர்… எல்லோருக்கும் பிரச்சனை உண்டு.. சவால் இல்லாத வாழ்வு வாழ்க்கையே இல்லை.. அதற்க்கு தற்கொலை என்பது ஒரு மடத்தனமான செயல்..
இன்று இவ்வளவு சுறுசுறுப்பாக செல்லும் நாட்கள் முதுமை காலத்தில் எவ்வாறு இருக்கும். ஒரு வேலை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத அமைதியான வாழ்க்கை அமைந்தால்.. அப்பப்பா எண்ணிப்பார்க்கவே கசப்பாக இருக்கிறது…
இதனை சம்பந்தப்பட்ட நண்பர்கள் உணர வேண்டும்.
உணரட்டும் திருந்தட்டும்.
யார் அந்த லகுடபாண்டி.. நம்ம பாட்டுக்கு எசப்பாட்டு படுவதையே குறியா வச்சு ஒரு குரூப் இந்த ஊருக்குள் சுத்திட்டு இருக்கு போல…
Posted by PS on மார்ச் 3, 2009 at 10:35 முப
//2500 க்கு சோதனை வருமா? நாடே அதை எதிர் பார்ப்பதால்.. அதற்கான வாய்ப்புகள் குறைவு 🙂 //
ஹா ஹா…….சந்தையை கரைத்து குடித்தவரண்ணா நீங்கள்…..
Posted by Moneybharati.M.சரன் on மார்ச் 3, 2009 at 10:44 முப
திரு சாய் அவர்களுக்கு!
எனது சந்தேகத்திற்கு தாங்கள் பதிலளித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
தங்களின் 10K டூ 10லகரம் திட்டத்தினை இன்ணும் சற்று செம்மைபடுத்துங்கள்!அது வாசகர்களுக்கு மிகப்பெரிய பயனுள்ள விஷயமாக இருக்கும்.
அதாவது ஒவ்வொரு கட்டத்திலும் கிடைக்கும் லாபமானது அடுத்தகட்டத்தின் மூலதணமாகிறது.எந்தகட்டத்திலும் நமது கனிப்புகள் பொய்த்துபோனாலும் மூலதனத்தின் மீது பாதிப்பு ஏற்படாமல் Risk Management system ஒன்றை உருவாக்குவது அவசியம்.
இதனை (Risk Management System)நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்கள் திட்டப்படி
10 லக்ஷம் என்ன 10 கோடிக்கும் மேலும் சாதிக்கமுடியும்……
இதுபோண்ற ஒரு System உருவாக்க ஒரு ஆலோசனை அரங்கைகூட நாம் கூட்டலாம்….
முயற்சியுங்கள்!உங்கள் முயற்சிக்கு எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் உண்டு.
வாழ்த்துக்கள்!
Moneybharati
Posted by chandhrakumar on மார்ச் 3, 2009 at 11:25 முப
GOOD MORNING SAI SIR……
Posted by Faizal on மார்ச் 3, 2009 at 11:41 முப
உலக கணித தினம் 4ம் தேதி மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது. இதற்காக ஒர் இணையத்தளம். அதில் பள்ளி குழந்தைகள் கணினி மூலம் கணித விளையாட்டு விளையாடி வெற்றி பெற ஓர் அறிய வாய்ப்பு காத்திருக்கின்றது. மேல் விபரம் எனது வளைத்தளத்தில் விரும்பியவர்கள் சென்று பார்க்கவும்
Posted by rk on மார்ச் 3, 2009 at 12:29 பிப
ஆக்கபூர்வமான விவாதங்களே ஒரு தெளிவான மனநிலையை,சூழ்நிலையை உருவாக்குகிறது.அந்த வகையில் சரண் அவர்களுக்கு நன்றி..ஆக்கபூர்வமான சந்தேகத்துக்கு..எனக்கு தெரிந்த பதில்..
நாம் பத்தாயிரம் கொண்டு ஆரம்பிக்கிறோம்..7 வது டிரேட் வரை பிரச்னை இல்லை என்று வைத்து கொள்வோம்.இப்போது நமது முதலீடு 4 லட்சமாக பெருகிவிட்டதாக கொள்வோம். (ஆஹா! சொக்கா! நினைப்பே சொர்க்கத்தை காட்டுதே!!:) )..இந்த 4 லட்சம் முதலீட்டை கொண்டு நாம் செய்யும் 8 வது டிரேட் தோல்வியில் முடிந்தால்..அதாவது 10% லாபம் தராமல் 10% நட்டத்தை கொடுத்தால், நமது 4 லட்சம் முதலீட்டில் 40,000 மட்டும் குறையுமே தவிர 7 டிரேடிலும் வந்த மொத்த லாபம் அனைத்தும் போகாது..
எனவே நாம் செய்ய வேண்டியது எல்லாம்..சரியான entry and சரியான exit.. இதற்குதான் நமக்கு அனுபவசாலிகளின் வழிகாட்டல் அவசியமாகிறது..
Posted by Moneybharati.M.சரன் on மார்ச் 3, 2009 at 1:57 பிப
திரு RK அவர்களுக்கு!
உங்களுடைய பின்ணுட்டம் பார்த்தேன்!
பிரச்சினையே அங்குதாண் ஆரம்பமாகிறது.அதாவது 10% நஷ்டம் அடைந்தால் வெளியேறிவிடுவதில்தான் சிக்கலே உள்ளது.நீங்கள் வர்த்தகம் செய்யபோவது Future ல் அல்ல.Option ல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
ஆப்ஷன் என்பது விலைநகர்வை மட்டும் கொண்டு செயல்படுவதல்ல.அது காலநகர்வையும் கணக்கில் கொண்டு மதிப்பிட பெறுவதாகும்.எனவே அவ்வளவு சுலபத்தில் 10% நஷ்டம் என்று Stoploss உடன் வெளியேறமுடியாது.அப்படியே 10% நஷ்டத்தினை ஏற்று வெளியேறினாலும்,நீங்கள் அடிக்கடி வெளியேறவேண்டியது இருக்கும்.இது நீங்கள் ஆப்ஷனில் விலை(ள)யாடி பார்த்தால் புரியும்.
நான் திரு சாய் & வாசகர்களின் நம்பிக்கையை குலைப்பதற்காக இதை எழுதவில்லை!ஆனால் ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, எட்டிபிடிக்ககூடிய இலக்குடன் ஒரு திட்டத்தை சமர்பித்திருக்கும் திரு.சாய் அவர்களின் முயற்சியில்,இலக்கை எட்டும் வழியில் உள்ள இடர்கள் குறித்தும் அதை களைவதுகுறித்தும் சிந்திக்கவேண்டியிருப்பதை மட்டுமே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
மேலும் சரியான Entry & Exit குறித்து நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதை செயல்படுத்தி வெற்றியடைய வாழ்த்துக்கள்!
இருந்தாலும் நான் திரு.சாய்கனேஷின் பதிலுரை என்னவாக இருக்கும் என்பதனை அறிய ஆர்வமாக உள்ளேன்!
நன்றி!
Posted by rk on மார்ச் 3, 2009 at 2:26 பிப
திரு.சரண்,
உண்மைதான்..காலநகர்வின் அடிப்படையில் தான் option விளையாடப்படுகிறது..ஆனால்,இந்த 10-10 முறையே, ஒரு சாதாரண டிரேடிங் முறை கிடையாது..மிகுந்த கவனத்திற்கு பிறகே பரிந்தளிக்கப்படும் மற்றும் பத்தோடு பதினொன்றாக நமக்கு பரிந்துரைகள் அளிக்கப்படாது என நம்புவோம்..ஏற்கனவே நான் கூறியது போல் இது ஒற்றைக்கால் கொக்கின் தவம் போன்றது..எனவே, சரியான stoploss நிலைகளை கணக்கில் கொண்டு சரியான நேரத்தில் வெளிவர பொறுமைசாலிகளால் முடியும் என திடமாக நம்புகிறேன்..
Posted by DG on மார்ச் 3, 2009 at 10:11 பிப
/2500 க்கு சோதனை வருமா? நாடே அதை எதிர் பார்ப்பதால்.. அதற்கான வாய்ப்புகள் குறைவு/
நன்றி
Posted by ramprasad on மார்ச் 3, 2009 at 10:28 பிப
Dear Sai Sir,
வணிகம் செய்வோர் headers ரகம். சம்பள வேலை செய்வோர் followers ரகம்.
வேலை பார்ப்பது கடினம் அதனால் ஏதாவது வணிகம் செய்யலாம் என்று நினைப்பது அடிப்படை தவறு. வெற்றிக்கு வாய்ப்பில்லை.
ஒரு நல்ல வேலையாள், புதிய சிந்தனை/ வியாபார யுக்தி கொண்டவராயின், வணிகரானால் முன்னேற வாய்ப்புண்டு.
நல்ல நிர்வாகி, நிட்சயம், ஒரு நல்ல வேலையாள்.
வியாபாரத்தில் நேரத்துடன் கடைதிறந்து வாடிக்கையாளருக்காக காத்திருத்தல் வேண்டும். நம்பிக்கை வேண்டும்.
நேரமும், கருத்தும் கோர்வையாய் வராததனால் இத்துடன் நிறுத்துகிறேன்.
உளவியல் ரீதியாக இருவரும் வெவேறு தளத்தை சேர்ந்தவர்கள்.
இதை புரிந்து தன் “வேலையை” செய்வோர் வெற்றியாளர்கள்.
// இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய சவால் என்ன? //
மகிழ்வுடன் ஜீவித்திருப்பது.
Here is a huge difference between “PLEASURE SEEKING” and “BEING JOYOUS”.
// அந்த சவாலை எதிர் கொள்ள நம்மிடம் உள்ள பலம் என்ன? //
= நம்பிக்கை -> முயற்சி -> வெற்றி/தோல்வி =
என்னும் வட்டம், உலகம் சுழலுவதை போல.