Archive for மார்ச், 2009

எனது பார்வை

சூப்பர் ஹிட் தருவார் என்றால் முதல் நாளே செஞ்சுரி அடிச்சு அசத்திவிட்டார் கரடியார்… அதற்கு ஜி.எம் மோட்டார்ஸ் திவால் அறிவிப்பு வெளிவரலாம் என்ற செய்தியையடுத்து சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள் உதவியது.

இல்லையென்றால் காளைகள் இன்னும் பலமாக முட்டி மோதி இருக்கும்.   3050 வரை மீட்டெடுத்திருக்க வாய்ப்புகள் இருந்தது.

இன்றும் கரடிகள் தங்களை மைதானத்தில் தக்கவைக்க போராட வேண்டி வரும்…   அவர்கள் உள்ளே வந்த இடமான 3040 ஐ மையமாக கொண்டு காளைகள் தாக்குதல் நடத்தும். 

கரடிகளுக்கு முக்கிய தடையாக இருக்கப்போவது 2920 அதை உடைத்தால் கரடிகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா! தான்.

நிப்டியின் சார்ட்டில் மல்டிபிள் டாப்ஸ் –  மல்டிபிள் பாட்டம்’ஸ் காணப்படுகிறது. தற்போது இதன் இரண்டிற்கும் இடையில் நிலைகொண்டுள்ளது.  பாட்டத்தை உடைக்கிறதா அல்லது டாப்-ஐ உடைத்து மேலே செல்கிறதா என்பதே கேள்வி.    பாட்டம் உடையலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு அல்லது குறைந்த பட்சம் 2550 வரை சென்று வரலாம்.

nifty310320091

இன்றைய முக்கிய நிலைகள்  – 
 • 3090
 • 3050
 • 3025  –  காளைகள் திமிரும்
 • 3010 
 • 2982  – 2975 வில் செல்லிங் பிரசர் உருவாகும்
 • 2965
 • 2940
 • 2899  
 • நாளை மிக முக்கியமான் நாள், அதை பற்றிய விவரம் நாளைய பதிவில்.

  அக்ருதி-யில் ஒரு விளையாட்டு

       என்ன ஒரு விளையாட்டு!!   இந்த அக்ருதி-ல நடந்த  விளையாட்டைத்தான்  சொல்கிறேன்.. கடைசில ஆட்டம் போதும் ன்னு f&O ல தடை போட்டாச்சு!!  (கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல)

        ஆனால்,எந்த மக்கள் இந்த விளையாட்டை ஆரம்பிச்சாங்களோ அவங்களுக்கு இந்த தடைப்பற்றி முன்கூட்டியே தெரியும்..அதனால்,அவர்கள் பாதுகாப்பாக வெளியேறியாச்சு!!.
   
        இதை நாம் சொல்லவில்லை..சார்ட் சொல்கிறது..கீழே உள்ள சார்ட்களை பாருங்கள்..
   
  1.டெக்னிக்கல் சார்ட்
  akuruthi
   
  2. ப்யூச்சர் ஒரு மணிநேர சார்ட் – Accumulation and distribution
  akruti-fut-acc_dis1
   
  3. கேஷ் – Accumulaion and distribution
   
  akruti-acc_dis-chart
   
  Delievery in cash
  akruti
       யாரெல்லாம் விற்றார்கள் அல்லது வாங்கினார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகச்சாதரணமான வேலை!! ஆனால், செய்வார்களா? யாரும் செய்ய மாட்டார்கள்!! இந்த பச்சை,மஞ்சள்,நீலக் கலர் தொலைக்காட்சி சேனல்களாகட்டும் அல்லது, பிங்க்,வெள்ளை நிற பிஸினஸ் தினசரிகளாகட்டும்..எல்லோரும் அமைதிக்காக்கவே விரும்புவர்..ஏனென்றால்,ஏற்கனவே அவர்களும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப்பட்டிருப்பார்கள்.. அதனால் அவர்களுக்கு கவலையில்லை!!
   
       எனவே, நண்பர்களே..நாமெல்லாம் எந்த மாதிரி சந்தையில் போராடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்குமே இது இப்படித்தான் இருக்கும்..

        மேலே உள்ள சார்ட்கள், நாம் எந்த அளவு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடான சந்தையில் வர்த்தகம் செய்து கொண்டுள்ளோம் என்பதை விளக்கும்.. ஏகப்பட்ட பட்சிகள் அலறுவது என்னவென்றால், இது தேர்தல் செலவுக்காக, அல்லது வேறு பலகாரணங்களுக்காக சிலரால் நடத்தப்பட்ட நாடகம்.. இந்த வதந்தியின் உண்மை  நிலவரத்தை வேண்டுமானால் கேள்விக்குள்ளாக்கலாமே தவிர முற்றிலுமாக நிராகரிக்க முடியாது..

   
       அதிக பட்ச அதிகாரங்களைக்கொண்டவர்கள் மற்றும் பெருந்தனக்காரர்களால் தனது அதிகாரத்தின் மூலம் என்னவெல்லாம் சாதிக்க முடியும்  என்பதற்க்கு இது ஒரு சிறிய உதாரணம்..

       வழக்கம்  போல நியமிக்கப்படும் விசாரணை கமிஷனும், இன்னொரு பத்தி செய்தியாகி,காலப்போக்கில் கரைந்து போகும்…நாமும் லாங்,ஷார்ட் என்று தினவர்த்தகத்தில் மும்முரமாகி விடுவோம்.

   ஜெய்ஹிந்த்!!

  தகவல் மற்றும் சார்ட் உதவி –  வட இந்திய நண்பர் நவ்நீத்

  எனது பார்வை

  வெள்ளிக்கிழமை டவ் மற்றும் ஐரோப்பிய ஃப்யூச்சர் சந்தைகளில் லாபத்தை உறுதி செய்யும் பொருட்டு… ஏற்பட்ட சிறு சரிவின் தாக்கம் தற்போதைய ஆசிய  மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் தெரிகிறது. 

  ஆகையால், நமது சந்தையிலும் துவக்கத்தில் சிறு சரிவு காணப்படலாம் அதிக பட்சம் 3044 வரை செல்லலாம் பிற்பகலில் சர்வதேச சந்தைகளின் போக்கில் ஏற்படும் மாற்றத்தை அடுத்து அடுத்தக்கட்ட பயணம் தீர்மானிக்கப்படும்.

  ஆனால் நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக நமது சந்தையை வழி நடத்தும் சித்தர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வில்லை. 

  கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள்தான் சந்தையை வழி நடத்தினார்கள் என்றால் மிகையில்லை.

   பிற்பகலில் சர்வதேச சந்தைகள் பலவீனமாக இருந்தும் நமது சந்தையை 3140 என்ற முக்கியநிலைக்கு எடுத்து சென்றார்கள். 

   இன்றைய முக்கிய நிலைகள்

  3040 என்பது பொசிசனல் கரடிகளுக்கான ஒரு கேட் பாஸ்..

   அதற்கு கீழ் நழுவாத வரை காளைகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். 

 • 3211
 • 3175
 • 3154
 • 3140 
 • 3115
 • 3100
 • 3075
 • 3044   – இந்த இடத்தில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகும்..
 • டெக்னிகல்  –

  Bear’s will Give  a Mega hit in coming Days….

  எனது பொசிசனல் டார்கெட்டான 2800 என்பது உறுதி அதற்கு அடுத்த கட்டமாக  2575 க்கு கீழ் நழுவினால் 2200-2000 என்பது எனது புதிய பார்வை.   அதுவே அதிகபட்ச கீழ் நிலையாக இருக்கலாம்..

  சந்தை முக்கியமான நிலையில் உள்ளது,  சிறு முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்வதை தவிர்க்கலாம் என்பதே எனது கருத்து.  தற்போது அதை வாங்கலாம் இதை வாங்கலாம் என்று பரிந்துரைகள் பல வருகின்றன. ஆனால், அனைத்து பங்குகளும் 15-20-30 % வரை கடந்த மாதத்தில் உயர்ந்துள்ளது என்பதை மனதில் கொள்ளவும்.

  3350 க்கு மேல் நிலைப்படாதவரை இந்த ஏற்றத்தை தக்கவைக்க இயலாது.  தற்போதைய சூழ்நிலையில் 3300 என்பது அவ்வளவு எளிதல்ல.   

  ===========================================================================

  சந்தையில் வலம் வரும் வதந்திகளில் –  இரண்டு…

  1. சுவிஸ் வங்கியில் உள்ள பணம் உலக பங்கு சந்தைகளுக்கு இடம் பெயரத்துவங்கியுள்ளது குறிப்பாக இந்தியர்களுக்கு சொந்தமான 84 லட்சம் கோடிகள்.

  2. தேர்தல் செலவிற்காக அரசியல் கட்சிகளின் ஆசியுடன் சந்தையில் விளையாடுகிறார்கள்.

  உதராணத்திற்கு ஒரு விளையாட்டு அக்ருதி 10 நாளில் 1000 இல் இருந்து 2300 அங்கிருந்து ஒரே நாளில் 1000 க்கும் கீழ் சென்று விட்டது.

  இவை இரண்டும் வதந்திகளே…   ஆனாலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

  எனது பார்வை

       மார்ச் மாத முதல் வாரத்தில் சந்தை 1800-2200 என்ற கூச்சலுடன் துவங்கியது… நாம் 2850 -2925 என்றோம் ஆனால் சந்தை அதிர்ச்சி தரும் வகையில் 3050 ஐ கடந்தது மட்டும் அல்லாமல் சத்யத்தினால் சோதனைக்குள்ளான 3150 நோக்கிய பயணத்தில் உள்ளது. 

       இந்த ஏற்றம் அக்ருதியில் துவங்கியது,   அக்ருதின் ஆட்டம் நேற்றோடு முடிந்தது…  இங்கு சிலரின் விளையாட்டிற்கு சர்வதேச சந்தைகளும் சாதகமாக உள்ளது.

       இன்று 3144 க்கும் – 3044 க்கும் இடையில் சந்தை பயணிக்கும்,  ஒரு வேளை சந்தை இந்த ஏற்றத்தை தொடர வேண்டுமானலும் குறைந்த பட்சம் ஒரு 100 புள்ளிகள் பின்நகர்ந்து தான் செல்ல வேண்டும்.  

       இன்று 3044 க்கு கீழ் நழுவும்போது ஒரு செல்லிங் பிரஷர் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. 

  இன்றைய முக்கிய நிலைகள்

 • 3137
 • 3112
 • 3100
 • 3095 
 • 3070
 • 3060
 • 3052
 • 3028
 •      சந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் உள்ளது குறிப்பாக வங்கித்துறைபங்குகள்…
  எஜுகம்ப் – இன்னும் பலவீனமாகவே உள்ளது….  

  எனது பார்வையில் இன்றைய சந்தை 26.03.2009

  கொந்தளிப்பு….  என்றால் அப்படி ஒரு கொந்தளிப்பு…  நேற்றைய சந்தையில்… மேலே செல்வதும் கீழே வருவதுமாக….  2922 என்ற கீழ் நிலையில் வந்த போது ஐரோப்பிய சந்தைகளின் உற்சாக துவக்கத்தையடுத்து பிற்பகலில் மீண்டும் ஒரு ஷார்ட் கவரிங் ஏற்பட்டு மேலே சென்று உயரத்திலே முடிந்தது.

  முதல் நாள் கீழ் நிலையிலும், அடுத்த நாள் மேல் நிலையிலும் முடிவடைந்து உள்ளது. சந்தை இல்லை இல்லை மக்கள் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ளார்கள்.    இது தமிழக கூட்டணி குழப்பத்தை விட மோசம்.    இந்த கூட்டணியா? அந்த கூட்டணியா? என்று தெரியாமல் தவிப்பதை போல, காளையா? கரடியா? என்ற குழப்பமே.   இன்று கூட்டணியில் சில தெளிவு பிறக்க உள்ளதையடுத்து சந்தையிலும் ஒரு தெளிவு ஏற்பட்டால் நல்லதே.

  பயமும் ஆசையும் தான் சந்தையை வழிநடத்துகின்றன…   தற்போதைய சூழ்நிலையில் ஆசையை அதிகரிக்க செய்யும் வகையில் செய்திகள்தான் உள்ளதே தவிர, வேறு  வலுவான காரணம் எதுவும் இல்லை. 

  டெக்னிகல் என்ன சொல்கிறது….

  நேற்றைய வர்த்தகத்தின் அமைப்பு, சார்ட்டில் Inside Bar (கரடி) ஆக அமைந்துள்ளது…   ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு அமைப்பு (Pattern) எந்த அளவு செயல்படும் என்று சொல்ல இயலாது.   இது டிரேடர்களின் மனநிலையில் ஒரு குழப்பம் உள்ளதை பிரதிபலிக்கிறது. அந்த அளவில் மட்டும் எடுத்து கொள்ளலாம்.  2925 க்கு கீழ் நழுவினால் இதன் பலனை எதிர்பார்க்கலாம்.

  முக்கியமான சப்போர்ட் நிலைகள் 2960  – 2925  – 2900 

  மீண்டும் போலிங்கர் பாண்ட்ஸ்-ன் வெளிப்புறத்தில் முடிவடைந்துள்ளது.      2970 க்கு மேல் வர்த்தகம் ஆகும் சமயத்தில் அதிகபட்சம் 3035 வரை செல்ல வாய்ப்புள்ளது. 

  இன்று வெளிவரும் பணவீக்கம் அல்லது பண வாட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை…  கரடி?  காளை? அல்லது இரண்டையும் ஆட்டிப்படைக்கும் ஆப்ரேட்டருக்கா?

  கூடவே டெரிவேட்டிவ் கணக்கு தீர்க்கும் நாள்….  ஆகையால் மேடு பள்ளத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.

  இன்றைய முக்கிய நிலைகள்

 • 3038 
 • 3018
 • 3011
 • 3005  
 • 2980
 • 2968
 • 2948
 • 2916
 •  

   

   

   

  எனது நிலை……  எனது பொசிஷனல் டார்கெட்டான 2800-2600 இல் எந்த மாற்றமும் இல்லை….   இதை நான் யார் மீதும் திணிக்கவில்லை.  ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம்.  பொறுத்திருந்து பார்ப்போம்.    நவம்பர் 5 மாற்றும் ஜனவரி 7 ஆகிய நாட்களின் வரலாறு திரும்பலாம்…  (கரடி டபுள் செஞ்சுரி அடித்த நாட்கள்).

  பலவிதமான வதந்திகள் சந்தையில் உலா வருகின்றன….. அவற்றின் நம்பகதன்மை கேள்விக்குரியது. ஆனால், முற்றிலும் மறுக்க முடியாது ஏன் என்றால் நமது நாட்டில் எதுவும் சாத்தியமே!!!

  எனது பார்வையில் இன்றைய சந்தை 25.03.2008

  3025 வரை செல்லும் என்று எதிர் பார்த்தோம்.. அது போலவே நிப்டி 3015 வரை சென்று சரியாக 100 புள்ளிகள் சரிவடைந்து சிறிதளவு கூட மீழாமல்  கீழ் நிலை 2915 இல் முடிவடைந்தது. 

  மேலே செல்ல காரணம் பயத்தால் சார்ட் கவரிங் செய்து  லாங் சென்றது… மீண்டும் 2970 க்கு நழுவியடன் அடுத்து ஏற்பட்ட பயத்தால் ஒரு செல்லிங்  பிரசர் 2915 இல் கொண்டு வந்தது.  குறிப்பாக வர்த்தகத்தின் கடைசி 10 நிமிடத்தில் 20  புள்ளிகள் சரிவடைந்தது.

  சரி இன்றைய சந்தை எவ்வாறு இருக்கும்..

  நேற்றைய கீழ் நிலையை உடைத்து கீழே சென்றால் நமது குறைந்த பட்ச டார்கெட்டான 2800 க்கு  2890, 2865 மற்றும் 2835 ஆகிய முக்கிய சப்போர்ட் நிலைகளை உடைத்து செல்ல வேண்டும்.

  அதிகமானவர்கள் லாங் நிலையில் உள்ளதால் மேலே எடுத்து செல்ல முயற்சிகள் நடக்கும் அதற்கு 2945, 2960, மற்றும் 2975  ஆகிய வேகத்தடைகளை கடக்க வேண்டும்.

  கடந்த இரு தினங்களாக Market Turnover அதிகரித்து உள்ளது கவனிக்க வேண்டிய விடயம்…   இதனால் சந்தையில் ஒரு கொந்தளிப்பு ஒரு வேகம் இருக்கும் எந்த திசையில் சென்றாலும்.

  கடந்த பல மாதங்களாக expiry நேரத்தில் அதிகம் volatile ஆக இருக்க வில்லை அமைதியாகவே காணப்பட்டது.  ஆனால் இன்றும் நாளையும் சந்தை மேடு பள்ளங்களில்   பயணம் செய்யலாம்ம்ம்ம்ம்.

  இன்றைய முக்கிய நிலைகள்….

  • 3030
  • 2990
  • 2975
  • 2940
  • 2929
  • 2900
  • 2890
  • 2875
  • 2855
  • 2828
  ===========================================================================
  திரு ராகவ்
  தங்களின் பின்னூட்டத்திற்கும் தொலைபேசியில் அழைத்து கருத்துகளை கூறியதற்கும் மிக்க நன்றி… ஒரு வருடமாக எனது பதிவுகளை அமைதியாக பின் தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சி. 
  உன்மையான வெற்றி டிரெண்ட் ரிவர்சலை அடையாளம் காண்பதே… தாங்கள் கூறுவது  சரியே.. பல நேரத்தில் அதன் முழுப்பலனை நான் தவற விடுகிறேன் என்ற வருத்தம் எனக்கும் உண்டு.
  சின்ன பையன் தானே அதான் அவரசப்படுகிறேன்.. இன்னும் மேம்படுத்தி கொள்ள முயற்சி செய்கிறேன்…   இது போன்ற ஆலோசனைகளை என்றும் வரவேற்கிறேன்… எதிர் பார்க்கிறேன்.

  எனது பார்வையில் இன்றைய சந்தை 24.03.2008

  அமெரிக்க அரசின் ஒரு அறிவிப்பு உலக சந்தைகளையே புரட்டி போட்டுள்ளது…  கிடைத்த வாய்ப்பை காளைகள் அருமையாக பயன் படுத்தி கொண்டன.  

  13/03/2009 அன்று நாம் சொன்ன டார்கெட் ஆன 2850-2925 இரண்டும் கிடைத்து விட்டது..  ஆனால் நாங்கள் இந்த 150 புள்ளிகள் ஏற்றத்தை பயன் படுத்த வில்லை. 

  இந்த எழுச்சியில் வெற்றியடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்…  நான் நேற்றைய தின வணிகத்திலும் சிறு வேலை பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை.  வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. 

  அடுத்த இலக்கு என்ன?  இந்த மாற்றமும் ஏற்றமும் நிரந்தரம் இல்லை… 

  சந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் (Over-bought zone) உள்ளது…    போலிங்கர் பாண்ட்ஸ்-ன் மேல் (2910) நிலையை தொட்டு அதன் வெளிப்புறத்தில் (Close – 2945) முடிவடைந்துள்ளது. 

  எனது  TTO இண்டிகேட்டரும் 120 என்ற அதிக பட்ச நிலையை காட்டுகிறது.  

  Rsi – 2 – 98

  Rsi – 3 – 95

  Rsi – 13 – 65

  Rs – 21 – 58

  untitled

  இந்த நிலையில் இன்னும் அதிகபட்சம் 2970-3025 வரை செல்லும் போது Positional விற்பனையாளர்கள் ஏப்ரல் மாத ப்யூச்சர் ஆப்ஷனில்  சார்ட் / புட் நிலைகளை அதிகரிக்கலாம.  

  எனது நிலை / டார்கெட் –   குறைந்த பட்சம் 2800 / 2750  அதிகபட்சம் 2600… இந்த முறை நிப்டி 2575 க்கு கீழ் நழுவினால் புதிய கீழ் நிலையை தனதாக்கும் வாய்ப்புகள் அதிகம், அதை  மறுப்பதற்கில்லை.

  ============================================================================

  இன்றைய முக்கிய நிலைகள்

 • 3045
 • 2992
 • 2970
 • 2950
 • 2925
 • 2910
 • 2895
 • 2870
 •  

   ===========================================================================

  நேற்றைய முன் தினம் மதுரை சென்று அன்பு தம்பி  செந்தில் மற்றும் நண்பர்கள் மோகன் ராஜ், ரமேஷ், செந்தில் குமரன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த நண்பர் மாரிமுத்து ஆகியோரை சந்தித்தேன்.  இனிமையான மனிதர்கள்.   தங்களின் வரவேற்பிற்கும் விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி.

  =============================================================================

  எனது பார்வை

  அமெரிக்க அரசு இன்னும் பல ஆயிரம் கோடிகள் உதவி செய்து வங்கிகளை மீட்டு எடுக்கும் என்ற செய்தி….  தற்போது அமெரிக்க ப்யூச்சர் மற்றும் ஆசிய சந்தைகள் ஆரவாரத்துடன் துவங்க உதவியுள்ளன.  

  இதன் தாக்கத்தால்  நமது சந்தைகளும் உற்சாகமாக துவங்கும்…   ஆனால் நாள் நெடுகில் ஏற்படும் செல்லிங் பிரசரால் அந்த உற்சாகத்தை தக்கவைப்பது சந்தேகமே…    

  அமெரிக்க அரசு இப்படி வாரி இறைக்க டாலர்களை அச்சிடும் என்ற செய்தி டாலரின் மதிப்பை குறைக்கும் அல்லது   இதற்கு தனியார் உதவியை நாடும் என்ற திட்டமும் எவ்வளவு தூரம் உதவும் என்பதும் கேள்விக்குறியே.. 

  ஐரோப்பிய சந்தைகளில்  நிலவும் ஒரு அமைதி கவனிக்க வேண்டிய விடயம்

  அதே போல் தங்கம் மற்றும் கச்சா எண்ணை ஆகியவற்றின் விலை உயர்வினை இந்த வாரம் கவனிக்கவும்… 

   இன்றைய முக்கியமான நிலைகள்…

  2860,  2835 ,   2820 , 2809 – 2790- 2771 – 2755  – 2730

  எனது தனிப்பட்ட நிலை  –  I am still Bearish for 4-5 days.  ஒவ்வொரு உயரத்திலும் ஏப்ரல் மாத புட் / சார்ட் நிலை எடுக்கலாம்.

  ============================================================================

  நீண்ட காத்திருப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பிறகு தனக்கென போட்டியில்லா உலகத்தில் கால் பாதிக்கும் நானோ – வை நாமும் வரவேற்போம்.

  5

  எனது பார்வை

  12 ம் தேதி தனது ஆட்டத்தை துவங்கிய காளை சுமார் 250 ரன் களுடன் தனது பேட்டிங்கை இனிதே நிறைவு செய்துள்ளதாக கருதலாம். 

  இன்றைய ஆட்டத்தை கரடிகள் துவங்கலாம்….   160 அடித்து இன்று அசத்திய சச்சினைப்போல நமது கரடியிடமும் ஒரு சதத்தினை எதிர் பார்க்கிறேன்.    அதற்கு துவக்கத்தில காளைகளின் பவுன்சர்களை சமாளித்து விக்கெட்டுகளை இழக்காமல் 50 ரன்கள் (2765-50) கடந்து விட்டால் ஆடுகளம் கரடிகளுக்கு சாதகமாக மாறிவிடும்.  டார்கெட் 2650. 

  நேற்றையதினம் கேப் அப் ஆக துவங்கிய சந்தை கடுமையான செல்லிங் பிரசரால் நழுவியது… ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் பிற்பகலில் சரிவுகளை மீட்டெடுத்து 2800 இல் முடிவடைந்தது. 

  நிப்டி தனது தொடர் ஏற்றத்தில் (டிரெண்ட் லைன் சேனல்)  இருந்து நழுவி விட்டது….  அங்கு பங்காளியும் தற்போது பாதை மாறிய பயணத்தில் உள்ளார் 7300 க்கு கீழ் நழுவிய நிலையில் டவ்ஜோன்ஸ் ப்யூச்சர் வர்த்தகமாகிறது.

  ஸ்டாப் லாஸ் கூட சொல்லாமல் நாம் பரிந்துரைத்த எஜுகம்ப் 1900-1950 இல் இருந்து 1760 பயணம் செய்துள்ளது.  கரடியிகள் முழுவீச்சில் களத்தில் இறங்கும் போது.  1400 வரை செல்லலாம்.  (என்னிடமோ எனது  குடும்பத்தாரிடமோ எந்த ஒரு பொசிசனும் இல்லை 🙂  )

  இன்றைய முக்கியமான நிலைகள்..
 • 2845
 • 2832
 • 2810
 • 2790
 • 2780
 • 2765
 • 2745
 • 2727
 • 2702
 • ======================================================================
  நேற்றைய எங்கள் பயணம்

   

  Calls  – 19/03/2009 Result
  Sell M&M @  362 TGT 358/355/353  All Tgt Achieved
  Buy 2800 Put @  53-55 TGT 65/72 All Tgt Achieved
  Sell Bank Nifty @  3751 tgt 3725/3700 / 3675 All Tgt Achieved
  Sell Nifty @ 2805- 2800 Tgt 2780/2765 All Tgt Achieved
  Sell Tata Power @ 664/65 tgt 659/57/54  All Tgt Achieved
  Sell Rel Infra @ 485 tgt 480/476/73 All Tgt Achieved
  Sell L&T @ 638 tgt 634 / 31  All Tgt Achieved

  பண வாட்டமாக மாறும் பணவீக்கம்!

  கடந்த இரு மாதங்களாக குறைந்து வந்த பணவீக்கத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் இன்று வெளிவந்த இது வரை வரலாறு காணாத 0.44% என்ற புள்ளி விவரத்தை பார்த்து கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்கள்.   

  கடந்த வாரம் வரை  கவலையளித்து வந்த பணவீக்கம் (Inflation)  தற்போது  பண வாட்டமாக (Deflation)  மாறி விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.  

  பணவாட்டம் என்றால் என்ன? 

  அடுத்த வரும் நாட்களில் தமிழ் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் பாடமே எடுப்பார்கள். அதற்கு முன் நாம் சுருக்கமாக பார்ப்போம்.

  பணவாட்டம் என்றால் பின் வரும் அர்த்தங்களை எடுத்து கொள்ளலாம்…..

  விலை மலிவாக கிடைத்தும் வாங்கமுடியாத நிலை….

  அல்லது  உற்பத்திக்கு ஏற்ற விற்பனை இல்லாத நிலை…..

  உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தும் ஒரு நிலை…..

  அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி குறைய வில்லை…..  இன்னும் டிமாண்டை  குறையாமல் பார்த்துகொள்வதால் இப்படி ஒரு நிலை..    அதிக நாட்கள் அது  சாத்தியம் இல்லை..

  ஏற்கனவே வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் ஆட்டம் கண்டு வருகிறது.   இன்னும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாலும் ஆச்சரியம் இல்லை.   குக்கிராமத்தில் கூட நிலத்தின் விலையை  உச்சத்தில் அமர்த்தினார்கள்.. 

  இன்னொரு உதாரணம் கச்சா எண்ணை உற்பத்தி….  

  அடுத்து பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள துறை ஆட்டோமொபைல்ஸ் விற்பனை இல்லை என்றால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

  அரசு என்ன செய்கிறது என்றும், வரும் வாரங்களில் வெளி வரும் புள்ளிவிவரங்கள் வீக்கமா வாட்டமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.