இன்றைய சந்தையின் போக்கு – 25.02.2009


அரசின் ஊக்க அறிவிப்புகள் பலவீனமாக துவங்கிய நமது சந்தையை தூக்கி நிறுத்தியது.   இச்சலுகைகள் போது மானதாக இருக்குமா.    வரிக்குறைப்பினால் உற்பத்தி செலவு குறையும் அதனால் சிறிய அளவில் பொருட்களின் விலையும் குறையும் ஆனால்  மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்குமா?    உதாரணத்திற்கு மாருதி உடனடி விலைகுறைப்பில் இறங்கியுள்ளது.. அப்படி என்றால் விற்பனை நிலையத்தில் உள்ள வாகனங்கள் அனைத்தும் விற்பனையாகும் என்று எதிர் பார்க்க முடியுமா… ? இங்கு உள்ள படங்களை பாருங்கள் உலகமெங்கும் விற்பனையாகாமல் குவிந்து கிடக்கும் வாகனங்களை.

1234

Imported cars stored at Sheerness open storage area awaiting delivery to dealers

12234

Newly imported cars fill the 150-acre site at the Toyota distribution centre in Long Beach , California

நன்றி – படங்கள் அனுப்பிய கார்த்தி / கரூர்.

நாம் எதிர் பார்த்த முதல் டார்கெட்டான 2650 ஐ தொட்டு விடும் தூரத்திற்கு (2675.15)  வந்த அண்ணன் அந்த இடத்தில் இருந்து மீண்டும் மேலேறி செல்வது பலவீனமான ஏற்றமே.  இன்னும் சிறிய அளவில் சரிவுகள் மீதமிருக்கின்றன… அந்த சிறு சரிவு பெரிய அளவிலான சரிவாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. ( அதாவது இந்த சிறு சரிவு தாமதப்படுத்தப்பட்டால்)    அதை அடுத்து வரும் நாட்கள் முடிவு செய்யும்.

சிறிய அளவிலான டவ் ஜோன்சின் ஏற்றம், அதையடுத்து உற்சாகமாக தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகள்.. இவற்றின் தாக்கம் நமது சந்தையிலும் இருக்கும்.   50   புள்ளிகள் வரை ஏற்றம் இருக்கலாம்.   

2828 – 2790 – 2765 – 2745 – 2727 – 2700 – 2675 – 2650

=============================================================================

நேற்றைய பதிவுக்கு போதிய உறுப்பினர்களின் (பின்னூட்டம்) வருகை / ஆதரவு இல்லாததால் அதைப்பற்றிய விவரங்களை எழுத வேண்டாம் அல்லது பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன்.  

=============================================================================

ஆஸ்கார் தமிழன் / இந்தியன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.  அவரின் திறமைக்கு இது தாமதமான அங்கீகாரம் தான்.   இவ்விருது மட்டும் அவரின் வளர்ச்சிக்கு / திறமைக்கான அளவுகோல் இல்லை. 

ஆனால் மும்பை குடிசைப்பகுதியில் 5 ஆண்டுகள் வாழ்ந்தவன் 15 ஆண்டுகளாக அந்நகரத்துடன் எனது வாழ்க்கை இணைந்துள்ளது என்ற முறையில் அத்திரைப்படம் மிகவும் தவறாக இந்தியாவை குறிப்பாக மும்பையை பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை.    இன்றைய உண்மை நிலைக்கு மாறான நிலையைத்தான் காட்டி உள்ளார்கள் மிகவும் மிகைப்படுத்தபட்ட கதை/காட்சிகள். 

============================================================================

 எங்களது பரிந்துரைகளின் Performance Report  (கிளிக் செய்யுங்கள்)

Advertisements

11 responses to this post.

 1. Posted by சாய்கணேஷ் on பிப்ரவரி 25, 2009 at 9:04 முப

  Dow jones தனது நேற்றைய ஏற்றத்தை தற்போது இழந்து வருவதால் ஆசிய சந்தைகளும் துவக்கத்தில் கிடைத்த ஏற்றத்தை தக்கவைக்க போரடுகின்றன.

 2. Good Morning sir and thank you very much for your views sir.

  Good Morning to everybody and wish you all a successful trading.

 3. இனிய காலை வணக்கம்

 4. Good Morning sir and thank you

 5. GOOD MORNING SAI SIR……..

 6. உயர்திரு சாய் அண்ணா அவர்களுக்கு,

  இன்றைய கட்டுரையில் “இன்னும் சிறிய அளவில் சரிவுகள் மீதமிருக்கின்றன… அந்த சிறு சரிவு பெரிய அளவிலான சரிவாக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. ( அதாவது இந்த சிறு சரிவு தாமதப்படுத்தப்பட்டால்) அதை அடுத்து வரும் நாட்கள் முடிவு செய்யும்” என்ற வரிகள் தற்போது சந்தையின் நிலையை தெளிவாக எங்களுக்கு எடுத்துரைக்கின்றன.

  மேலும் நேற்றைய அமெரிக்க சந்தைகள் தனது பாதி நேரத்துக்கு மேல் மேலெழுந்து உயரங்களில் முடிவடைந்தன. ஆனால் தற்போது Dow fut இறங்கு நிலையில் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

  தங்களுடைய நிப்டி நிலைகள் எங்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

  மிக்க நன்றி.

  இனிய காலை வணக்கம்.

 7. //வரிக்குறைப்பினால் உற்பத்தி செலவு குறையும் அதனால் சிறிய அளவில் பொருட்களின் விலையும் குறையும் ஆனால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்குமா?//

  இது பண வீக்கம் அல்லது பணவாட்டம் போன்ற நாட்டின் பொருளாதார காரணிகளையே சார்ந்திருக்கும் இல்லையா SIR?

  உங்களுடைய சந்தையின் போக்கு கட்டுரையின் அலசல் மிக அருமை.

  KEEP IT UP.

 8. ஆஸ்கார் தமிழன் / இந்தியன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.

 9. வணக்கம் சாய் சார்,

  இந்திய அரசின் ஊக்க அறிவிப்புகளை பற்றி இன்னும் சிறிது விரிவாக எழுதியிருக்கலாம். நீங்கள் கூறியது போல் தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் நேற்று ஒரு ஜிகினா அறிவிப்பும் இன்று டீசல் விலை குறைப்பு என்ற செய்தியும் சந்தைகளை மேலே ஏற்றின என்றே கூறலாம்…

  ஆமாம் அது என்ன பின்னூட்ட செய்தி??

 10. நேற்றைய பதிவுக்கு போதிய உறுப்பினர்களின் (பின்னூட்டம்) வருகை / ஆதரவு இல்லாததால் அதைப்பற்றிய விவரங்களை எழுத வேண்டாம் அல்லது பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன்.

  Sai sir iam eagerly expect this plz write about this

 11. 10000=100000
  10000=1000000
  possible in your advice and views.
  u can start this service very very useful to tamilnadu traders. waiting for your announcements shortly.
  siva
  9894601417

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: